Tuesday, March 16, 2021

*இராயப்பரோடு ஒரு Interview* 1

*இராயப்பரோடு ஒரு Interview* 1


"வந்தாச்சா!"

""இராயப்பரே! வருகிறவர்களை வாருங்கள்" என்று சொல்லவேண்டும் "வந்தாச்சா'' என்கிறீர்கள்?

"ஆத்மா உடலைவிட்டு பிரிந்து வரும்போது தான் வாருங்கள் என்று வரவேற்பேன்.

அரட்டை அடிக்க வருபவர்களை எல்லாம் வரவேற்க நான் அரட்டை அரங்கமா நடத்துகிறேன்?

சரி போகட்டும்." இன்றைக்கு யாரை பார்க்க வேண்டும்?" 

"உங்களை பார்க்க வருவேன் என்று சொல்லிவிட்டு தானே போனேன். மறந்து விட்டதா?"

"கேட்கவேண்டிய விஷயத்தை கேட்டுவிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கிறது."

"ஒரு சின்ன interview."

"interviewவா? நான் வேலை எதுக்கும் உங்களிடம் விண்ணப்பிக்க வில்லையே!"

"இது வேலைக்கான interview இல்லை. உங்களது வேலையை பற்றி நான் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்."

"தெரிந்து?"

",எழுத வேண்டும்."

"எழுதி?"


", முதல்ல வந்தவன உட்கார சொல்லுங்கள்."

 " சரி. உட்காருங்கள்."

".இராயப்பரே! எந்த தகுதி அடிப்படையில் உங்களை இயேசு திருச்சபையின் தலைவராக நியமித்திருக்கிறார்?"

"அதை இயேசுவிடம் தான் கேட்க வேண்டும். 

என்னை பொறுத்தமட்டில் என்னிடம் அன்பை தவிர வேறு தகுதி இருப்பதாக தெரியவில்லை."


",  நீங்கள் இயேசுவை மூன்று முறை மறுதலிக்கும் போது உங்களது அன்பு எங்கே போயிற்று.''

"ஒரு பக்கமும் போகவில்லை. என்னிடம் தான் இருந்தது. அது இருந்ததினால்தான் நான் பாவம் செய்தவுடன் அழுதேன். இயேசுவும் என்னை மன்னித்து விட்டார்."

", திருச்சபையில் உயர்ந்த பதவி வகிக்க வேண்டும் என்றால் அன்பு இருந்தால் மட்டும் போதுமா?"


"திருச்சபையில் தொண்டனாக இருக்க வேண்டும் என்றாலே அன்பு வேண்டும்."

", இயேசு உங்களுக்கு Specialஆ மூன்று பணிகளை கொடுத்தார்.

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"

"என் ஆடுகளைக் கண்காணி"

''என் ஆடுகளை மேய்."

 அதை கொஞ்சம் விளக்க முடியுமா?"

"இயேசு எப்போதும் தன்னை ஒரு ஆயனாகவும்,

 அவரை பின்பற்றுவோரை ஆடுகளாகவும் உருவகித்து பேசுவார்.


உங்களுக்குத் தெரிந்த மொழியில் பேச வேண்டுமென்றால்

  திருச்சபை என்ற மந்தையில் மூன்று வகையான ஆடுகள் உள்ளன.

முதலில் ஆட்டுக்குட்டிகள். 

இரண்டாவது சின்ன ஆடுகள்.

மூன்றாவது பெரிய ஆடுகள்.

பொதுநிலையினர்.
குருக்கள்
ஆயர்கள்
.

இந்த மூன்று வகையினரையும் கண்காணிக்கும் பொறுப்பு
 என் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விளக்கம் போதுமா. இன்னும் வேண்டுமா."

", மூவருக்கும் உள்ள பொதுவான அம்சம் ஞானஸ்நானம்.

 அதாவது ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் 
திருச்சபையின் உறுப்பினர்கள்

 அதாவது இயேசுவின் சீடர்கள்.

ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் மீட்புப் பெறத் தகுதி உள்ளவர்கள்.


குருக்கள், ஆயர்கள் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்."


"முதலில் எனது கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.

கடவுள் உருவம் உள்ளவரா? உருவம் இல்லாதவரா?"

", இயல்பாக (By nature) உருவம் இல்லாதவர்.

ஆயினும் நம்மை மீட்பதற்காக மனிதனாக பிறந்தபோது 

நமது மனித உருவை அவர் ஏற்றுக்கொண்டார். ஆகவே மனித சுபாவத்தில் அவருக்கு உருவம் உண்டு."

"அவருக்கு பிறப்பு,
 இறப்பு உண்டா?"

", தேவ சுபாவத்தில் அவருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. அவர் நித்தியர்.

ஆனால் மனித சுபாவத்தில் அன்னை மரியாளின் உற்பவித்துப் பிறந்தார்.

33 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து விட்டு கடைசியில் சிலுவையில் நமக்காக இறந்தார்."

", இயேசு எதற்காக மனிதன் ஆனார்?"

", நம்மை மீட்பதற்காக என்று ஏற்கனவே கூறிவிட்டேன்."

"அது எனக்கும் தெரியும்.

மீட்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்திருந்தால் அதை செய்ய சர்வ வல்லவரான அவருக்கு லட்சக்கணக்கான வழிகள் இருக்கின்றன.

மனிதனாகப் பிறந்து பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அவர் நினைத்திருந்தாலே போதும் நாம் மீட்கப்பட்டிருப்போம்."

"கொஞ்சம் பொறுங்கள் விடையைக் கண்டுபிடித்து விடுகிறேன்.

நமது மேல் அவருக்கு இருக்கும் அன்புதான் ஒரே காரணம்.

 நேசத்திற்கு உரியவர்களை போலவே நாமும் இருக்க ஆசைப்படுவது நமக்கே இயல்பாக இருக்கும் போது அன்பே உருவான அவருக்கு இருக்காதா?

நாம் குடை பிடித்துக்கொண்டு போகும்போது 
நமக்கு பிரியமான ஒருவர் குடை இல்லாமல் நடந்து சென்றால்

ஒன்று அவருக்கும் ஒரு குடையை கொடுப்போம்,

அல்லது நாமும் குடையில்லாமல் நடப்போம்.

நம் மீது கடவுளுக்கு இருந்த அன்பின் மிகுதியால் தான்

 நம்மைப்போல் இருப்பதற்காக

 நம்மைப்போல் மனிதனாகப் பிறந்து 

நம்மைப் போல் கஷ்டப்பட்டு

 நம்மைப்போல் மரணமும் அடைந்தார்.

சரியா."

''சரி. தொடர்ந்து உலகம் முடியும் மட்டும் தன்னுடைய உடலோடும் உதிரத்தோடும் ஆன்மாவோடும் நம்மோடு இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

அதற்காகத்தான் திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார்.

திவ்ய நற்கருணையில் அப்ப ரசக் குணங்களில் இயேசு மெய்யாகவே பிரசன்னமாக இருக்கிறார்.

திவ்ய நற்கருணை பலி (Eucharistic Sacrifice) உலகம் முடியுமட்டும் தொடர்வதற்காகவும்,

நம்மை மீட்ப்பு பாதையில் வழி நடத்துவதாகவும் 

குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

தான் உலகில் வாழும்போது பயன்படுத்திய எல்லா அதிகாரங்களையும் குருக்களுக்கும் கொடுத்தார். 

பரிசுத்த ஆவியை கொடுக்கும் அதிகாரம்,

 பாவங்களை மன்னிக்கும் அதிகாரம்,

 நோய்களை குணமாக்கும் அதிகாரம்,

பேய்களை ஒட்டும் அதிகாரம்,

 ஆன்மாக்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தும் அதிகாரம்,

நற்செய்தியை அறிவிக்கும் அதிகாரம், 

 ஆன்மீக ஆலோசனைகள் நல்கும் அதிகாரம் 

இவை எல்லாவற்றையும் குருக்களுக்கு கொடுத்தார்.

 இயேசு உலகில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்தாரோ அதைத்தான் குருக்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலம் பாவங்களை மன்னித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெபத்தின் மூலம் நோயைக் குணமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

இயேசு ஒவ்வொரு முறை குணமாக்கும் போதும் "உனது விசுவாசம் உன்னை குணம் ஆக்கிற்று" என்பார்.

குருக்கள் செபிக்கும்போது விசுவாசம் உள்ளவர்களுக்கு நோய்கள் குணமாகும்.

 வாழ்வது குருக்கள் அல்ல, குருக்களில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார்."

', அதாவது இயேசு இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் குருத்துவம் என்ற அருள் அடையாளத்தின் மூலம்.

நமது மக்களின் பிரச்சனை குருக்களில் இயேசுவைக் காணாததுதான்.

தேம்ஸ் நதியில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்று தன்னிடம் குடிதண்ணீர் இல்லை என்பதற்காக SOS கொடியைப் பறக்க விட்டதாம்!

அது‌‌ பயணித்துக் கொண்டிருந்ததே 
நல்ல தண்ணீரில் தான்.

நம் மக்களும் தங்களிடையே இயேசு உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதை உணராமல் தங்களது பாவங்களுக்கு மன்னிப்பு பெறாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! 

ஆனாலும் இராயப்பரே, உம்மிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்."

"வேண்டுகோளா? ஆலோசனையா?"

"வேண்டுகோள் உருவத்தில்ஆலோசனை.

என்னடா இந்தப் பொடியன் எனக்கு ஆலோசனை சொல்லுகிறானே'' என்று கோபித்துக் கொள்ளக்கூடாது."

"சொல்லுங்கள்."

", இந்த காலத்தில் பாவிகள் யாரும் குருவைத் தேடி வருவதாக தெரியவில்லை.

இயேசு இவ்வுலகில் மனித உரு எடுத்து, பாடுபட்டு, சிலுவையில் பலியானது நமது பாவமன்னிப்புக்காகத்தான். 

திருப்பலி எவ்வளவு முக்கியமோ திருவிருந்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாவமன்னிப்பு பெறுவதும்.

பாவ நிலையில் எத்தனை திருப்பலிகளில் கலந்து கொண்டாலும்

 எத்தனை முறை இயேசுவை நாவில் வாங்கினாலும்

 எந்த பயனும் இல்லை.


ஆகவே குருக்கள் திருப்பலி நிறைவேற்றுவதிலும் 

திருவிருந்து கொடுப்பதிலும் காட்டும் அதே ஆர்வத்தை பாவசங்கீர்த்தனம் கேட்பதிலும்  காட்ட வேண்டும்.

ஒரு திருமண திருப்பலியில் 10 குருக்கள் சேர்ந்து திருப்பலி நிறைவேற்றினாலும்

திருப்பலியில் கலந்து கொள்வோர் பாவமன்னிப்பு பெற்றிருக்காவிட்டால்

எத்தனை பேர் சேர்ந்து திருப்பலி நிறைவேற்றினாலும் கலந்து கொள்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

தவக்காலம், திருவருகைக்காலம் ஆகிய காலங்களில் நடத்தும் தியானங்களில் மட்டும் பாவசங்கீர்த்தனம் செய்தால் போதாது.

ஒவ்வொரு முறை திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ளும் போது ஆன்மாவின் பரிசுத்தத்தனத்தை ஆய்ந்து அறிந்து கலந்து கொள்ள வேண்டும்.

Toiletக்குப் போய் விட்டு கால் கழுவாமல் சாப்பிட உட்கார்ந்தால் எப்படி இருக்கும்.

அப்படி இருக்கும் பாவத்தோடு நற்கருணையை அருந்துவது.

பாவசங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிறு திருப்பலியின் போது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

பாவத்தோடு நற்கருணை வாங்குவதும் பாவம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

வாழ்வின் இறுதி நேரத்தில் திருப்பலியில் கலந்து கொள்ள முடியா விட்டாலும்,

இயேசுவை விருந்தாக அருந்த முடியாவிட்டாலும்,

பாவம் இல்லாதிருந்தால் விண்ணகம் சென்று விடலாம்.

ஆனால் பாவ நிலையில், மன்னிப்பு பெறாமல் 

திருப்பலி கண்டாலும் 

நன்மை வாங்கினாலும் விண்ணகம் சொல்ல முடியாது.

இதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

திருச்சபையின் தலைவர் என்ற முறையில் இது உமது கடமை.

இராயப்பரே, நான் சொல்வது புரிகிறதா?"

"புரிகிறது."

"Bye, நாளைக்கு வருகிறேன்."

"வாருங்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment