"திவ்ய நற்கருணை கொடுத்து முடிந்த பின் சுவாமியார் பீடத்துக்கு போய் என்ன செய்கிறார் என்பதை கவனத்திருக்கிறீர்களா?"
'',நற்கருணைப் பாத்திரத்திலும், தட்டிலும் உள்ள நற்கருணைத் துகள்களை இரத்தப் பாத்திரத்திற்குள் தட்டி, இரத்தத்தைக் குடிப்பார்."
"ஏன் துகள்களை பாத்திரத்திற்குள் தட்டுகிறார்?"
", ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார். அது கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்க்காக."
"நமக்கு எதில் நற்கருணையைத் தருகின்றார்கள்?"
", கையில்."
"நற்கருணைத் துகள்கள் கையில் விழுமா?"
", விழும்."
"நற்கருணையை அருந்திய பின் கையை என்ன செய்வோம்?"
", உதறிவிட்டுப் போவோம்."
"கையை உதறும்போது துகள்கள் என்ன செய்யும்?"
", தரையில் விழும்."
"எந்தத் தரையில்?"
",நாம் நடக்கும் தரையில்தான்."
"ஆண்டவர் பாடுகள் படும்போது யூதர்கள் அவருக்குச் செய்ததை நாமும் செய்ய வேண்டுமா?"
",நீ கேட்பதைப் பார்த்தால் எனக்கு சங்கடமாக இருக்கிறது.
ஆனாலும் இன்று நம் மக்கள் அதைத்தானே செய்கிறார்கள்.
அன்று ஒரு சில வீரர்கள் செய்ததை
இன்று நற்கருணை வாங்க வரும் அனைவரும் செய்கிறார்கள்
என்பதை நினைக்கும் போது உண்மையிலேயே மிகவும் சங்கடமாக இருக்கிறது."
" மக்களால் ஆண்டவருக்கு ஏற்படும் அவமானத்தை தடுக்க வழியே இல்லையா?"
",இருக்கிறது. பழைய காலத்தில் செய்தது போல் மக்கள் முழந்தாளிலிருந்து, தங்கள் நாவில் நற்கருணையை வாங்க வேண்டும்.
கைகள் கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்."
"நாவில் நற்கருணை வழங்கும் பழக்கத்தை ஏன் கையில் வழங்குவதாக மாற்றினார்கள்?
இந்த மாற்றம் தேவையா?"
', நாம் பழைய வழக்கத்துக்கு மாற வேண்டும்.
நற்கருணைத் துகள்கள் மக்களின் கால்களில் மிதிபட வழி செய்யும் கையில் வாங்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கடவுளைத் தவிர மற்ற எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டவை தான்.
மாற்றங்களால் வளர்ச்சியும் ஏற்படும்,
தளர்ச்சியும் ஏற்படும்.
வளர்ச்சிக்குக் காரணமான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் தளர்ச்சிக்குக் காரணமான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
திவ்ய நற்கருணை பக்தியை வளர்க்கும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
பக்தியை குறைக்கும் மாற்றங்களைச் செய்யக் கூடாது.
நற்கருணையை நாவில் வாங்கும் போது உள்ள பக்தியை விட
கையில் வாங்கும் போது பக்தி அதிகரிக்காது,
நமது பக்தி குறைவது மட்டுமல்ல
நற்கருணைக்கு அவசங்கையும் ஏற்படும்.
இத்தகைய மாற்றம் கூடாது.
* * * *
"தாத்தா, அன்னை மரியாள் சென்ம பாவம் மாசு இன்றி உட்பவித்தாள் என்பதற்கு நாம்
காட்டுகிற பைபிள் ஆதாரங்கள்:
1.''அருள் நிறைந்தவளே வாழ்க,"
என்ற கபிரியேல் தூதரின் வாழ்த்துரை.
2,''உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்:
அவள் உன் தலையை நசுக்குவாள்."
என்று இறைவன் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள்.
புதிய பொது மொழி பெயர்ப்பில் இந்த இரண்டு வசனங்களும் மாற்றப்பட்டுள்ளன.
1. அருள்மிகப் பெற்றவரே வாழ்க! '
2. அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும்.
''அருள் நிறைந்த'' என்ற சொற்றொடர்க்கும்,
"அருள்மிகப் பெற்ற" என்ற சொற்றொடர்க்கும், பார தூர வித்தியாசம் இருக்கிறது.
ஒரு பெட்டி நிறைய நெல் இருந்தால் அதில் வேறொன்றும் இருக்க முடியாது.
அருள் நிறைந்த ஆன்மாவில் அருளுக்கு எதிரான எதுவும் இருக்க முடியாது.
பெட்டியில் முக்கால்வாசி இருந்தாலும் அதில் நெல் மிகுதியாக உள்ளது,
மீதி கால்வாசியில் நெல்லோடு வேறு எதை வேண்டுமானாலும் போடலாம்.
நாம் மரியாளை "அருள் நிறைந்த மரியே" என்று வாழ்த்தும்போது அவளிடம் அருளுக்கு எதிரான பாவமாசு கொஞ்சம் கூட இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
"அருள் மிகப் பெற்ற மரியே" என்று வாழ்த்தும்போது அருளுக்கு எதிரானதும் உடன் இருக்கலாம் என்பதைச் சொல்லாமலேயே ஏற்றுக் கொள்கிறோம்.
மொழி பெயர்ப்பில் இந்த மாற்றம் தேவைதானா?
"அவள் உன் தலையை நசுக்குவாள்"
என்று சொல்லும் போது மரியாள் சாத்தானின் தலையை நசுக்கினாள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
"அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும்."
என்ற வாக்கியத்தில் மாதா எதுவும் செய்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.
ஆகவே இந்த வாக்கியத்தை 'மாதா மாசற்றவள்' என்பதற்கு ஆதாரமாக காட்ட முடியாது.
இந்த மாற்றம் தேவைதானா?
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment