Saturday, March 15, 2025

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். (லூக்கா நற்செய்தி 9:33)

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். 
(லூக்கா நற்செய்தி 9:33)

இயேசு தாபோர் மலையில் மறுரூபமான போது எலியாவும், மோசேயும் அவரோடு பேசிக் கொண்டிருந்தாங்கள்.

அப்போது இராயப்பர் இயேசுவை நோக்கி,

"ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார்.

மலையில் இருந்தவர்கள் ஆறு பேர். ஆனால் இராயப்பர்  சீடர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்,

இயேசுவையும், எலியாவையும், மோசேயையும் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு,

"உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார்.

இது எதைக் காட்டுகிறது?

அவருடைய தன்னலமற்ற 
தன்மையைக் காட்டுகிறது.

அதே சமயத்தில்,

"நாம் இங்கேயே இருப்பது நல்லது." என்றார்.

அங்கே இருப்பதற்கு சீடர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்.

இது இயேசுவோடு இருந்தால் அவரே எல்லாம், தங்களுக்குத் தனி இடம் தேவையில்லை என்ற ஆன்மீக நிலையை எடுத்துக் காட்டுகிறது.

இயேசுவே நமக்கு எல்லாம்.

அவர் நம்மோடும், நாம் அவரோடும் இருக்கும் போது அவரைத் தவிர நமக்கு வேறு எதுவும் தேவையில்லை.

"எல்லாம் இயேசுவே,
எமக்கெல்லாம் இயேசுவே"

என்பது நமது ஆன்மீக நிலையாக இருக்க வேண்டும்.

 நமது வாழ்க்கை முழுவதும் இயேசுவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் நினைக்கக்கூடாது .

தாய் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை தாயைத் தவிர வேறு எதையாவது நினைக்குமா?

தாயின் இடுப்பில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் குழந்தை எதைக் கண்டாவது பயப்படுமா?

பாம்பைக் கண்டால் கூட பயப்படாது.

குழந்தைக்குத் தாய் தான் எல்லாம்.

குழந்தைக்குத் தாய் எப்படியோ இயேசுவுக்கு நாம் அப்படியே.

நாம் இயேசுவுக்காக வாழ வேண்டும்.

எதைச் செய்தாலும்  இயேசுவுக்காகச் செய்ய வேண்டும்.

இயேசுவுக்கு ஏற்ற வாழ்வு பிறரன்பு வாழ்வு.

நமது பிறரன்பு செயல்களிலும் இராயப்பரைப் போல செயல் பட வேண்டும்.

இராயப்பர் எப்படி தன்னை மறந்து

இயேசுவுக்காகவும், எலியாவுக்காகவும், மோசேவுக்காகவும் மட்டும் கூடாரம் அமைக்க ஆசைப்பட்டாரோ

அதே போல நாம் சுயநலம் பார்க்காமல் பிறரன்புப் பணி செய்ய வேண்டும்.

தனக்குப் போக மீதியை மற்றவர்களுக்குக் கொடுப்பதை விட இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் சிறந்த பிறரன்புப் பணி.

புனித கல்கத்தா தெரசா அப்படித்தான் செய்தார்கள்.

ஒரு முறை அவர்கள் தனது பிறரன்புப் பணிக்கு ஒரு செல்வந்தனிடம் நன்கொடை கேட்டிருக்கிறார்கள்.

அவன் அவர்கள் நீட்டிய கையில் எச்சிலைத் துப்பியிருக்கிறான்.

அன்னை "இது எனக்கு. என் பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுங்கள்" சொல்லியிருக்கிறார்கள்.

அவன் மனம் மாறி ஒரு பெரிய தொகையை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறான்.

இதுதான் தன்னலம் அற்ற பிறரன்புப் பணி.

இயேசு சர்வ உலகத்துக்கும் உரிமையாளர். 

ஆனால் பொதுவாழ்வில் ஏழைகளோடு ஏழையாகத் தான் பழகினார்.

உலகில் தனக்காக வாழாமல் பிறருக்காக மட்டும் வாழ்ந்தார்.

அப்படி வாழவே தனது சீடர்களுக்கும் பயிற்சி அளித்தார்.

நாமும் அவருடைய சீடர்கள் தான்.

அவரைப் போலவே நாமும் சுயநலம் பாராமல் பிறர் பணி ஆற்றுவோம்.

நாம் பிறருக்கு ஆற்றும் பணி தான் இறையன்புப்
பணி.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment