"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."
(லூக்கா நற்செய்தி 11:23)
அரசியல் ரீதியாக கூட்டுச் பேராக் கொள்கை என்று ஒரு கொள்கை உண்டு.
எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகிக்கும் கொள்கை.
நேருவின் தலைமையில் இந்தியா இந்த கொள்கையைப் பின்பற்றியது.
அமெரிக்காவும், ரஷ்யாவும் அரசியலில் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம்.
இந்தியா எந்த நாட்டோடும் கூட்டுச் சேரவில்லை.
அது அரசியலில் நல்ல கொள்கை.
ஆனால் ஆன்மீகத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது.
மக்களை விண்ணக பேரின்ப வாழ்வுக்கு வழி நடத்தும் இயேசுவின் தலைமையில் ஒரு அணி.
மக்களை பேரிடர் நிலைக்கு வழி நடத்தும் சாத்தானின் தலைமையில் ஒரு அணி.
நம்மால் ஒரு அணியில் தான் அங்கம் வகிக்க முடியும்.
நாம் இயேசுவின் அணியில் இருந்தால் விண்ணக வாழ்வை நோக்கி நடை போடுவோம்.
சாத்தானின் அணியில் இருப்பவர்கள் பேரிடர் நிலையை நோக்கி நடை போடுவார்கள்.
இரண்டில் ஒன்றிலும் சாராமல் ஒருவன் வாழ முடியாது.
இயேசுவின் அணியில் இல்லாதவர்கள் சாத்தானின் அணியில் இருப்பார்கள்.
திருமுழுக்குப் பெற்று, சாவான பாவம் இல்லாமல், புண்ணிய வாழ்வு வாழ்பவர்கள் இயேசுவின் அணியில் இருக்கிறார்கள்.
சாவான பாவத்தில் விழுந்த வினாடியில் சாத்தான் அணிக்கு மாறிவிடுகிறார்கள்.
பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்ற வினாடியில் இயேசுவின் அணிக்கு மாறிவிடுகிறார்கள்.
இதைத் தான் இயேசு
"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்." என்கிறார்.
"என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."
இயேசுவோடு இணைந்து இருப்பவர்கள் மக்களுக்கு முன் மாதிரியாகயாக வாழ்வார்கள்.
இயேசுவை விட்டு விலகி வாழ்பவர்கள் தங்கள் துர்மாதிரிகையான வாழ்க்கை மூலம் மற்றவர்களையும் கெடுத்து விடுவார்கள்.
இயேசுவின் அணியில் இருப்பவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
அதாவது பாவமின்றி இருந்தால் மட்டும் போதாது, நற் செயல்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் புண்ணிய வாழ்வில் முன்னேற வேண்டும்.
முன்னேறாதவன் பின்னடைகிறான்.
முன்னேறாமலும் பின்னடையாமலும்
வாழ முடியாது.
Our spiritual life cannot be static.
We keep on moving, either forward or backward.
முன்னேறிக் கொண்டே யிருப்பவர்கள் புனித நிலையை அடைவார்கள்.
பின்னடைந்து
கொண்டிருப்பவர்கள் பாவத்தில் விழ நேரிடும்.
விவசாயி தான் பயிரிடப் போகும் நிலத்தை முதலில் பண்படுத்துகிறான்.
அதாவது பயிர்த் தொழிலுக்குக் கேடு விளைவிக்கும் முட்செடிகள், புல்பூண்டுகள், கற்கள் போன்றவற்றை அப்புறப் படுத்துகிறான்.
அதன்பின் பண்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடுகிறான்.
பண்படுத்தப்பட்ட நிலத்தைப் பயிர் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டால் பழைய படி புல் முளைக்க ஆரம்பிக்கும்.
அதேபோல் தான் ஆன்மீகத்தில் முதலில் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதன் மூலம் ஆன்மாவைப் பண்படுத்த வேண்டும்.
அடுத்து புண்ணியங்கள் புரிந்து ஆன்மீகத்தில் வளர வேண்டும்.
ஆன்மீகத்தில் வளராவிட்டால் பாவங்கள் நுழைய ஆரம்பிக்கும்.
பயிர் செய்யப்பட்ட நிலத்தில் களை எடுத்தி, கொத்திக் கொடுப்பது போல,
ஆன்மீக வாழ்விலும் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கப் போகும் முன் ஆன்மப் பரிசோதனை செய்து, அன்று செய்த பாவங்களுக்கு மனத்தாபப்பட்டு மன்னிப்புப் பெற்ற பின்தான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
இரவில் நாம் நினையாத நேரத்தில் இறைமகன் நம்மை அழைக்க வந்தால் அவருடன் போக தயார் நிலையில் தான் தூங்க வேண்டும்.
காலையில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் கண்விழித்து பகலில் இறையன்புப் பணிகளிலும், பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
அன்று பகல் முழுவதும் நாம் செய்தவற்றை இரவு செபத்தின் போது இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
இப்படித் தினமும் செய்தால் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.
ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டே வாழ்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment