Saturday, January 25, 2025

திங்கள் 27. மண்ணால் ஆன பூமி என்ன தனிமங்களால் (elements ) ஆனதோ அதே தனிமங்களால் ஆனதுதான் நமது உடல்.

திங்கள் 27.

 மண்ணால் ஆன பூமி என்ன தனிமங்களால் (elements ) ஆனதோ அதே தனிமங்களால் ஆனதுதான் நமது உடல்.

1. ஆக்சிஜன் (O)*: 65% 
2. கார்பன் (C)*: 18% 
3. ஹைட்ரஜன் (H)*: 10% 
4. நைட்ரஜன் (N)*: 3% 
5.  கால்சியம் (Ca)*: 1.5% 
6. பாஸ்பரஸ் (P)*: 1% o
7.  பொட்டாசியம் (K)*: 0.4%  
8. சல்பர் (S)*: 0.3% 
9. சோடியம் (Na)*: 0.2% 
10. மக்னீசியம் (Mg)*: 0.1% 
11. இரும்பு.
12.துத்தநாகம்.
13. செம்பு.

நமது உடல் சடப்பொருளால் (Matter) ஆனது. துவக்கமும், முடிவும் உள்ளது.

ஆனால் நமது ஆன்மா கடவுளைப் போல ஆவி. (Spirit)

கடவுளுக்குத் துவக்கமும், முடிவும் இல்லை.

நமது ஆன்மா படைக்கப் பட்டது,
ஆகவே, துவக்கம் உள்ளது, ஆனால், முடிவில்லாதது.

 நமது உடல் நூறு சதவீதம் பூமியைச் சேர்ந்தது, அதாவது, மண்ணால் ஆனது.

ஒரு நாள் பூமி அழியும், அப்போது நமது உடலும் அழிந்து விடும்.

இப்போது நமது உடலை இயக்கிக் கொண்டிருப்பது நமது ஆன்மா.

ஒரு நாள் நமது ஆன்மா நமது உடலை விட்டுப் பிரியும்.

ஆன்மா பிரிந்தவுடன் நமது உடல் அதன் அதன் பெயரை இழந்து, பிணம் ஆகிவிடும்.

ஆட்டத்தை இழந்து, அடங்கி மண்ணுக்குள் போய்விடும்.

ஆன்மா அதனைப் படைத்தவரிடம் சென்று விடும்.

படைத்தவரோடு ஒன்றித்து நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகப் படைக்கப் பட்டது நமது ஆன்மா.

அது நித்திய காலம் இறைவனோடு பேரின்பத்தில் வாழ வேண்டுமென்றால் அது பூமியில் இறைவனுக்காக மட்டும் வாழ்ந்திருக்க வேண்டும்.

அதாவது, உடலும், ஆன்மாவும் சேர்ந்த நாம் உலகில் கடவுளுக்காக மட்டும் வாழ்ந்தால் தான் நமது ஆன்மா அவரோடு ஒன்றித்து நித்திய பேரின்ப வாழ்வு வாழும்.

இறைவனுக்காக மட்டும் வாழ்வது என்றால் என்ன?

நாம் மூச்சு விடுவதில் ஆரம்பித்து என்ன செய்தாலும் இறைவனுக்காக செய்வது தான் இறைவனுக்காக மட்டும் வாழ்வது.

மண்ணால் ஆன நமது உடலைப் பேணுவதும் இறைவனுக்காக மட்டும் தான்.

இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்வதும் இறைவனுக்காக மட்டும் தான்.

நாம் என்ன செய்தாலும் 
செய்யுமுன்னும், செய்யும்போதும், செய்த பின்பும்

"எல்லாம் இறைவனுக்காக" என்ற மன நிலையில் இருக்க வேண்டும்.

இறைவனுக்காக வாழ்ந்து, இறைவனுக்காக மரித்தால் நமது ஆன்மா இறைவனிடம் சென்று விடும்.

உலக இறுதியில் நாம் உயிர்க்கும் போது நமது ஆன்மா ஒரு ஆன்மீக உடலோடு(Spiritual body) இணையும்.

ஆன்மீக உடலுக்கு இப்போது நமது சடப்பொருளாலான எதுவும் தேவைப் படாது.

ஆன்மீக உடல் இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டது.

அது வாழ இடம் தேவை இல்லை.
அது முடிவில்லாமல் வாழும்.

நமது ஆண்டவரைப் போலவும், அன்னை மரியாளைப் போலவும் நாம் ஆன்ம, சரீரத்தோடு வாழ்வோம்.

நித்திய காலமும் நாம் ஆண்டவரைப் போலவும், அன்னை மரியாளைப் போலவும் வாழ வேண்டுமென்றால், இவ்வுலகிலும் நாம் அவர்களைப் போல வாழ வேண்டும்.

வாழ்வோம், இன்றும், என்றும்.

லூர்து செல்வம் 

-

No comments:

Post a Comment