Monday, March 15, 2021

திருமண வாழ்வில் பிரச்சனைகளே இல்லையா? 5

திருமண வாழ்வில் பிரச்சனைகளே இல்லையா? 5


"நாம் இருவர் நமக்கு ஒருவர் கொள்கை அடிப்படையில் பிறந்த ஒற்றை நபர் சமூக வாழ்க்கைக்கு ஏற்றவராக வளரமாட்டார்.

உண்மையில் அனேக குழந்தைகளால் சமூக பிரச்சனை இல்லை. ஒற்றை குழந்தையால் தான் பிரச்சனை.

அது செல்லமாக வளர்வதால் அதனால் சமூகத்தில் ஏற்படும் ஒரு சிறு கஷ்டத்தை கூட தாங்கிக்கொள்ள முடியாது.

குழந்தை வளர்ந்த பின் "அவசரத்திற்கு உதவ ஆளின்றி, ஆறுதல் கூற ஆளின்றி, ஒற்றை ஆளாய் பாலைவனத்தில் வாழ்வது போல் வாழ வேண்டி இருக்கும்.

இதைவிட பெரிய சமூகப் பிரச்சனை இருக்க முடியுமா!"


", நாட்டிலுள்ள அத்தனை குடும்பங்களிலும் குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்து வாழ்ந்தால் 

நாட்டில் அண்ணன், தம்பி, 
அக்கா, தங்கை, 
சித்தப்பா, சித்தி, 
பெரியப்பா, பெரியம்மா, 
தாய் மாமா, அத்தை, 
மைத்துனன் , மச்சினிச்சி
ஆகிய உறவுகள் அத்தனையும் காலியாகி விடும்!

நாடு உறவுகளே இல்லாத பாலை வனமாய் மாறிவிடும்.

இத்தகைய பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டுமானால் இறைவன் தரும் குழந்தைகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒற்றை தென்னம் பிள்ளையை வளர்ப்பது எளிது.

ஐந்து தென்னம் பிள்ளைகளை வளர்ப்பது கடினம்தான்.

 ஆனால் தேங்காய்கள் பறிக்கும்போது 
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்."

"இறைவன் தரும் குழந்தைகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

அவர்களை வளர்க்கும் போது தான் பிரச்சனைகள் பல உருவங்களில் எட்டிப் பார்க்கின்றன."

",வளர்ப்பதில் என்ன பிரச்சனை?
நீங்கள் சாப்பாடு போடப் போகிறீர்கள் பையன் வளரப்போகிறான்."

"ஆமா, ஆமா, பையன்தான் வளர்வான். 

ஆனால் அவனை உருவாக்க வேண்டியது, அதாவது, உருப்படியாக வளர்க்க வேண்டியது நாம்தானே! சாப்பாடா?"


", Correct. நாம் பேசிக்கொண்டிருப்பது ஆன்மீகம். இதை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது.

இப்போ பிரச்சனை எல்லாம் பிள்ளைகளை ஆன்மிக ரீதியாக வளர்ப்பது என்பதை பற்றிதான்.

அனேக பெற்றோர் பிள்ளைகளை உலகத்தில் வசதியுடன் வாழ்வதற்கு ஏற்ற 

வேலை கிடைப்பதற்கு உரிய கல்வியைக் கொடுப்பதுதான் பையனை உருவாக்குதல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

எஞ்சினியர் ஆவதும்‌, டாக்டர் ஆவதும் தான் கல்வியின் நோக்கம் என்பதுதான் அநேகருடைய எண்ணம்.

பிள்ளைகளின் ஆன்மீகத்தைப் பற்றி அநேகர் கவலைப்படுவதே இல்லை. 

எந்த உணவை வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் அதில் சக்தியும் வளர்ச்சியும் தரக்கூடிய சத்துப்பொருள் இருக்கிறதா என்பதையும், உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் எதுவும் அதில் இல்லை என்பதையும் உறுதி செய்து கொண்டு சாப்பிட வேண்டும்.


அதே போல் தான் கல்வி விஷயத்திலும் வேலை விஷயத்திலும் இஷ்டப்பட்ட முடிவு எடுக்கலாம். 

ஆனால் ஒரு நிபந்தனையுடன், நமது முடிவில் நமது ஆன்மீக வாழ்விற்கு இடைஞ்சல் எதுவும் இல்லையா என்பதைப் பார்த்துக் கொள்வதோடு,

 ஆன்மீக வாழ்விற்கு அது உதவிகரமாய் இருக்குமா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் ஆன்மீக வாழ்க்கையை மையமாக கொண்டுதான் இருக்க வேண்டும்.

பணத்தையும் வசதிகளையும்  மட்டும் மையமாக வைத்து எடுக்கும் எந்த முடிவும் 

நாம் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறோமோ அந்த நோக்கத்தை அடைய விடாது.

பெற்றோர் பிள்ளைகளை தெய்வ பக்தியிலும், தெய்வ பயத்திலும், ஆன்மீகத்திலும் வளர்த்து விட்டாலே போதும்.

 அந்த வளர்ப்பே பிள்ளைகள் சரியானமுடிவுகளை மட்டுமே எடுக்க உதவியாக இருக்கும்."

"அதாவது இறைவனுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்ற உண்மையை பிள்ளைகள் மனதில் ஆழமாக பதிய வைத்தால் மட்டுமே போதும்.


 "Love and do as you like."
Saint Augustine.

அன்பு செய், இஷ்டப்படி நட.

இறைவனை அன்பு செய்தால் மட்டும் போதும், நமது இஷ்டங்கள் இறைவனை மட்டுமே மையமாகக் கொண்டு இருக்கும்.

சரியா?"

"Super சரி."

"தங்களுக்கு வயதான காலத்தில் பிள்ளைகள் தங்களைக் கவனிப்பதில்லையே என்ற ஒரு பிரச்சனை பெற்றோர்களிடையே நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு உண்டா?"

", பிள்ளைகளை இறை அன்பில் வளர்த்து விட்டிருந்தால் இந்த பிரச்சினை எழவே செய்யாது.

பொருளாசையை ஊட்டி பிள்ளைகளை வளர்த்திருந்தால் அவர்கள் பொருளுக்காக எதையும், யாரையும் (இறைவன் உட்பட) தியாகம் செய்ய தயாராகி விடுவார்கள்.

இந்த பிரச்சனைக்குக் காரணம் பெற்றோர்களே.

எந்த விதையை தரையில் ஊன்றுகிறோமோ அந்த விதை தான் முளைக்கும்.

இந்தப் பிரச்சனையே இல்லாதிருக்க வேறொரு வழியும் இருக்கிறது.

நாங்கள் படித்த காலத்தில் தேர்வில் வரக்கூடிய முக்கியமான கேள்விகளைக் கேட்டால் எங்கள் தலைமையாசிரியர் கூறுவார்,

"எதிர்பாராதவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஏமாற மாட்டார்கள்."

எதிர்பார்த்துக் கொடுத்தால் அது கடன்.

 எதிர்பாராமல் கொடுத்தால் அது சேவை.

நாம் பிள்ளைகளுக்கு கடன் கொடுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும், நமக்கு பிரச்சினையில்லை."

"சம்பந்தம் இல்லாத கேள்வி, தோன்றுகிறது. கேட்கலாமா?"

", கேளுங்கள். சம்பந்தப்படுத்தி கொள்வோம்."

''நாம் இறைவனுக்கு சேவை செய்யும் போது, நமக்கு விண்ணக வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து தானே செய்கிறோம்.

நாம் செய்வது சேவை இல்லையா?"


", நாம் படைக்கப்பட்டதே விண்ணகத்தில் இறைவனோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வதற்காக தான்.

விண்ணகத்தில் இறைவனோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வதுதான் நமது இவ்வுலக வாழ்வின் இறுதி நோக்கம். (Ultimate aim

அந்த நோக்கத்தை அடைவதற்காக 
நம்மைப் படைத்தவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்.

நாம் இறைவனுக்காக வாழ வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம்.

 அவரது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நமது வாழ்க்கையை இந்த பார்வையால் மட்டுமே பார்க்க வேண்டும்."

"அப்போ பிள்ளைகளை வளர்ப்பது இறைவனுக்காக மட்டுமே என்கிறீர்கள்!"

", ஆமா. இறைவனுக்காக மட்டுமே வாழ்பவர்களுக்கு ஏற்படுவது எதுவுமே பிரச்சனைகள் இல்லை.

 ஏனெனில் அவர்கள் அவற்றிலும் ஆண்டவரையே காண்பார்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment