Tuesday, March 2, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 15 (தொடர்ச்சி

*திக்குத் தெரியாத காட்டில்* 15
(தொடர்ச்சி)


"சார், ஒன்றைக் கவனித்தீர்களா?

இதுவரை சாப்பிட்ட ஏழு கனிகளின் சுவையும் ஒரே மாதிரிதான் இருக்கிறது!"


"இதில் என்ன அதிசயம் இருக்கிறது? ஒரே மரத்தின் கனிகள் எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கும்.

கனிகளை தந்திருப்பது பரிசுத்த ஆவி, அன்பின் தேவன்.

அன்பின் தேவன் தந்திருப்பதால் எல்லா கனிகளின் சுவையும் அன்பாகத்தானே இருக்கும்.

எட்டாவது கனி எது?" 

"கனிவு." (Kindness)

",கனிவு எப்படி இருக்கும்?"

"குளிர்ச்சியாக இருக்கும்."

", கரெக்ட். வெப்பமான நெருப்பில் தண்ணீரை ஊற்றினால் நெருப்பு அணைந்துவிடும்.

வெறுப்பும் அன்பும் சந்தித்தால் வெறுப்பு மறைந்து விடும்.

அதேபோல

கோபமான பார்வையும், கனிவான பார்வையும் சந்தித்தால் கோபம் மறைந்துவிடும்.

கனிவான பார்வை,
கனிவான தோற்றம்,
கனிவான வார்த்தைகள்,
கனிவான செயல்கள்

இவை யாவும்
அன்பே உருவான இயேசுவுக்கே உரியவை.

அவருடைய சீடர்களாகிய நமக்கு அவர் தந்திருக்கும் அன்புப் பரிசுகள்.

இவற்றை நம்மிடம் பார்ப்பவர்கள் 

இவற்றை வைத்தே நம்மை அவரது சீடர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
(அரு. 13:35)

அன்பு இருக்கும் இடத்தில்தான் பரிவும் இருக்கும், கனிவும் இருக்கும்."


"Purse க்கு உள்ளே இருக்கும், உள்ளேயே இருந்தால் யாருக்கு என்ன பயன்?

வெளியே எடுத்து செலவழித்தால் தானே பயன்.

நமது மனதில் உள்ள அன்பையும், பரிவையும், கனிவையும் வெளியே காண்பித்தால் தானே அவை நம்மிடம் இருப்பதால் பயன்!

Hostel ல் சேர்ந்த முதல் நாள் மாலை ஏழு மணிக்கு Prefect வந்தார். கண்டிப்பான குரலில்,

"நாளை காலை 5 மணிக்கு மணி அடித்தவுடன் எல்லோரும் எழுந்துவிட வேண்டும்."

 மாணவர்கள் அவரது குரலைக் கேட்டு பயந்துபோய் அமைதியாக இருந்தோம்.

எட்டு மணி அளவில் General Prefect வந்தார்.

மலர்ந்த முகத்துடன் எங்களை நோக்கி,

"Hi Students! Hostel ல் முதல் நாள்.

முதல் நாள் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் இரவில் அதிகாலை 5 மணி வரை எல்லோரும் நிம்மதியாக தூங்கலாம். மணி அடித்தவுடன் எழுந்தால் போதும்.

Good night."

மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

Prefectம், General Prefectம் ஒரே விஷயத்தைத்தான் சொன்னார்கள். 

ஆனால் சொன்ன விதம்?

வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் 
நமது முகத் தோற்றத்தையும், வார்த்தைகளையும் வைத்துதான் தங்களது வரவேற்பின் தன்மையை புரிந்து கொள்வார்கள்.

நமது முகத்தோற்றத்தில் எப்போதும் கனிவு இருக்க வேண்டும்.

வார்த்தைகளிலும் கனிவு இருக்க வேண்டும்."

இனிமையான வார்த்தைகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு கடுமையான வார்த்தைகளை வெளியில் விட்டால் 

கனியை வைத்துக்கொண்டு காயை கொடுப்பதற்கு சமம் என்று திருக்குறள் கூறுகிறது,"

"அதெல்லாம் சரி. அநீதியைப் பார்க்கும்போதும் அதோடு கனிவான குரலில்தான் பேச வேண்டுமா?

உதாரணத்திற்கு உங்கள் மாணவன் தப்பு செய்த போது அவனைக் கண்டித்ததே இல்லையா?"

". உள்ளத்தில் நிறைவாக இருக்கும் அன்பிலிருந்து தான் வார்த்தைகள் புறப்பட வேண்டும்.

கண்டிப்பாக வார்த்தைகள் கூட அன்பில் இருந்து புறப்பட்டால் அவை கனிவான வார்த்தைகளே.


"என்வீடு செப வீடு எனப்படும்" என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர்கு கையாக்கிவிட்டீர்கள்"

என்று கூறி இயேசு செய்த செயல் செப வீட்டின் மீது அவருக்கு இந்த அன்பை வெளிப்படுத்துகிறது.

ஆசிரியரின் வாயிலிருந்து வெளிவரும் கண்டிப்பான வார்த்தைகள் மாணவர்கள் மீது அவருக்கு உள்ள அன்பை  

வெளியே கொண்டு வருவனவாக இருக்கும்.   

தந்தை மகனிடம் பயன்படுத்தும் கண்டிப்பான வார்த்தைகள் மகன் மீது அவருக்கு இருக்கும் அன்பை காட்டும்.

ஏமாற்றுபவன் பயன்படுத்தும் வார்த்தைகள் கனிவான வார்த்தைகளை போல் தோன்றும் ஆனால் அவை ஏமாற்று வார்த்தைகள். 

ஏவாளிடம் சாத்தான் பேசியது ஏமாற்று வார்த்தைகள்.

ஆனால் இறைவன் ஆதாமிடமும், ஏவாளுடனும் பேசிய வார்த்தைகள் அவருடைய அன்பில் இருந்து புறப்பட்டு வந்தவை.

மற்றவர்களை திருத்துவதற்காக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் கனிவான வார்த்தைகள்.

மருத்துவர் நோயாளியின் கையில் ஊசி போடும்போது வலிக்கிறது.   
மருத்துவருக்கு நோயாளி மேல் கோபமா?"

"அப்படியானால் பிரம்பு ஆசிரியரின் அன்பின் அடையாளம், அப்படித்தானே?''


",கண்டிப்பாக. தாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியர்களிடம் பட்ட அடிகளுக்காக அவருக்கு நன்றி கூறிய மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்."

"நமது வாழ்வின் போது நமக்கு துன்பங்களை இறைவன் அனுமதிப்பது நம்மேல் அவருக்குள்ள அன்பின் விளைவுதான், சரியா?"

", Super சரி. நமக்காக அவர் பட்ட பாடுகள் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் விளைவுகள் என்பது எவ்வளவு உண்மையோ 

அவ்வளவு உண்மை நாம் சந்திக்கும் துன்பங்கள் நம்மீது இறைவன் கொண்டுள்ள அன்பின் விளைவுகள் என்பதுவும்."

"நமக்கு வரும் துன்பங்கள் இறைவன் மீது நமக்குள்ள அன்பை அதிகரிக்க வேண்டும்.

அப்போ துன்பங்களையும் பரிசுத்த ஆவியின் கனிகளின் பட்டியலில் சேர்த்தால் என்ன?"

",ஏற்கனவே சேர்த்தாயிற்றே.

 பொறுமை என்னும் கனிக்குள் இதுவும் அடக்கம்.

இயேசு எவ்வாறு நமக்காக தனது துன்பங்களை பொறுமையாக ஏற்றுக் கொண்டாரோ அதே போல நாமும் நமக்கு வரும் துன்பங்களை பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்..


இயேசுவை யூதர்கள் தாக்கினார்கள் அவர் பொறுமையாக இருந்தார் நம்மையும் மற்றவர்கள் தாக்கும்போது இயேசுவுக்காக பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

புனித பிரான்சிஸ் அசிசியார் இயேசுவின் மீது மட்டற்ற அன்பு கொண்டிருந்தார்.

அதற்காக இயேசு அவருக்கு கொடுத்த அன்பான பரிசு 
ஐந்து காய வரம்."

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்"
 என்பது இறைவாக்கு.

இறைவாக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வெற்றி கிடைத்தாலும், தோல்வி கிடைத்தாலும் இறைவனுக்கு நன்றி.

இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் இறைவனுக்கு நன்றி.

சுகமாய் இருந்தாலும் நோய்வாய்ப்பட்டாலும் இறைவனுக்கு நன்றி.

எல்லாம் இயேசுவின் கனிவான பார்வையில் விளைவுகளே."

"புனித வெள்ளி இல்லையென்றால் ஈஸ்டர் ஞாயிறுமில்லை  

என்ற உண்மையை நினைவில் வைத்துக்கொண்டால் 

எல்லா துன்பங்களும் இன்பங்களாக மாறிவிடும்."


(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment