Thursday, March 11, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*25 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*25
(தொடர்ச்சி)


'' கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்"
(ஆதி.1:27)


"இது உலகில் நடந்த முதல் திருமணத்தை பற்றிய இறைவாக்கு.

'மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்'.

 புரிகிறது.

'தமது சாயலாகப் படைத்தார்
'

இது புரியவில்லை ஏனெனில் கடவுள் ஆவி, அவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல.

பின் எப்படி

'ஆணும் பெண்ணுமாக படைத்தார்'.
தமது சாயலாகப் படைத்தார்,'

என்று கூறமுடியும்?"

", மனிதனை படைப்பதற்கு முன்பே உலகை படைத்தார்.

உலகம் ஒரு சடப்பொருள். அதைப் படைத்த இறைவன் ஆவி.

 மனிதனின் உடலை சடப்பொருளிலிருந்து உண்டாக்கி அதற்குள் ஆவியாகிய ஆன்மாவை ஊதுகிறார்.

மனிதன் என்ன பொருள் சடப்பொருளா? ஆவிப்பொருளா?"

"இரண்டும் கலந்த பொருள்."

",மனிதனை மனிதன் ஆக்குவது உடலா? ஆன்மாவா?''


"இரண்டும் சேர்ந்து தான் மனிதன்."

",,கேள்வியைப் புரிந்து பதில் சொல்லவும்.

ஆன்மாவிலிருந்து உடல் பிரிந்து விட்டாலும் தொடர்ந்து வாழ்வது ஆன்மாவா? உடலா?"

''ஆன்மா. அப்படியானால் மனிதனை மனிதன் ஆக்குவது
 ஆன்மாதான். 

ஆன்மா பிரிந்து விட்டால் உடல் மண்தானே."

",ஆன்மா யாருடைய சாயல்?"

".கடவுளுடைய சாயல். கடவுளும் ஆவி, ஆன்மாவும் ஆவி,

சார் நான் இதைப் பற்றி கேட்கவில்லை.

 நான் கேட்டது,  

"ஆணும் பெண்ணுமாக படைத்தார்'.
தமது சாயலாகப் படைத்தார்,"

ஆணும் பெண்ணும் எப்படி இறைவனது சாயலாக முடியும்?"

", ஒரு கணக்கிற்கான தீர்வை விளக்கும்போது முழுமையாக கேட்டுவிட்டு அபிப்பிராயம் கூற வேண்டும். 

பாதி விளக்கி கொண்டிருக்கும்போதே,

" தீர்வு இது அல்ல" என்று சொல்லிவிடக்கூடாது."

"சரி முழுவதையும் சொல்லுங்கள்.

மனிதனை படைத்த கடவுள் அவனோடு, 

அதாவது, அவனுடைய ஆன்மாவோடு,   

அன்பு உட்பட தனது அனைத்து பண்புகளையும் பகிர்ந்து கொண்டார்.''

"ஆன்மாவை பிரிந்த உடலுக்கு இறைவனின் பண்புகள் இல்லை, ஏனென்றால் அது மண். சரியா?"

",சரி. Now let us come to the point.

ஆணும் பெண்ணுமாக மனிதனை படைத்தது குடும்பமாக வாழ்வதற்காக.

 அதாவது ஆணும் பெண்ணும் ஒரு உடல் ஒரு உயிராய் வாழ்வதற்கு."

"சார் ஈருடல் ஓருயிர் என்றுதான் சொல்வார்கள்."

",யார் சொல்வார்கள்."

"திருமணம் பற்றி பேசுபவர்கள்."


",இங்கே திருமணம் பற்றி இறைவாக்கு என்ன சொல்கிறதோ அதுதான் சரி.

இறைவாக்கு என்ன சொல்கிறது?

ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டாள். 

ஆதாமின் உடல்தான் ஏவாளின் உடலும்.

"இவள் என் எலும்புகளின் எலும்பும் மாமிசத்தின் மாமிசமுமாய் இருக்கிறாள்"

குடும்பத்தைப் பற்றிய இறைவாக்கு ஆதாமின் வாய்வழியே வருகிறது.

ஆதாமின் எலும்பிலிருந்து ஏவாள் தனியாக படைக்கப்பட்டாலும் அவள் ஆதாமின் எலும்புதான்.

அதாவது உணர்வுபூர்வமாக இருவரும் ஒரு உடல் தான்.

 இது இறைவன் இணைத்தது.


 இந்த இணைப்பைப் பிரிக்க உலகில் யாருக்கும் அதிகாரம் இல்லை.

தமதிரித்துவத்தின் இரகசியம் என்ன?"

"ஒரே கடவுள் 3 ஆட்களாய் இருக்கிறார்.

எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுள்?"


",மூவருக்கும் 

ஒரே ஞானம் 

ஒரே புத்தி 

ஒரே வல்லமை 

ஒரே தேவ சுபாவம்

ஒரே அன்பு.

 மூவரும் ஒரே அன்பு.

ஆதாமும் ஏவாளும் அன்பினால் இணைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இறைவனின் சாயலை பெற்றிருக்கிறார்கள்.

இருவருக்கும் ஒரே அன்பு அல்ல.

ஒரே அன்பு தமதிரித்துவத்துக்கு மட்டும். 

தமதிரித்துவ அன்பு, Original.

ஆதாம் ஏவாள் அன்பு, சாயல்.

ஆணும் பெண்ணும் அன்பு உள்ளிட்ட இறைவனின் பண்புகளால் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள் 

ஆகவே அவர்கள் இறைவனின் சாயல்."

"ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயல் தானே?"

",ஒவ்வொரு மனிதனும் இறைவனின் பண்புகளில் பங்கு (share) பெற்றிருப்பதால்

ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயல்தான்.


இறைவன் நிறைவானவர்.

மனிதன் அளவுள்ளவன்."

"இருவருக்கும் ஒரே அன்பு அல்ல. என்றீர்களே. கொஞ்சம் விளக்க முடியுமா?"


",உங்களிடமும் சட்டை இருக்கிறது. என்னிடமும் சட்டை இருக்கிறது.

 உங்கள் சட்டையின் நிறம் சிவப்பு. என்னுடைய சட்டையின் நிறமும் சிவப்பு,

 இரண்டு சட்டைகளும் பார்க்க ஒரே மாதிரியாக தோன்றும்.

 ஆனால் இரண்டும் ஒரே சட்டையா?"

"இல்லை."

",ஆதாமிடமும் அன்பு இருந்தது.

ஏவாளிடமும் அன்பு இருந்தது.

இருவரிடமும் அன்பு என்ற பண்பு இருந்தது. ஆனால் ஒரே அன்பு அல்ல.

இருவரும் ஒருவரை ஒருவர், அவரவர் அன்பைக் கொண்டு, அன்பு செய்தவர் .

ஆனால் தமதிரித்துவத்தில் மூவருக்கும் ஒரே அன்பு."

 "இப்படி சொல்லலாமா?

கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே வீடு. அதே வீடு தானே!"

"புரியாமல் சொல்கிறீர்கள்.

கணவன் வீடா? மனைவி வீடா?

வீடுதான் ஒன்று. கணவனோ மனைவியோ வீடு அல்ல.

ஆனால் தமதிரித்துவத்தில்

கடவுள் அன்பு, அன்பே கடவுள்.

The Father is Love.
The Son is Love.
The Holy Spirit is Love.
 
God is Love.

ஆனால்

Adam had love.
Eve had love.
They had love for each other."

"தமதிரித்துவ ஒரே அன்பை முற்றிலும் புரிய வைக்க நமது மொழியால் முடியாது.

ஆனாலும் ஒன்று புரிகிறது.

 இறைவன் அன்பு மயமாக இருக்கிறார்.

 நம்மால் அன்பு மயமாக இருக்க முடியாது.

 ஆனாலும் நம்மால் ஒருவரை ஒருவர் அவரவர் அன்பினால் அன்பு செய்ய முடியும்.

 செய்ய வேண்டும்.

 அன்பைப் பொறுத்த மட்டில் குடும்பம்

தமதிரித்துவத்தின் சாயல்.


தமதிரித்துவ தேவன் முதல் மனித குடும்பத்தை தன் சாயலில் படைத்தார்,

அவர்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழ வேண்டும் என்பதற்காக."

", அன்பு ஒரு தெய்வீக குணம். அன்பை உயிராக கொண்டு இயங்கும் குடும்பம் முழுக்க முழுக்க ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும் என்பதே இறைவனின் திட்டம்.

அதற்காகத்தான் திருமணத்தை ஒரு அருள் அடையாளமாக இயேசு ஏற்படுத்தியிருக்கிறார்.

ஞானஸ்நானத்தின் போதும் உறுதிப்பூசுதலின் போதும் பரிசுத்த ஆவியே நம்மை ஆட் கொள்வது போல,

ஒப்புரவு அருள் சாதனத்தின் போது குருவானவர் வழியாக இயேசுவே நம்மை மன்னிப்பது போல,

திருப்பலியின் போது இயேசுவே அப்ப ரச குணங்களில் உண்மையிலே பிரசன்னம் ஆவதுபோல,

திரு விருந்தின்போது இயேசுவே நமது ஆன்மீக உணவாக நம்மிடம் வருவதுபோல,

திருமணத்தின் போது திரி ஏக தேவனே மணமக்கள் மீது இறங்கி வந்து அவர்களை தமது தெய்வீக அன்பினால் ஆசீர்வதிக்கிறார்.

திருமண வாழ்வின்போது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் இறையன்பின் ஆன்மீக வெளிப்பாடுகளே.

திருமண வாழ்வு ஒரு லௌகீக வாழ்வு அல்ல.

முற்றிலும் ஆன்மீக வாழ்வு.

குழந்தை பேற்றின் மூலம் இறைவனின் படைப்புத் தொழிலில் அவருக்கு மணமக்கள் உதவிகரமாக இருக்கிறார்கள்.

குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கும்போது குழந்தைகளை பராமரிப்பதிலும் இறைவனுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள்.

இயேசுவின் நற்செய்தியை குழந்தைகளுக்கு அறிவிக்கும் ஆன்மிக பணியையும் பெற்றோர் செய்கிறார்கள்.

பெற்றோரது பிறரன்பு பணியும் குடும்பத்தில் தான் ஆரம்பிக்கிறது.

இறைப்பணியில் முழுமையான அர்ப்பண வாழ்வு வாழவிருக்கும் 

குருக்கள், ஆயர்கள், பாப்பரசர் ஆகியோரையும் திருச்சபைக்கு பெற்றுத்தருவது திருமண மக்கள்தான்.

இயேசு, அவரை பெற்றெடுத்த அன்னை மரியாள், அவரை வளர்த்த தந்தை சூசையப்பர் ஆகிய மூவரும் துறவிகள்தான்.

அவர்களும் திருக்குடும்ப அமைப்பில் தான் தங்களது துறவற வாழ்க்கையை வாழ்ந்தார்கள்."

"நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது துறவற வாழ்க்கையை விட இல்லற வாழ்க்கை தான் அதிக கடினமாக இருக்கும் போலிருக்கிறது."

", அதாவது ஒழுங்காக வாழ்ந்தால்."

"ஒருவர் குருவானவர் ஆக வேண்டுமென்றால் அவருக்கு பதிநான்கு ஆண்டுகள் பயிற்சி அளிக்கிறார்கள்.

 உண்மையில் இல்லறத்தில் புக விரும்புவோருக்கு அதே அளவு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment