Thursday, January 23, 2025

சனி 25 "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."(மாற்கு நற்செய்தி 16:15)

சனி 25

 "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
(மாற்கு நற்செய்தி 16:15)

"தாத்தா, இயேசு போதித்த முதல் நற்செய்தி எது?"

"நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு. போதித்த என்றால் என்ன அர்த்தம்?"

"உங்க கேள்வி புரியல."

"'நற்செய்தியைப் போதியுங்கள் என்று ஆண்டவர் சொன்னார்.

என்ன பொருளில் சொன்னார்?"

"பறைசாற்றுங்கள் என்ற பொருளில் சொன்னார்."

"'நான் Synonym கேட்கல,  
meaning கேட்டேன்."

"என்ன தாத்தா, நீங்க கேட்கிறது புரியல. நீங்களே சொல்லிடுங்கள்."

"'மேடையில் ஏறி "இதச் செய்யுங்கள், அதச் செய்யுங்கள்" என்று சொல்வது அல்ல போதனை. 

இத சாத்தான் கூட நம்ம விட Superஆ செய்யும்.

சொல்வதை வாழ்ந்து காட்டுவது தான் போதனை.

 சிந்தித்து, பேசி, செயல்படுவதுதான் வாழ்க்கை.

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நற்செய்தியை வாழ்ந்து காட்டுவதே உண்மையான போதனை. 

ஒரு ஆசிரியர் புத்தகத்தைப் பார்த்து இலக்கணம் நடத்தி விட்டு அவர் இலக்கணப் பிழைகளுடன் பேசினால் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?"

"ஆசிரியருக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லை என்று நினைப்பார்கள்."

"' பெற்றோர் வாழ்வதைப் பார்த்து தான் பிள்ளைகள் வாழ்வார்கள்.

பெற்றோர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாமல் வாழ்ந்தால் பிள்ளைகளும் அப்படியே வாழ்வார்கள்."

"தாத்தா, இப்போ புரிகிறது. நற்செய்தியைப் போதியுங்கள், அறிவியுங்கள், பறைசாற்றுங்கள் என்று சொன்னால்

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வாழ்ந்து காட்டுங்கள் என்பதுதான் பொருள்.

சீடர்கள் தூய ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கி வரும் முன் எப்படி இருந்திருந்தாலும் 

அவர் இறங்கி வந்தவுடன் முழுவதுமாக மாறிவிட்டார்கள்.

அதுவரை அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்கவில்லை. எதிரிகளுக்குப் பயந்தார்கள்.

ஆனால் ஆவியானவர் இறங்கியவுடன் அவர்களது விசுவாசம் உறுதிப்பட்டது. பயம் முற்றிலும் நீங்கியது.

யாருக்குப் பயந்து ஜான் மார்டின் வீட்டில் பதுங்கி இருந்தார்களோ அவர்கள் முன்னால் சென்று தைரியமாக போதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பயமில்லாமல் மக்கள் முன் வந்ததே பெரிய போதனை.

போதிக்க ஆரம்பித்த முதல் நாளே

"அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்."
(திருத்தூதர் பணிகள் 2:41)

சீடர்களின் வாய் வார்த்தைகள் மட்டுமல்ல,

 அவர்களது உறுதியான விசுவாசமும் பயமில்லாமல் தைரியமாக பேசியதுமே 3000 பேரை மனம் திருப்பியது.

அதற்குப் பின் சீடர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்து, போதித்து, வேத சாட்சிகளாக மரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும்.

வேத சாட்சிகளின் ரத்தம் திருச்சபையின் வித்து என்று சொல்வார்கள்.

சீடர்கள் இயேசுவுக்காக சிந்திய ரத்தமே அவரை உலகெங்கும் அழைத்துச் சென்றது.

இயேசுவுக்காக மரித்ததின் மூலம் அவர்கள் நற்செய்தியை வாழ்ந்து காட்டினார்கள்.

நாமும் நற்செய்தியை போதிக்க வேண்டும்.

எப்படி போதிக்க வேண்டும்?"

"நாம் நற்செய்தியின் படி வாழ்ந்து மக்களை வாழவைக்க வேண்டும்.

நாம் ஒளியைக் காண்பிக்க அல்ல ஒளியாக வாழவே அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

இயேசு நம்மைப் பார்த்து நீங்கள் உலகின் ஒளி என்கிறார்.

நாம் பிரகாசிக்க வேண்டும்.

நமது ஒளியில் மக்கள் இயேசுவை காண வேண்டும்.

இயேசுவை காண்பித்து "அதோ ஒளி" என்று சொல்வதில் பயனில்லை.

இயேசு நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

இயேசு உலகின் ஒளி. நாமும் அவரோடு ஒன்றித்து உலகின் ஒளியாக மாற வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்களும் ஒளியாக மாறுவார்கள்.

புரிந்து கொண்டிருக்கிறேனா, தாத்தா?"

"'Very good. இயேசு எப்படி வாழ்ந்து போதித்தார் என்று சொல் பார்ப்போம்.''

"ஏழைகள் பாக்கியவான்கள் என்று சொல்வதற்கு முன்பே அவர் ஏழையாகப் பிறந்து ஏழையாக வாழ்ந்தார்.

பிறக்கக்கூட இடமில்லாமல் மாட்டுத் தொழுவில் பிறந்தார்.

பிறந்தவுடன் முதல் மூன்று வருடங்கள் வாழ இடம் இன்றி எகிப்தில் தனது பெற்றோருடன் நாடோடியாக வாழ்ந்தார்.

நாசரேத்தில் தச்சு வேலை செய்து கிடைத்த கூலியைக் கொண்டு திருக்குடும்பம் உயிர் வாழ்ந்தது.

பொது வாழ்வின் போது அவருக்கு தலை சாய்க்கக் கூட இடம் இல்லை.

ஏழையாக வாழ்ந்துதான் ஏழைகள் பாக்கியவான்கள் என்று போதித்தார்."

"தாத்தா, அவர் சுமந்த சிலுவை கூட அவருடையது அல்ல.

சிலுவையில் அறையப்படும்போது அவர் உடலில் ஆடைகள் இல்லை.

மரிக்கும்போது உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் இல்லாத ஏழையாக இருந்தார்.

பிறந்த போது அன்னை மரியாள் அவரைத் துணிகளால் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தினாள்.

இறக்கும்போது அவள் கண் முன்னாலே எதிரிகள் அவரது ஆடைகளைக் களைந்து சிலுவையில் கிடத்தினார்கள்.

அந்த நேரம் பெற்ற மனம் என்ன பாடு பட்டிருக்கும்!

மரித்த பின் வேறு யாருக்கோ வெட்டப்பட்ட கல்லறையில் அவரை அடக்கம் செய்தார்கள்."

"' இவ்வாறுதான் தனது ஒவ்வொரு செய்தியையும் வாழ்ந்து அறிவித்தார்.

குழந்தையாக இருந்த போது அவரைக் கொல்லத் தேடிய ஏரோதுவை ஒன்றும் செய்யாமல் அவர் எகிப்துக்குப் போய் விட்டார்.

மூன்று ஆண்டுகளாக அவரைக் கொல்லத் திட்டமிட்டு இறுதியில் கொன்ற அவருடைய எதிரிகள் அனைவரையும் சிலுவையில் மரிக்கு முன் மன்னித்து விட்டார்.

"உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்'' என்ற நற்செய்தியையும் அவரே வாழ்ந்து காட்டினார்."

"' இப்படித்தான் தனது ஒவ்வொரு நற்செய்தியையும் அவரே வாழ்ந்தார்.

இயேசு சாதித்துப் போதித்தவர்.

அவர் மனிதர்களை எப்படிப் படைத்தார்?"

"தன் சாயலில் படைத்தார்."

"" சாயலில் என்றால்? அவர் ஆவி, உருவம் இல்லாதவர்.

மனிதருக்கு உருவம் இருக்கிறதே."

"நீங்களே சொல்லுங்கள்.'

"'சாயல் நமது ஆன்மாவில். அவர் நித்திய காலமாக அன்பு செய்து வாழ்கிறவர்.

நமது ஆன்மா ஆவி. நமது ஆன்மாவோடு தனது பண்பாகிய அன்பைப் பகிர்ந்து கொண்டார்.

அன்பு என்னும் பண்பில் நாம் அவர் சாயல்.

அவர் அன்பாய் வாழ்ந்து, நம்மையும் அன்பு செய்யச் சொன்னார்.

நித்திய காலமாக சாதித்ததைப் போதித்தார்."

"தாத்தா, இயேசு "கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். " 
("லூக்கா நற்செய்தி 6:38")

என்று சொல்லியிருக்கிறார்.

அவரே ஏழை. மற்றவர்கள் கொடுத்ததைத்தான் சாப்பிட்டார். அவர் எப்படி கொடுத்துப் போதித்தார்?"
(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment