Sunday, September 8, 2024

" அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்."(லூக்கா நற்செய்தி 6:12)

 

"அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்."
(லூக்கா நற்செய்தி 6:12)

 இறைவனோடு ஒன்றித்து இருப்பது தான் செபம்.

இறைவனுக்குள் நாமும், நமக்குள் இறைவனுமாக ஒன்றித்து இறைவனையே சிந்தித்துக் கொண்டிருப்பது செபம்.


செபிக்கும்போது நமது சிந்தனை முழுவதிலும் இறைவனே இருப்பார்.

தியான நிலையில் இருப்பது தான் செபம்.

இயேசு இறைமகன்.

பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆள்.

மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவராக ஒன்றித்து ஒரே கடவுளாக நித்திய காலமாக வாழ்கிறார்கள்.

"நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்."
(அரு. 14:11)


இது மூன்று ஆட்களுக்கும் பொருந்தும்.

"இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்."
(அரு. 20:22)

இவ்வசனம் தூய ஆவி இயேசுவுக்குள் இருப்பதைக் காட்டுகிறது.

ஆக மூன்று ஆட்களும் எப்போதும் ஒருவருள் ஒருவராக ஒன்றித்திருக்கிறார்கள், நித்திய காலமாக.

ஆக தூய தம திரித்துவத்தின் நித்திய வாழ்வு செபவாழ்வுதான்.

மனிதனாகப் பிறந்த இயேசுவின் பூவுலக வாழ்வு முழுவதும் செபவாழ்வுதான்.

செபவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இயேசு  இரவெல்லாம் செபிக்க ஏன் மலை மேல் ஏற வேண்டும்?"

உலகில் வாழும் போது இயேசு செய்த ஒவ்வொரு செயலையும் நமக்கு முன்மாதிரியாகச் செய்தார்.

நமக்கு ஏழ்மையைக் கற்பிப்பதற்காக ஏழையாகப் பிறந்தார்.

நாம் வசதிகளைத் துறந்து வாழ வேண்டும் என்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

நாம் இறைவன் சித்தத்தை எதிர்க் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கபிரியேல் தூதரின் வார்த்தைகளின் படி எகிப்துக்கு எடுத்துச் செல்ல தன் பெற்றோருக்குத் தூண்டுதல் கொடுத்தார்.

இறைவனின் உள்தூண்டுதல்படிதான் இறையன்பர்கள் வாழ்கிறார்கள்.

If we love God  we will always act as per His inspirations.

நாம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர் 30 ஆண்டுகள் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

தாயின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கானாவூர்த் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார்.

நாம் பிறரன்புச் செயல்கள் புரிந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர் சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.

நாம் நமது அன்றாட அலுவல்களுக்கு இறைவனோடு பேச நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தந்தையுடன் பேச இரவு நேரத்தை ஒதுக்கினார்.


" அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். 


 விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்."
(லூக்கா நற்செய்தி 6:12,13)

இந்த வசனங்களிலிருந்து என்ன தெரிகிறது?

காலையில் பன்னிரு சீடர்களைத் தேர்வு செய்யுமுன் இரவெல்லாம் செபித்தார்.

இதுவும் நமக்கு முன் மாதிரிகை காட்டுவதற்காகத்தான்.

நாம் உண்பது, உறங்குவது உட்பட நமது எல்லா வேலைகளையும் செபத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும்.

இயேசு கடவுள்.

அவருக்கு நூற்றுக்கு நூறு செபமும், வாழ்க்கையும் ஒன்றுதான்.

நாம் எவ்வளவு முயன்றாலும் உலகப் பிரச்சினைகள் நம்மை அல்லல் படுத்திக் கொண்டு தான் இருக்கும்.

பிரச்சினைகளிலிருந்து செயலளவில் உடனே தப்பிக்க முடியாவிட்டாலும் 

மனதளவிலாவது அவற்றிலிருந்து விடுதலை பெற்றால்தான் இறைவனோடு ஒன்றிக்க முடியும்.

அதற்காக தியான செபத்திற்காக நேரம் ஒதுக்கி 

அந்நேரத்தில் முழுமையாக இறைவனோடு ஒன்றிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் செபத்திற்காக நேரம் ஒதுக்கி,

அந்நேரத்தை குடும்ப செபத்தில் செலவழித்தால் உலகப் பிரச்சினைகளின் கவலையிலிருந்து விடுதலை பெறுவோம்.

உலகப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற முடியா விட்டாலும் அவற்றைப் பற்றிய கவலையிலிருந்தாவது விடுதலை பெறுவோம்.

உதாரணத்திற்கு வருமானம் குறைவாகவும், தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகவும் உள்ளவர்கள் 

பொருளாதார பிரச்சினைகளிலிருந்து முற்றிலும் விடுதலை பெற முடியாமல் போகலாம்.

நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு 

மனமார கடவுளோடு ஒன்றித்து வாழ்ந்தால் கவலைகள் இல்லாமல் வாழலாம்.

முற்றிலும் குணமாக்க முடியாத நோயோடு வாழ்பவர்கள் எப்போதும் முக மலர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்வது அவர்களுடைய செபத்தினால் தான்.

அப்படிப்பட்டவர்களுக்கு உலகப் பிரச்சினைகளே இறை அருளை ஈட்டித் தரும்.

புனித அல்போன்சா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

புனித அல்போன்சா தனது வாழ்நாள் முழுவதும் துன்பங்களுக்கு ஆளாகியிருந்தார், அவர் எந்த புகாரும் கூறவில்லை.

 முள் செடியில் பூஙரோஜாவைப் போல் வாழ்ந்தாள்.

 துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை இறைவனின் சித்தம் என்பதை அவள் உணர்ந்தாள்.

 துன்பத்தில் மகிழ்ச்சியைக் காண உதவியது அவளது இடைவிடாத செபம்.

நாமும் செபத்துக்கு நேரம் ஒதுக்கி வாழ்வோம்.

கவலைகள் நம்மை விட்டு ஒதுங்கிப் போய்விடும்.

மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment