Sunday, March 3, 2024

நிகழ் கால செபமும், கடந்த கால பலனும்.

நிகழ் கால செபமும், கடந்த கால பலனும்.

"தாத்தா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

"'இறந்து போன என்னுடைய தாத்தா நல்ல மரணம் அடைய செபித்துக் கொண்டிருக்கிறேன்."

"புரியவில்லை."

"'என்ன புரியவில்லை?"

"உங்கள் தாத்தா இறந்து விட்டார்?"

"'ஆமா."

"எப்போது இறந்தார்?"

'"நான் பிறக்கு முன்பே."

"அவர் இறக்கும்போது நீங்கள் இல்லை."

"ஆமா."

"அவர் நல்ல மரணம் அடைய அவர்
மரணம் அடையுமுன் அல்லவா செபித்திருக்க வேண்டும்.

ஒரு வாதத்துக்காகச் சொல்கிறேன்.

அவர் இறந்து நரகத்துக்குப் போயிருந்தால் உங்களது இன்றைய செபத்தால் என்ன பயன்?"

"தம்பி, அவர் இறந்தது நான் பிறக்கு முன்பே என்பது தானே உன் பிரச்சனை!"

"ஆமா."

"என்னைப் பொறுத்தவரை அவர் இறந்தது கடந்த காலத்தில்.

ஆனால் நான் வேண்டுவது காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளிடம்.

அவர் நித்திய காலமும் இருக்கின்றவர்.

 
 கடவுள் மோசேயை நோக்கி, "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்றார்.
(விடுதலைப் பயணம் 3:14)
(God replied, "I am who am." )

 
அவர் இருக்கின்றவர்.
அவர் பார்க்கின்றனர்.
அவர் கேட்கின்றவர்.

நமது முக்காலத்தையும் அவரால் ஒரே பார்வையில் பார்க்க முடியும்.

நமது கணக்குப்படி அவர் ஆதாம், ஏவாளைப் பார்த்தபோது நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.

விவிலிய மொழிப்படி

நமது முதல் பெற்றோரையும், இன்று வாழும் நம்மையும் ஒரே பார்வையில் பார்க்கிறார். 

என்னுடைய தாத்தாவையும், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் என்னையும் அவர் நித்திய காலமும் பார்க்கிறார்.

ஆகவே நான் இப்போது வேண்டும் செபத்தை எனது தாத்தா வாழ்ந்த போதே கேட்கிறார்.

எனது தாத்தா நல்ல மரணம் அடைய உதவுகிறார்.

நமது காலத்துக்கு கட்டுப் பட்ட மொழியில்

எனது தாத்தா நல்ல மரணம் அடைய உதவினார் ."

"அதாவது நீங்கள் இன்று செபிப்பது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அதற்குரிய பலனை உங்கள் தாத்தாவுக்குக் கொடுத்திருப்பார்.

அப்படியானால் நாம் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்காக இப்போது செபிக்கலாம்."

"உறுதியாக."

"உங்கள் கூற்றுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது?"

"'தற்கொலையும் இறை இரக்கமும் என்ற தலைப்பில்  அருட்தந்தை. ஜோசப் கென்னடி ஆற்றிய மறை உரையைக் கேட்டிருக்கிறாயா?"

"இல்லை." 

அனுப்புகிறேன், முழுமையாகக் கேள்."

"அனுப்புங்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment