Tuesday, March 9, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*23 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*23
(தொடர்ச்சி)


"இயேசு பாவசங்கீர்த்தனத்தை
 ஏற்படுத்தியது உண்மையானால், அது அப்போஸ்தலர்கள் காலத்திலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பதும் உண்மைதானே!

தாங்கள் அனுசரிக்காததை எப்படி அவர்களால் போதிக்க முடியும்?

இயேசு சொன்னபடி ஞானஸ்நானம் கொடுத்தவர்கள்,

உறுதிபூசுதல் கொடுத்தவர்கள் 

 திவ்ய நற்கருணை கொடுத்தவர்கள்,

பாவசங்கீர்த்தனம் மட்டும் எப்படி செய்யாமலும் கொடுக்காமலும் இருந்திருப்பார்கள்?"

"ஞானஸ்நானத்தின்போது எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. அதற்குப்பின் பாவசங்கீர்த்தனம் எதற்கு?"
 
",ஞானஸ்நானம் பெற்றவுடன் மரணம் அடைபவர்களுக்கு பாவசங்கீர்த்தனம் தேவையில்லை.

ஆனால் வாழ்பவர்கள் 'நாங்கள் மாசற்றவர்கள்' என்று உறுதியாகக் கூற முடியாது.

கூறுவது  தற்பெருமைக்கு அடையாளம்.

அதுவே ஒரு பாவம்."

"'பாவமே செய்யவே மாட்டோம்' என்று தீர்மானம் எடுக்கலாம் அல்லவா!"

",தீர்மானம் எடுக்கலாம்  மட்டுமல்ல, தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஆனால் நாம் மனிதர்கள் பலகீனம் உள்ளவர்கள். அது கடவுளுக்குத் தெரியும்.

 ஆகவேதான் நமது பலவீனத்தின் காரணமாக நாம் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்காகவே

 பாவசங்கீர்த்தனம் என்ற அருள் அடையாளத்தை இயேசு ஏற்படுத்தினார்."


"நாம் எப்போதெல்லாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்?"

",எப்போதெல்லாம் சாவான பாவத்தில் விழுகிறோமோ, அப்போதெல்லாம் கட்டாயம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அற்பப் பாவங்களுக்காகவும் செய்யலாம்."


" 'வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கிர்த்தனம் செய்கிறது' என்பதுதானே திருச்சபையின் கட்டளை!" 

",'ஒரு முறையாவது' என்று தான் கட்டளை கூறுகிறது.

ஒரு முறை மட்டும் என்று கூறவில்லையே!

ஆண்டுக்கு ஒரு ஒரு முறையாவது டாக்டரிடம் check up செய்யச் சொல்லுவார்கள்,

ஆனால் சுகமில்லாத  போதெல்லாம் டாக்டரைப் பார்த்துத்தானே ஆகவேண்டும்!"

"அது சரிதான். திவ்ய நற்கருணை அருந்தும் போதெல்லாம்

 தேவைப்பட்டால் 

 பாவசங்கீர்த்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

சாவான பாவத்தோடு நற்கருணை அருந்துவது சாவான பாவம்!

'ஆனால் இந்த விபரம் எல்லா மக்களுக்கும் தெரியுமா?"

",தெரிந்திருக்க வேண்டும். தெரியப்படுத்துவது குருக்களின் தலையாய கடமை."

"ஏன் நாம் தெரியபடுத்த கூடாதோ?"

",தெரியப்படுத்தலாம், தனிப்பட்ட முறையில்.

 ஞாயிற்றுக்கிழமைகளில் பிரசங்க மேடை ஏற நமக்கு அதிகாரம் இல்லை.

குருக்கள் அதிகாரத்தோடு சொல்லலாம்."

"உண்மைதான். டாக்டர் மருந்துகளை prescribe செய்யலாம்.

நாம் சொல்ல மட்டும் செய்யலாம்.

பங்குக் குருவானவர் தனது ஆளுகைக்கு உட்பட்ட ஒருவரிடம் 

'நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்து எவ்வளவு காலம் ஆகிறது?'

என்று கேட்கலாம்.

 நாம் கேட்க முடியுமா?"


",நான் சிறுவனாக இருந்தபோது தென்காசி பங்கில் சுவாமி அல்போன்ஸ் டியூர் S J பங்குக்
குருவாக இருந்தபோது 

கிராமங்களில் திருப்பலி நிறைவேற்ற செல்லும்போது முந்திய நாளே சீசப் பிள்ளையுடன் நடந்தே அங்கே சென்று விடுவார்.


மறுநாள் பூசைக்கு வர வேண்டியவர்கள் முந்திய நாளே பாவசங்கீர்த்தனம் செய்தாக வேண்டும்.


 மக்கள் பாவசங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்கும் போது கையில் இருக்கும் ஜெபமாலை மணிகளை எண்ணி பாவசங்கீர்த்தனம் செய்துள்ளோர் எண்ணிக்கையைக் குறித்து வைத்துக் கொள்வார்.

மறுநாள் காலையில் வெளியூர்களிலிருந்து பூசைக்கு வருபவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அவர்களது எண்ணிக்கையையும் குறித்து வைத்துக் கொள்வார்.

மொத்தம் எத்தனை பேர் பாவசங்கீர்த்தனம் செய்தார்களோ அத்தனை ஓஸ்திகள்தான் திருப்பலியில் வைக்கப்படும். .
 
 பாவசங்கீர்த்தனம் செய்தவர்கள் மட்டுமே நன்மை எடுக்க முடியும்.

ஆகவே மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பாவசங்கீர்த்தனம் செய்ய வருவார்கள்.

அவர் பங்கு குருவாக இருந்த 25 ஆண்டுகளிலும் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் யாரும் நன்மை வாங்கியதில்லை.

பங்கு குரு நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

பாவசங்கீர்த்தனத்திற்கும், நற்கருணை அருந்துவதற்கும் இடையே உள்ள தொடர்பை மக்கள் புரியும்படி செய்ய வேண்டும்.

 அது புரியாததினால்தான் ஏதோ கல்யாண வீட்டுக்குப் போகும்போது பந்தியில் அமர்வது போல 

திருப்பலிக்கு வருபவர்கள் திருப்பந்தியிலும் அமர்ந்து கொள்கிறார்கள்.

 தங்களது ஆன்மாவின் நிலை பற்றி அவர்கள் அக்கரைப் படுவதில்லை.

ஆகவேதான் திருவிழாக்காலங்களில் திருவிழாவிற்கு வருவோர் வேறு தயாரிப்பு எதுவும் இல்லாமலேயே நன்மை வாங்குகிறார்கள்.''
.
"இப்போது புரிகிறது ஏன் நீங்கள் திருவிழா கூட்டங்களைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தீர்கள் என்று.

நாமும் பாவசங்கீர்த்தனத்தின் அவசியம் பற்றி மக்களிடத்தில் தனிப்பட்ட முறையில் கூறலாம்.

காலப்போக்கில் (In course of time)புரிந்து கொள்வார்கள்.

இப்போது ஒரு கேள்வி.
   
 
நம்மிடம்.....இருந்தால் தான் பாவசங்கீர்த்தனம் செய்யவே வருவோம். கோடிட்ட இடத்தை நிரப்புக."


",பாவங்களுக்காக மனஸ்தாபம்."

செய்த பாவங்களுக்காக மனஸ்தாப படுவதோடு,

 இனிமேல் பாவங்கள் செய்வதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்.

அதன் பின்புதான் சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை மனஸ்தாபப் படும்போதும் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள ஆன்மீக உறவு நெருக்கம் அடைகிறது.''

உலகின் முதல் திருப்பலி எப்போது யாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது?"


",ரத்தம் சிந்திய விதமாய் பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் பலியை ஒப்புக்கொடுத்த இயேசு 

பெரிய வியாழக்கிழமை அன்று இரவு ரத்தம் சிந்தாத விதமாய் அதே திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

அப்போது தனது சீடர்களுக்கு தன்னையே உணவாகவும் கொடுத்தார்.

அப்போதுதான்  தனது சீடர்களுக்கு குருப்பட்டம் அளித்தார்.

பெரிய வியாழக்கிழமை அன்று இரவு ரத்தம் சிந்தாத விதமாய் ஒப்புக்கொடுக்கப்பட்ட அதே திருப்பலிதான் 

இன்றைய தினம்வரை நமது குருக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆதித் திருச்சபையில் இந்த திருப்பலிக்கு பெயர் அப்பம் பிட்குதல்.

வேதகலாபனை காலங்களில் கூட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றது.

பழைய ஏற்பாட்டின் காலத்தில் கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட ஆட்டை அடித்து உணவாக்கி பலியை ஒப்புக்கொடுத்தோர் உண்டார்கள்.

 நாமும் அதே போல் தான் இயேசுவைப் பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு 

அவரையே நமது ஆன்மீக உணவாக உண்கிறோம்.

பலியே உணவாகிறது."

"நமது ஆன்மீக வாழ்வில் திவ்விய நற்கருணையின் பங்கு என்ன?"


",இயேசு எவ்வாறு தன்னையே தன் தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகவே உலகில் பிறந்தாரோ,

அவ்வாறே நாமும் நமது வாழ்க்கையை இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

நம்மை நாமே பலியாக ஒப்புக் கொடுப்பதுதான் ஆன்மீக வாழ்வு என்பதை ஏற்றுக் கொண்டால்,

நமது வாழ்விலிருந்து நமக்காகவே பலியான நற்கருணை நாதரை பிரிக்க முடியாது.

நாம் இயேசுவுக்காகவே வாழ்கிறோம் என்பது உண்மையானால்,
'
 நமக்காகவே வாழ்ந்த, இன்னும் நற்கருணைப் பேழையில் நமக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிற

இயேசுவிடமிருந்து நம்மை எப்படி பிடிக்க முடியும்?

கிறிஸ்தவ வாழ்வின் மையமே திருப்பலிதான்.

உணவு இல்லாமல் உலகில் வாழ முடியாது.

ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணை இல்லாமல் நாம் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது.

நமது விண்ணக வாழ்வின் முன் சுவை தான் (Pretaste) நற்கருணை உணவு.

 இப்போது நாம் நற்கருணையை உணவாக உட்கொள்வதின் மூலம் இணைகின்ற அதே இயேசுவுடன் தான் 

விண்ணகத்தில் நித்திய பேரின்பத்தில் இணைய போகிறோம்.

இத்தகைய உணர்வுடன் திருப்பலி ஒப்புக்கொடுத்து, நற்கருணையையும் அருந்தினால்,

 மண்ணகத்திலேயே விண்ணக வாழ்வை வாழ ஆரம்பித்துவிட்டோம் என்றுதானே அர்த்தம்.  

ஆகவே நமது ஆன்மீக வாழ்வே நற்கருணை நாதர்தான்."


"திவ்ய பலி பூசைக்கு வரும்போது காபி குடித்துக்கொண்டே வருபவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"நன்மை வாங்குவதற்கு முன் ஒரு மணி நேரம், எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. தண்ணீர் மட்டும் குடிக்கலாம்', 

 என்பது திருச்சபையின் விதி.

ஒரு காலத்தில் நடுச்சாமம் துவக்கி  நன்மை வாங்கும் மட்டும் ஒன்றும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்ற விதி இருந்தது.

திருச்சபை தாராள மனதுடன் அந்த விதியை 'நன்மை வாங்குவதற்கு முன் ஒரு மணி நேரம்' என்று மாற்றி இருக்கிறது.

நாமும் தாராள குணத்துடன் நடந்து கொள்வது நல்லது.

திருப்பலியின் நேரமே அரைமணி தான்.

திருப்பலிக்கு வரும்பொழுது காபியை குடித்துக் கொண்டே வந்தால், எப்படி ஒரு மணி விதியைக் கடைப்பிடிக்க முடியும்? 

திருப்பலி ஆரம்பிக்கு முன் ஒரு மணி நேரம் நோன்பு இருந்தால் யாரும் அடிக்கவா போகிறார்கள்?

கடவுள் அளவு இல்லாத தாராள மனதோடு நம்மை கவனித்து வருகிறார்.

நாமும் கொஞ்சமாவது தாராளமாக இருந்தால் என்ன!

(தொடரும்)

 லூர்து செல்வம்.

No comments:

Post a Comment