Wednesday, March 24, 2021

உள்ளும், புறமும்

உள்ளும், புறமும்



ஹலோ சார்,
"மண்ணகத்திலிருந்து விண்ணகத்துக்கு நமது பிரயாண நேரம் zero second தானே!"
சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம்?"

"பிரயாண நேரம் one second னா
 என்ன அர்த்தம்?"

"ஒரு நொடியில் போய்விடலாம் என்று அர்த்தம்."

",பிரயாண நேரம் zero secondனா?"


"போக நேரமே ஆகாது'' என்று அர்த்தம்.

", உங்களுக்குத்தான் அர்த்தம் தெரிந்திருக்கிறதே, என்னிடம் ஏன் கேட்டீர்கள்?''

"நான் அந்த அர்த்தத்தைக் கேட்கவில்லை. நேரமே ஆகாதுன்னா என்ன அர்த்தம் என்று கேட்டேன்."

",மண்ணகத்துக்கும்
  விண்ணகத்துக்கும் தூர இடைவெளியே இல்லை என்று அர்த்தம்.

மண்ணகத்தில் தூரமும் இருக்கிறது நேரமும் இருக்கிறது.

இரண்டு இடங்களுக்கு இடையில் 100 கிலோமீட்டர் தூரம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இதற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் பிரயாண நேரம் ஒரு மணி.

200 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் பிரயாண நேரம் அரை மணி.

விண்ணகத்தில்
 இடங்களும் இல்லை.
 தூரமும் இல்லை. 
பிரயாண நேரமும் இல்லை.
பிரயாணமே இல்லை.

மண்ணகத்தில் காலை 5 மணி மூன்று நிமிடம் 3 வினாடிக்கு உடலைவிட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் 

நமது கணக்குப்படி அதே நேரத்தில் அது விண்ணகத்தில் இருக்கும்."

"விண்ணக கணக்குப்படி?"

",விண்ணகத்தில் இந்த மாதிரி கணக்கு எதுவும் இல்லை.

ஆத்மா உலகத்தை விட்ட  நேரத்தில்   நித்தியத்திற்குள் புகுந்துவிடும்.

விண்ணகத்தில் நமக்கு இருப்பது போல இடம், தூரம், நேரம் எதுவுமே கிடையாது."

"விண்ணகம் எங்கே இருக்கிறது?"

", இப்போது தான் சொன்னேன் விண்ணகத்தில் இடம் கிடையாது என்று.

 நீங்கள் எங்கே இருக்கிறது என்று கேட்கிற கேள்வியே தப்பு."

''மேலே இருக்கிறது என்று கையை மேல்நோக்கி தூக்கி காண்பிக்கிறார்கள்!"

",அமெரிக்கா காரனிடம் கேட்டால் நாம் காண்பிப்பதற்கு நேர் எதிர்த் திசையை காண்பிப்பான்!

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சடப்பொருள். நமது ஆன்மா ஆவி. நமது உடலை நாம் பார்க்கலாம், ஆனால் ஆன்மாவை பார்க்க முடியாது.

நமது உடலில் எந்த இடத்தில் ஆன்மா இருக்கிறது என்று கூற முடியுமா?

ஆன்மா உடலை இயக்கிக் கொண்டு இருக்கிறது.

உடல் இயக்கம் இருக்கும் மட்டும் ஆன்மா உடலோடு இருப்பதாக பொருள்.

உடல் இயக்கம் நின்றுவிட்டால் ஆன்மா உடலைப் பிரிந்து விட்டது என்று அர்த்தம்.

உடலைவிட்டு பிரிந்த அதேநேரம் அது விண்ணில் இருக்கும்.

உடல் மட்டும் மண்ணில் இருக்கும்."

"விண்ணகம் ஒரு இடம் அல்ல. அப்படியானால் அது என்ன?"

", அது ஒரு வாழ்க்கை நிலை. 
State of life. 
இறைவனோடு இணைந்த ஒரு பேரின்ப நிலை."

"நாம் உடலைவிட்டு பிரிந்த பின்பும் வாழக்கூடிய ஆன்மாவிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட 

ஆன்மா பிரிந்தவுடன் மண்ணாகக்கூடியய நம்முடைய உடலுக்கு தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

தினமும் காலையில் குளித்து உடலை சுத்தம் செய்கிறோம்.

 பகலில் அழுக்குப் படும் போதெல்லாம் கைகளையும் கால்களையும் கழுவுகிறோம்.

 வாசனை திரவியங்களால் உடலை மணப்படுத்துகிறோம்.

ருசியான உணவை வயிறு கேட்கும்போதும் கொடுக்கிறோம்.
கேட்காதபோதும் கொடுக்கிறோம்.

விதவிதமான ஆடைகளால் உடலை அலங்கரிக்கிறோம்.

ஆனால் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிற
 ஆன்மாவைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

உடல் அழுக்கை கவனமாக கழுவுவது போல ஆன்மாவில் படும் பாவ அழுக்கை கழுவ வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

ஆன்ம அழுக்கை‌ அழுக்காகவே நினைப்பதில்லை.

 உடலில் ஒரு சிறு நோய் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை பார்க்கிறோம்.

 ஆனால் ஆன்மாவில் பாவ நோய் முற்றி விட்டாலும் அதை குணமாக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

மொத்தத்தில் நாம் மண்ணாய் போகப் போகிற உடலுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."

'', திருமண வீட்டிற்கு விழாவிற்காக சென்றிருக்கிறீர்களா?"

"சென்றிருக்கிறேன். அங்கும் இதே நிலைதான்!''

",எதே நிலை?"

"திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதை நடத்துவதற்காக செலவழிக்கும் ஆடம்பர செலவுகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

திருமண மண்டபம்,
 மேடை அலங்காரம், 
வெளி அலங்காரம்,
சாப்பாடு வகைகள் 
ஆடை வகைகள், 
ஆகியவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மணமக்களின் நல்வாழ்வுக்கு கொடுக்கப்படுவதில்லை."

", அதே போல் தான் நமது வெளியரங்க வாழ்வின்
ஆடம்பரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை

 நமது ஆன்மீக வாழ்வுக்குக் கொடுப்பதில்லை.

இது தவக்காலம். தவம் செய்யும் காலம்.

தவம் செய்ய வேண்டியது ஆன்மாவா? உடலா?"

"ஆன்மா என்று தான் நினைக்கிறேன். ஆனால் உடலும் அதில் கலந்து கொள்ள வேண்டுமே."

", சாப்பிட தேவையானது எது என்று கேட்டால் உணவு என்று தான் சொல்ல வேண்டும். பிளேட்டு, மேஜை, நாற்காலி என்று சொல்லக்கூடாது.

தவம் செய்ய வேண்டியது ஆன்மா மட்டும் தான். அது உடலை பயன்படுத்திக்கொள்கிறது. அவ்வளவுதான்.

எப்படி காலையில் எழுந்து வேலைக்கு புறப்படும்முன் 

பல்லை தேய்த்து வாயைச் சுத்தமாக்கி,

 குளித்து உடலை சுத்தமாக்கி,

 அப்புறமாக சாப்பிட்டு,

 ஆடை உடுத்தி 

புறப்படுகிறோமோ,

அதேபோல எந்த ஆன்மீகப் பணியாக இருந்தாலும் முதலில்

 நமது ஆன்மாவை சுத்தம் செய்து விட்டு தான் ஆரம்பிக்க வேண்டும்.

ஆன்மாவை சுத்தம் செய்யாமல்,

 அதில் இருக்கும் சாவான பாவ அழுக்கை பற்றி கவலைப்படாமல், 

பாவ நிலையில்,

அதாவது இறை உறவு இல்லாத நிலையில்,

என்ன ஆன்மீகப் பணி ஆற்றினாலும்
 அதனால் எந்த பயனும் இல்லை.

தவக்காலத்தில் தினமும் காலையில் திருப்பலியில் கலந்து கொள்கிறோம்.

திருவிருந்தில் கலந்து கொள்கிறோம்.

சிலுவைப் பாதை செய்கிறோம்.

நோன்பு இருக்கிறோம். 

சுத்த போசனம் அனுசரிக்கிறோம்.

பிறருக்கு உதவி செய்கிறோம்.

 ஏழைகளுக்கு தர்மம் கொடுக்கிறோம்.

எல்லா செயல்களும் ஆன்மீகப் பலனுள்ள நல்ல செயல்களாக மாற வேண்டும் என்றால் 

முதலில் ஆன்மா 
பாவமாசின்றி இருக்க வேண்டும்.

பாவம் இருந்தால் முதலில் பாவசங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும்.

சாவான பாவ நிலையில் என்ன செய்தாலும் பயன் ஒன்றும் இல்லை!

30 நாள் விடுமுறையில் ஒருநாள் கூட பல் தேய்க்காமலும் 
குளிக்காமலும் 

கால் கை கழுவாமலும்   

 முப்பது நாளும் இருந்துவிட்டு

 31 ஆவது நாள் அப்படியே அதே நிலையில் 

புதிய டிரஸ் அணிந்துகொண்டு வெளியே சென்றால் நம் அருகில் யாரும் வர மாட்டார்கள்.

 வந்தவர்களும் ஓடிவிடுவார்கள்.

இதேபோல ஆன்மாவை வைத்துக்கொண்டு கோவில் சென்றால் நம்மைப் பார்த்தவுடன் சம்மனசுகள் ஓடிவிடுவார்கள்!

இயேசு மூக்கை பொத்திக் கொண்டுதான் நம் அருகே வருவார்!

ஆகவே தவக்காலத்தில் மட்டுமல்ல

 எந்த காலத்திலும் ஆன்மீக வாழ்வு வாழ ஆசைப்படுவோர் 

தங்களது ஆன்மா பாவமாசின்றி இருக்கிறதா 

என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவசங்கீர்த்தனம் செய்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்,

 கொடுப்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.

சமையலறை busy யாக இல்லாவிட்டால், 

சாப்பாட்டறை Empty!

லூர்து செல்வம்.



.

No comments:

Post a Comment