Friday, May 17, 2024

"தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். "(அரு. 17:15)

" தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். "
(அரு. 17:15)

பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்

இரவு உணவிற்குப் பின்

 இயேசு தனது தந்தையை நோக்கி சீடர்களுக்காகச் செபிக்கிறார்.

"உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். 

நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

 ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. 


அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை;

 தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். 


 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. 
( 17:14-16)

எதற்காக இந்த செபம்?

சீடர்கள் நற்செய்தியை அறிவிக்க உலகெங்கும் செல்ல வேண்டும்.

சாத்தானும் அவனுடைய தோழர்களும் உலவிக் கொண்டிருக்கும் உலகம்.

சாத்தான் இயேசுவையே சோதித்தது.

சீடர்களை விடுமா?

தீயோனிடமிருந்து (சாத்தானிடமிருந்து) அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறார்

இயேசுவின் செபம் நமக்கும் பொருந்தும், ஏனெனில் நாமும் அவருடைய சீடர்கள்தான்.

நம்மையும் சாத்தானிடமிருந்து
காத்தருள வேண்டுமென்று தந்தையை வேண்டுகிறார்.

சாத்தான் யார்?

தன்னைக் கடவுளுக்கு நிகராக எண்ணியதால் மோட்சத்தை இழந்த லூசிபர் என்ற சம்மனசு.

அவனால் நமக்கு என்ன பிரச்சினை?

அவன் இழந்த மோட்சத்திற்குள் மனிதர்கள் யாரும் போகக்கூடாது என்பதைக் குறியாக வைத்து

அவனும் அவனுடைய சகாக்களும் உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் குறிக்கோளை நிறைவேற்ற என்ன செய்கிறார்கள்?

நாம் மோட்சத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இயேசுவின் நற்செய்தியின் படி வாழ வேண்டும்.

அவ்வாறு வாழ விடாதவாறு நம்மைச் சோதிப்பது அவர்கள் வேலை.

பள்ளிக்கூடம் செல்லும் மாணவனை போகவிடாதபடி TV ல் காட்டப்படும் Cricket match சோதிப்பது போல,

ஆன்மீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை லௌகீக வாழ்வின் இன்பங்களால் சோதிப்பார்கள்.

லௌகீக வாழ்வின் கவர்ச்சியால் ஈர்க்கப் படுகின்றவர்கள் ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்ட மாட்டார்கள்.

இவர்களின் சோதனையால்

 காலையில் தந்தை, மகன், தூய ஆவியின் பேரால் எழ வேண்டியவர்கள் 

Bed coffee, please என்று கூறிக்கொண்டு எழுவார்கள்.

செபமாலையை எடுக்க வேண்டிய கையால் TV remote ஐ எடுப்பார்கள்.

காலை செபம் சொல்வதற்கு பதிலாக Smart phoneல் YouTube க்குள் நுழைவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு செல்வார்கள், ஆனால் உடல் தான் கோவிலில் இருக்கும், உள்ளம் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்.

நற்செய்தியை அறிவிப்பதற்காக பிரசங்கம் வைப்பது குருவானவரின் வேலை.

அதைக் கேட்க விடாதபடி தூக்கத்தைக் கொடுப்பது சாத்தானின் வேலை.

கோவிலில் எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனை குட்டிச் சாத்தான்களும் கோவிலில் இருக்கும்.

திவ்ய நற்குணையை தின்பண்டத்தை வாங்குவது போல் வாங்கி வாயில் போடுவார்கள்.

அப்படியே அரட்டை அடிக்க கோவிலை விட்டு வெளியேறி விடுவார்கள்.

சுய பெருமையை காட்டிக் கொள்வதற்காகப் பிறருக்கு உதவி செய்வார்கள்.

பகைவரை நேசிக்கும் படி நற்செய்தி கூறும்.

பழிக்குப்பழி வாங்கும் படி சாத்தான் சோதிப்பான்.

கிறிஸ்தவர்களாக வாழ்வார்கள் ஆனால் கிறிஸ்தவ வாழ்வு வாழ மாட்டார்கள்.

"எங்களை சோதனையில் விழ விடாதேயும்" என்று நாம் தந்தையை நோக்கி செபிக்க இயேசு கற்றுத் தந்திருக்கிறார்.

தீயோனின் சோதனையில் விழாமல்,

லௌகீக கவர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல்

ஆர்வமுடன் ஆன்மீக வாழ்வு வாழ்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment