Sunday, May 26, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)7

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)7

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் ஏழாவது கொடை தெய்வ பயம்.
( Fear of God.)

தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

Fear of God is the beginning of wisdom.

தூய ஆவியானவரின் கொடைகளுள் முதன்மையானது ஞானம்.

ஆக, முதன்மைக்கும் முதன்மையானது தெய்வ பயம்.

தெய்வ பயம்‌ என்றால் தெய்வத்துக்குப் பயப்படுவது அல்ல.

கடவுள் அன்பு மயமானவர்.

யாராவது அன்பைப் பார்த்து பயப்படுவார்களா?

மகன் தாயைப் பார்த்து பயப்பட‌ மாட்டான்.

ஆனால் தாய்க்குப் பிடிக்காத ஒன்றைப் பார்த்து பயப்படுவான்.

ஒரு நாள் ஒரு மகனை அவனது நண்பன் மதுக்கடைக்கு அழைக்கிறான். 

ஆனால் அவன் "எனக்குப் பயமாக இருக்கிறது. வரவில்லை." என்கிறான்.

"மது அருந்த என்ன பயம்?"

"நான் மது அருந்தினால் அது என் அம்மாவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம்."

"நாம் பாவம் செய்தால் அது நம்மை நேசிக்கும் கடவுளுக்கு எதிராகி விடுமே" என்ற பயம் தான் தெய்வ பயம்‌.

நமது செயல் கடவுளின் விருப்பத்துக்கு எதிராகி விடுமோ என்ற பயம்.

கடவுளின் மனதை நோகடித்து விடுவோமே என்ற பயம்.

கடவுளின் அன்பை நித்திய காலமும் அனுபவிக்க முடியாமல் ஆகிவிடுமே என்ற பயம்.

கடவுளோடு உள்ள அன்புத் தொடர்பு அறுந்து விடுமே என்ற பயம்.

கடவுளைப் பற்றிய நமது அறிவு ஞானமாக மாற வேண்டுமென்றால் நம்மிடம் தெய்வ பயம்‌ இருக்க வேண்டும்.

தெய்வ பயம்‌ இல்லாதவர்கள் பாவம் செய்வார்கள்.

பாவம் செய்தால் இறைவனோடு உள்ள அன்புறவு பாதிக்கப்படும்.

இறைவனோடு உள்ள அன்புறவு பாதிக்கப்பட்டால் அவரைப் பற்றிய அறிவைச் சரியாக பயன்படுத்த முடியாது.

அறிவு வெறும் அறிவாக மட்டும் இருக்கும்.

பாவம் செய்யாதவனுக்குதான்,

அதாவது, தெய்வ பயம்‌ உள்ளவன் தான் ஞானத்தோடு வாழ்வான்

பாவம் செய்தவர்கள் இறைவனின் அன்பு உள்ளத்தை நோகடித்து விட்டோமே வருந்தினால்

அதற்குப் பெயர் தான் மனஸ்தாபம்.

மனஸ்தாபத்தோடு பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது நமது பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.

பாவமற்ற தூய உள்ளத்தோடு வாழ வேண்டுமென்றால் நம்மிடம் தெய்வ பயம்‌ இருக்க வேண்டும்.

பயப்படுபவன் பயப்பட மாட்டான்.

கடவுளுக்கு எதிதாகப் பாவம் செய்யப்  பயப்படுபவன் வேறு எதற்கும் பயப்பட மாட்டான்.

தெய்வ பயம்‌ உள்ளவன் உலகத்துக்குப் பயப்பட மாட்டான்.

துன்பப்படப் பயப்பட மாட்டான்.

இயேசுவின் விரோதிகளுக்குப் 
பயப்பட மாட்டான்.

அவன் இயேசுவின் சீடன் என்பதற்காக இயேசுவின் விரோதிகள் அவனை என்ன செய்தாலும்,

அவனைத் திட்டினாலும்,

அடித்தாலும், உதைத்தாலும், அவனைக் கொலை செய்தாலும்

பயப்பட மாட்டான்

இயேசுவை நேசிக்கும் நாம் பாவத்துக்குப் பயப்படுவோம்,

பாவத்துக்கு மட்டும் பயப்படுவோம்,

வேறு எதற்கும் பயப்பட வேண்டாம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment