Friday, September 6, 2024

" இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்." (மாற்கு நற்செய்தி 7:36)


" இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்." 
(மாற்கு நற்செய்தி 7:36)

இயேசு ஏன் தான் செய்த புதுமையை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று கட்டளையிட்டார்?

நமது விவிலிய அறிஞர்கள் இதை மெசியா இரகசியம் ("Messianic secret")
என்று அழைக்கிறார்கள்.

ஏன் என்பதை இயேசு வெளிப்படையாகக் கூறவில்லை.

இரகசியத்தை நம்மால் முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாது.

முயற்சி செய்யலாம்.

நமது முயற்சி கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனைக்கு எதிராக இருக்கக்கூடாது.

யூதர்களிடம் மெசியா யார் என்பதைப் பற்றி தவறான கருத்து ஒன்று நிலவி வந்தது.

அதாவது மெசியா பிற இனத்தவரின் அரசியல் அடிமைத் தனத்திலிருந்து யூதர்களை மீட்டு தனி அரசு அமைத்து அதை அரசாள்வார் என்று அநேகர் கருதி வந்தனர்.

இயேசுவின் காலத்தில் யூதர்கள் ரோமையர்களால் ஆளப்பட்டு வந்தனர்.

மெசியா அவர்களிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்து,

 சுதந்திர யூத அரசை அரசாள்வார் என்று அநேகர் நம்பினார்கள்.

அதன் அடிப்படையில் தான் அருளப்பரும், வியாகப்பரும் அவருடைய அரசில் முக்கிய பதவிகள் கேட்டார்கள்.

ஏற்கனவே யூதர்களிடையே ரோமையர்களுக்கு எதிரான போராட்டக் குழுக்கள் செயல் பட்டு வந்தன.

உண்மையில் இயேசு ஒரு அரசியல் விடுதலை வீரர் அல்ல.

"செசாருக்கு உரியதை செசாருக்குக் கொடுங்கள்" என்ற அவருடைய வார்த்தைகளிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம்.

அவர் நமது ஆன்மாவைப் பாவத்தின் பிடியிலிருந்து மீட்பதற்காக, பாடுகள் பட்டு சிலுவையில் மரிப்பதற்காக மனிதனாகப் பிறந்த இறைமகன்.

மெசியா யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டபின்

 தான் மெசியா என்பதை  அறிவிக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம் என்று சில இறையியலிலார் கூறுகிறார்கள்.

Jesus had to spend some time reshaping the idea of the Messiah in order that his suffering and death would not be too high a hurdle for believers to overcome.


ஏற்கனவே பரிசேயர்கள் இயேசுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

மெசியா அரசியல் விடுதலை வீரர் என்ற தவறான எண்ணம் ரோமையர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

ஆகவே உரிய காலம் வரும் வரை தான் மெசியா என்ற நம்பிக்கையைப் பரப்ப வேண்டாம் என்று இயேசு நினைத்திருக்கலாம்.

He didn’t want to draw the attention of the foreign powers to himself too quickly. If the Roman authorities had become aware of Jesus’ claim to be a king, they would have quashed his movement from the beginning, as they did other messianic movements in the first century. In order to avoid a premature death, he ordered those he healed to keep his identity a secret.

https://www.catholic.com/qa/the-messianic-secret

இறையியலார் இயேசுவின் வார்த்தைகளை ''மெசியா இரகசியம்" என்று கூறுவதிலிருந்து 

இயேசுவின் மனதிலிருந்ததை‌க் கண்டு பிடிக்க முடியாது என்பது புரிகிறது.

ஆனாலும் நமது மனது சும்மா இருக்காது.

உண்மையைத் தேடி அலையும்.

அந்த முயற்சியில் அதற்குள் எண்ணங்கள் தோன்றும்.

என் மனதில் தோன்றியதைப் பதிவு செய்கிறேன்.

"அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்."

என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இயேசுவின் புகழைப் பரப்புவதில் அவர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்க வேண்டும்!

நாம் போதும் என்று சொன்னாலும் அம்மா தனது அன்பின் மிகுதியால் நமக்கு உணவை ஊட்டிக் கொண்டேயிருப்பது போல

உதவியைப் பெற்றவர்களும் இயேசுவின் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் அவரது புகழைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவைப் பற்றி நினைக்கும் போதும், பேசும் போதும் நமது நினைவில் இருக்க வேண்டியது 

அவர் சர்வ ஞானம் உள்ள கடவுள்.

அவருக்கு நமது சுபாவம் எப்படிப் பட்டது என்று தெரியும்.

அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லும் போதே உதவி பெற்றவர்கள் சொல்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ஆனால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லும் போது 

இயேசுவின் மனதில் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது.

ஆனாலும்,

அன்று அவர் கூறியது போல அவர் செய்த புதுமைகளை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நமக்கு எந்த கட்டளையும் கொடுக்கவில்லை.

ஆகவே, அவர் நமது வாழ்வில் செய்த உதவிகளை எத்தனை பேருக்குச் சொல்ல முடியுமோ அத்தனை பேருக்கும் சொல்லி அவரது புகழை உலகெங்கும் பரப்ப வேண்டும்.

நாம் எதைச் செய்தாலும் ஆண்டவரின் அதிமிக மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

இறைவன் நமது புரிந்து கொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவர்.

நாம் காலத்துக்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள்,

நமது புரிதலும் அதற்கு உட்பட்டுதான் இருக்கும்.

ஆனால் கடவுள் காலத்துக்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டவர், நித்தியர்.

இயற்கை நிகழ்வுகள் கடவுள் அதற்கு அமைத்துக் கொடுத்த விதிகளின் படிதான் நடக்கின்றன.

நிலநடுக்கம் ஒரு இயற்கை நிகழ்வு.

நமது பார்வைக்கு அது அழிவைத் தருகிறது.

ஆனால் கடவுளின் பார்வை வித்தியாசமானது.

அவர் அனுமதிக்கும் ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் மனித குலத்தின் நன்மைக்காகவே இருக்கும்.

நமக்கு எதிர் காலம் 
தெரியாதாகையால் நிகழ்காலத்தில் அழிவு போல் தோன்றும்.

ஒரு பூந்தோட்டக்காரன் பெரிய ரோஜாச் செடிகளை எல்லாம் கத்தரித்து விடுகிறான்.

மற்றவர்களுக்கு அவன் பூஞ்செடிக்குத் தீங்கு செய்வது போல் தோன்றும்.

ஆனால் சில நாட்களில் செடி பல தளிர்கள் விட்டு வளர்ந்து, ஒவ்வொரு தளிரிலும் ஒரு பூ மொட்டு வைத்து மலரும் போது 

ஒவ்வொரு செடியும் ஒரு 
மலர்த்தோட்டமாகக் காட்சியளிக்கும்.

அப்போது தான் தோட்டக்காரன் ரோஜாச் செடியைக் கத்தரித்து விட்டதன் இரகசியம் புரியும்.

அதுபோல்தான் இறைவனின் செயல்பாடுகளில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத இரகசியங்கள் இருக்கலாம்.

எல்லாம் மனித குலத்தின் நன்மைக்காகவே இருக்கும்.

நமது நன்மைக்காகவே பிறந்து, வாழ்ந்து, மரித்த

அவரை அன்பு செய்வதிலும் , நமது பிறரை அன்பு செய்வதிலும் ஆர்வம் காட்டுவோம்.

நாம் விண்ணகம் சென்றபின் அவரது இரகசியங்கள் நமக்குப் புரியும்.

இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் விண்ணகம் போகும் வகையில் வாழ வேண்டியது தான்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment