"இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். "
(லூக்கா நற்செய்தி 15:32)
தனது பங்கு சொத்துக்களை எல்லாம் வீணாக்கிவிட்டு திரும்பி வந்த மைந்தனை வரவேற்க அளவுக்கு மீறி செலழித்த அப்பாவை பார்த்து மூத்த மகன்
"விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்டுத் திரும்பி வந்த மகனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!" என்று கேட்டபோது தந்தை
"இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார்."
ஊதாரி மைந்தனின் உவமை பாவிகளின் மீது கடவுள் கொண்டிருக்கும் அளவு கடந்த அன்பை நமக்குப் புரிய வைக்க இயேசுவால் கூறப்பட்டது.
பாவிகள் மீது கடவுள் கொண்டுள்ள அன்புக்கு எல்லை கிடையாது.
நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் பயப்படாமல் இயேசுவிடம் திரும்பி வரலாம்.
நமக்கு இருக்க வேண்டியது மனத்தாபம் மட்டுமே.
அவரது மன்னிப்பின் சக்திக்கு அளவே இல்லை.
கடவுளைக் கொன்றதை விட பெரிய பாவம் இருக்க முடியுமா?
தன்னை கொன்றவர்களையே இயேசு மன்னித்து விட்டார்.
நாமும் நமது பாவங்களின் மூலம் அவரது கொலைக்கு காரணமானவர்கள் தான்.
அவரது சிலுவை மரணத்துக்குக் காரணமான நம்மை தேடித்தான் அவர் உலகுக்கு வந்தார்.
நமக்காகத் தான் இரவும் பகலும் நற்கருணைப் பேழையில் காத்துக் கொண்டிருக்கிறார்.
நேரப் போக்குக்காக எங்கெல்லாமோ செல்லும் நாம் தினமும் எத்தனை முறை திவ்ய நற்கருணையைச் சந்திக்கப் போகிறோம்?
எத்தனை பேர் திவ்ய நற்கருணைக்கு முன் முழங்கால் படியிட்டு இயேசுவை ஆராதிக்கிறோம்?
எத்தனை பேர் திவ்ய நற்கருணை உணவை நாவில் வாங்கி உட்கொள்கிறோம்?
பாவத்தின் விளைவு மரணம்.
பாவத்தினால் ஆன்மா மரணம் அடைகிறது.
தனது சிலுவை மரணத்தால் நமது ஆன்மீக மரணத்தை வென்றவர் இறைமகன்.
இயேசு நமது ஆன்மீக விடுதலைக்காக ஏற்படுத்திய பாவ சங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தைப் பயன்படுத்தி
ஆன்மீக மரணத்திலிருந்து உயிர் பெற்று எழுந்து திரு விருந்தில் பங்கு பெறுவோம்.
"இப்போது நாம் திரு விருந்தை உண்டு இன்புறுவோம்.
ஏனெனில் என் மகன் பாவத்தால் இறந்து போயிருந்தான்;
மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.
காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்"
என்று நமது விண்ணகத் தந்தை கூறி மகிழ்வார்.
நாமும் பாவத்தால் ஊதாரி மைந்தர்கள் தான்.
நமது விண்ணகத் தந்தை நமது வருகைக்காக ஆவலுடன் இரு கரம் விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்.
தந்தையிடம் திரும்புவோம்.
விண்ணக விருந்தில் பங்கு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment