Monday, March 11, 2024

புதுமை விரும்பிகள் கையில் பைபிள் வசனங்கள்.

புதுமை விரும்பிகள் கையில் பைபிள் வசனங்கள்.


நமது அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தாள் என்பதற்கு முக்கியமான பைபிள் ஆதாரங்கள்

பழைய ஏற்பாட்டில் ஆதி.3:15.
புதிய ஏற்பாட்டில்.    லூக்.1:28.

இரண்டு வசனங்களுமே நம்மிடையே உள்ள சில புதுமை விரும்பிகள் கையில் அகப்பட்டு உரு மாறியிருக்கின்றன.

அதாவது அன்னை மரியாளின் மாசற்ற தன்மைக்கு ஆதாரம் 

இரண்டு பொது மொழி பெயர்ப்பு பைபிள் வசனங்களிலும் இல்லை .

ஆதியாகம வசனம் கடவுளால் நேரடியாக சாத்தானைப் பார்த்துக் கூறப்பட்டது.

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்.

 அவள் உன் தலையை நசுக்குவாள்.

 நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்."
(ஆதி.3:15)

இது பைபிளின் புனித ஜெரோமின்

Vulgate. மொழி பெயர்ப்பின் நேரடி தமிழ் மொழி பெயர்ப்பு.

விளக்கம்:

1.உனக்கும் பெண்ணுக்கும், 
பகையை உண்டாக்குவோம்."

2.உன் வித்துக்கும்
 அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்.

முதல் பகை சாத்தானுக்கும் மரியாளுக்கும்.

பகையை உண்டாக்குவது கடவுள்.

ஆகவே கடவுளின் அருள் உதவியால் 

மரியாள் சாத்தானின் தலையை நசுக்குவாள்.
(அவள் உன் தலையை நசுக்குவாள்.)

சாத்தானால் மரியாளுக்கு எதிராகத் தலையைத் தூக்க முடியாது.
(நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய். முயற்சி செய்வாய், முயற்சி பலிக்காது.)

சாத்தானின் தந்திரத்தால் மனுக் குலத்தின் முதல் தாய் பாவத்தில் விழுந்தாள்.

மனுக்குலமே பாவத்தில் விழுந்தது.

மனுக்குலத்தின் முதல் தாயைப் பாவத்தில் வீழ்த்திய சாத்தானைத் தண்டிக்க

மற்றொரு தாயைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார்.

அவள் தான் மனுக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறக்கப் போகிற இறைமகன் இயேசுவின் தாய் மரியாள்.

"உனக்கும் பெண்ணுக்கும், 
பகையை உண்டாக்குவோம்."

சாத்தானைப் பார்த்துக் கடவுள் கூறிய வார்த்தைகள்.

"சாத்தானாகிய உனக்கும் 
உலக மீட்பரைப் பெறப்போகும் தாயாகிய பெண்ணுக்கும் இடையே பகையை உண்டாக்குவோம்."

"அவள் உன் தலையை நசுக்குவாள்."

"அவளுக்கு எதிராக நீ செயல்பட முடியாதபடி அவள் உன் தலையை நசுக்குவாள். நீ ஏவாளை ஏமாற்ற வாயைத் திறந்தது போல் அவளை ஏமாற்ற உன் வாயைத் திறக்க முடியாது."


"நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்"

ஆனால் உன் முயற்சி பலிக்காது."

நீ ஏவாளைப் பாவத்தில் வீழ்த்தியது போல மரியாளைப் பாவத்தில் வீழ்த்த முடியாது.

சுருக்கமாக,

"மரியாளைப் பாவ மாசு அணுகாது."

இவ்வாறு ஆதி.3:15 பைபிள் வசனம் மரியாளின் அமல உற்பவத்துக்கு ஆதாரம்.


ஆனால் பொது மொழி பெயர்ப்பில் இந்த ஆதார வசனம் இல்லை.


பொது மொழி பெயர்ப்பு:

உனக்கும் பெண்ணுக்கும்,

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்

பகையை உண்டாக்குவேன்.

அவள் வித்து உன் தலையைக்
காயப்படுத்தும்.

நீ அதன் குதிங்காலைக்
காயப்படுத்துவாய்” என்றார்.
(தொடக்கநூல் 3:15)


இதில் 

"அவள் உன் தலையை நசுக்குவாள்"

ஆதார வார்த்தைகள் இல்லை.

அதற்குப் பதிலாக 


"அவள் வித்து உன் தலையைக்
காயப்படுத்தும்."

என்ற வசனம் வருகிறது

அவள் வித்து இயேசு.
இயேசு சாத்தானைக் காயப்படுத்துவார்.

ஆக பொது மொழி பெயர்ப்பினர் மரியாளின் அமல உற்பவத்துக்கு ஆதாரமான வசனத்தை  மாற்றியிருக்கிறார்கள்.

பொது மொழி பெயர்ப்பு யாருக்காக?

மாதா மீது புதுமை விரும்பிகளுக்கு என்ன கோபம்?

புதிய ஏற்பாட்டில்.    லூக்.1:28. ஐப் புரிந்து கொள்ள 

http://lrdselvam.blogspot.com/2024/03/blog-post_5.html

ஐத் தொடர்பு கொள்ளவும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment