Thursday, March 11, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*24 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*24
(தொடர்ச்சி)

"கிறிஸ்துவின் வாழ்வின் மையம் சிலுவைப் பலி.

கிறிஸ்தவ வாழ்வின் மையம் திருப்பலி.

நாம் கிறிஸ்துவுக்காக வாழ்கிறோம்.

கிறிஸ்து நற்கருணையில் வாழ்கிறார்.

ஆகவே நாம் நற்கருணை 
நாதருக்காகவே வாழ்கிறோம்.

நமது பக்தி வாழ்வின் மையம் திவ்ய நற்கருணைதான்.

இயேசு நம்மிடம் நற்கருணை பக்தியை எதிர்பார்க்கிறார்.

இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அளவு நற்கருணை பக்தி நம்மிடையே இருக்கிறதா?"

",உண்மையில் அது ஒரு கேள்விக்குறி தான்.
,
நம்மிடையே நற்கருணை பக்தி இருக்கிறது.

 ஆனால் இயேசு எதிர்பார்க்கின்ற அளவு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

காலையில் காபி இல்லாமல் முடிவதில்லை.

தினமும் walking போகாமல் நாளை ஆரம்பிக்க முடியவில்லை.

ஆனால் காலையிலேயே திருப்பலி
 காணாவிட்டாலும் நாள் இயல்பாக இயங்குகிறதே!

ஞாயிற்றுக்கிழமை முழு திருப்பலியில் கலந்து கொள்ளாவிட்டாலும் மனதில் கலக்கம் ஏற்படவில்லையே!

நற்கருணை வாங்கும்போது கடவுளே நம்மிடம் வரும் உணர்வு இல்லையே!

பக்தி இருக்கிறது, அதை மறுக்க முடியாது.

 ஆனால் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்கிறாரோ அந்த அளவுக்கு உள்ளது என்று கூற முடியாது."

",இயேசு எந்த அளவுக்கு எதிர்பார்கிறார்?"

",கேள்வியை கேட்ட நீங்கள்தான் அதற்கு பதில் கூற வேண்டும்."

",அது தெரிந்திருந்தால் நான் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டேன்."


",இயேசு தன்னையே நமக்கு முழுமையாக தந்தார். 

நம்மையும் முழுமையாக எதிர்பார்க்கிறார்."

"எப்படி வேலைக்கே போகாமல் 24 மணி நேரமும் கோவிலிலேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?"

",காலையில் அவரைச் சந்தித்துவிட்டு பகல் முழுவதும் என்ன செய்தாலும் அவருக்காகவே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

நமது அந்தஸ்தின் கடமைகள் இவ்வுலகைச் சார்ந்தவையாய் இருக்கலாம்.

 ஆனால் அவற்றை நற்கருணை நாதரின் நினைவோடு செய்யும்போது அவை ஆன்மீக செயல்களாக ஞானஸ்நானம் பெற்றுவிடுகின்றன. 

திருப்பலியோடு ஆரம்பிக்கும் நாள் நமக்கு திரு நாளாகவே இருக்கும்.

ஒவ்வொரு நாளையும் திருப்பலியோடு ஆரம்பித்து

 அந்த நாள் முழுவதையும் நற்கருணை நாதருக்காக மட்டுமே வாழ்ந்தால் 

நாம் இயேசுவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறோம்."

"நற்கருணை நாதருக்காக மட்டுமே
என்றால் நாம் வேறு ஒருவருக்காகவும் வாழக் கூடாதா?

மனைவி, மக்கள், நாடு எதற்காகவும் வாழக் கூடாதா?

", மாணவர்கள் எதற்காக மட்டும் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டும்?"

"படிப்பதற்காக மட்டும்."

",பள்ளிக்கூடத்தில் நடக்கக் கூடாதா? உட்காரக் கூடாதா? விளையாடக்கூடாதா? யாரோடும் பேசக் கூடாதா?"

" புரிகிறது.

 பள்ளிகூடத்தில் எதைச் செய்தாலும் அது படிப்பை மட்டுமே மையமாக கொண்டிருக்க வேண்டும்.

 அதேபோல நமது வாழ்நாளில் எதை செய்தாலும் அது நற்கருணை நாதரை மட்டுமே மையமாக கொண்டிருக்க வேண்டும்.

 ஆனால் இயேசுவுக்காக தங்களை முழுவதுமே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

ஆனால் துறவிகளால்தான் முழு அர்ப்பண வாழ்வு வாழ முடியும். 

அவர்களுக்குதான் உலகத்தைப் பற்றி எந்த கவலையும் இல்லை."

",உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா?"

"இருக்கிறது."

",விசுவாசம் என்றால் என்ன?"

"இறைவனை நமது தந்தையாக ஏற்றுக் கொண்டு அவருக்காக வாழும் அர்ப்பண வாழ்வுதான் விசுவாசம்."


", அர்ப்பண வாழ்வு   என்றால் அர்த்தம் புரிகிறதா?"

"இறைப் பணிக்கே நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் வாழ்வு."

",உங்களிடம் விசுவாசம் இருக்கிறது, அதாவது அர்ப்பண வாழ்வு இருக்கிறது.

 நீங்கள் துறவியா?"


"ஞானஸ்நானம் பெற்ற அனைவருமே அர்ப்பண வாழ்வு வாழவேண்டும் என்கிறீர்கள். அப்படித்தானே!"

",ஞானஸ்நானம் பெறும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இறங்கி வருவது எதற்காக?

 விளையாடுவதற்காகவா? அவருக்கு வேறு வேலையே இல்லாமலா?

நம்மை முழுவதுமாக ஆள்வதற்காகவே நம் மீது இறங்கி வருகிறார்.

பரிசுத்த ஆவி நம்மை ஆட்கொண்ட வினாடியிலிருந்து நாம் இறைவனுக்காக மட்டுமே வாழ்கிறோம். அதுவே அர்ப்பண வாழ்வு.

அர்ப்பண வாழ்வு வாழ நாம் துறவிகள் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 மனைவி மக்களோடு வாழ்பவர்களும், அந்த வாழ்வை 
 இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டால்

அதுவே அர்ப்பண வாழ்வு.

உண்டியலில் காசு போடுவது மட்டுமா காணிக்கை?

அவருக்காக நமது அயலானை பார்த்து புன்சிரிப்பு சிரிப்பதே ஒரு காணிக்கை தான்.

இறைவனுக்கு எதை அர்ப்பணித்தாலும் அது அவருக்கான காணிக்கை தான்."

"நோயாளிகள் தங்களது நோயை இறைவனுக்கு அர்ப்பணித்தால்?"

"அதுவும் காணிக்கை தான்."

", இயேசு தன்னுடைய சிலுவை மரணத்தைத்தான் தன்னுடைய தந்தைக்கு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக காணிக்கையாக்கினார். அதாவது பலி ஆக்கினார்." 

"நாமும் நமது ஒவ்வொரு மூச்சையும் இறைவனுக்கு காணிக்கையாக்கலாமே?"

",ஆமா. அதற்கு துறவி ஆக வேண்டிய அவசியம் இல்லையே!"


"அப்படியானால் துறவற வாழ்வு தேவையற்ற வாழ்வா?"


".எதைச் சொன்னாலும் தப்பு தப்பாக புரிந்து கொள்ளக் கூடாது. 

யார் யார் எந்த எந்த வாழ்வு வாழவேண்டும் என்று இறைவன் விரும்புகிறாரோ அந்த வாழ்வை செம்மையாக வாழ வேண்டும்.

இல்லற வாழ்வுக்கும், துறவற வாழ்வுக்கும் நோக்கம் ஒன்றுதான்: இறைப்பணி.

President செய்வதும் நாட்டிற்கான சேவை தான்.

Peon செய்வதும் நாட்டிற்கான சேவை தான்.


பாப்பரசர் செய்வதும் இறைப்பணி தான்.

அவரது அறையைச் சுத்தம் செய்யும் வேலைக்காரன் செய்வதும் இறைப்பணி தான்."

"தேவ அழைத்தல் என்ற வார்த்தை துறவற வாழ்விற்கு பொருந்துவது போல,

 இல்லற வாழ்வுக்கும் பொருந்துதானே?"

",நூற்றுக்கு நூறு பொருந்தும்.

 துறவிகளை உற்பத்தி செய்வதே இல்லற வாசிகள் தான்!"

(இல்லறம் தொடரும்.)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment