Wednesday, December 14, 2022

கிறிஸ்மஸ் விழாவினால் பயன்பெறுவோர்.

கிறிஸ்மஸ் விழாவினால் பயன்பெறுவோர்.

S.S.L.C தேர்வில் வெற்றி பெறத் தவறிய ஒரு மாணவனின் எண்ண ஓட்டம் :

"இந்தப் பள்ளியில் பத்து ஆண்டுகள் படித்தேன்.

நான் பத்து ஆண்டுகள் படித்ததால் பள்ளிக் கூடத்துக்கு வருமானம்.

எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம்.

Tution எடுத்த ஆசிரியருக்கு வருமானம்.

Uniforms தைக்க துணி வாங்கிய ஜவுளி கடைகளுக்கு வருமானம்.

Uniform தைத்த தையல்காரருக்கு வருமானம்.

Town bus owner ருக்கு பத்து ஆண்டுகள் வருமானம்.

நான் பண்டம் வாங்கியதால் பக்கத்துக் கடைக்காரருக்கு வருமானம். 

Ice Cream விற்றவருக்கு வருமானம்.

நான் தேர்வு எழுத பணம் வாங்கிய அரசுக்கு வருமானம்.

இன்னும் யார் யாருக்கெல்லாமோ எப்படி எல்லாமோ என்னால் வருமானம்.

எனக்கு?

ஆசிரியரிடம் வாங்கிய அடிகள்.
வீட்டில் வாங்கிய திட்டு.

நான் அடியும், திட்டும் வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு பண வருமானத்தைக் கொடுத்திருக்கிறேன்.



நாம் நாம் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம்.

 அதனால் பயன் பெறுவோர்:

ஜவுளிக் கடைகள்.
Tailors.
Painters.
அலங்காரப் பொருட்கள் விற்போர்.
stars விற்போர்.
Cakes and sweets விற்போர்.
குடில் செட் விற்போர்
Bus owners.
Railway.
பல சரக்கு கடைகள், 
கசாப்பு கடைகள்.
இன்னும் ஞாபகத்துக்கு வராத அனேகர்.


நாம்?

கிறிஸ்து மேல் குறிப்பிட்ட " நபர்களுடைய வருமானத்திற்காக பிறக்கவில்லை.

நமக்காகப் பிறந்தார்.

நாம் புது துணி உடுக்கவும், பிரியாணி சாப்பிடவும் கிறிஸ்து பிறக்கவில்லை.

பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்த நிலையில் வாழவும்,

அதன் பயனாக நிலை வாழ்வை அடையவும் கிறிஸ்து பிறந்தார்.

கிறிஸ்மஸ் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

நாமும் விழா கொண்டாடுவதற்கான திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறோம்..

என்ன திட்டங்கள்?

மற்றவர்களுடைய பொருளாதார நலனுக்கான திட்டங்களையா?

அல்லது,

நமது ஆன்மீக நலனுக்கான திட்டங்களையா?

எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையாக கொண்டாடுகிறோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு ஆன்மீக ரீதியில் நலன் தரக்கூடிய விதமாக கொண்டாடுவோம்.

ஆன்மீகத் தியானம்,
நல்ல பாவசங்கீர்த்தனம்,
நற்கருணை வழிபாடு,
பிறர் அன்புச் செயல்கள்

ஆகியவற்றை மட்டும் மையமாக வைத்து விழாவிற்கான திட்டங்களை தீட்டுவோம்.

கந்தல் உடைய அணிந்து மாட்டின் தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் 
நம்மை படைத்த இறைவனை

எளிய உடைய அணிந்து வழிபட 
திட்டம் தீட்டுவோம்.

உண்பதை விட உண்ணக் கொடுக்க திட்டம் தீட்டுவோம்.

தண்ணீரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்துவிட்டு சாப்பிட அமர்வது போல,

பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் ஆன்மாவை சுத்தம் செய்துவிட்டு விழாவிற்கு செல்வோம்.

"நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம்"

இது விண்ணில் இருந்து நமக்கு வந்த கிறிஸ்மஸ் வாழ்த்து.

அனைவரும் நல்ல மனதோர் ஆகுக.

அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.

லூர்து செல்வம்.


.

No comments:

Post a Comment