Monday, June 10, 2024

"கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."

" கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."

You have received freely, so, give freely.
(மத்தேயு .10:8)

இயேசு தனது சீடர்களைப் போதிக்க அனுப்பியபோது கூறிய அறிவுரை,

" இலவசமாகப் பெற்றீர்கள்,
இலவசமாகக் கொடுங்கள்."

இந்த அறிவுரை அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.

நாம் நமக்குச் சொந்தமில்லை.

நான் என்னுடைய தாயின் வயிற்றில் கருத் தரிக்குமுன் நான் எங்கே இருந்தேன்?

நானே இல்லை.

என்னுடைய தாயின் வயிற்றில்ன கருத்தரிப்பேன் என்று அவங்களுக்கே தெரியாது.

வயிற்றில் இருக்கும் போது நான் ஆணா, பெண்ணா என்று கூட எனது அம்மாவுக்குத் தெரியாது.

எனது உடலிலுள்ள உறுப்புகள் எதுவும் எனக்குச் சொந்தம் இல்லை.

நானே எனக்குச் சொந்தம் இல்லை.

எனது உடலும் ஆன்மாவும் சேர்ந்துதான் நான்.

நான் கடவுளுக்கு மட்டுமே சொந்தம்.

எனது உடலையும் ஆன்மாவையும் கடவுள் தான் எனக்கு இலவசமாகத் தந்திருக்கிறார்.

அவற்றை மட்டுமல்ல எனது படிப்பு, வேலை, சம்பளம், இன்று வாங்கும் பென்சன் பென்சன் ஆகிய அனைத்தையும் இலவசமாகத் தந்தவர் கடவுள் தான்.

அவற்றைத் தந்த கடவுள் சொல்கிறார்,

"இலவசமாகப் பெற்றீர்கள்,
இலவசமாகக் கொடுங்கள்." என்று.

யாருக்குக் கொடுக்க வேண்டும்?

அவரால் படைக்கப்பட்ட நமது பிறருக்கு. (Neighbours)

பிறருக்குக் கொடுக்கும் போது கடவுளுக்கு தான் கொடுக்கிறோம்.

எதைக் கொடுக்க வேண்டும்?

அனைத்தையும்.

நமது உடல் பொருள் ஆவி அனைத்தையும்.

கடவுளின் அறிவுரை‌ மக்கள் அனைவருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

ஆக மக்கள் அனைவரும் தங்களிடம் இருப்பதை ஒரேவரோடொருவர் பகிர்ந்து வாழ வேண்டும்.

கடவுள் நமது கடவுள்.

உலகம் நமது உலகம்.

அதிலுள்ள பொருட்கள் நமது பொருட்கள்.

அவற்றை நாம் அனைவரும் பயன்படுத்த கடவுள் இலவசமாகத் தந்திருக்கிறார்.


"கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்;

 அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; 

கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்.

மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; 

இவை உங்களுக்கு உணவாகட்டும். 
(தொடக்கநூல் 1:28,29)

உலகம் பொதுவானது.

நிர்வாகப் பொறுப்பு பலர் கையில் இருக்கலாம்.

ஆனால் ஒருவர் மட்டும் அனைவற்றையும் பயன்படுத்த உரிமை கோர முடியாது.

எல்லோரும் பகிர்ந்து தான் பயன்படுத்த வேண்டும்.

அனைவரும் பயன்படுத்த கடவுள் இலவசமாகத் தந்தது என்ற உணர்வுடன்‌ பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் கடவுள் இலவசமாகத் தந்த திறமைகளைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் பொருளை 

குறைவாகச் சம்பாதிப்பவர்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்.

குறைவாகக் கொடுப்பவரும் கடவுள் தான்.

நிறைவாகக் கொடுப்பவரும் கடவுள் தான்.

ஏன் அப்படி வித்தியாசமாகக் கொடுக்கிறார்?

ஒருவருக்கொருவர் கொடுத்து உதவி அன்பில் வளர வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது உடல் உறுப்புக்கள் வித்தியாசமானவை.

அதனால் தான் அவற்றால் ஒன்றுக்கொன்று உதவி செய்ய முடிகிறது.

கால்கள் தரையில் நடக்கும்.

தலையால் நடக்க முடியாது.

தலையில் வலி ஏற்பட்டால் அதை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வது கால்கள் தான்.

மருந்து கொடுப்பது கைகள்தான்.

உலக உறுப்பினர்களும் இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவி செய்து‌ கொள்ள வேண்டும், இலவசமாக.

இதன் மையக் கருத்து,

 உலகம் இறைவனால் இலவசமாகத் தரப்பட்டது.

அதைப் பயன்படுத்தி இறைவன் அருளுடன் ஆன்மீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்

இலவசமாகப் பெற்றதை இலவசமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் மற்றவர்களுக்கு செய்யும் உதவி இலவச உதவியாக இருக்க வேண்டும்.

அதாவது பிறதிபலன் எதிர்பார்க்காத உதவியாக இருக்க வேண்டும்.

கடவுள் நமக்கு இலவசமாகத் தந்த அனைத்தையும் மற்றவர்களோடு இலவசமாகப் பகிர்ந்து மகிழ்வோம்.

நமக்கு இலவசமாகத் தரவிருக்கும் விண்ணக வாழ்வில் அனைவரும் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment