Saturday, July 6, 2024

"அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.''(மாற்கு.6:5)

"அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.''
(மாற்கு.6:5)

இயேசு தான் 30 ஆண்டுகள் தனது பெற்றோருடனும், உற்றார் உறவினர்களோடும் வாழ்ந்த,

 தச்சு வேலை செய்து தன் பெற்ரைக் காப்பாற்றிய நாசரேத்தில் 

நற்செய்தி அறிவிக்க வருகிறார்.

அங்கு தான் அன்னை மரியாளும், அவளது தங்கை மரியாளும் வாழ்ந்து வருகிறார்கள்.

அவரது சித்தி மக்களில் யாக்கோபுவும், யூதாவும், சீமோனும் இயேசுவின் சீடர்களாக மாறி அவருடன் தான் இருக்கிறார்கள்.

நாசரேத்து ஊர் மக்கள் அவரது போதனைக் கேட்டு வியந்தாலும,

அவர் ஊர்க்காரராகவும், சூசை, மரியாளின் மகனாகவும்,

யாக்கோபு, யூதா, சீமோன் ஆகியோரின் பெரியம்மா மகனாகவும்,

தச்சனாகவும்தான் பார்த்தார்களே தவிர இறைமகனாகவும், மெசியாவாகவும் பார்க்கவில்லை.

அதாவது அவர்களுக்கு  அவர்மேல்  விசுவாசம் இல்லை.

அவர் முழுமையாக இறைவன், முழுமையாக மனிதன்.

அவர்கள் மனிதனை மட்டும் பார்த்தார்கள், இறைவனைப் பார்க்கவில்லை.

இறைவன் அருள் கிடைக்க வேண்டுமென்றால் நாம் அவரை இறைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அருள் வரத்தின் வாய்க்கால் விசுவாசம் தான்.

குளத்தில் உள்ள தண்ணீர் வாய்க்கால் வழியாகத்தான் வயலுக்கு வரும்.

இறை அருள் விசுவாசம் வழியாகத்தான் நமக்குள் வரும்.

நோயாளிகளைக் குணமாக்க இயேசு செய்த ஒவ்வொரு புதுமைக்குப் பின்னும்,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று." என்று சொல்வது வழக்கம்.

 அவரது சொந்த ஊரில்,

மக்களின் விசுவாசமின்மை காரணமாக மாக

 உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர 

வேறு வல்ல செயல் எதையும் அவர்  செய்யவில்லை. 

"அவரால் செய்ய இயலவில்லை"

என்று நற்செய்தியாளர் கூறுகிறார்.

இயேசு சர்வ வல்லவ கடவுள்.

அவரால் எல்லாம் இயலும்.

விசுவாசத்தின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக

(To stress the importance of Faith)

நற்செய்தியாளர் அவ்வாறு கூறுகிறார்.

"குளிக்காவிட்டால் சாப்பாடு கிடைக்காது" என்று அம்மா சொல்வது போல,

"விசுவாசம் இல்லாவிட்டால் குணம் கிடைக்காது" என்று நற்செய்தியாளர்
சொல்லுகிறார்.

இன்றைய வசனங்களை ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து தியானிப்போம்.

நாசரேத் ஊர் மக்கள் இயேசுவில் மனிதனை மட்டும் பார்த்தார்கள்.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்மாவும், உடலும் இருக்கின்றன.

நாம் நம்மில் எதைப் பார்க்கிறோம்?

ஆன்மாவையா? உடலையா?

ஆன்மாவைப் பார்ப்பவன் ஆன்மீகவாதி,

உடலைப் பார்ப்பவன் லௌகீகவாதி.

ஆன்மாவைப் பார்ப்பவன் ஆன்மீக வளர்ச்சிக்காக உடலைப் பயன்படுத்துவான்.

உடலைப் பார்ப்பவன் உடலுக்காக ஆன்மாவைப் பயன்படுத்துவான்.

ஆன்மீகவாதி ஆன்மா எதற்காகப் படைக்கப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து, அதன் நோக்கத்தை நிறைவேற்ற தன் உடலைக் கருவியாகப் பயன்படுத்துவான்.

இறைவன் கட்டளைப்படி அவரையும், அயலானையும் அன்பு செய்து வாழ்ந்து, அவரடி சேர்வதற்காகவே ஆன்மா படைக்கப் பட்டுள்ளது.

இறைவன் அடி சேரும் நோக்குடனே வாழ்வதுதான் ஆன்மீக வாழ்வு.

நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு உதவவே உடல்.

எப்படி உதவ?

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குப் போக வேண்டும்.

ஆன்மா தனியாகப் போக முடியுமா? 

அதிகாலையில் எழுந்து நடந்தோ, வாகனங்கள் மூலமாகவோ 

உடல்தான் ஆன்மாவை 
அழைத்துச் செல்ல வேண்டும்.

கோவிலில் கால் முழந்தாள் படியிட வேண்டும்.

கண்கள் பீடத்தில் இருக்க வேண்டும்.

காதுகள் வாசகங்களையும், பிரசங்கத்தையும் கூர்ந்து கேட்க வேண்டும்.

பாவப் பரிகாரத் தவ முயற்சிகள் செய்ய உடல் ஒத்துழைக்க வேண்டும்.

ஆன்மா உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்,

அப்போதுதான் ஆன்மீக வளர்ச்சிக்கு அது உதவும்.

உடல் விருப்பத்துக்கு ஆன்மா செயல்பட்டால் உடல் சிற்றின்பத்தை அனுபவிக்கும்,

ஆனால் ஆன்மா பேரின்ப வாழ்வை இழந்து விடும்.

ஆகவே நமது உடலைக் கட்டுப்பாட்டில் வைத்து ஆன்மீகத்தில் வளர்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment