(தொடர்ச்சி)
திவ்ய நற்கருணையும் ஒப்புரவு அருட்சாதனமும் வெவ்வேறு அருள் அடையாளங்களாக இருந்தாலும்
அவற்றை இணைத்து நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது.
இயேசு தன்னையே தனது இரத்தத்தைச் சிந்தி ஒப்புக்கொடுத்த சிலுவைப் பலியை நிரந்தரமாக நினைவு கூறுவதற்காக
இரத்தம் சிந்தாத விதமாய் தனது பாடுகளுக்கு முந்திய இரவு ஒப்புக்கொடுத்த திருப்பலியே திவ்ய நற்கருணை.
"The Eucharist is the very sacrifice of the Body and Blood of the Lord Jesus
which he instituted
to perpetuate the sacrifice of the cross throughout the ages until his return in glory.
திவ்ய நற்கருணை ஒரு பலி மட்டும் அல்ல நமது ஆன்மீக உணவும் கூட.
Eucharist, or Communion, is both a sacrifice and a meal.
திவ்ய திருப்பலியின் போது நடுப்பூசையில் குருவானவர் வசீகர வார்த்தைகளைக் கூறும்போது இயேசு தனது உடலோடும் இரத்தத்தோடும் ஆன்மாவோடும் உண்மையிலேயே அப்ப ரச குணங்களில் பிரசன்னமாகிறார்.
அப்பமும் ரசமும் முழுமையாக இயேசுவாக மாறிவிடுகின்றன.
நாம் திரு விருந்தில் நற்கருணையை உட்கொள்ளும் போது மரியாளின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்த அதே இயேசுவைத்தான் உட்கொள்கிறோம்.
நாம் இயேசுவை உணவாக உட்கொள்ளும் பொழுது நமது ஆன்மா பாவ மாசு இன்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அதற்கு உதவியாக இருப்பதுதான் ஒப்புரவு அருட்சாதனம் என்ற திரு அடையாளம்.
ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலமாகத்தான் நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்.
பரிசுத்தமான ஆன்மாவிற்குள்தான் இயேசு தனது அருள் வரங்களோடு வந்து தங்குவார்.
"ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறாள்.
28 ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.
29 ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான்."
(1 கொரிந். 11:27 - 29)
திவ்விய நற்கருணையை அருந்தச் செல்லும் ஒவ்வொருவரும் இந்த வேத வாக்கை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* * * * *
"ஹலோ சார் எதையோ நினைத்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது!"
".திருவிழா கூட்டங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்."
"என்ன திடீரென்று திருவிழா கூட்டங்கள்?"
",வேளாங்கண்ணி உவரி போன்ற திருத்தலங்களுக்கு திருவிழாவில் கலந்துகொள்ள போயிருக்கிறீர்களா?"
"போயிருக்கிறேன்."
",திவ்ய நற்கருணை வாங்குவதற்காக அலை மோதும் கூட்டத்தை கவனித்திருக்கிறீர்களா?"
"கவனித்திருக்கிறேன்."
",முண்டியடித்துக்கொண்டு முன்சென்று நன்மை வாங்கும் மக்களுள் எத்தனை பேர் தகுந்த தயாரிப்போடு செல்கிறார்கள் என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா?"
"அந்த வம்பு நமக்கு எதுக்கு சார்?
அவரவர் கணக்கை அவரவர் ஒப்பு விக்கப் போகிறார்கள்.
அடுத்தவர்களைப் பற்றி
தீர்ப்பிடக்கூடாது என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்."
",அதுவும் சரிதான். யாரைப்பற்றியும் தீர்ப்புக்கு வர நமக்கு அதிகாரம் கிடையாது.
இப்போதுதான் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசித்தேன்.
"ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான்."
"இது சின்னப்பர் கொரிந்தியர்களுக்கு எழுதிய இறைவாக்கு."
",வாக்கின் பொருள் புரிகிறதா?"
",நாம் வாங்குவது கடவுளுடைய உடல் என்பதை உணர்ந்து கொள்ளாமல்
சாவான பாவம் நிலையோடு அவரை வாங்கி உண்பவன்
தனது தீர்ப்பை தானே எழுதி கொள்கிறான்."
",வேறு வார்த்தைகளில் கூறுங்கள்."
"பரிசுத்தமான இதயத்தோடு தான் நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
நாம் சாவான பாவம் நிலையில் இருந்தால்
நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று
நமது ஆன்மா பரிசுத்தமாகிய பின்பு நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
பாவ நிலையில் ஆண்டவரை உட்கொண்டால் அதுவே ஒரு பாவம் ஆகிவிடும்."
",இப்பொழுதெல்லாம் பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது என்று
நான் கூறவில்லை,
ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் திவ்ய நன்மையை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
இதிலிருந்து ஏதாவது உண்மை புலப்படுகிறதா?"
"ஒன்று உலகிலிருந்து பாவம் முற்றிலுமாக மறைந்து விட்டது.
அல்லது தயாரிப்பு இன்றி நன்மை வாங்குபவர்களின் கூட்டம் அதிகரித்துவிட்டது.
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று உண்மையாக இருக்கும்."
,''இப்பொழுதெல்லாம் உலகில் யாருமே பாவமே செய்வதில்லை என்று ஏற்றுக்கொள்வோமா?
நாம் யாரையும் தனிப்பட்ட முறையில் தீர்ப்பிடவில்லை."
"உலகில் யாருமே பாவம் செய்யாமல் இருந்தால் நல்லது என்று மட்டும் கூறிக் கொள்வோமே."
'',அதுவும் சரிதான். பாவசங்கீர்த்தனம் என்னும் அருள் அடையாளத்தை ஏன் இயேசு ஏற்படுத்தினார் என்பதைப்பற்றி பேசுவோமா?"
"அதற்காகத்தான் நானே வந்தேன்.
ஞானஸ்நானத்தையும் உறுதிப்பூசுதலையும் பற்றி பேசினோம்.
எண்ணிக்கை வரிசையில் அடுத்தது திவ்ய நற்கருணை.
இருந்தாலும் புதுநன்மை வாங்குபவர்களுக்கு திவ்ய நற்கருணைக்கு முன் பாவ சங்கீர்த்தனத்தை அறிமுகம் செய்து வைக்கிறோம்.
அதே வரிசையை பின்பற்றுவோமே.
இயேசு எப்போது பாவசங்கீர்த்தனம் என்ற அருள் அடையாளத்தை ஏற்படுத்தினார்?"
",அவர் உயிர்த்த பின் தனது அப்போஸ்தலர்களுக்குத் தோன்றியபோது,
"என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.
பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்: எவர்களுடைய பாவ
ங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்." (அரு. 20:21, 22, 23)
இது இறைவாக்கு.
தந்தை அவரை நமது பாவ மன்னிப்புக்காகத்தான் அனுப்பினார்.
அதே நோக்கத்திற்காகத்தான் இயேசு அப்போஸ்தலர்களை உலகத்திற்குள் அனுப்புகிறார் அனுப்பினார்.
பாவத்திலிருந்து மீட்க படுவதையே நாம் மீட்பு என்கிறோம்.
இயேசு உலகத்தில் மனிதனாய் பிறந்தது நம்முடைய மீட்புக்காக என்றால்
நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக என்றுதான் பொருள்.
இயேசு திருச்சபையை ஏற்படுத்தியதும் அதே நோக்கத்திற்காகத் தான்.
அப்போஸ்தலர்ளை நற்செய்தியை போதிக்கும்படி உலகிற்குள் இயேசு அனுப்பியதும் அதே நோக்கத்திற்காக தான்.
விசுவசிப்பவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கச் சொன்னதும் அதே நோக்கத்திற்காகத்தான்.
அதே நோக்கத்திற்காகத்தான் பாவசங்கீர்த்தனம் என்ற அருள் அடையாளத்தையும் ஏற்படுத்தினார்."
"நமது பிரிவினை அன்பர்கள்,
'நமது பாவங்களை அப்போஸ்தலர்களிடம் சங்கீர்த்தனம் செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே' என்பார்கள்.
அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?"
",திருமண வீட்டில் சாப்பிட்டோம் என்று சொன்னாலே உணவு
பரிமாறப்பட்டது என்பதும் அதற்குள் அடங்கும்.
'சாப்பிட்டோம் என்று தானே சொன்னீர்கள் உணவு போடப்பட்டது என்று சொல்லவில்லையே'
என்பதுபோல் இருக்கும் அவர்களது கேள்வி.
நீங்கள் பாவசங்கீர்த்தனத்தை ஏற்படுத்தும்போது இயேசு சொன்ன வார்த்தைகளை கூறினாலும் அதற்கு அவர்கள் வேறு பொருள் வைத்திருப்பார்கள்.
நமது நோக்கம் பிரிவினை நண்பர்களை திருப்திபடுத்துவது அல்ல.
அது சேவலின் வயிற்றிலிருந்து முட்டையை எதிர்பார்ப்பதற்கு சமம்.
நமது ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்காகத்தான் நாம் இறைவாக்கை வாசிக்கிறோம்."
"அப்போஸ்தலர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்திருப்பார்களா?"
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment