"சுவாமி, மோட்சத்துக்கு போகிறதுக்கு ஏதாவது குறுக்கு வழி இருக்கா?"
." இருக்கே. The shortest cut route."
." சுவாமி, சொல்லுங்க."
"நீங்க ஞானஸ்நானம் பெறும்போது கொடுத்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றுங்க, போதும்.
மோட்சம் உறுதி."
"என் சார்பாக என்னுடைய ஞானப் பெற்றோர்தான் வாக்குறுதி கொடுத்தார்களாம். அவங்க நிறைவேற்றினால் போதுமல்லவா?"
." அவங்க நிறைவேற்றினால் அவங்க மோட்சத்துக்குப் போவாங்க.
நீங்க எங்க போகப்போறீங்க?"
"சுவாமி, ஞானப் பெற்றோராக இருப்பவர்கள் பிள்ளைக்கு விபரம் தெரிந்தவுடன் ஞானஸ்நானத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
ஆனால் இப்போது ஞான பெற்றோர் பிள்ளைக்கு ஒரு புது டிரஸ் எடுத்து,
அதோடு ஒரு போட்டோவும்
எடுத்து விட்டால் தங்கள் பணி முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள்."
"Dress ஐ விட, photo தான் முக்கியம்!"
"உண்மைதான், சுவாமி. நீங்களும் இந்த விவரத்தை அப்பப்போ பிரசங்கங்களில் மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்."
"எதை, photo தான் முக்கியம் என்பதையா?"
"சுவாமி, இல்லை. ஞானப் பெற்றோரின் கடமைகளை.
ஞானஸ்நான வாக்குறுதிகளை வேறு எப்படி நிறைவேற்றலாம்?"
"அன்பு செய்யுங்கள். எல்லோரையும் அன்பு செய்யுங்கள்.
எல்லா வாக்குறுதிகளும் அதற்குள் அடங்கிவிடும்.''
"உறவினர் மேல், நண்பர்கள் மீது அன்பு இயல்பாக வரும்.
எல்லோர் மீதும், குறிப்பாக நம்மை வெறுப்பவர் மீது அன்பு எப்படி வரும்?
அதற்கு எதாவது short cut route இருக்கறதா?"
" இருக்கிறதே! யாரையும் வெறுக்காதீர்கள்."
"நேசிப்பது எப்படி என்று கேட்டால் வெறுக்காதீர்கள் என்கிறீர்கள்?"
"ஞானஸ்நானத்தில் நீங்கள் கொடுத்த முதல் வாக்குறுதி என்ன தெரியுமா?"
"தெரியவிய."
"பசாசை விட்டு விடுகிறேன்.
அதன் கிரியைகளையும், ஆரவாரங்களையும்
விட்டு விடுகிறேன் ."
.
"அதாவது இறைவனை நேசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலில் சாத்தானையும் பாவங்களையும் விட்டுவிட வேண்டும்.
அதேபோல நேசிக்க வேண்டுமென்றால் மனதில் வெறுப்பு உணர்வு இருக்கக் கூடாது. சரியா?"
"வீட்டை அலங்காரம் செய்யவேண்டும் என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?"
"வேண்டாதவற்றை அப்புறப்படுத்த வேண்டும்."
",அதேபோல்தான் கடவுளை நேசிக்க வேண்டுமென்றால் முதலில் பாவத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
பிறரை நேசிக்க வேண்டுமென்றால் அவர்கள் மீது வெறுப்புணர்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்."
"ஆனால், சுவாமி, அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு இருக்காது.
வெறுப்பு இல்லாத இடத்தில் அன்பு இருக்கவேண்டிய அவசியமில்லையே."
",வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு இருக்காதே!
கடவுளால் யாரையும் வெறுக்கவே முடியாது. ஆகையினால்தான் அவரால் அவரை வெறுப்பவர்களையும் அவரால் நேசிக்க முடிகிறது.
அவருக்கு அன்பு இயல்பு.
முழுமையான அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு கோபம் போன்ற எதிர்மறை குணங்கள் இருக்க முடியாது.
It is impossible for God to hate anybody,"
"இயேசு
கோயிலிலே ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயமாற்றுவோரையும் கண்டார்.
15 அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார். ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார். நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து, பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
(அரு2:15)
இயேசுவின் செயலில் கோபம் இல்லையா?"
",இல்லை. தந்தையின் இல்லத்தின் மீது அவருக்கு இருந்த அன்பின் வெளிப்பாடு தான் அவரது வார்த்தைகளும், செயலும்.
குற்றம் செய்த பிள்ளைகளை திருத்துவதற்காக கண்டிப்பது கோபம் இல்லை.
நான் குறிப்பிட்ட கோபம் தலையான பாவங்களுள் ஒன்று.
கோபம் பழி வாங்கத் துடிக்கும்.
கடவுளால் கோபப்படவும் முடியாது, பழிவாங்கவும் முடியாது.
அவரால் பாவம் செய்ய முடியாது.
யார் மீதும் வெறுப்பு இல்லாவிட்டால் யாருக்கும் தீங்கு எதுவும் செய்ய மாட்டோம்.
இயேசுவின் விருப்பப்படி நன்மை செய்ய ஆரம்பிப்போம்.
நன்மை செய்ய ஆரம்பிப்பிக்கும் போது இயல்பாகவே அன்பு உள்ளே வந்துவிடும்."
"மனிதருக்கு உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் நல்லது செய்ய ஆரம்பிப்போம் ஆனால் அதில் நிலைத்து நிற்க மாட்டோம்."
",நாம் இறைவனின் இயேசுவின் சீடராக இருக்க வேண்டும் என்றால் அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது
நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அதில் நிலைத்திருக்க வேண்டும்.
அன்பு செய்ய வேண்டும் என்பது இயேசுவின் போதனை.
இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு அன்பு செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அன்பில் நிலைத்து இருப்பவர்கள்தான் இயேசுவின் சீடர்கள் ஆக முடியும்."
"காலையில் தியானம் செய்தால் ஒரு நாள் அன்பில் நிலைத்திருக்கலாம்."
",.போதுமே. நாட்கள் மொத்தமாக வருவதில்லை.
ஒவ்வொரு நாளாக தான்.
வரும் ஒவ்வொரு நாளும் நிலைத்திருந்தாலேபோதுமே. வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கலாமே!
ஒவ்வொரு நாளும் காலையில் இறைவாக்கை வாசிக்கிறோம். ஒரு கால் மணி நேரம் தியானிக்கிறோம்.
தியானத்தை மட்டும் வாழ்ந்தால் போதுமே!
அடுத்த நாள் ஒரு இறை வாக்கு, அடுத்த மணி நேரம் தியானிக்கிறோம்.
அடுத்த நாள் மட்டும் வாழ்கிறோம்.
இப்படியே தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வாழ்கிறோம்.
இதில் கஷ்டம் இருப்பதாக தெரியவில்லையே."
" உண்மைதான். அந்தந்த விநாடியை ஒழுங்காக வாழ்ந்தால் போதும்.
அடுத்த விநாடி ஆண்டவர் அழைத்தாலும் நாம் ரெடி!
ஒவ்வொரு விநாடியும் நிலைத்து நிற்பது தான் முக்கியம்."
", இனி Short Cut route கேட்க மாட்டீங்களே!"
" இருக்கா?"
",ஏன் இல்லை?
Live every fraction of a second for God!"
"மண்ணகத்திலிருந்து விண்ணகத்துக்கு நமது பிரயாண நேரம் zero second தானே!"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment