Wednesday, March 3, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*17(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*17
(தொடர்ச்சி)


",நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தவக்காலத்துக்குப் பொறுத்தமான கனி தன்னடக்கம்."


"உண்மைதான். நமது ஆசைகளை இயேசுவுக்காக கட்டுப்பாட்டிற்குள் வைப்பது தானே தன் அடக்கம்!

மட்டன் பிரியர்கள் தவக்காலம் மட்டுமாவது மட்டன் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.


ஆசையுடன் சாப்பிடும் தின்பண்டங்களை தவக்காலத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும். 

TVக்கு தவக்காலத்தில் மட்டுமாவது ஓய்வு கொடுக்கலாம்.

Cell phone பயன்படுத்துகிறவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஓய்வு கொடுக்கலாம்.

மன வல்லப செபங்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம்."

", ஓரிரு வரிகளில் சொல்லக் கூடிய இந்த செபங்களில் மனதை ஒரு நிலைப் படுத்துவது எளிது.

"இயேசுவே இரட்சியும்.

சேசு, மரி, சூசை, துணை.

இயேசுவின் திரு இருதயமே இரக்கமாயிரும்."

நீண்ட செபங்களைச் சொல்லும்போது, மனதை ஒரு நிலைப்படுத்துவது கடினம்.

நீண்ட நேரம் பராக்குகளுடன் செபிப்பதை விட,

"அருள் நிறைந்த மரியே வாழ்க"
என்ற ஒருவரி ஜெபத்தை பக்தியுடன் சொல்வது எவ்வளவோ மேல்!

ஒரு சிறு குழந்தை

 *அம்மா*

என்று மட்டும் சொல்வதில் கிடைக்கும் ஆனந்தம்,

  அம்மாவிற்கு வேறு எதிலும் கிடைக்காது.

ஏனென்றால் குழந்தை அம்மா என்று சொல்லும்பொழுது

 அம்மாவை மட்டும் நினைக்கிறது,

 அம்மாவை மட்டும் பார்க்கிறது,

 அம்மாவை மட்டும் உணருகிறது,

 அதனுள் இருப்பது அம்மா மட்டுமே.

அது *அம்மா* என்று சொல்லும்போதே அம்மா முழுவதுமாக அதற்குள் சென்று விடுகிறாள். 

அந்த ஒன்றிப்பை மணிக்கணக்காக உரையாடலால் கொடுக்க முடியாது.

"அருள் நிறைந்த மரியே வாழ்க"

என்ற ஒரு வரி செபத்திற்கும் அவ்வளவு சக்தி உண்டு."

"ஏதாவது ஆபத்து வரும்போது

 *கடவுளே* என்று நாம் அழைக்கும் ஒரு வார்த்தை ஜெபத்திற்கு இந்த உலகமே ஈடாகாது.

திருப்பலியில் நடுப்பூசையின் போது மக்களது உள்ளத்தில் இருந்து வரும் 

"என் ஆண்டவரே, என் தேவனே"

என்ற செபத்திற்கு வேறு எந்த செபமும் ஈடாகாது."

",அது நாம் ஒரு காலத்தில் சப்தமாக அனுபவித்த இன்பம், இப்போது மௌனமாக அனுபவிக்கிறோம்.



 மக்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு அரசியல் தலைவர் ஊருக்குள் வரும்போது மக்கள் அனைவரும் வாயிலிருந்து வரும் 

"வாழ்க, வாழ்க"

என்ற கோஷம் விண்ணைப் பிழக்கும். இது மக்கள் அனுபவம்.

அப்ப, ரசக் குணங்களுக்குள்

இயேசுவே இறங்கி வரும்போது,

"என் ஆண்டவரே, என் தேவனே"
என்ற ஜெபம் நமது வாயை திறந்து கொண்டு விண்ணை நோக்கி பறக்கும்.

இப்போது அதே செபத்தை மௌனமாக சொல்கிறோம்."

 "அந்த காலத்தில் புதிதாக பட்டம் பெற்று வந்த குருக்களை முதலில் சந்திக்கும்போது அவர்களது கைகளுக்கு முத்தம் கொடுப்போம்.

 ஏனெனில் அவைதான் ஆண்டவரைத் தொடப் பாக்கியம் பெற்ற கைகள்.

ஆனால், இப்போது?"

", கொரோனா எல்லோரையும் 
பாக்கியவான்கள் ஆக்கிவிட்டது!"

"தவக்காலத்தில் நாம் செய்யும் அனேக ஒறுத்தல் முயற்சிகளால் கொஞ்சம் பணம் மிச்சமாகும்.

நோன்பு இருப்பதாலும், தின்பண்டங்களை குறைப்பதாலும்,

சினிமா போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு ஓய்வு கொடுப்பதாலும்,

ஆடம்பரமான செலவுகளைச் குறைப்பதாலும்

மிச்சமாகும் பணத்தை நமது சிறு சேமிப்பில் சேர்க்கக் கூடாது.

அப்படி சேர்த்தால் அதை திரும்பவும் நாம்தான் பயன்படுத்துவோம்.

 செலவை மிச்சம் பிடித்ததால் ஆன்மீக ரீதியாக பயன் ஒன்றும் இருக்காது.

அப்பணத்தை தேவைப்படுவோருக்கு கொடுத்து உதவ வேண்டும்.

தேவைப்படுவோருக்கு உதவும்போது அதை ஆண்டவருக்கே கொடுக்கிறோம்.

நமக்கு ஒரு வேளை சாப்பாடு மிச்சம் ஆகும்போது 

அதே சாப்பாடு தேவைப்படுகின்ற ஒரு ஏழைக்கு போய் சேர வேண்டும்.

அப்போதுதான் நமது தவ முயற்சிகளால் விண்ணகத்தில் பலன் கிடைக்கும்."

", சிலர் கோவிலுக்கு கொடுப்பதை மட்டும்தான் காணிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும் நாம் கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கைதான்."

"வருமானம் குறைந்த மக்களுக்கு ஆண்டு முழுவதுமே நோன்பு வாழ்க்கையாகத்தான் இருக்கும். 

அவர்களால் பண உதவி செய்ய முடியாவிட்டாலும் தங்களது புன்சிரிப்பாலும்,

 ஆறுதல் பேச்சுக்களாலும்,

 பணம் தேவைப்படாத உதவிகளாலும் 

தேவைப்படுவோருக்கு
உதவிகரமாக இருக்கலாம்."


",நமது ஆண்டவர் தனது மூன்று வருட பொது வாழ்வின் போது யாருக்கும் பண உதவியே செய்தது இல்லை.

அவரே கையில் பணம் வைத்திருந்ததில்லை.


அவர் சென்றவிடமெல்லாம்


வாழ்வு தரும் நற்செய்தியை அறிவித்தார்,

பாவிகளின் பாவங்களை மன்னித்தார்,

நோய்களை குணமாக்கினார்,

உணவு கொடுத்தார்.

மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தினார்.

  தனது பாடுகளுக்கு முந்திய நாள் தனது சீடர்களுக்கு தன்னையே உணவாகக் கொடுத்தார்.

இன்றும் நமக்கும் தன்னையே உணவாக தந்து கொண்டிருக்கிறார்.

அவர் இலவசமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது அன்பையும், அதிலிருந்து புறப்படும் நற்செய்தியையும், நற்செயல்களையும் மட்டும்தான்.

நம்மால் பணஉதவி செய்ய முடியாவிட்டாலும்

 நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு

ஆறுதல் வார்த்தைகள் கூறலாம்.

நமது ஒவ்வொரு வார்த்தையிலும் செயலிலும் ஆழமான இறை அன்பும் பிறர் அன்பும் பிரதிபலிக்க வேண்டும்."


"தவக்காலத்தில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நம்மோடு இருக்க வேண்டிய இன்னும் ஒரு கனி

 அது தன்னடக்கத்தில் இருந்துதான் பிறப்பது. கண்டுபிடியுங்கள் பார்ப்போம்."

," விடுகதையா?"

"எப்படி வைத்துக் கொண்டாலும் சரி."

"அடக்கம் உள்ளவன் அளவுக்கு மீறி எல்லைகளுக்கு (Extremes) போகமாட்டான். 

நடையில் அடக்க ஒடுக்கம்
 இருக்கும், ஆரவார ஆட்டம் இருக்காது .

முகத்தில் புன்சிரிப்பு இருக்கும்,
கெக்கெக்கா சிரிப்பு இருக்காது .


பேச்சில் அமைதி இருக்கும், ஆரவாரம் இருக்காது. 

உள்ளத்தில் தாழ்ச்சி இருக்கும், தற்பெருமை இருக்காது.

ஒரே வார்த்தையில் *சாந்தம்* இருக்கும்."

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்"

என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்"
(மத்.11:28, 29 )

"சாந்தம்" நாம் இயேசுவிடமிருந்து வாரிசு உரிமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய பரிசுத்த ஆவியின் கனி."

(சாந்தம் தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment