இல்லறம், இறைவன் அருளிய நல்லறம்.2
(தொடர்ச்சி
"உண்மையில் துறவற வாழ்க்கையை விட இல்லற வாழ்க்கைதான் அதிக கடினமானது.
துறவிகள் இல்லறத்தை துறந்து தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறார்கள்.
அந்த வாழ்க்கை முறையே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
இவ்வுலக சம்பந்தப்பட்ட கவலைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை.
ஆனால் இல்லற வாசிகள் சுனாமிகள் நிறைந்த கடலில் கஷ்டப்பட்டு பயணம் செய்யும் கப்பலைச் போல
உலகக் கவலைகளுக்கு மத்தியில் அவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல்
ஆன்மீகத்தில் வளர வேண்டியிருக்கிறது."
", உங்கள் கவலை எனக்கு புரிகிறது அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப் பட வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே!"
"அப்படித்தான்."
", முதலில் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொண்டால் பயிற்சி என்பது பெரிய காரியமே இல்லை.
துறவற வாழ்க்கைக்கான பயிற்சி அந்த வாழ்க்கையை தேர்வு செய்த பின்பு தான் ஆரம்பிக்கிறது.
ஆனால் இல்லற வாழ்க்கைக்கான பயிற்சி குழந்தை கருவில் உருவான உடனேயே ஆரம்பிக்கிறது.
பயிற்சி கொடுப்பவர்கள் குழந்தை உருவாக காரணமான அதன் பெற்றோர்.
பெற்றோர் எவ்வழி மக்கள் அவ்வழி.
பெற்றோரைப் பார்த்துதான் பிள்ளைகள் வளர்கின்றன.
பெற்றோருடைய குணங்கள், அவை நல்லவையோ கெட்டவையோ, அப்படியே பிள்ளைகளுக்கும் வந்துவிடுகின்றன.
ஆகவே கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக பெற்றோர்கள் வாழ வேண்டும்.
பெற்றோரின் ஒவ்வொரு அசைவும் சிந்தனையும் சொல்லும் செயலும் குழந்தைகள் பார்த்து பின்பற்ற கூடியவையாயா இருக்க வேண்டும்.
தம்பதியர் தம் பிள்ளைகளுக்கு அளிக்கும் பயிற்சிதான் பிள்ளைகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு அவர்கள் அளிக்கும் பயிற்சி.
பெற்றோர் ஒழுங்காக வாழ்ந்தால் பிள்ளைகளும் ஒழுங்கான பயிற்சியை பெறுவார்கள்.''
"அப்போ இது சிக்கல்தான்."
", ஒரு சிக்கலும் இல்லை. ஒவ்வொரு பெற்றோரும் கிறிஸ்தவ ஒழுக்க நெறிப்படி வாழ்ந்தாலே போதும். பிள்ளைகளும் அப்படியே வளரும்.''
"பிள்ளைகள் பெற்றோரிடமும் இருந்து கற்பதை விட வெளி உலகில் இருந்து தான் அதிகமாக கற்கிறார்கள்.
வெளி உலகை திருத்த பெற்றோரால் முடியுமா?"
"ஹலோ! நாம் இப்போது பட்டிமன்றம் பேசிக் கொண்டு இருக்கவில்லை.
பெற்றோர் கிறிஸ்தவ ஒழுங்கு நெறிப்படி வாழ்வதே அவர்கள் பிள்ளைகளுக்கு அளிக்கும் பயிற்சி."
"Alright! Accepted."
".திருச்சபையும் திருமணமாக இருக்கும் பிள்ளைகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி, சான்றிதழ் வழங்குகிறது.
அந்த பயிற்சி வகுப்புகளில் திருமண வயது பிள்ளைகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்."
"திருமணத்தின் உண்மையான பிரச்சனை மணமக்களை தேர்வு செய்வதுதான்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள்.
மணமக்களை தேர்வு செய்வதுதான் ஆரம்பம். ஆரம்பத்தில் தவறு செய்துவிட்டால் அதை திருத்துவது மிக கடினம்.
எதன் அடிப்படையில் மணமக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?"
".பணத்தின் அடிப்படையிலோ,
அழகு அல்லது கவர்ச்சியின் அடிப்படையிலோ, அந்தஸ்தின் அடிப்படையிலோ மணமக்கள் தேர்வு செய்யப்படக் கூடாது.
இம்மூன்றுமே மாறக்கூடியவை.
கட்டடத்தின் அடிப்படை மாறினால் கட்டடமே விழுந்து விடும்.
உண்மையான அன்பின் அடிப்படையில் மணமக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
நிபந்தனை அற்ற அன்பின் அடிப்படையில் கட்டப்படும் திருமண வாழ்வு தான் நிலைத்து நிற்கும்."
"நிபந்தனை அற்ற அன்பு செய்யக் கூடியவர்களை எப்படி கண்டுபிடிப்பது?"
", முதலில் மணமக்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பு இருக்கிறதா என்று தெரிந்து அவர்களை திருமண அந்தத்தில் இணைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவர் எண்ண அடிப்படையில் விருப்பத்தை தெரிவிப்பர்.
அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
எந்த அடிப்படையில் விரும்பினாலும் இருவரிடமும் உண்மையான விருப்பம் இருக்கிறதா என்பதை அறிந்து,
ஒருவரை ஒருவர் உண்மையாகவே விரும்பும் இருவரை திருமண பந்தத்தில் இணைத்து வைக்க வேண்டும்.
திருமண அன்பு நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும்.
வாழ்க்கைத் துணையை வாழ்க்கைத் துணை என்பதற்காக மட்டுமே அன்பு செய்ய வேண்டும்.
திருமண வாழ்வின் அடிப்படைகள்:
The spouses must be free to marry;
முதலில் மணமக்களுக்கு திருமணம் செய்ய உண்மையாகவே விருப்பம் இருக்க வேண்டும்.
சிலருக்கு திருமண வாழ்வில் விருப்பம் இருக்காது. அவர்களை கட்டாயப்படுத்த கூடாது.
திருமண உறவை விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாகும்.
they must freely exchange their consent;
சுதந்திரமாக ஒருவருக்கொருவர் சம்மதத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
இருவரிடமும் உண்மையான சம்மதம் (Mutual consent) இருந்தால்தான் திருமணத்தில் இணைய வேண்டும்
சிலருக்கு திருமண வாழ்வில் விருப்பம் இருக்கும் ஆனால் தேர்வு செய்யப்பட்ட ஆள் மேல் விருப்பம் இருக்காது.
அவர்களது விருப்பத்தைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
அவர்களாகவே சுய சுதந்திர உணர்வோடு விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
they must intend to marry for life,
திருமணவாழ்வு வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்.
'ஆசை இருக்கும் வரை திருமண வாழ்வில் நீடிப்போம், ஆசை முடிந்தபின் விவாகரத்து பெற்றுக்கொள்வோம், என்ற எண்ணம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து விடக்கூடாது.
They must be faithful and be open to children;
ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாய் இருப்பதுடன் குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
திருமண வாழ்வின் உயிர்
பிரமாணிக்கம். பிரமாணிக்கமாய் இருக்க முடியாதவர்களும், குழந்தைப் பேற்றை விரும்பாதவர்களும் திருமண வாழ்விற்கு ஏற்றவர்கள் அல்ல.
they must intend “good of each other,”
இருவரும் ஒருவர் மற்றவரின் நலனை விரும்ப வேண்டும்.
தன்னலத்தை மட்டும் விரும்புபவர்கள் திருமண வாழ்விற்கு ஏற்றவர்கள் அல்ல."
"இதைப்பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படுவதே இல்லை.
அழகு இருக்கிறதா, அந்தஸ்து இருக்கிறதா, சம்பாத்தியம் இருக்கிறதா, நிறைய வரதட்சனை கிடைக்குமா, திருமணத்தை ஆடம்பரமாக கொண்டாடக் கூடிய அளவிற்கு வசதி உள்ளவர்களா போன்ற விஷயங்களை தானே மக்கள் முதலில் விசாரிக்கிறார்கள்.
இவற்றில் ஒன்றுகூட நிரந்தரம் உள்ளவை அல்ல.
இவற்றின் அடிப்படையில் திருமணம் செய்து வைப்பதும்,
மணல் மீது மாடிக் கட்டடம் கட்டுவதும் ஒன்று தான்."
", ஒரு விஷயத்தை நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பரிபூரண சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணம் செல்லாது."
", நாம் இப்போது கிறிஸ்தவ திருமணத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்தவ திருமணம் குருவானவர் முன்னிலையில்தான் நடைபெற வேண்டும்.
திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றுபவர்கள் மணமக்களே.
திருமண வாழ்வு வாழப் போகின்ற மணமக்கள்இருவரும் கிறிஸ்தவர்களாக இருந்தால் அவர்களுடைய
கிறிஸ்தவ வாழ்வு சுமூகமாக இருக்கும்.
விசுவாசத்தின் அடிப்படையில் இல்லாமல் பிற உலக வசதிகளின் அடிப்படையில் திருமணத்திற்காக மட்டும் மனம் திரும்புபவரோடு
திருமணம் செய்துகொண்டால் முழுமையான கிறிஸ்தவ வாழ்வை பாதிக்கும் என்பது அனுபவ பூர்வமான உண்மை.
மனம் திரும்பிய பிற மத மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்ட பெண்,
வாழ்வின் போது கோவிலை மறந்த கதைகள் ஏராளம் உள்ளன.
கிறிஸ்தவ வாழ்விற்கு உதவிகரமாய் இருக்கும் வகையில் மணமக்களை தேர்ந்தெடுப்பதுதான் ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
திருமணம் ஒரு ஆன்மீக உறவு என்பதை புரிந்து கொண்டாலே அந்த உறவுக்கு உதவிகரமாய் இருக்கும் வகையில் மட்டுமே மணமக்களை தேர்ந்தெடுப்போம்.
உலக வசதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து விட்டு ஆன்மீக வாழ்வு பற்றி கவலைப்படக்கூட
முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மணமக்களும் இருக்கிறார்கள்.
ஆகவே மணமக்களைத் தேர்ந்தெடுக்கும் போது கிறிஸ்தவ விசுவாச வாழ்வை மையமாகக் கொண்டு தேர்ந்தெடுப்போம்.
திருமணம் ஆவதை விட ஆன பின் அதை வாழ்வது தான் மிகவும் முக்கியம்.
மணமக்கள் ஒருவரை மற்றவரையும்,
இருவரும் சேர்ந்து இறைவனையும்
முழுமனதோடு நேசிப்பதோடு
அவரது சித்தத்தை நிறைவேற்றுவதே தங்களதுதிருமண வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ வேண்டும்.
திருமண வாழ்வு என்பது இறை பணி என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
திருமணம் ஆனவர்கள் ஒருவர் மற்றவருக்கு செய்யும் பணி இறைவனுக்கு செய்யும் பணி என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
இறைவனுக்காகவே ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும்."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment