Tuesday, January 28, 2025

வியாழன்30"இயேசு அவர்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?"(மாற்கு நற்செய்தி 4:21)

வியாழன்30

"இயேசு அவர்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?"
(மாற்கு நற்செய்தி 4:21)

தாத்தா ஒருவர் கைக்கு அடக்கமான சிறிய Size torch light ஒன்று வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த பத்து வயது பேரன்,  

"எனக்கும் இதே மாதிரி ஒண்ணு வேணும்"  என்று கேட்டான்.

தாத்தா அதே போன்ற ஒரு torch light வாங்கி பேரனிடம் கொடுத்து,

"பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

"சரி, தாத்தா" என்று கூறி கொடுத்ததை வாங்கிக் கொண்டான்.

மறுநாள்,

"தாத்தா, நீங்க வாங்கித் தந்த torch light அடிக்க மாட்டேங்குது" என்றான்.

" அதைக் கொண்டு வா" என்று கேட்டு வாங்கியவர் அதிர்ச்சி அடைந்தார்.

"எங்கே வைத்திருந்த?"

"பத்திரமா Fridgeகு உள்ளே வைத்திருந்தேன்."

"அட மடையா, யாராவது torch lightஅ Fridgeகுள்ள வைப்பாங்களா? இது இனி ஆகாது. குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும்."

"அம்மா பத்திரமா வைக்க 
வேண்டியதை எல்லாம் fridge க்கு உள்ளதான் வைக்கிறார்கள். எதுவும் கெடுவதில்லை. நான் வைத்தா மட்டும் கெட்டு விடுமா? நீங்க வாங்கியது தான் சரியில்லை."

எததை எங்கே வைக்க வேண்டுமோ அததை அங்கே வைக்க வேண்டும்.

விளக்கை ஏற்றி பத்திரமாக மரக்காலுக்குள்ள வைத்தா அது நமக்கு ஒளி தராது.

ஒளி எதற்காக?

பார்க்க வேண்டிய பொருட்களைப் பார்க்க.

ஒளி இல்லாத இடம் இருட்டாக இருக்கும். இருட்டாக இருக்கும் இடத்திலுள்ள எந்த பொருளையும் பார்க்க முடியாது.

இயேசு ''நானே உலகின் ஒளி" என்கிறார்.

அவர் நம்மிடம் இல்லாவிட்டால் நமது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டிய எதுவும் தெரியாது.

இயேசுவின் ஒளியில் தான் நாம் விண்ணக பாதையில் நடக்க முடியும்.

இயேசு நம்மைப் பார்த்து,

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." என்கிறார்.

 ஒளி தன்னைத் தானே மறைக்க முடியாது. தான் படும் பொருட்களையும் மறைக்க முடியாது.

நாம் சுயமாக ஒளியாய் இல்லை.

சூரிய ஒளி பட்டு நிலா இரவில் ஒளி தருவது போல,

இயேசுவாகிய ஒளி பட்டு நாம் வெளிச்சம் தர வேண்டும்.

இயேசுவாகிய ஒளி பட்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இயேசுவைப் பிரதிபலிக்கும்.

நாம் செய்யும் நல்ல செயல்களை நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் பார்க்கும்போது நம்மில் இயேசு செயல் புரிவதைப் பார்ப்பார்கள்.

நமது செயல்களின் நன்மை கருதி அவர்களும் நம்மைப் போல் செயல் புரிவார்கள்.

நாம் விசுவசிக்கும் இயேசுவை அவர்களும் விசுவசிப்பார்கள்.

நம்மைப் போல் அவர்களும் மீட்படைவார்கள்.

மீட்புப் பணியில் நாம் இயேசுவின் சீடர்களாக செயல் புரிவோம்.

வியாதி இருக்கும் இடத்தில் தான் மருந்துக்கு வேலை.

அறியாமை இருக்கும் இடத்தில் தான் ஆசிரியருக்கு வேலை.

பசி இருக்கும் இடத்தில் தான் உணவுக்கு வேலை.

இருள் இருக்கும் இடத்தில் தான் ஒளிக்கு வேலை.

மருந்து வந்தவுடன் நோய் பறந்து விடும்.

ஆசிரியர் வந்தவுடன் அறியாமை பறந்து விடும்.

உணவு வந்தவுடன் பசி பறந்து விடும்.

ஒளி வந்தவுடன் இருள் பறந்து விடும்.

எங்கே கிறிஸ்துவை அறியாதவர்கள் இருக்கிறார்களோ அங்கு 
 கிறிஸ்தவனுக்கு வேலை.

நமது நட்பு வட்டத்துக்குள் சிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைக் கொண்டு வர வேண்டும்.

தோமையார், சவேரியார், அருளானந்தர் போன்ற வேத போதகர்கள்  சிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியில் தான் உழைத்தார்கள்.

நாம் வாழும் இடங்களில் பெரும்பாலோர் இயேசுவை அறியாதவர்கள் தான்.

அவர்கள் மத்தியில் இயேசுவின் ஒளியாய் வாழ்வோம்.

நமது விசுவாச ஒளி அவர்கள் மீது பிரகாசிக் கட்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment