Saturday, December 31, 2022

இறைவனின் அன்னை மரியாளின் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக.

இறைவனின் அன்னை மரியாளின் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக.


''தாத்தா, எல்லோரும் புத்தாண்டு தின வாழ்த்துக்கள் என்று சொல்லும்போது நீங்கள் மட்டும் 

'இறைவனின் அன்னை மரியாளின் தின வாழ்த்துக்கள் அனைவருக்,கும் உரித்தாகுக.'

என்று சொல்கின்றீர்களே. 

என்ன காரணம்?'''

"'புத்தாண்டு என்பது ஒரு கற்பனை.

மரியாள் இறைவனுக்கும் அனைவருக்கும் தாய் என்பது உண்மை.

நான் உண்மையின் அடிப்படையில் வாழ்த்துகிறேன்."

"புத்தாண்டு என்பது ஒரு கற்பனையா? புரியவில்லை."

"'நாள், வாரம், மாதம் ஆண்டு என்பவை நாம் நமது வரலாற்றை எளிதாக புரிந்து கொள்வதற்காக நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட கற்பனை கருத்துக்கள். (Concepts)

இவற்றை நமது கண்களால் பார்க்க முடியாது.

2022ஆம் ஆண்டை எனக்கு காண்பி பார்ப்போம்?

மனிதர்களில் ஒவ்வொரு இனத்தவரும் ஒருவகையான ஆண்டு கணக்கு வைத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, தை முதல் நாள் தமிழனுக்குப் புத்தாண்டு.

Gregorian calendar படி இன்றைய தினத்தை புத்தாண்டாக அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்."

"அதென்ன Gregorian calendar?"

"'பாப்பரசர் 13ஆம் கிரகோரி 1582 ஆம் ஆண்டு உருவாக்கித் தந்த காலண்டர்.

இதைப் பற்றி விவரமாக அறிய விரும்பினால்

https://en.m.wikipedia.org/wiki/Gregorian_calendar

என்ற link உதவியுடன் பார்த்துத் தெரிந்துகொள்.

நானே சொல்ல ஆரம்பித்தால் இந்த ஆண்டு முழுவதும் நீ இந்த இடத்தை விட்டு ஆசைய முடியாது."

"சரி, நான் போய் பார்த்துக் கொள்கிறேன்.

அன்னை மரியாள் இறைவனின் தாய் என்பது எனக்கு தெரியும்.

நம் எல்லோரையும் எப்போது பெற்றாள் என்பதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்."

"'அன்னை மரியாள் பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இறைமகன் இயேசுவை மனிதனாக பெற்றெடுத்தாள்.

இது உடல் ரீதியான பேறு.

கன்னி மரியாளின் வயிற்றில் சர்வ வல்லவ கடவுளாகிய இறைமகன் மனு உரு எடுத்து,

 பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் குழந்தையாக வளர்ந்து,

 பத்தாவது மாதம் உலகில் பிறந்தார்.

மரியாள் இயேசுவைக் கருவுற்ற போதும் கன்னி.

இயேசு பிறக்கும்போதும் கன்னி.

இயேசு  பிறந்த பிறகும் கன்னி.

இயேசுவின் பிறப்பால் அன்னை மரியாளின் கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படவில்லை.

"எப்படி மரியாளின் கன்னிமைக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இயேசு பிறந்தார்?

ஒளி கண்ணாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல்

கண்ணாடியின் ஒரு புறம் இருந்து மறுபுறம் செல்கிறதோ

அதேபோல இயேசுவும் மரியாளின் வயிற்றிலிருந்து

 அவளுடைய கன்னிமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் உலகிற்கு வந்தார்.

By his power as God, 

the Savior passed through the closed womb of the Virgin Mary as light passing through glass, 

as thought proceeding from intellect.

 He did no harm to the physical integrity of our Lady’s virginal cloister, but rather consecrated it!  

பிரசவ வேதனை இல்லாமல் பிள்ளையைப் பெற்றெடுத்த ஒரே பெண் அன்னை மரியாள் மட்டுமே.

சரியாக 33 ஆண்டுகள் கழித்து

 இயேசு தன்னையே பலியாக தந்தைக்கு ஒப்புக் கொடுப்பதற்காக சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது

 சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த அன்னை மரியாள் 

நம் அனைவரையும் ஆன்மீக ரீதியாக தனது பிள்ளைகளாக பெற்றெடுத்தாள்.

இயேசு தன் அன்னையைப் பார்த்து அருளப்பரைக் காண்பித்து,

 "அம்மா, இதோ! உம் மகன்"

என்று சொன்னபோது,

அருளப்பரை மட்டுமல்ல, தனது சீடரகளாகிய நம் அனைவரையும் அன்னை மரியாளுக்குப் பிள்ளைகளாகக் கொடுத்தார்.

மாட்டுத் தொழுவத்தில் இயேசுவை மகனாக பெற்ற மரியாள்,

சிலுவை அடியில் நம் அனைவரையும் பிள்ளைகளாக பெற்றாள்.

நமது பிறப்பு ஆன்மீக ரீதியான பிறப்பு.

எப்படி ஒரு தாய் ஒரு குழந்தையை பெறும் போது அதை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாளோ,

அதேபோல, நமது அன்னை மரியாளும் ஆன்மீக ரீதியாக நம்மைப் பெற்ற போது 

நாம் மீட்புப் பெற நமக்கு உதவுவது 
 சம்பந்தமான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாள்.

நமது மீட்பர் இயேசு மட்டும்தான்.

அன்னை மரியாள் நமது மீட்பரை பெற்று தந்ததோடு,

இயேசுவால் மீட்கப்பட சகல உதவிகளையும் நமக்கு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

தன் மகனிடம் நமக்காக வேண்டி கொள்வதில் மூலம் 

நமது ஆன்மீக வளர்ச்சிக்கான அருள் வரங்களை தன் மகனிடமிருந்து நமக்கு பெற்று தருகிறாள்.

தனது பிள்ளைகளாகிய நமக்கு தாய்க்குரிய சகல கடமைகளையும் அன்னை மரியாள் தொடர்ந்து செய்து வருகின்றாள்.

புனித அருளப்பர் அன்னை மரியாளை தனது தாயாக தனது வீட்டில் ஏற்றுக்கொண்டது போல,

நாமும் நமது உள்ளமாகிய வீட்டில் மரியாளை நமது தாயாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தாயின் அருகில் அமர்ந்து அடிக்கடி அவளோடு பேச வேண்டும்.

நாம் செபமாலை சொல்லும்போதெல்லாம் நமது தாயோடு நாம் பேசுகிறோம்.

மங்கள வார்த்தை செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும் 

அன்னையை வாழ்த்துவதோடு,

'பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்' 

என்று அன்னையிடம் கேட்கிறோம்.

அன்னையும் ஒவ்வொரு வினாடியும் நமக்காக தனது மகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாள்.

இயேசு தாய் சொல்லை கேட்கும் பிள்ளை.

கானாவூர் திருமணத்தில் தன் தாய் சொல்லைத் தட்டாமல் தண்ணீரை இரசம் ஆக்கிய இயேசு,  

இப்போதும் தன் தாய் சொல்லைத் தட்டாமல் நாம் படும் 
துன்பங்களை எல்லாம் நித்திய காலம் நாம் அனுபவிக்க போகும் பேரின்பமாக மாற்றித் தருவார்.

அவரது அருளால் தண்ணீர் திராட்சை ரசமானது போல,

நமது துன்பம் அனைத்தும் பேரின்பமாக மாறும்.

இது உறுதி.

இயேசு தாயின் வழியே நம்மிடம் வந்தார்.

நாமும் அதே தாயின் வழியே அவரிடம் செல்ல வேண்டும்.

அவர் தாய் சொல்லை தட்டாமல் வாழ்ந்தது போல நாமும் நமது தாயின் சொல்லைத் தட்டாமல் வாழ வேண்டும்."

"தாத்தா நமது தாயைப் பற்றி யாராவது தப்பும் தவறுமாக பேசினால் நம்மால் சும்மா இருக்க முடியுமா?

நம்மை விட்டு பிரிந்து சென்ற சகோதரர்கள் நம் தாயைப் பற்றி தப்பு தப்பாக பேசுவதையே தொழிலாக கொண்டிருக்கிறார்களே. அவர்களை என்ன செய்ய?"

"'அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம்.

அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

நமக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யும்படி நமது ஆண்டவர் கூறியிருக்கிறார்.

நாமும் அப்படியே செய்வோம்.

சிலுவை அடியில் பிறந்தவர்கள் நாம்.

நமது வாழ்வில் சிலுவைகள் கட்டாயம் வரத்தான் செய்யும். 

அவற்றை நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய இறைவனை வேண்டி ஒப்புக் கொடுப்போம்.

வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அன்னை மரியின் அன்பாக வாழ்த்துக்கள்.

லூர்து செல்வம்.

Friday, December 30, 2022

மரியாள் கடவுளின் தாய்.


மரியாள் கடவுளின் தாய்.

"தாத்தா, அன்னை மரியாள் நமது மீட்பர் இயேசுவின் தாய்.

இயேசு மெய்யாகவே கடவுள், மெய்யாகவே மனிதர்.

தேவசுபாவத்தில் அவர் துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

மனித சுபாவத்தில் பிறப்பும் மரணமும் உள்ளவர். 

துவக்கமும், முடிவும் இல்லாத இறைமகன் மரியாளின் வயிற்றில் மனிதவுரு எடுத்து, மனிதனாய்ப் பிறந்தார்.

இயேசு மரியாளின் வயிற்றில் மனிதவுரு எடுத்து, மனிதனாய் பிறந்ததால் அவள் மனிதனின் தாய் தானே,

 அவளை ஏன் கடவுளின் தாய் என்று அழைக்கிறோம்?"

"'உனது கேள்வியிலேயே பதில் இருக்கிறதே.

கன்னி மரியின் வயிற்றில் மனு உரு எடுத்தது யார்?"

"கடவுளாகிய இறைமகன்."

"'ஒரே வார்த்தையில் சொல்லு."

"கடவுள். "

"'மரியாளின் வயிற்றில் கடவுள் மனுவுரு எடுத்தார். சரியா?"

"சரி."

""மரியாளின் வயிற்றிலிருந்து
கடவுள் மனிதனாகப் பிறந்தார். சரியா?"

"சரி."

"'மனிதனாகப் பிறந்தது யார்?"

"கடவுள்"

"' கடவுள் மரியாள் மூலமாக  மனிதனாகப் பிறந்ததால் மரியாள் கடவுளின் தாய் தானே."

"ஆனால், தாத்தா, கடவுள் மனிதனாகத் தானே பிறந்தார்.

கடவுளாகப் பிறக்கவில்லையே.

அப்போ மனிதனின் தாய்தானே."

"'நன்கு கவனி.

இறைமகன் ஒரே ஆள், இரண்டு சுபாவங்கள்.

தேவ ஆளுக்கு தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள்.

எந்த சுபாவத்தில் செயல்பட்டாலும் செயல்படுவது தேவ ஆள் தான்.

தேவ ஆளாகிய இறைமகன் மனித சுபாவத்தில் கன்னிமரியின் வயிற்றில் பிறந்தார்.

நன்கு கவனி.

பிறந்தது தேவ ஆளாகிய இறைமகன்.

தேவ சுபாவத்தில் பிறக்கவில்லை,

 மனித சுபாவத்தில் பிறந்தார்.

எந்த சுபாவத்தில் பிறந்தாலும் பிறந்தது இறை மகன் ஆகிய தேவ ஆள்தான்.

பெற்றவள் கன்னி மரியாள் தான்.

மரியின் வயிற்றில் மனிதனாக உரு எடுத்தது இறை மகனாகிய கடவுள்.

கடவுள் மனித உரு எடுத்தார்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் மனிதனாக வளர்ந்தார்.

கடவுள் மனித சுபாவத்தில் நமக்காகப் பாடுபட்டார்.

கடவுள் மனித சுபாவத்தில் நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

கடவுள் தேவ சுபாவத்தில் பாடுகள் பட்டு மரிக்க முடியாது என்பதால் தான்,

மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார்.

கடவுள் நம் மீது கொண்ட அளவில்லாதபாடுகள் அன்பின் காரணமாக 

நாம் செய்த பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்ய தீர்மானித்தார்.

தேவ சுபாவத்தில் பாடுகள் பட்டு, மரித்து பரிகாரம் செய்ய முடியாது. 

ஆகவேதான் மனித சுபாவத்தில் பாடுகள் பட்டு, மரித்து பரிகாரம் செய்தார்.

மனித சுபாவத்தில்  பாடுகள்  பட்டு மரித்து பரிகாரம் செய்யக் கடவுள் மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்ததால் மரியாள் கடவுளின் தாய் தான்.

புரிகிறதா? புரியவில்லையா?"

"உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

அவர் மேன்மை மிக்கவராயிருப்பார்.

 உன்னதரின் மகன் எனப்படுவார்.''

கபிரியேல் தூதர் மரியின் வயிற்றில் கருத் தரிப்பது உன்னத கடவுளின் மகன் என்பது நன்கு புரிகிறது,

இயேசு கடவுளாகையால் அவரைப் பெற்றவர் கடவுளின் தாய்தான்."

"'மரியாள் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

கடவுள் பரிசுத்தர்.

பரிசுத்தரான கடவுளை வயிற்றில் தாங்க  வேண்டியதிருந்ததால் கடவுள் தனது தாயையும் பரிசுத்தராகவே படைத்தார்.

தனது தாயின் வயிற்றில் மரியாள் சென்பப் பாவ மாசு மரு இன்றி உற்பவித்துப் பிறந்தாள்.

தனது வாழ்நாளிலும் ஒரு சிறு பாவம் கூட மரியாள் செய்ததில்லை.

ஆகவே அவளை "அருள் நிறைந்த மரியே" என்று அழைக்கிறோம்.

அருளால் நிறைந்த அவளுடைய இருதயத்தில் ஒரு சிறு பாவ மாசு கூட இருக்க முடியாது.

இருந்தால் அவளை அருள் நிறைந்தவள் என்று கூற முடியாது.

இயேசு நற்செய்தி அறிவித்த காலத்தில் 

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)
என்று சொன்னார்.
 
தான் பின்னால் சொன்னது போல தனது தாயை நிறைவுள்ளவராய்ப் படைத்தார்.

 இயேசு கூறியபடி 

நமது வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, 

நாமும் இருக்க வேண்டுமென்றால்

நமக்கும் தாயாகிய அன்னை மரியாளைப் போல நாமும் வாழ வேண்டும்.

மரியாளைப் பொருத்தமட்டில் 
பிள்ளையைப் போல தாய்.

நம்மை பொருத்தமட்டில் தாயைப் போல் பிள்ளை. 

நாம் நமது தாயைப்போல வாழ்ந்தால்,

நாம் இயேசுவின் ஆசைப்படி மாறுவோம். 

நாசரேத் ஊரில் தாயின் சொற்படி  நடந்த இயேசு,

கானாவூர் திருமணத்தில் தாயின் சொல்லைத் தட்டாத இயேசு

விண்ணகத்திலும் தாயின் சொல்லைத் தட்ட மாட்டார்.

இயேசுவிடம் கேட்க வேண்டியதை தாயின் மூலம் கேட்போம்.

அவள் மூலம் கடவுளிடம் கேட்பது உறுதியாகக் கிடைக்கும்.

"சிலுவையடியில் எங்களைப் பெற்றெடுத்த அன்னையே,

 மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்த உமது திருமகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்."

லூர்து செல்வம்.

Thursday, December 29, 2022

புத்தாண்டுத் தீர்மானம்.

புத்தாண்டுத் தீர்மானம்.

"தாத்தா,ஒவ்வொரு முறையும் புத்தாண்டு பிறந்தவுடனே புத்தாண்டுத் தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" 

"'புத்தாண்டுத் தீர்மானம் என்று ஒன்று தேவை இல்லை என்கிறேன்."

"ஆண்டு பிறந்ததும் அந்த ஆண்டு முழுவதும் எப்படி வாழ வேண்டும் என்பது பற்றி தீர்மானம் எடுப்பதில் என்ன தவறு?"

"'பேரப்புள்ள, நாம் தினமும் வாழ்கிறோம்.

பகலிலும் வாழ்கிறோம் இரவிலும் வாழ்கிறோம்.

ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் வாழ்கிறோம்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளை எப்படி வாழ்வது என்று தீர்மானிக்க வேண்டும்.

தீர்மானிக்க வேண்டியது ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, தினமும்.

நாம் தீர்மானிக்க உதவியாய் இருக்க வேண்டியது இறைவாக்கு.

ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் தாய்த் திருச்சபையால் குறித்து தரப்பட்ட இறைவாக்கு வாசகங்களை வாசித்து,

 தியானித்து,

 அவற்றின் அடிப்படையில் அன்றைய நாளில் நாம் எப்படி வாழ்வது என்று தீர்மானிக்க வேண்டும்.

 அதன்படி அன்று மட்டுமல்ல தொடர்ந்து வரும் எல்லா நாட்களிலும் வாழ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் இவ்வாறு வாசித்து தீர்மானித்து வாழ்ந்தால் காலப் போக்கில் பைபிள் முழுவதையுமே வாழ ஆரம்பித்து விடுவோம்.

வாழ்வில் தினமும் வாசி, தினமும் யோசி,
தினமும் தீர்மானம் எடு,
தினமும் வாழ்.

தினமும் கிறிஸ்துவின் போதனைப்படி வாழ்பவனுக்கு எதற்கு ஆண்டுத் தீர்மானம்?"

"தாத்தா, சொல்வது எளிது. வாழ்வது கடினம்.

தினமும் தீர்மானம் எடுத்து வாழ்ந்தாலும் தவறுகள் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவே."

"'தவறுகளைத் திருத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவே."

"அப்போ புத்தாண்டு தீர்மானம் தேவை இல்லையா?"

"'தினமும் சமைத்து 
தினமும் சாப்பிடுகின்றாயா, 

ஆண்டுக்கு ஒரு முறை சமைத்து ஆண்டு முழுவதும் சாப்பிடுகின்றாயா?"

"புத்தாண்டு தீர்மானம் எடுப்பது தப்பா?"

"'தப்பு என்று நான் சொல்லவில்லை.

புத்தாண்டில் ஒரு தீர்மானம் எடுத்துவிட்டு அது ஆண்டு முழுமைக்கும் போதும் என்று நினைப்பதுதான் தப்பு."

"தாத்தா, ஒவ்வொரு வினாடியும் வாழ்கின்றோமே, 

ஒவ்வொரு வினாடியும் தீர்மானம் எடுக்க வேண்டுமா?"

"'ஒவ்வொரு வினாடியும் நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் நமது நினைவில் இருக்க வேண்டும்.

நினைவில் இருப்பவை நமது சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

அதுதான் வாழ்க்கை."

"தீர்மானிப்பது வாழ்க்கை அல்ல, அதன்படி வாழ்வதுதான் வாழ்க்கை என்கிறீர்கள்."

"'தினசரி பூசைக்குப் போவதும், செபக் கூட்டங்களில் கலந்து கொள்வதும், 
தியானங்களுக்குப் போவதும்
ஒருவனை கிறிஸ்தவன் ஆக்குகிறது என்று நினைக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் வாழ்வதுதான் ஒருவனை கிறிஸ்தவன் ஆக்குகிறது.

அவை நமது வாழ்க்கையில் பிரதிபலிக்காவிட்டால் அவற்றால் பயனில்லை.

தினசரி பூசைக்கு போய்விட்டு வந்து வீட்டில் சமாதானமாக வாழாவிட்டால் பூசைக்குப் போய் வந்ததால் என்ன பயன்?

செபக் கூட்டங்களுக்குப் போய்,
பாவ சங்கீர்த்தரம் செய்யாமலும், பாவ மன்னிப்பு பெறாமலும் வந்தால் செபக் கூட்டங்களால் என்ன பயன்?

புதிய ஆண்டில் மட்டுமல்ல,

நமது வாழ்நாள் முழுவதும் இறை வார்த்தையின் படி வாழ்வோம்.

இதை புத்தாண்டில் மட்டுமல்ல, நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, December 26, 2022

"பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்."(மத். 2:16).

."பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்."
(மத். 2:16).

"தாத்தா, உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்துதான் வந்தேன்..

ஆனால் வந்து கொண்டிருக்கும் போதே அதைப்பற்றி தியானித்துக் கொண்டே வந்தேன்.

கேள்விக்குறிய விடை கிடைத்துவிட்டது.

ஆகவே கேள்வி கேட்கும் எண்ணத்தை விட்டு விட்டேன்."

"'பரவாயில்லை, நானும் உன் கேள்வியையும் பதிலையும் தெரிந்து கொள்கின்றேனே."

"இயேசுவைப் பார்க்க வந்த கீழ்த் திசை ஞானிகள் ஆண்டவருடைய தூதரின் வார்த்தைகளைக் கேட்டு வேறு வழியில் ஊருக்கு சென்று விட்டார்கள். 

திருக் குடும்பமும்  இறைத்தூதரின் சொல்லுக்கு இணங்க எகிப்துக்குச் சென்று விட்டார்கள்.

ஏரோது மன்னன் பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம்
கொன்று விட்டான்.

நான் கேட்க நினைத்த கேள்வி,

தன்னை ஏதோதுவின்  கொலைத் திட்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள
 குடும்பத்துடன் எகிப்துக்கு சென்ற இயேசு,

ஏன் மாசில்லாத குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டுவிட்டார்?"

"'இதைப் பற்றி எப்படி தியானித்து என்ன பதிலுக்கு வந்தாய்?"

"இயேசுவுக்காக உயிரைக் கொடுப்பவர்கள் வேத சாட்சிகள்.

வேத சாட்சிகளுக்கு மோட்ச பேரின்ப வாழ்வு உறுதி.

வேத சாட்சிகளாக மரிக்கும் வாய்ப்பைப் பெற்ற மாசில்லாக் குழந்தைகள் உண்மையிலேயே பாக்கியவான்கள்.

வளர்ந்து சங்கடப்பட்டு சம்பாதிக்க வேண்டிய மோட்ச பாக்கியத்தை

 எந்தவித சங்கடமுமின்றி, 

ஒரே வெட்டில், 

தங்களுக்கு தந்ததற்காக

 அவர்கள் இப்பொழுது மோட்சத்தில் இயேசுவுக்கு இடைவிடாது நன்றி கூறிக் கொண்டேயிருப்பார்கள்.

எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது."

"'உண்மையாகவா?"

"இப்பொழுது நாம் எத்தனை சோதனைகளோடு போராடி இயேசுவுக்காக வாழ வேண்டி இருக்கிறது.

அவர்கள் ஒரு போராட்டமும் இல்லாமல் மோட்சத்திற்கு ஏற்றவர்களாக மாறிவிட்டது அவர்களுக்கு கிடைத்த பாக்கியம்.

தாத்தா, கடவுள் நம்மை ஏன் நேரடியாக மோட்ச நிலையிலேயே படைத்திருக்கக் கூடாது?"

"'இது கடவுளிடம் கேட்க வேண்டிய கேள்வி.

என்னிடம் கேட்டால் கிடைக்கும் ஒரே பதில்:

"கடவுள் சித்தம் நமது பாக்கியம்."

"இயேசுவுக்காக மரித்துதான் வேத சாட்சியாக வேண்டுமா?

வேத சாட்சியாக வாழ முடியாதா?"

"'முடியும் மட்டுமல்ல, வேண்டும்.
நம்மை பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்கும் படியாக வாழ்வதே சாட்சிய வாழ்க்கை.

மற்றவர்களது நலனுக்காக வாழ்வதின் மூலமும்,

நம்மை வெறுப்பவர்களை நேசிப்பதின் மூலமும்,

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வதின் மூலமும்,

நமக்கு எதிராக குற்றம் செய்பவர்களை மன்னிப்பதன் மூலமும்,

மற்றவர்கள் நலம் பெற நம்மையே தியாகம் செய்வதின் மூலமும்

நாம் வேத சாட்சிகளாக வாழ வேண்டும்."

"வாழ்கிறோமா?"

"'வாழ்கிறோமா? என்று கேட்காமல்

வாழ்கிறேனா? என்று ஒவ்வொருவரும் அவரவரைப் பார்த்து கேட்டு பதில் காண வேண்டும்."

"வாழ்ந்தாலும், தாத்தா, பார்க்கிறவர்கள் அவர்களது கண்களைக் கொண்டு தானே பார்க்கிறார்கள்.

கண்களில் கோளாறு இருந்தால் எல்லாம் கோளாறாகத்தான் தெரியும்."

"'நாம் வாழ்வது கடவுளுக்காக  மட்டும்தான்.

மற்றவர்களுக்கு முன் மாதிரிகையாக வாழ வேண்டும்.

உலகில் நல்ல பார்வை உள்ளவர்களும் இருக்கிறார்கள், கோளாறான பார்வை உள்ளவர்களும் இருக்கிறார்கள்.


இயேசுவைப் பற்றியே சிமியோன்

"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ,

 எழுச்சியாகவோ அமைந்துள்ளான்"
 என்றார்.

இயேசு நற்செய்தியை அறிவித்த போது 

அவரை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள்,

 அவரைக் கொல்ல நினைத்தவர்களும் இருந்தார்கள்.

ஆனால் இயேசு எல்லோருக்கும்தான் நற்செய்தியை அறிவித்தார்.

நாமும் சாட்சிய வாழ்வு வாழும் போது ஏற்றுக் கொள்பவர்களும் இருப்பார்கள்,

 ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருப்பார்கள்.

ஆனாலும் நாம் வாழ வேண்டிய படி 

நம் ஆண்டவருக்கு சாட்சிய வாழ்வு வாழ வேண்டும்.

இயேசுவுக்காக 

வாழ்வோம், 

மரிப்போம்,

நிலைவாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25?

இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25?

"தாத்தா, மன்னிக்கவும்."

"'மன்னிக்கவா? என்ன தப்பு செய்த?"

"தப்பு ஒண்ணும் செய்யல தாத்தா. கேள்வி ஒன்று கேட்க வேண்டும். கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னால் கேட்க வேண்டிய கேள்வியை அது முடிந்தது கேட்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டேன்."

"'இப்பவும் கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னால்தான் கேட்டிருக்கிறாய்.

2023ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னால். சரி, கேள்."

"வரலாற்றை கி.மு, கி.பி என்று இரண்டு பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கி.மு வில் நடந்ததாக கூறுவோம்.

பிறந்த பின்னால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கி.பி யில் நடந்ததாக கூறுவோம்.

கிறிஸ்து பிறந்தது கி.மு விலா,
கி.பி யிலா?"

"'கிறிஸ்து கி.மு விலும் பிறக்கவில்லை, கி.பி யிலும் பிறக்கவில்லை. 
கிறிஸ்து பிறந்த ஆண்டில் தான் பிறந்தார்."

"அது எனக்கும் தெரியும், தாத்தா.

கிறிஸ்து பிறந்தது டிசம்பர் 25என்று கூறுகிறீர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் தான் ஆரம்பிக்கும்.

கிறிஸ்து கி.மு.25 ல்பிறந்திருக்க முடியாது, ஏனெனில் அது அவர் பிறந்த ஆண்டுக்கு முந்திய தேதி.

ஜனவரி முதல் தேதியில் தான் கிறிஸ்து பிறந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் வரலாற்றை கி.மு, கி.பி என பிரிக்க முடியும்.

நாம் ஏன் கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் 25ல் கொண்டாடுகிறோம்."

"'நீ கேட்பதில் பொருள் இருக்கிறது.

ஆனால் நாம் கொண்டாடுவது கிறிஸ்து பிறந்த ஆண்டை அல்ல,

 கிறிஸ்துவின் பிறப்பைத்தான் கொண்டாடுகிறோம்."

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"'நீ பள்ளிக்கூடத்துக்கு போகும்போது கீழே விழுந்து காலில் பயங்கரமான காயம் ஏற்பட்டு விட்டது.

காயத்திற்கு மருந்து போட டாக்டரிடம் போகிறாய்.

டாக்டர் நீ விழுந்த நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? காயத்துக்கு முக்கியம் கொடுப்பாரா?

 நீ விழுந்த நேரத்திற்கு மருந்து கொடுப்பாரா?

 விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கொடுப்பாரா?"

"இது என்ன தாத்தா கேள்வி?
நேரத்தை டாக்டரிடம் காண்பிக்க முடியாது. காயத்தைத் தான் காண்பிக்க முடியும்.

 அதைப் பார்த்து தான் மருந்து  கொடுப்பார்."

"'இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்று என்று சொல்லும் போது அவர் பிறந்த நேரத்தைச் சொல்கிறோம்.  .

மரியாளின் வயிற்றில் உற்பவித்தார், பிறந்தார் ஆகியவையே நமது மீட்புக்காக நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியங்கள்.

இயேசு சீடர்களை என்ன சொல்லி உலகெங்கும் அனுப்பினார்?"

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்.

என்று சொல்லி அனுப்பினார்."

",பெந்தேகோஸ்தே திருநாள் அன்று சீடர்கள் என்ன சொல்லி தங்கள் நற்செய்தி அறிவிப்பை ஆரம்பித்தார்கள்?"

"மக்களுக்கு நற்செய்தி அறிவித்ததையும், 

 அவரை யூதர்கள் பாடுகள் படுத்திக் கொன்றதையும்,

இயேசு உயிர்த்ததையும் சொல்லி ஆரம்பித்தார்கள்."

"'இப்போ கவனி .

  இயேசு அறிவித்த நற்செய்தி,
 பட்ட பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை பற்றியே நற்செய்தி அறிவித்தவர்கள் அதிகம் போதித்தார்கள்.

நற்செய்தி நூல்கள் எழுதிய நால்வரில் இருவர் அவரது பிறப்பைப் பற்றி எழுதவே இல்லை.

எழுதிய இருவரும் அவர் பிறந்த ஆண்டு, தேதி பற்றி எழுதவில்லை."

"அப்படியானால் இயேசு எப்போது பிறந்தார் என்பது தெரியவில்லையா"

"'எழுதவில்லை என்று தான் சொன்னேன்.

நற்செய்தி போதிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் ரோமையை ஆண்ட மன்னர்கள் திருச்சபையை அழிப்பது என்று கங்கணம் கட்டி செயல் புரிந்து கொண்டிருந்தார்கள்.

நற்செய்தியை அறிவித்தவர்கள் கிறிஸ்துவுக்காக வேத சாட்சிகளாக மரித்தார்கள்.

ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர்கள் அரசுக்கு தெரியாமல் குகைகளில் ஒழிந்து தான் கிறிஸ்துவை வழிபட்டார்கள்.  

மறைவிடங்களில் தான் திருப்பலி நிறைவேற்றினார்கள்.

கோவில்கள் கட்டவோ, விழாக்கள் கொண்டாடவோ அவர்களால் முடியவில்லை."

"தாத்தா ஒருவர் 300 பக்கங்களில் ஒரு புத்தகம் எழுதினாராம்.

 முன்னுரை மட்டும் 299 பக்கங்கள் எழுதினாராம்.

நீங்கள் சொல்வது அப்படித்தான் இருக்கிறது.

நான் கேட்ட கேள்விக்கு பதில் எப்போது வரும்?"

'"நீ சொல்வது "ஒரு நாள் குழந்தை பெறுவதற்கு குழந்தையை 10 மாதங்கள் சுமந்தாளாம்" என்று சொல்வது போல் இருக்கிறது.

இயேசுவே வெள்ளிக்கிழமை பாடுகள் பட்டு மரிப்பதற்கு 33 ஆண்டுகள் காத்திருந்தார்."

"சரி, சொல்லுங்கள்." 

"'கான்ஸ்டன்டைன் மன்னன் காலத்தில் கிறிஸ்தவத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

பிற மதத்தவர்களும் (Pagans) கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார்கள்.

திருச்சபையில் சேர்வதற்கு முன் சூரிய கடவுளை வணங்கி வந்தார்கள்.

சூரிய கடவுள் பிறந்த நாளாக (Birth day of the Unconquered Sun.)” டிசம்பர் 25ஆம் தேதி அவர்கள் விழா எடுப்பது வழக்கம்.

கிறிஸ்தவர்களாக மாறியபின் சூரிய கடவுளை வழிபடுவதை விட்டு விட்டார்கள்.

இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள்.

சூரிய கடவுள் பிறந்த நாளாகக் கொண்டாடிய டிசம்பர் 25ஆம் தேதியை

 தாங்கள் ஏற்றுக்கொண்ட இயேசுவின் பிறந்தநாளாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.

பிற மதத்தவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதும்,

அவர்களது பழைய தெய்வத்துக்கு விழா எடுத்த நாளை கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடியதும்   

இயேசுவின் நற்செய்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்ட பின்பு  அவர்தான்   உண்மையான கடவுள் என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

உன்னை போல அவர்கள் கி.மு கி.பி என்றெல்லாம் பார்க்கவில்லை.

கிறிஸ்து தங்களுக்காகப் பிறந்தார்,
'
 கிறிஸ்து தங்களுக்காக நற்செய்தி அறிவித்தார் 

கிறிஸ்து தங்களுக்காகப் பாடுகள்கள் பட்டார்,

கிறிஸ்து தங்களுக்காக மரித்தார்,

கிறிஸ்து தங்களுக்காக உயிர்த்தார்

என்பதை ஏற்றுக் கொண்டு 

தங்களது பழைய சமயத்தை கைவிட்டு கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இப்போது நாம் கிறிஸ்து பிறந்த நாளைக்
கொண்டாடவில்லை,

இயேசு மெசியாவாக, அதாவது,
 நமது மீட்பராக பிறந்ததை கொண்டாடுகிறோம்.

We celebrate the birth of our Saviour,
not his birthday.

சர்வ லோகத்திற்கும் சொந்தக்காரரான கடவுள் ஒன்றுமில்லாத ஏழையாகப் பிறந்தார், 

நமக்காக, நமது மீட்புக்காகப் பிறந்தார்.  

நாம் ஏழைகளுக்கு உதவும் போது ஏழையாய் பிறந்த இயேசு பாலனுக்கே உதவுகிறோம்.

 பாவம் இல்லாமல் பரிசுத்தராய் வாழ்ந்தால் இயேசு தருகின்ற 
மீட்பைப் பெறுவோம்.

இவைதான் நாம் தியானித்து நடைமுறைப்படுத்த வேண்டிய
கிறிஸ்மஸ் நற்செய்தி.

பிறந்த தேதியை தியானிக்க வேண்டிய அவசியம் இல்லை." 

" மனம் திரும்பிய பிற மதத்தினர் கொண்டாடிய தேதியை கத்தோலிக்க திருச்சபை ஏன் ஏற்றுக் கொண்டது?"

"'தேதியில் பிரச்சனை ஒன்றும் இல்லை. 

நற்செய்தி அறிவிப்பதின் நோக்கமே அதைக் கேட்போர் மனம் திரும்பி நம்மிடம் வரவேண்டும் என்பது தானே.

நற்செய்தியை ஏற்று 
மனம் திரும்பி 
விசுவசித்து 
ஞானஸ்தானம் பெறுவோர் 
மீட்பு அடைவர் என்றுதான் இயேசு சொல்லியிருக்கிறார்.

மனம் திரும்பி இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களை திருச்சபை  ஏற்றுக்கொண்டது.

ஆகவே இயேசு பிறந்த தேதியைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு

மீட்பு பெறுவதற்கான வாழ்க்கையை வாழ்வோம்.

இயேசுவை வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, December 25, 2022

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(மத்.10:22)

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."
(மத்.10:22)

 இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஆங்கிலக் கால்வாய் (English Channel) உள்ளது.

அதன் வழியாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள தூரம் 21 மைல்கள்.

வசதியுள்ள பெரியவர் ஒருவர் 
பிரான்சிலிருந்து கால்வாய் வழியே நீந்தி இங்கிலாந்து செல்பவர்களுக்கு பெரும் தொகை ஒன்றை பரிசாக அளிக்க உறுதி அளித்தார்.

பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்ட ஒருவர் முழு தூரத்தையும் நீந்தியே கடப்பதாக ஏற்றுக்கொண்டார்.

பிரான்சிலிருந்து நீந்த ஆரம்பித்தார்.

கடலுக்குள் மைல் கல் எதுவும் நாட்டப்படவில்லை.

11 மைல் தூரத்தைக் கடக்க ஆரம்பிக்கும் போது  அவரது நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டது.

நம்பிக்கை இல்லாததால் அவர் இங்கிலாந்து நோக்கி நீந்துவதை நிறுத்தி, பிரான்சுக்கு திரும்பவும் நீந்தி வந்துவிட்டார்.

21 மைல் தூரம் நீந்த வேண்டியவர்
 22 மைல்ல்களுக்கு அதிகமாக நீந்தியும் பரிசு தொகையை பெற முடியவில்லை.

செய்ய ஆரம்பிக்கின்ற வேலையை இறுதி வரை நம்பிக்கையோடு செய்தால் தான் வெற்றி கிடைக்கும்.

நம்பிக்கையை இழக்கும் விநாடியில் வெற்றி கையை விட்டு பறந்து போய்விடும்.

ஆன்மீக வாழ்வில் வெற்றிக்கு உறுதி அளிப்பது இறுதி நேரம் தான்.

எழுபது ஆண்டுகள் நம்பிக்கையோடு வாழ்ந்து விட்டு எழுபதாவது ஆண்டின் இறுதி வினாடியில் ஒருவன்  நம்பிக்கையை இழந்தால் வெற்றி கைக்குக் கிட்டாது.

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல,

இறுதிவரை நம்பிக்கையோடு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். 

வாழ்க்கை என்பது ஒரு ரோஜா மலர்ப் படுக்கை அல்ல.

முட்கள் நடுவில் உள்ள ரோஜா.

  Life is not a bed of roses.
 It is a rose with thorns.

மலரைக் கையில் பறிக்க விரும்பினால் அடியில் உள்ள முள்  குத்துவதைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

தாய் அவளது வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பார்த்து அதற்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்  பேறுகால வேதனையை தாங்கித்தான் ஆக வேண்டும்.

ஆன்மீக வாழ்வில் கிறிஸ்துவோடு பயணிக்கிறோம்.

நமது இதயத்தில் அவரைக் கடவுளாக ஏற்றுக் கொண்டு அவரோடு பயணிக்கிறோம்.

கிறிஸ்து எந்த நோக்கத்தோடு உலகிற்கு வந்தாரோ அதே நோக்கம் தான் நமது ஆன்மீக வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.

வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் இருவர் ஒன்றாக பயணிக்க இயலாது.

கிறிஸ்துவும் நாமும் பயணிக்கும் ஒரே இடம் நமது மீட்புதான்.


ஆன்மீக வாழ்வில் நமது நோக்கமும் மீட்பு அடைவது தான்.

நம்மோடு பயணிக்கும் கிறிஸ்துவின் நோக்கமும்  நம்மை மீட்பது தான்.

நமது இதயத்தில் அவரைக் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அவர் சித்தப்படி வாழ்வதுதான் ஆன்மீக வாழ்வு என்று நமக்கு தெரியும்.

நமது மீட்புக்கு அவர் என்ன வழிமுறைகளை கையாளுகிறாரோ 

அவற்றைத் தான் நாமும் கையாக வேண்டும். அப்போதுதான் நமக்கு மீட்பு கிடைக்கும்.

நமது மீட்புக்காக அவர் நம்மோடு சிலுவையை சுமந்து கொண்டு வருகிறார்,

"எனது சீடனாக வாழ விரும்புகிற எவனும் தனது சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வரவேண்டும்" என்று அவரே கூறியிருக்கிறார்.

ஆகவே நாமும் அவர் நமக்கு தரும்  சிலுவையைச் சுமந்து கொண்டு தான் அவருடன் பயணிக்க வேண்டும்.

நமது சிலுவையை நமது வாழ்நாள் முழுவதும் கடைசி வினாடி வரை சுமக்க வேண்டும்.

விண்ணக மகிமையை நாம் அடைய கிறிஸ்து நமக்கு வந்திருக்கும் சாதனம் சிலுவை.

அவரே சிலுவையை சுமந்து சென்று அதிலே அறையப்பட்டு மரித்ததால்தான்,

மரித்த மூன்றாவது நாள் மகிமையோடு உயிர்த்தெழுந்தார்.

சிலுவை இன்றி மகிமை இல்லை.

அவரோடு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும் நாம்,

நம்மை சுற்றி வாழும் உலகை சார்ந்தவர்கள் அனுபவிக்கும் சிற்றின்ப வாழ்வை கண்டு,

அதில் நாமும் ருசி பார்க்கலாமே என்று ஆசித்து,

நமது சிலுவையை இறக்கி வைக்க எண்ணினால் நாம் கிறிஸ்துவோடு சிலுவையில் மரிக்க விரும்பவில்லை என்று அர்த்தம்.

நாம் சிலுவையை இறக்கி வைத்துவிட்டால் அதன்பின் இயேசு தனியே தான் பயணிப்பார்.

சிலுவை இன்றி நம்மால் மீட்பு பெற முடியாது.

ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்,

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."

பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்திருப்பது 

நமக்காக சிலுவையை சுமப்பதற்காகத்தான்.

அவரது பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாடுவதே ,

''குழந்தை இயேசுவே, உம்மை போலவே நாங்களும் இறுதிவரை நீர் எங்களுக்கு தரும் சிலுவயை உம்மோடு சுமந்து வருவோம்.

உமது சிலுவை எங்கள் பாக்கியம்."

என்று குழந்தை இயேசுவிடம் சொல்வதற்காக தான்.

அவரிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம்.

இனி இறுதி வரை நிலைத்திருந்து அவரோடு நமது சிலுவையை மகிழ்ச்சியுடன் சுமப்போம்.

இறுதியில் விண்ணக வாசல் திறக்கும்.

இயேசுவோடு உள்ளே நுழைவோம்.

ஞாபகத்தில் கொள்ள வேண்டியது,

இயேசு பிறந்திருப்பது கேக் சாப்பிடவோ, பிரியாணி சாப்பிடவோ அல்ல,

நமக்காக சிலுவையைச் சுமந்து,
அதில் அறையப்பட்டு, மரிக்க.

இதை நமது இறுதி வரை நினைவில் வைத்திருப்போம்.

இறுதிவரை நிலைத்துநிற்போம். மீட்புப்  பெறுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, December 24, 2022

கிறிஸ்மஸ் சிந்தனைகள்.

கிறிஸ்மஸ் சிந்தனைகள்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.



  தான் மனித உரு எடுப்பதற்காக பாவ மாசு மருவற்ற அன்னையைத் தேர்ந்து கொண்ட இறைமகன் இயேசு,

வித்தியாசமான வம்ச தலை முறையைத் தேர்ந்து கொண்டார்.
   
மத்தேயு "தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது: " என்று நற்செய்தியை ஆரம்பிக்கின்றார்.

தலைமுறை அட்டவணையை ஆபிரகாமில் ஆரம்பித்து சூசையப்பரோடு முடிக்கிறார்.

சூசையப்பருக்கும், இயேசுவுக்கும் எந்தவித இரத்த சம்பந்தமும கிடையாது.

ஆக, பழைய ஏற்பாடு சூசையப்பரோடு முடிவடைகிறது.

புதிய ஏற்பாடு இயேசுவை கருத்தரித்த அன்னை மரியாளுடன் ஆரம்பிக்கிறது.

சூசையப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் திருமண ஒப்பந்த உறவு மட்டும் உள்ளது.

சூசையப்பரைப் போலவே அன்னை மரியாளும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவள் தான்.

ஆகவே மரியாள் பெற்றெடுத்த இயேசுவும் தாவீது வம்சத்தினர் தான்.

இயேசுவின் அருளால் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த அனைவரும் அன்னை மரியாளின் பிள்ளைகள். .

நமது தலைமுறை உறவு அன்னை மரியாளில் ஆரம்பித்து உலகம் முடியும் வரை தொடர்ந்து விரிந்து கொண்டே செல்லும். 

இந்த தலை முறை உறவு இரத்த சம்பந்தப்பட்டது அல்ல.

இறைவனின் அருள் சம்பந்தப்பட்டது.

ஆபிரகாமையிலிருந்து சூசையப்பர் வரை குறிப்பிடப்பட்டிருக்கிற 
பழைய ஏற்பாட்டு தலை முறை அட்டவணையை வாசிக்கும் போது

 இயேசு பாவிகளை தேடியே உலகிற்கு வந்தார் என்ற உணர்வு நம்மை அறியாமலேயே ஏற்படுகிறது.

'தாவீதின் மகனும்' என்று அட்டவணை ஆரம்பமாகிறது.

தாவீதை பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொண்டால்

ஏன் இயேசு தாவீதின் வம்சத்தில் பிறக்க ஏன் திட்டமிட்டார் என்பது புரியும்.

"யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் "   .(அப்.13:22)

என்று கடவுள் கூறுவதாக புனித சின்னப்பர் கூறுகிறார்.

ஆனால்,
ஊரியாசின் மனைவியைக் கெடுத்து, அவனைக் கொலை செய்வித்த தாவீதின் பாவச்செயல் ஆண்டவருக்கு மனவருத்தம் அளித்ததாக இறைவாக்கு    
(2 சாமு.11:27) கூறுகிறது. 

இயேசுவின் தலைமுறை அட்டவணையில் மத்தேயு, "தாவீதுக்கு சாலமோன் பிறந்தார்" என்று குறிப்பிடாமல்,

"தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் சாலமோன் பிறந்தார்"

என்று குறிப்பிடுகிறார்.

தாவீது செய்த பாவத்தையும்,
உரியாவின் மனைவி செய்த பாவத்தையும் மத்தேயு மறைக்கவில்லை.

இதே தாவீதைத்தான் சின்னப்பர்,

''யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன்."என்று ஆண்டவர் கூறுவதாகக் கூறுகிறார்.

தான் செய்த பாவத்திற்காக தாவீது மனம் வருந்தி அழுது கடவுளிடம் மன்னிப்பு கேட்ட போது கடவுள் அவரது பாவத்தை மன்னித்தார்.

தன் பாவத்தால் ஆண்டவருக்கு மனவருத்தம் அளித்த தாவீது பாவ மன்னிப்பு பெற்றவுடன்

அவருடைய மனத்துக்கு உகந்தவராய் மாறினார்.

 பாவிகளைத் தேடி அவர்களை மன்னிப்பதற்காகவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதை நமக்கு புரிய வைக்கவே,

அவர் மனம் திரும்பிய ஒரு பாவியின் வம்சத்தில் பிறக்க திட்டமிட்டார்.

பாவிகளாகிய நமது பிரதிநிதியாக தாவீது நிற்கிறார். 

அவர் மனம் திரும்பியது போல நாமும் மனம் திரும்ப வேண்டும்.

மனம் திரும்பிய தாவீதின் வம்சத்தில் இயேசு பிறந்தது போல,

மனம் திரும்பி பாவமன்னிப்பு பெற்ற நமது உள்ளத்திலும் இயேசு பிறக்க வேண்டும்.

இதை வலியுறுத்தவே நற்செய்தியாளர் 

"தாவீதின் மகனும்"

என்று தலைமுறை அட்டவணையைத் துவக்குகிறார்.

நமது உள்ளத்தில் இயேசு பிறந்தால் நமக்கும் அவர் மகன் ஆகி விடுகிறார்.

பாவம் இல்லாத தூய உள்ளதோடு நாம் இயேசு பிறந்தநாளை கொண்டாடினால்,

"எனது உள்ளத்தில் பிறந்த இயேசுவின் விழா".

என்று மன மகிழ்ச்சியோடு சொல்லலாம்.

இப்போது குழந்தை இயேசு பேசுகிறார். செவிமடுப்போம்.

"என்னால் படைக்கப்பட்ட அன்பு மக்களே,

உங்களது முதல் பெற்றோரை பாவ மாசு இல்லாத பரிசுத்தர்களாகவே படைத்தேன்.

ஆனால் அவர்கள் என் சொல்லை மறந்து சாத்தானின் சொல்லைக் கேட்டு பாவ குழியில் விழுந்தார்கள்.

 அதோடு மனுக்குலமே விழுந்து விட்டது.

மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டு பரிசுத்தர்களாக மாற்ற 

நான் விண்ணகத்திலிருந்து இறங்கி உங்களை தேடி வந்திருக்கிறேன்.

பாவ மாசு மருவில்லாத அன்னை மரியாளின் வயிற்றில் இருந்து குழந்தையாய் பிறந்த நான்

 பாவிகளாகிய உங்களின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து,

 மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் படுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னிடம் வந்து, உங்களது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று,

பரிசுத்தர்களாக உங்கள் இல்லங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பது என் ஆசை.

அடுத்தவன் மனைவியைக் கெடுத்து, அவனைக் கொலை செய்வித்த மிகப்பெரிய பாவியாகிய 'தாவீதையே மன்னித்த கடவுள் நான்.

நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்களை,
 எத்தனை முறை செய்திருந்தாலும்,

பயப்படாமல் என்னிடம் வாருங்கள்.

நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது பாவத்திற்கான மனஸ்தாபத்தை முன்னிட்டு

 உங்கள் கண்களிலிருந்து வரும் கண்ணீரை மட்டும்தான்.

என் முன்னிலையில் நீங்கள் விடும் கண்ணீர் உங்களது அத்தனை பாவங்களையும் சுத்தமாகக் கழுவி விடும்.

நீங்கள் நான் பிறந்த நாளை விழாவாக கொண்டாடுவது

 உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று பரிசுத்தர்களாக மாறுவதற்காக மட்டுமே.

அதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்.

பிறந்தநாள் பரிசாக நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உங்களது மனஸ்தாபத்தை மட்டுமே.

மாசு மருவற்ற அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்தது போலவே,

பரிசுத்தமான உங்களது உள்ளத்திலும் பிறக்க ஆசைப்படுகிறேன்.

எனது ஆசையை நிறைவேற்றுங்கள்."

குழந்தை இயேசுவின் ஆசையை நிறைவேற்றுவோம்.

அனைவருக்கும் எனது கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.

லூர்து செல்வம்.

Thursday, December 22, 2022

குழந்தாய், என்னை மன்னியும்

குழந்தாய், என்னை மன்னியும்.

"என்ன, அண்ணாச்சி, உங்க மாட்டுத் தொழுவை வாடகைக்கு விட்டு விட்டீர்களோ?"

",இல்லையே, யார் சொன்னா?"

"யாரும் சொல்லவில்லை. நேற்று இரவு உங்கள் தொழுவில் வெளிச்சம் தெரிந்தது.

ஆட்கள் நடமாட்டமும் இருந்தது. அதனால்தான் கேட்டேன்."

",இன்று காலையில் நானே தொழுவிற்குப் போனேன். ஆட்கள் வந்து போயிருப்பது போல் தெரிந்தது.

உள்ளே யாரும் இல்லை.

தொழுவைப் பெருக்கி யாரோ சுத்தம் செய்திருக்கிறார்கள்.

தீவனத் தொட்டியில் ஒரு சிறு துணி கிடந்தது.

யாரோ உள்ளே வாசனைத் திரவியத்தை ஊற்றியிருப்பது போல தொட்டி நறுமணம் வீசியது.

நீங்கள் ஆட்கள் யாரையும் பார்த்தீர்களா?"

"தொழுவுக்குள் போய் யாரையும் பார்க்கவில்லை. 

உள்ளே போய் வந்தவர்களை பார்த்தேன். 

ஆடு மேய்க்கும் இடையர்கள் உள்ளே போனார்கள்.

 சில ஆடுகளும் அவர்களுடன் சென்று கொண்டிருந்தன. "

",அப்போ இடையர் குடியில் போய் போய் விசாரித்தால் தெரியும்."

"போய் விசாரிக்க வேண்டிய அவசியமேயில்லை.

இதோ ஒரு பெரியவர் அங்கிருந்துதான் வந்து கொண்டிருக்கிறார். அவரையே கேளுங்கள்."

",,ஐயா, பெரியவரே கொஞ்சம் நில்லுங்கள். உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."


"சொல்லுங்கள்."

",நேற்று இரவு உங்கள் குடியிலிருந்து யாராவது அதோ தெரிகின்றதே எனது மாட்டுத் தொழுவம், அங்கே வந்து போனார்களா? "

"யாராவது என்ன, நிறைய பேர் போனோம்.

நாங்கள் இரவில் இரவெல்லாம் எங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தபோது

ஆண்டவருடைய தூதர் எங்களுக்குத் தோன்றி, 

  "இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர், மெசியா பிறந்துள்ளார். 

குழந்தையை துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்"
என்றார்.

நாங்கள் எல்லோரும் முன்னிட்டி உள்ள மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று,

 தீவனத் தொட்டியில் படுத்திருந்த மெசியாவாகிய குழந்தையை ஆராதித்தோம்.

அவர் நமது மீட்பிற்காக மனிதனாய் பிறந்த கடவுள்.

அவரை பெற்றெடுத்த அன்னையும், வளர்க்கப் போகிற தந்தையும் உடன் இருந்தார்கள்."

"ஏன் வளர்க்கப் போகிற என்கிறீர்கள்?"

"மீட்பரைப் பெற்றெடுத்த தாய் ஒரு கன்னி. இறைவாக்கு அப்படித்தானே சொல்கிறது."

"அவர் ஏன் மாட்டுத்தழுவத்தில் பிறந்தார்?"

"ஊரில் வீடுகளிலும் சத்திரத்திலும் அவர்கள் தங்க இடம் கிடைக்கவில்லை."

"நான் காலையில் தொழுவத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லையே?"

''உலகை படைத்த கடவுள் மாட்டுத் தொழுவத்தில் மனிதனாக பிறந்திருக்கிறார், 

அவரை அங்கே சென்று பார்த்த நாங்கள் 

அவரை அங்கேயே விட்டுச் செல்லும் அளவிற்கு நாங்கள் கல்நெஞ்சக் காரர்கள் அல்ல.

 அவர் பிறக்க தங்கள் வீட்டில் இடம் கொடுக்காதவர்கள் தான் கல்நெஞ்சக் காரர்கள்."

"நான் பாவி. கல்நெஞ்சக் காரன்." 

"ஏன், உங்கள் வீட்டில் தங்க இடம் கேட்டார்களா?"

"ஆமா, ஐயா. மாலையிலே வந்து தங்க இடம் கேட்டார்கள். ஏற்கனவே குடிக் கணக்கு கொடுக்க வந்த உறவினர்கள் பலர் எங்கள் வீட்டில் இருந்தார்கள்.

ஆனாலும் நிறை மாத கர்ப்பிணி தங்க இடம் கொடுத்திருக்க வேண்டும்.

கர்ப்பத்தில் இருந்தவர் கடவுள் என்ற உண்மை எங்களுக்குத் தெரியாது போய்விட்டது.

இப்போது அதை உங்கள் வாயிலிருந்து கேட்கும்போது என் உடல் நடுங்குகிறது.

அவர்களைப் பார்த்து, கடவுளாகிய குழந்தையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்."

"ஐயா, கேளுங்கள். பிறந்தது கடவுளாய் இருப்பதினால் மட்டுமல்ல,

சாதாரண ஏழை மனிதக் குழந்தையாய் இருந்தால் கூட நீங்கள் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் தான்.

எல்லோரையும் மீட்கத் தான் மீட்பர் பிறந்திருக்கிறார்."

",ஐயா, தாயும் பிள்ளையும் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள். நான் அவர்களை உடனடியாகப் பார்க்க வேண்டும்."

"அவர்கள் எங்கள் குடியில் தான் இருக்கிறார்கள்.

போய்ப் பாருங்கள்.

கடவுள் குழந்தையிடம் மன்னிப்பு கேளுங்கள்.

அவர் கட்டாயம் உங்களை மன்னிப்பார்.

மன்னிப்பதற்காக தானே மனிதனாகப் பிறந்திருக்கிறார்."

",உடனே போகிறேன்."

இடையர் குடிக்குப் போகிறார்.

ஒரு மரத்தடியில் சிறுவர்கள் குழந்தை இயேசுவுடன் விளையாடி கொண்டிருக்கின்றார்கள்.

",தம்பி நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த சிறு குழந்தை யார்?"

"இவர்தான் எங்களை மீட்க மனிதனாய் பிறந்த இறைமகன்.

பிறப்பதற்கு நகரில் இடம் கிடைக்காமல் நகருக்கு வெளியே உள்ள மாட்டுத் தொழுவில் பிறந்தார்.

நாங்கள் எங்கள் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டோம்.

குழந்தை அழகாக இருக்கிறார்."

",தம்பி, குழந்தையை என்னிடம் கொஞ்ச நேரம் தருகிறாயா?"

"இதோ பாருங்கள், அவர் உங்களைப் பார்த்து கையைப் போடுகிறார்.

எடுத்துக் கொஞ்சுங்கள்."

"கடவுளே, என் அன்பு தெய்வமே, நீங்கள் எனது வீட்டிற்கு வந்து பிறக்க இடம் கேட்டபோது கல்நெஞ்சனாய் நான் கொடுக்க மறுத்து விட்டேன்.

நீங்கள் என் மீது இரக்கப்பட்டு எனது மாட்டுத் தொழுவிலேயே பிறந்திருக்கிறீர்கள்.

 தயவுசெய்து என்னை மன்னியும், தேவனே.

இன்றிலிருந்து என் வாழ்நாள் முழுவதும் என்னிடம் வந்து யார் என்ன உதவி கேட்டாலும் கட்டாயம் செய்வேன். உங்களிடம் உறுதி அளிக்கிறேன்.

நீங்கள் என்னை மன்னித்ததன் அடையாளமாக எனது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுங்கள்."

குழந்தை இயேசு புன் முறுவலுடன் அவர் கன்னத்தில் முத்தமிடுகிறார்.

அவரும் குழந்தையின் கன்னத்தில் முத்தமழை பொழிகிறார்.

"தம்பி குழந்தையின் பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள்?"

"வாருங்கள், அழைத்துச் செல்கிறோம்."

"அம்மா, கடவுளின் தாயே, நீங்கள் எனது வீட்டில் வந்து தங்க இடம் கேட்ட போது கொடுக்க மறுத்தமைக்காக  மனம் வருந்துகிறேன்.

 என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

என்னை மன்னிக்கும் படி  உங்கள் தெய்வ மைந்தனிடம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் வர மறுக்கின்றன.

உங்கள் கணவருடனும் குழந்தையுடனும் எனது இல்லத்திற்கு வர வேண்டும்."

"கவலைப்படாதீர்கள், ஐயா. மன்னிப்பதற்காகவே மனிதனாகப் பிறந்த தெய்வக் குழந்தை. 

அவர் உங்களை ஏற்கனவே மன்னித்திருப்பார்.

ஒரு நாள் உங்கள் இல்லத்திற்கு வருகிறோம்."
*           *         *           *            *        *
நமது உள்ளமாகிய இல்லத்தில் பரிசுத்தராகிய குழந்தை இயேசு வர வேண்டுமென்றால்,

நமது உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

முதலில் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து குழந்தை இயேசுவின் மன்னிப்பை பெறுவோம்.

உள்ளத்தை பரிசுத்தமாக்குவோம்.

அதன்பின் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுவோம்.

அதுவே நம்மை மீட்க  குழந்தையாய்ப் பிறந்திருக்கும் 

இறைமகன் இயேசுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

லூர்து செல்வம்

இரண்டு ஆடுகள் பேசிக் கொள்கின்றன. என்னவாய் இருக்கும்? கேட்போமா?

இரண்டு ஆடுகள் பேசிக் கொள்கின்றன. என்னவாய் இருக்கும்? கேட்போமா?


",மேமே......."

"என்னடா?"

",கிறிஸ்மஸ் வரப்போகுது, தெரியாதா?"

"தெரியுமே. நாம் அதற்காக தானே தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

நம்மை வாங்குவதற்கு எத்தனை பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பாத்தியா?

நாம் இல்லாவிட்டால் கிறிஸ்துமஸ் சாப்பாடு இல்லையே."

",நாம் யார் தெரியுமா?"

"அதுவும் தெரியுமே. இயேசு பிறந்த போது நம்மை வளர்ப்பவர்களுக்குத் தான் முதல் முதல் விண்ணிலிருந்து இயேசு பிறந்த செய்தி கொடுக்கப்பட்டது.

இயேசு பாலனை முதல் முதல் பார்க்கச் சென்றவர்களும் நம்மை வளர்க்கின்ற இடையர்கள் தான்.

நமது முன்னோர்களாகிய ஆடுகள் தான் அவர்களோடு மனிதனாய் பிறந்த கடவுளை பார்க்கச் சென்றன.

இயேசுவைப் பெற்ற தாய்க்குக் கூட நமது முன்னோர்கள் பால் கொடுத்து உதவியிருக்கிறார்கள்."

",அது மட்டுமல்ல. இயேசு கூட தன்னை ஒரு நல்ல ஆயனுக்கும் தன்னை பின்பற்றுகிறவர்களை ஆடுகளுக்கும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

அருளப்பர், இயேசுவை முதல் முதலில் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் போது,

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."

என்று அவரை நம்மோடு ஒப்பிட்டு தான் பேசியிருக்கிறார்.

இன்று கூட கிறிஸ்தவர்கள் அவர்களுடைய வழிபாட்டின் போது,

"இதோ இறைவனுடைய ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவங்களை போக்க வந்தவர்."

என்று இயேசுவை நம்மோடு ஒப்பிடுகிறார்கள்."



",இவ்வளவு பெருமை வாய்ந்த 
  நம்மில் எத்தனை லட்சம் பேர் உலகம் பூராவும் கொல்லப்பட போகிறோம் தெரியுமா? 

அதுவும் இயேசு பிறந்த திருநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதற்காக!

இந்த மனிதர்களை நினைத்தால் எனக்கு சிரிப்பும் வருகிறது, அழுகையும் வருகிறது.

இறைவனின் ஆட்டுக்குட்டி பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஆட்டுக்குட்டிகளையே கொல்லப் போகிறார்கள் என்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

மனிதர்களுடைய பரிதாபகரமான நிலையை நினைத்தால் அழுகையும் வருகிறது."

"என்ன பரிதாபகரமான நிலை?"

",இயேசு உலகில் எதற்காக மனிதனாகப் பிறந்தார்?"

"உலகின் பாவங்களைப் போக்க பாடுகள் பட்டு தன்னையே பலியாக்குவதற்காக உலகில் மனிதனாய் பிறந்தார்."

",தங்களுக்காக பலியாகிய இயேசுவுக்காக தங்களையே 
பலியாக ஒப்புக் கொடுப்பதற்கு பதிலாக,

ஒரு பாவமும் அறியாத நம்மை பலியாக்கி பிரியாணி போட்டு சாப்பிடுகிறார்களே 


இதைவிட வேறு எந்த பரிதாபம் இருக்க முடியும்?"


"ஒரு காலத்தில் நம்மை கடவுளுக்கு பலியாகக் கொடுத்தார்கள்.

அதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

ஆனால் மனிதனாகப் பிறந்த கடவுள் இயேசு தன்னையே தன் தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்தார்.

இந்த மனிதர்கள் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். சந்தோசம்.

இவர்களும் கிறிஸ்துமஸ் அன்று கோவிலுக்குப் போய் மகன் இயேசுவை தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்து விட்டு,

அவரையே தங்கள் ஆன்மீக உணவாக உண்டு விட்டு,

வீட்டுக்கு வந்து நம்மை தங்களுக்குப் பலியாக்குகிறார்கள்.

இயேசு உண்ணவும், குடிக்கவுமா உலகுக்கு வந்தார்?

மக்களுக்காகப் பாடுகள் படவும் மரிக்கவும் தானே உலகுக்கு வந்தார்!

அவருக்கு நன்றியாக,

 அவர் கூறியது போல

 உணவில்லாத ஏழைகளுக்கு உணவு கொடுத்து உதவுவதற்குப் பதிலாக,

மட்டன் பிரியாணி போட்டு தங்கள் வயிற்றையே நிரப்பி கொள்கிறார்கள்.

அதற்கு நாம் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது."

",கிறிஸ்மஸ் விழாவின் போது 
கிறிஸ்து மக்களுக்காகப்  பிறந்தது போல மக்கள் மற்றவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்.

உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுக்கலாம்.

இருப்பிடம் இல்லாதவர்களுக்கு தங்க இடம் கொடுக்கலாம்.

சுகம் இல்லாதவர்களுக்கு மருந்து வாங்கிக் கொடுக்கலாம்.

இவற்றைச் செய்தால் பிறந்த இயேசு மகிழ்ச்சி அடைவார்.

அதை விட்டுவிட்டு தங்கள் வயிற்றை நிரப்புவதிலே  குறியாக உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை."

"ஏ, இங்கே பார், நம்மை விலை பேசி முடித்து விட்டார்கள்.

25 ஆம் தேதி கிறிஸ்மஸ் அன்று கசாப்பு கடையில் இருப்போம்.

எதிரிகளை நேசியுங்கள் என்று கிறிஸ்து மக்களுக்கு போதித்திருக்கிறார்.

 கசாப்புக்கடையிலிருந்து 
நம்மை வாங்கி பிரியாணி போடுபவர்கள் தான் நமது எதிரிகள்.

அவர்களது வயிற்றை நிரப்புவோம்.

என்றாவது ஒருநாள் அவர்கள் மனம் திருந்துவார்கள்."

லூர்து செல்வம்.

Wednesday, December 21, 2022

"அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே."(லூக்.1:50)



"அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே."
(லூக்.1:50)

" தாத்தா, யாராவது தாங்கள் நேசிப்பவர்களைப் பார்த்துப் பயப்படுவார்களா?"

", பயப்படுவார்களே!"

"அது எப்படி.    நேசிப்பவர்களைப் பார்த்து ஏன் பயப்படுவார்கள்?"

",நீ உன் அப்பாவை பார்த்து பயப்படுவாயா?"

"நான் ஏதாவது தப்பு செய்தால் பயப்படுவேன்."

",தப்பு செய்தால் பயப்படுவாயா? தப்பு செய்ய பயப்படுவாயா?"

"இரண்டும் ஒன்றுதானே, தாத்தா.

தப்பு செய்தால் அடி விழுமே என்று பயப்படுவேன்.

அடி விழுந்து விடக்கூடாது என்று தப்பு செய்ய பயன்படுவேன்."

",அப்போ அப்பாவை நினைத்தால் அடி ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகிறதா?

நீ அவருடைய அன்புள்ள மகன் என்பது ஞாபகத்துக்கு வரவில்லையா?"

"இப்போ புரியுது.

அடி விழுந்து விடுமே என்றும் பயப்படலாம்.

தந்தையின் அன்புக்கு விரோதமாக எதுவும் செய்து விடக் கூடாது என்றும் பயப்படலாம்.

வேலைக்காரன் அடிக்குப் பயப்படுவான்.

மகன் அன்பின் காரணமாக பயப்படுவான்."

",இப்போ உன் கேள்விக்கு நீயே பதில் சொல்.

யாராவது தாங்கள் நேசிப்பவர்களைப் பார்த்துப் பயப்படுவார்களா?"

"பயப்படுவார்கள்.

ஆனாலும் இன்னும் புரியாத ஒன்று இருக்கிறது.

 அன்னை மரியாள்,

"அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே."

என்று சொல்கிறாள்.

பயப்படுவோர் மீது கடவுளுடைய இரக்கம் எப்போதும் இருக்கும் என்று சொல்கின்றாளே,

பயப்பட்டால் தான் ஆண்டவர் எப்போதும் நம் மீது இரங்குவாரா?

பயப்படாதவர் மீது இரக்கம் காட்ட மாட்டாரா?"

",கடவுள் அனைவர் மீதும் இரக்கமாக இருக்கிறார்.

ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் நடத்துகிறார். எல்லோரும் வெற்றி பெருகிறார்களா?"

"ஆசிரியர் நடத்துகிற பாடத்தை கஷ்டப்பட்டு படிக்கிறவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.

படிக்காதவர்கள் வெற்றி பெற முடியாது."

",வெற்றியின் காரணம் ஆசிரியரா? மாணவர்களா?"

"இருவரும் தான்"

",தோல்வியின் காரணம்?"

''மாணவர்கள் மட்டுமே."

",ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது போல,

இறைவன் அனைவருக்கும் இரக்கம் காட்டுகிறார்.

ஆனால் அவருக்கு அஞ்சி நடப்பவர்கள் அவரது இரக்கத்தால் பயன் பெறுகிறார்கள்.

அஞ்சாதவர்கள் பயன்படுத்துவதில்லை.

சம்மனசின் மீது இரக்கமாக இருக்கும் கடவுள்,

சாத்தான் மீதும் இரக்கமாக இருக்கிறார்.

கடவுளின் இரக்கத்தை சம்மனசு ஏற்றுக்கொள்கிறார்,

 சாத்தான் ஏற்றுக் கொள்வதில்லை.

அதேபோல கடவுள் நல்லவர் மீதும் இரக்கமாக இருக்கிறார்,

 கெட்டவர்கள் மீதும் இரக்கமாக இருக்கிறார்.

 நல்லவர்கள் அவரது இரக்கத்தை பயன்படுத்தி, பயன் பெறுகிறார்கள்.

 கெட்டவர்கள் அதை பயன்படுத்துவதில்லை, பயன் பெறுவதும் இல்லை.

 பயன் பெறாததற்கு காரணம் அவர்கள் தான்.

கடவுளுடைய இரக்கம் அவருக்கு  அஞ்சுவோர் மீது உள்ளது என்றால்,

கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்கள் அவருடைய இரக்கத்தால் பயன் பெறுகிறார்கள் என்று பொருள்.

நீ புரிந்து கொண்டதற்கு அடையாளமாக ஒரு உதாரணம் கொடேன்."

"இரண்டு பேர் ஒரு பாவச் சோதனையில் மாட்டிக் கொண்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சோதனை எல்லாருக்கும் வரும்.

இயேசுவைக் கூட சாத்தான் சோதித்தது.

சோதனைகளில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர் கடவுள் மீது உண்மையான அன்பு உள்ள நல்லவர்.

அவர் சோதனைக்கு இடம் கொடுத்தால் கடவுளுக்கு எதிராக செயல்பட நேரிடும் என்று அஞ்சி,

சோதனையில் வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்றது ஒரு புண்ணியம்.

ஆனால் அடுத்தவர் கடவுள் மீது அன்பு இல்லாத கெட்டவர்.

இரக்கம் உள்ள கடவுளுக்கு அஞ்சாதவர்.

சோதனைக்கு இடம் கொடுத்து அதில் தோல்வியும் கண்டார்.

சோதனையில் அவர் கண்ட தோல்வி பாவம்.

பானையில் நிறைய தண்ணீர் இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

குடித்தவர்களுக்கு தாகம் தீரும்,

குடியாதவர்களுக்கு தாகம் தீராது.

கடவுளுடைய இரக்கம் கடலானால்
கடலுக்குள் இறங்குபவர்கள் அதில் நீந்தலாம்.

கரையை விட்டு இறங்காதவர்களுக்கு 

கடலினால் என்ன பயன்?"

",கடவுளுக்கு அஞ்சாமல் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் கடவுளின் இரக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் வாழ்வதால் பயன்பெறுவதில்லை.

ஆனால் கடவுள் தன் இரக்கத்தால் கொடுக்கும்    நற்செய்தியின் மூலம் அவரை அறிந்து,

மனம் திரும்பி,

கடவுள் அருளால் அவருக்கு அஞ்ச ஆரம்பித்தால்,

அவருடைய இரக்கம் அவர்களது உள்ளத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

அவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு வருத்தப்பட்டு

கடவுளிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

கடவுள் தனது இரக்கம் மிகுதியால் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார். 

மனம் திரும்பிய பின் அவர்கள் பயத்துடனும், பக்தியுடனும் கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

பயம் என்றால் அச்சம்.
பக்தி என்றால் அன்பு

ஆன்மீக வாழ்வில் நாம் நடக்க அச்சம், அன்பு என்ற இரண்டு கால்களும் வேண்டும்.

இறையன்பின் குழந்தை தான் இரக்கம்.

கடவுளைப் பற்றிய ஞானம் உள்ளவர்களே அவருடைய இரக்கத்தைப் பற்றி அறிவார்கள்.

ஞானத்திற்கு ஆரம்பமே தெய்வ பயம் தான்.

தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். (பழமொழி.9:10) என்பது இறைவாக்கு,

கடவுளுக்கு அஞ்சி நடப்போம், அவரது இரக்கத்தால் பயன் பெறுவோம்."

லூர்து செல்வம்.

Monday, December 19, 2022

வீரமுள்ள தாய்.(தொடர்ச்சி)

வீரமுள்ள தாய்.
(தொடர்ச்சி)

",மனிதர்களுடைய பாவங்களுக்காக கஷ்டங்கள் பட்டு மரிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறீர்கள்.

மகன் கஷ்டப்படுவதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  

ஆகையினால் தான் சொல்கிறேன் உங்களுடைய வாழ்க்கை வியாகுல உணர்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

நீங்கள் ஒரு வியாகுலத்தாய்.

மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக வியாகுலங்களை அனுபவிக்கப் போகும் தாய்.

அம்மா, நீங்கள் பெற்றெடுத்திருப்பது கடவுள் என்று நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன்.

உங்கள் வயிற்றில் உருவானது கடவுள் என்று உங்களிடம் சொன்னது யார்?

சந்தேகப்பட்டு இக்கேள்வியை கேட்கவில்லை. விவரங்களை தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்."

"கடவுளின் தூதர் எனக்குத் தோன்றி,

"உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். 

அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

 அவர் மேன்மை மிக்கவராயிருப்பார்.

 உன்னதரின் மகன் எனப்படுவார். 

பரிசுத்த ஆவி உம்மீது வருவார்.

 உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும்.

 ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்."

என்று சொன்னார்.

நானும் அவர் சொன்னதை விசுவசித்து ஏற்றுக்கொண்டேன்."


",ஆக நமது ஆன்மீக வாழ்வு விசுவசித்து ஏற்றுக் கொள்வதில் தான் தொடங்குகிறது."

"விசுவசித்து ஏற்றுக் கொண்டதை செயல்படுத்தும் போது தான் அது ஆன்மீக வாழ்வாக மாறுகிறது.

ஒரு அடிமை எவ்வாறு அவனது தலைவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்லாமல்,

அவர் சொன்னபடி செய்கிறானோ,

அவ்வாறே, நானும் என் மகன் வழி காட்டுகிறபடி அப்படியே நடக்கிறேன்.

எனது கணவர் எனது உண்மையான துணைவராக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

கடவுளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் உண்மையாக விசுவாச வாழ்வு."

'', அம்மா, இங்கே பாருங்கள், ஆடுகள். 

தெய்வக் குழந்தையைப் பார்க்க ஆடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

தாத்தா, இங்கே பாருங்கள். ஆடுகள் எப்படிக் குழந்தையை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றன என்று பாருங்கள்!

இதோ ஆடு மேய்ப்பவர்களும் வந்து விட்டார்கள்."

"அம்மா, "இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள்.

 இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்"

என்று வான தூதர்கள் மூலம் செய்தி கிடைத்தது.

அவரைப் பார்த்து ஆராதிக்க வேண்டும் என்று இடையர்களாகிய நாங்கள் வந்திருக்கிறோம். 

வாருங்கள் குழந்தையின் முன் முழங்கால்படியிட்டு அவரை ஆராதிப்போம்."

"அம்மா, இதோ ஆட்டின் பால்.

பால் குழந்தைக்குத் தான். ஆனால் அது உங்கள் மூலமாகத்தான் செல்ல வேண்டும். தாய் மூலம் செல்லும் எதையும் மகன் ஏற்றுக்கொள்வார்.

ஆகவே நீங்கள் பாலை குடியுங்கள் அம்மா"

"மக்கள் சொல்வதைத் தாய் மறுப்பாளா? தாருங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.

உங்கள் விருப்பப்படி அது என் மூலம் என் மகனிடமே சென்று சேரும்."

"அம்மா பேறுகாலத்திற்காக தங்குவதற்கு வேறு நல்ல இடம் கிடைக்கவில்லையா?"

"கடவுள் கொடுத்த இடம் எந்த இடமாக இருந்தாலும் அது நல்ல இடம்தான்."

"கடவுள் வேறு இடத்தைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?"

"நான் ஆண்டவருடைய அடிமை. அவர் எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்."

"அம்மா, கடவுள் அனுப்பிதான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.

குழந்தையை ஆராதித்து விட்டு,

 இங்கேயே விட்டு சென்றால் கடவுள் மேல் நாங்கள் கொண்ட அன்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

ஆகவே எங்களோடு வாருங்கள்.

வீட்டில் உங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் கிடைக்கும்."

",அம்மா, இவர்கள் சொல்வதும் சரிதான். தாத்தாவும் நீங்களும் குழந்தையும் இவர்களோடு அவர்கள் காட்டும் வீட்டுக்கு செல்லுங்கள்."

"யார் இந்த பையன்? உங்களை அம்மா என்கிறான். உங்கள் கணவரைத் தாத்தா என்கிறான்."

"அண்ணாச்சி "யார் நீ?" என்று என்னிடம் கேளுங்கள். சொல்கிறேன்."

"யாரப்பா நீ?"

"நான் ஒரு பையன். வயது பத்து. மாட்டுத் தொழுவம் நான் இரவில் தங்கும் இடம்."

"உன் பெயர்?"

"இதுவரை என்னை யாரும் பேர் சொல்லிக் கூப்பிட்டதில்ல. 

எனக்கு பெயர் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது."

"அனாதை போலிருக்கிறது."

"அவன் அனாதை இல்லை. ஆண்டவருடைய பிள்ளை.

நாங்கள் உங்களோடு உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்றால் அவனும் நம்மோடு வர வேண்டும்." 

"அம்மா, அவனை அனாதை என்று சொன்னதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.

 இனிமேல் அவன் எங்களது சகோதரன். 

அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள் தான்."

",அம்மா, கடவுளை ஏற்றுக் கொள்கிற அனைவரும் அவரின் தாயை தங்கள் தாயாக ஏற்றுக் கொள்கிறார்கள், பார்த்தீர்களா?

நீங்கள்தான் உண்மையான தாய்.

அம்மா, அதோ பாருங்கள். இடையர்குடி பெண்களும் வருகிறார்கள்."

"அது எப்படித் தம்பி உனக்கு தெரியும்?"

",உங்களை தொடர்ந்து வருபவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?

இவர்கள் குழந்தையின் மேல் முத்த மழை பொழிவதைப் பார்த்தால் பெத்லகேம் நகரே தண்ணீருக்குள் மூழ்கிவிடும் போல் இருக்கிறது."

"நாங்கள் குழந்தையை எடுத்துக் கொள்கிறோம். அம்மாவும் அப்பாவும் எங்களுடைய வாருங்கள்."

",அம்மாவை பார்த்ததும் அனைவருக்கும் கடவுளின் மேல் பாசம் வந்துவிட்டது."

"தம்பி, அது அப்படி அல்ல.
கடவுளைப் பார்த்ததும் அவரது அம்மாவின் மேல் எல்லோருக்கும் பாசம் வந்துவிட்டது. அதுதான் உண்மை."

", அம்மா, அம்மா குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த அம்மா ஓடுகிறார்கள்.

வாருங்கள் எல்லோரும் அவர்கள் பின்னாலே போவோம்.

மகன் இருக்கும் இடம் தாய் இருக்கும் இடம்.

தாய் இருக்கும் இடம் மக்கள் அனைவரும் இருக்கும் இடம்.

தாயைப் பின்பற்றி மகனிடம் போவோம்.

அனைவரும் வாருங்கள்."

லூர்து செல்வம்.

வீரமுள்ள தாய்.

           வீரமுள்ள தாய்.



",தாத்தா,...."

"வாப்பா. யாரப்பா நீ? இந்த நள்ளிரவில் இங்கே?"

",ரொம்ப, நன்றி, தாத்தா."

"நன்றி எனக்கா? நான் உனக்கு ஒரு உதவியும் செய்யவில்லையே. எதற்காக நன்றி?"

'',என்னை யார் என்று அன்புடன் விசாரித்த முதல் ஆள் நீங்கள்தான். அதற்காகத்தான் நன்றி.

யார், தாத்தா, நீங்க எல்லாம்? குழந்தையை மாடுகளின் தீவன தொட்டியில் 
கிடத்தியிருக்கிறீர்கள்.

இப்பொழுதுதான் பிறந்த குழந்தை மாதிரி தெரிகிறது."

"மாதிரி இல்லை. குழந்தை பிறந்து ஒரு சில நிமிடங்கள் தான் ஆகின்றன."

",அம்மா, உங்களை நான் அம்மா என்று அழைக்கலாமா?"

"அதுதான் அழைத்து விட்டாயே. அதை இனிமேல்தான் என் மகனுக்கே நான் சொல்லிக் கொடுக்க வேண்டும்."

",பிறப்பதற்கு முன்பே நீங்கள் யார் என்று அவருக்கு தெரியும். உங்கள் வயித்தில் பத்து மாதங்கள் இருந்திருக்கிறாரே.

பார்ப்பதற்கு தெய்வீக குழந்தை போல் தெரிகிறது. நான் அவரை கையில் எடுத்து ஒரு முத்தம் கொடுக்கலாமா?"

"தாராளமாக. தெய்வீக குழந்தை போல் அல்ல. 

தெய்வீகக் குழந்தையேதான்.

உனது ஆசை தீர எத்தனை முத்தங்கள் வேண்டுமானாலும் கொடு."

",எத்தனை முத்தங்கள் கொடுத்தாலும் எனது ஆசை தீராது அம்மா.

எனக்கு பத்து வயது ஆகிறது. இதுவரை எனக்கு யாரும் முத்தம் கொடுத்ததாக ஞாபகம் இல்லை."

"உனது அம்மா?"

",என்னை பெற்றவளை நான் பார்த்ததில்லை. நான் ஒரு அனாதை.

தெய்வீக குழந்தையை முத்தம் கொடுக்க பாக்கியம் பெற்ற அனாதை."

"அனாதை என்று சொல்லாதே. நீ கையில் வைத்திருப்பது உன்னை படைத்த கடவுள்."

",என்னம்மா சொல்லுகிறீர்கள்? இது கடவுளா? நீங்கள் பெற்ற குழந்தை தானே?"

"கடவுளைக் குழந்தையாக பெற பாக்கியம் பெற்றவள் நான். 

நீ தெய்வீக குழந்தை என்று சொன்னாய்.

குழந்தையாய்ப் பிறந்த தெய்வம்."

"மேரி, அவன் சின்னப் பையன். 
நீ சொல்வதெல்லாம் அவனுக்குப் புரியுமா?"

",கவலைப் படாதீங்க, தாத்தா. அம்மா சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

 ஏற்றுக்கொள் என்று இறைவனே என் உள்ளத்தில் பேசுவது போல் இருக்கிறது.

அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்."

"மகனே, விசுவாசம் மனிதன் சொல்லி வருவதல்ல.

அது இறைவனுடைய நன்கொடை.

அந்த நன்கொடையை உனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்."

",, தாத்தா உங்களுக்கு யார் ?"

" எனக்குக் கணவர். ஆனால் குழந்தைக்கு அப்பா அல்ல.

எனது கன்னிமைக்கு பாதுகாவலாகவும், குழந்தையை வளர்ப்பதற்காகவும் கடவுளால் நியமிக்கப்பட்டவர்."

", அம்மா, "இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்: அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்: "
(இசை. 7:14)

என்ற இறைவாக்கில் கூறப்பட்டிருக்கும் கன்னிப்பெண் நீங்கள் தானோ?"

"பார்ப்பதற்கு படிக்காதவன் போல் தெரிகிறது.

 எப்படி வேதாகம வசனம் உனக்குத் தெரிந்தது?"

",வேதாகம வசனம் தெரிய படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அம்மா.

படித்தவர்கள் சொன்னதை நம்பத் தெரிய வேண்டும்.

இது தொழுகை கூடங்களில் நான் கேள்விப்பட்ட வசனம்.

செயல்பாட்டுக்கு வந்த அந்த வசனத்தை இப்பொழுது அனுபவிக்கிறேன்.

அம்மா, உங்களுக்கும் குழந்தைக்கும் நன்றி சொல்ல வேண்டும், அடியேனின் இல்லத்திற்கு வந்திருப்பதற்காக."

" இந்த மாட்டுத் தொழுவம் உனது இல்லமா?"

",அம்மா நான் ஏற்கனவே சொன்னது போல

 எனது அப்பாவையோ அம்மாவையோ நான் பார்த்ததில்லை.

 சொந்தமாக வீடு வாசல் ஒன்றுமில்லை.

 பகலில் எங்கேயாவது யாருக்காவது எனக்குத் தெரிந்த வேலையை செய்து கொடுத்துவிட்டு, சாப்பாட்டை சம்பளமாக பெறுவேன்.

 இரவில் படுத்துக்கொள்ள இங்கே வருவேன்.

 மாட்டு தொழுவம் யாருக்கு சொந்தமானதோ எனக்கு தெரியாது. 

ஒன்றுமே சொந்தமில்லாதவனுக்கு எல்லாமே சொந்தம்.

நான் படுக்க வரும் இந்த மாளிகைக்கு இன்று என்னை படைத்தவர் வந்திருக்கிறார் என்றால் நான் பாக்கியவான்."

"இது உனக்கு மாளிகையா?"

",நீங்கள் குழந்தையோடு தங்குமிடம் மாட்டுத் தொழுவாக இருந்தாலும் அது மாளிகை தான்.

அம்மா, நீங்கள் எப்போதுமா இந்த தொழுவத்தில் தங்கப் போகிறீர்கள்?"

"மகனே, தான் பிறப்பதற்கு இந்த இடத்தை தேர்ந்தெடுத்த கடவுள் வளர்வதற்கு எந்த இடத்தை தேர்ந்தெடுப்பாரோ அங்கு போவோம்."

",உங்களுக்கு சொந்தமாக வீடு இல்லையா?"

''இருக்கிறது. கலிலேயாவில் உள்ள நாசரேத்தில் எங்களுக்கு சொந்தமான ஒரு வீடு இருக்கிறது.

ஆனால் அங்கு பிறக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிடவில்லையே.

நமது ஒவ்வொரு வினாடி வாழ்க்கையையும் திட்டமிடுபவர் அவர்தான்.

வாழ்க்கையை அவர் கையில் ஒப்படைத்து விட்டு அவர் காட்டுகிற வழியில் வாழ்வதுதான் நமது கடமை."


",நமது ஒவ்வொரு வினாடி வாழ்க்கையையும் திட்டமிடுபவர் அவர்தான் என்கிறீர்களே.

அப்படியானால் என் வாழ்க்கையையும் திட்டமிடுபவர் அவர் தானே"

"ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

",பெற்றோர், உறவினர், வீடு வாசல் இல்லாத அனாதையாக நான் வாழ வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டு விட்டாரே என்று மனதில் தோன்றியது.

ஆனால், அவரே பிறக்க சாணி நாற்றம் மிக்க ஒரு மாட்டுத் தொழுவத்தை தேர்ந்தெடுத்திருக்கிறாரே என்பதை எண்ணிப் பார்க்கும்போது,

என்னை அவர் அளவிற்கு மேன்மைப்படுத்தியிருக்கிறார் என்பது புரிகிறது.

அவர் தன்னை நேசிப்பது போல் என்னையும் நேசிக்கிறார் என்பதும் புரிகிறது.

இந்த மாட்டுத் தொழுவம் என்னைக் கடவுளின் நண்பன் ஆக்கிவிட்டது."

"கன்னி நான் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்திருப்பது எதற்காக என்பதை நீ அறிந்தால்,

உனது இன்றைய நிலையை அறிந்து மகிழ்ச்சி அடைவது மட்டுமல்ல,

இதைவிட கஷ்டமான ஒரு நிலையை அடைய ஆசைப்படுவாய்."

",என்னம்மா சொல்லுகிறீர்கள்?"

"நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்: நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது." (இசை. 53:5) 

என்ற வசனத்தை எங்காவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?"

",எப்போதோ, எங்கேயோ கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கிறது.


ஆனால் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு போதுமான வயதும் மனப்பக்குவமும் எனக்கு இல்லையே.

பத்து வயதுதான் அம்மா ஆகிறது.

செபக் கூடங்களுக்குச் செல்லும்போது அங்கு வாசிக்கப்படும் வசனங்கள் காதில் விழும். ஆனால் முழுமையாக பொருள் தெரியாது."

"கவனமாகக் கேள். கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக பிறந்திருப்பது 

மனிதர்களின் பாவங்களுக்காக அவர் காயப்படவும்,   

 நொறுக்கப்படவும்,

மரண தண்டனை கொடுக்கப் படவும்தான்."

",அப்போ மனிதர்களின் பாவங்களுக்காக பலியிடவே ஒரு மகனை பெற்றிருக்கிறீர்கள்.

மரண தண்டனை கொடுக்கப் படவே மகனைப் பெற்றிருக்கிறேன் என்று ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள் வீரமுள்ள தாய்.

உங்கள் வாழ்வும் வியாகுலங்கள் நிறைந்ததாக தான் இருக்கும்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Sunday, December 18, 2022

கடவுளுக்கு மகிமை,நல்ல மனத்தோற்கு சமாதானம்.

கடவுளுக்கு மகிமை,
நல்ல மனத்தோற்கு சமாதானம்.


இயேசு உலகில் பிறந்த அன்று விண்ணுலகிலிருந்து வானதூதர்கள் கொண்டு வந்த கிறிஸ்துமஸ் செய்தி:

"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. 

உலகிலே நல்ல  மனத்தோற்கு சமாதானம் உண்டாகுக."

செய்தியைத் தியானிப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான மறை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

பரிபூரணமான மகிமைக்கு உரிய கடவுள்தான் மனிதனாகப் பிறந்திருக்கிறார்.

கிறிஸ்மஸ் செய்தி வந்திருப்பது அவரது மகிமைக்காகத்தான்.

விண்ணகத்தில் வாழும் 

கடவுளுக்கு மகிமை உண்டாகுக என்று அவருடைய தூதர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்.

நித்திய காலத்திலிருந்தே அளவற்ற மகிமையோடு வாழ்பவர் கடவுள்.

அளவற்ற மகிமையை நம்மால் அதிகரிக்க முடியாது.

எதற்காக வானவர்களின் வாழ்த்து?

நமக்காக.

நமக்காகவா?


அதைத் தியானிப்போம்.

நித்திய காலத்திலிருந்தே நிறைவான மகிமைக்கு உரியவர் கடவுள்.

நிறைவான மகிமை என்றால் அதற்கு அதிகமான மகிமை அவருக்கு உண்டாக முடியாது.

முழுமையாக தண்ணீரால் நிறைந்த தம்ளரில் அதற்கு மேல் தண்ணீர் ஊற்ற முடியாதது போல,

ஏற்கனவே அளவு கடந்த மகிமையுள்ள கடவுளுக்கு இன்னும் அதிக மகிமையை கொடுக்க முடியாது.

அது மட்டுமல்ல, கடவுளிடமிருந்து நாம்தான் பெற முடியுமே தவிர நம்மால் அவருக்கு எதுவும் கொடுக்க முடியாது.

அப்படியானால் வான தூதர்கள் ஏன் கடவுளுக்கு மகிமை உண்டாகுக என்று வாழ்த்தினார்கள்?

ஒரு ஒப்புமை.

கற்பாறையில் ஒரு படிக்கட்டு.

அதன் வழியாக நாம் ஏறி உச்சியில் உள்ள கோவிலுக்குப் போகிறோம்.

இதனால் பயனடைவது நாமா? பாறையா?

நாம்தான். பாறை எப்போதும் பாறையாகவேதான் இருக்கும்.

அதேபோல்தான், கடவுளை நமது வார்த்தைகளாலும், செயல்களாலும் புகழும்போது,

ஏற்கனவே நித்திய காலம் முதல் மகிமையால் நிறைவாக உள்ள கடவுளுக்கு நமது புகழுரையால் அதிகப்படியான பயன் ஏதும் இல்லை. அவரில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர் மாறாதவர்.

 ஆனால் கடவுள் அருளால் நாம் பயன் பெறுவோம். 

கடவுளை வாழ்த்தும்போது பயன் பெறுவது நாம் தான்.

அதே சமயத்தில் பாறை மீது  தலையைக் கொண்டு முட்டினால் உடையப் போவதும் பாறை அல்ல, நமது தலைதான்.

கடவுளுக்கு எதிராக நாம் பாவம் செய்யும்போது கடவுளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பாதிப்பு நமக்குத்தான்.

கடவுள் அன்பு மயமானவர்.

நாம் அவரை அன்பு செய்யும்போது நாம் தான் பயன் பெறுகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய் என்று இயேசு சொல்லும்போது,

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்து அதற்குரிய பலனைப் பெற்றுக்கொள் என்றுதான் அர்த்தம்.

நாம் கடவுளை நோக்கி,

" உமக்கு மகிமை உண்டாகுக"

 என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் விண்ணகத்தில் நமக்குரிய சம்பாவனை அதிகரித்துக் கொண்டே செல்லும்.


வானதூதர்கள்   "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக."

என்று சொல்லும்போது,

 "கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடந்து பயன்பெறுவோர்களுடைய எண்ணிக்கை அதிகம் ஆகுக" என்பதுதான் பொருள்.

கடவுள் நம்மை படைத்தது 
நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் மனிதனாய் பிறந்தது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் பாடுகள் பட்டு மரணம் அடைந்தது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் நமக்கு துன்பங்களை வர விடுவது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் நமக்காக எது செய்தாலும் அது நமது நன்மைக்காகத்தான்.

மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது நாம் பயன் பெறுவதற்காகத்தான் 

என்பதை நமக்கு உணர்த்தவே வான தூதர்கள்,


"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக."

என்று பாடினார்கள்.


உலகில் நல்ல மனது உள்ளவர்கள் யார்? சமாதானம் என்றால் என்ன?

கடவுளின் கட்டளைகளை மதித்து 
பாவம் செய்யாமல் வாழ்பவர்களே நல்ல மனது உள்ளவர்கள்.

அழுக்கு இல்லாத பாத்திரத்தைச் சுத்தமான பாத்திரம் என்று சொல்வது போல 

பாவம் இல்லாத மனதை நல்ல மனது என்கிறோம்.

சமாதானம் என்றால் சுமூகமான உறவு.

யாரோடு நாம் சுமூகமான உறவோடு வாழ்கிறோமோ அவரோடு நாம் சமாதானமாக வாழ்கிறோம்.


நாம்  மனதில் பாவம் இல்லாதவர்களாக வாழ்ந்தால்

 நாம் இறைவனோடு சுமூகமான உறவில் அதாவது சமாதானமாக இருக்கிறோம். 

இயேசு மாட்டுத் தொழுவத்தில் மனிதனாகப் பிறந்தது 

கடவுளுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை மன்னித்து,

நம்மை இறைவனோடு சமாதானமாக வாழச் செய்வதற்காகத்தான்.

நல் மனதோற்கு சமாதானம் என்று வாழ்த்தும்போது,

"பாவ மன்னிப்பு பெறுபவர்களுடைய  எண்ணிக்கை கூடட்டும்"

என்றுதான் வாழ்த்துகிறார்கள்.

நாம் பாவ மன்னிப்பு பெற்று கடவுளோடு சமாதானமான உறவோடு வாழ்வதற்காகத்தான் கடவுளே மனிதனாய்ப் பிறந்திருக்கிறார்.

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுவது வெறும்  கொண்டாட்டத்திற்கு அல்ல.

பாவ மன்னிப்பு பெற்று இறைவனோடு சமாதானமாக வாழ்வதற்கு.

பாவ சங்கீர்த்தனம் செய்வோம்.

பாவ மன்னிப்பு பெறுவோம்.

இறைவனோடு சுமூகமான உறவோடு வாழ்வோம்.

இறைவனது அதிமிக மகிமைக்காக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, December 17, 2022

பற்றற்றான் பற்றினைப் பற்றுவோம்.

பற்றற்றான் பற்றினைப் பற்றுவோம்.


மாதாவுக்கும் சூசையப்பருக்கும் சொந்தமான வீடு கலிலேயாவில் உள்ள நாசரேத்தில் இருக்கிறது.

இயேசு சொந்த வீட்டிலேயே பிறந்திருக்கலாம்.

ஆனால் அவர் தாயின் வயிற்றில் இருந்து கொண்டே 

தான் பிறக்க வேண்டிய காலம் நெருங்கியவுடன் 

அவர்களை 90 மைல்களுக்கு அப்பால், யூதேயாவில் உள்ள பெத்லகேம் நகருக்கு  அழைத்துச் செல்கிறார்.

நிறை மாத கர்ப்பிணி கழுதை மேல் அமர்ந்து கொண்டு அவ்வளவு தூரம் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.

சூசையப்பர் முழு தூரமும் நடந்தே செல்கிறார்.

இது இறைமகனின் நித்திய கால திட்டம்.

பெத்லகேமில் சூசையப்பரின் உறவினர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

அவர்கள் மாதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுக்கவில்லை.

குடிக் கணக்கு கொடுக்க நிறைய பேர் ஏற்கனவே வந்திருக்கலாம்.

ஆகவே இடம் இல்லாதிருந்திருக்கலாம்.

ஆனால் நிறைமாக கர்ப்பிணி  தங்க இடம் கொடுக்க  யாருக்கும் மனிதாபிமான உணர்வு இல்லாமல் போய்விட்டது.

சத்திரத்திலும்  இடம் இல்லை.

யாருக்கோ சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் 

யாரிடமும் சொல்லாமல் இரவில் தங்கச் சென்றபோது 

இறைமகன் மனுமகனாய் உலகில் பிறந்தார்.

இயேசுவை பின்பற்றுகிறோம், இயேசுவைப் போல் வாழ்கிறோம்

என்று சொல்லிக் கொள்ளும் நாம்,

எந்த அளவுக்கு இயேசுவின்  ஏழ்மையைப்  
பின்பற்றுகிறோம்?

கேட்டால், இயேசுவின் வார்த்தைகளையே பதிலாகச் சொல்லி விடுவோம்.

"Blessed are the poor in spirit."

"எளிய மனத்தோர் பேறு பெற்றோர்."

"நாங்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது எங்களுக்கு பற்று இல்லை" என்று சொல்லி விடுவோம்.

ஆனால் எந்த அளவுக்கு பற்று இல்லை என்பது நமக்கு மட்டுமே தெரியும்.

ஒரு நாள் மின்சாரம் இல்லாவிட்டால் நம்மிடம் எவ்வளவு பற்றின்மை இருக்கிறது என்பது புரியும்.

சூசையப்பர் மாதாவை அழைத்துக் கொண்டு 90 மைல் நடந்து சென்றாரே,

உள்ளூரில் உள்ள கோவிலுக்கு தவ முயற்சியாக ஒரு நாள் நடந்து செல்ல நம்மால் முடிகிறதா?

கோவிலில் ஒரு நாள் நம்மால் நாற்காலி இல்லாமல் அமர முடிகிறதா? (எனது அனுபவத்தைக் கூறுகிறேன்.)

Phone இல்லாமல் எங்காவது போக முடிகிறதா?

வீட்டில் T.V. இல்லாமல் நேரம் போகிறதா?

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் நினைத்துப் பார்த்தால் ஒரு குண்டூசி மீது கூட நமக்கு பற்று இருப்பது தெரியும்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை

பற்றுக பற்று விடற்கு."

பற்று இல்லாத இயேசுவின் பாதங்களை இறுக்கப் பற்றிக் கொண்டால்தான் உலகப் பொருள்கள் மீது உள்ள பற்றினை நம்மால் விட முடியும்.

இயேசுவின் பாதங்களை இறுக்கப் பற்றி கொண்டால்,

அவர் மீது தவிர வேறு எந்த பொருள் மீதும் நமக்கு பற்று வராது.

நாம் பயன்படுத்தும் பொருள்கள் தொலைந்து போனாலும் நாம் கவலைப்பட மாட்டோம்.

நமது பொருட்களை இயேசுவுக்காக மட்டுமே பயன்படுத்துவோம்.

அப்படி பயன்படுத்தப்படும் பொருட்கள் நமது கையை விட்டு போய்விட்டால்,

"இயேசுவே, உமக்கு உரியதை நீரே எடுத்துக் கொண்டதற்கு நன்றி" என்று தான் கூறுவோம்.

போன பொருளைப் பற்றி கவலைப் பட மாட்டோம்.

நம்மிடம் உள்ள அனைத்தும் போனாலும்  

"கொடுத்தவர் அவருக்கு உரியதை எடுத்துக் கொண்டார், நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?"  என்று எண்ணுவோம்.

எனது மாணவப் பருவத்தில்

 பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 

பரதேசி பீற்றர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் இருந்தார்.

இவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையின் உறுப்பினர்.

ஒவ்வொரு மாத சம்பளத்தையும் முழுமையாக ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு பரதேசி போல் வாழ்ந்தவர்.

ஒரு முறை எங்களுக்கு சொற்பொழிவு ஆற்றுவதற்காக கோயம்புத்தூருக்கு வந்திருந்தார்.

அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியில் காதில் மாட்டக் கூடிய ஒரு பக்கத்து சட்டம் இல்லை.

அதற்கு பதிலாக ஒரு நூலைக்
 கட்டியிருந்தார்.

அவர் சொற்பொழிவு ஆற்றிய பின் அவரோடு பேசிக்கொண்டிருந்தோம்.

நான் அவரிடம்,

"Brother, கண்ணாடியின் ஒரு பக்கத்து சட்டத்தை காணவில்லையே, கண்ணாடிக்கு புதிய frame போட்டால் என்ன?" என்று கேட்டேன்.

"தம்பி, பார்க்க உதவுவது frame ஆ, கண்ணாடியா?"

"கண்ணாடி."

"கண்ணாடியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தான் மாற்ற வேண்டும்.

கண்ணாடியை மூக்கில் நிறுத்துவதற்காக தான் frame வேணும்.

நான் கட்டியிருக்கும் நூலிலேயே கண்ணாடி நிற்கிறதே.

அது போதுமே."

அவருக்கு கண்ணாடி மேலேயோ,
frame  மேலேயோ  பற்று இல்லை.

அந்தக் கண்ணாடி தொலைந்து விட்டால் கூட அதற்காக வருத்தப்பட மாட்டார்.

பயன்படுத்த வேறொன்று வாங்கிக் கொள்வார்.

பயன்பாட்டுக்காகவே பொருள், பற்று வைப்பதற்காக இல்லை. 

மாட்டுத்தொழுவம் இயேசு பிறப்பதற்கு உதவியது.

நசரேத்தில் உள்ள சொந்த வீட்டின்  மீதோ, வேறு எந்த பொருள் மீதோ இயேசுவுக்கு பற்று இல்லை.

அவருக்கு வேண்டியது மனுக் குலத்தின்  மீட்பு மட்டுமே. 

நமக்கு வேண்டியதும் அதுவே தான்.

பற்றற்றான் பற்றினைப் பற்றி உலகப் பற்றைக் கைவிடுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, December 15, 2022

இறக்கவே பிறந்தவர்.




       இறக்கவே பிறந்தவர்.


"தாத்தா, கடவுள் நிறைவானவர்தானே."

",ஆமா."

"மாறாதவர்தானே."

", ஆமா."

"நித்தியமானவர்தானே."

", ஆமா."

"அன்புமயமானவர்தானே."

", ஆமா."

"அன்புமயமான, நித்திய, மாறாத, நிறைவான, அளவில்லாத, ஞானம் உள்ள கடவுளை,

 படைக்கப்பட்ட  எந்த பொருளாலும் பாதிக்க முடியாதுதானே."  

",அவரால் படைக்கப்பட்ட எந்த பொருளாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்கிறாய்,

ஏனெனில் அவர் மாறாதவர்.

 சரியா?"

"அப்படித்தான் நினைக்கிறேன்.

 ஆனால் மனிதர் செய்த பாவங்கள் கடவுளை வருத்தப்பட வைத்திருப்பதாக பைபிள் சொல்கிறதே.

"இவ்வுலகில் மனிதனைப் படைத்தது குறித்து வருந்தினார்."
(ஆதி.6:5)

கடவுளால் வருத்தப்பட முடியுமா?"

",நிச்சயமாக முடியாது. 

மனிதர் செய்த பாவங்களின் கனா கனத்தை நமக்கு புரிய வைப்பதற்காக ஆசிரியர் அவ்வாறு எழுதியிருக்கிறார்.

 அளவற்ற அன்பும், அளவற்ற மகிழ்ச்சியும் உள்ளவர் கடவுள்.

அதற்கு எதிர்மறையான எதுவும் அவரை நெருங்க முடியாது.

அவரால் யாரையும் வெறுக்கவும் முடியாது.

எதனாலும் வருந்தவும் முடியாது.

அவருக்கு எதிராக பாவம் செய்து, அவருக்கு எதிராக மக்களை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் சாத்தானைக் கூட அவரால் வெறுக்க முடியாது.

சாத்தானைக் கூட அவர் நேசிக்கிறார். ஆனால் அவனால் அவரது நேசத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவன் நிலை."

"அதாவது அவருக்கு எதிராக பாவம் செய்து கொண்டிருக்கும் நம்மையும் அவரால் வெறுக்க முடியாது.

பாவிகளாகிய நம்மையும் நேசிக்கிறார் என்று சொல்ல வருகிறீர்கள்."

", ஆமா."

"அப்படியானால் பாவிகளுக்கு ஏன் மோட்சத்தில் இடமில்லை?"

",மோட்சத்தில் படைக்கப்பட்ட அனைவருக்கும் இடம் இருக்கிறது.

ஆனால் பாவிகள் அங்கே போவதில்லை.

கடவுளை வேண்டாம் என்று சொல்வது தானே பாவம்.

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தி 

அவன் "கடவுள் வேண்டாம். அவரை நான் பார்க்க விரும்பவில்லை" என்று நினைப்பதுதான் பாவம்.

கடவுள் வேண்டும் என்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். அவர்களது ஆசைப்படி நித்திய காலம் கடவுளோடு வாழ மோட்ச நிலைக்கு செல்வார்கள். 

கடவுள் வேண்டும் என்பவர்கள் மோட்சத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கடவுள் வேண்டாம் என்பவர்கள் அவர்களது ஆசைப்படி நித்திய காலம் கடவுளை விட்டு பிரிந்திருப்பார்கள்.


கடவுள் வேண்டாம் என்பவர்கள் நரகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனாலும் கடவுள் மாறாதவர். அவரது அன்பு மாறாதது.

நல்லவர்களை நேசிப்பது போலவே, கெட்டவர்களையும் கடவுள் நேசிக்கிறார்.

மோட்சத்தில் உள்ளவர்களை நேசிப்பதுபோலவே,

நரகத்தில் உள்ளவர்களையும் நேசிக்கிறார்.

நல்லவர்கள் கடவுளுடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.

கெட்டவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை."

"கெட்டவர்கள் மோட்சத்திற்குப் போக முடியாது என்றல்லவா சொல்கிறார்கள்?"

",ஒரு ஒப்புமை சொல்கிறேன். 

அரசு ஒரு பெரிய பங்களா ஒன்றைக் கட்டி,

"யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று வாழலாம். ஆனால் கையில் எதையும் எடுத்துக்கொண்டு செல்லக்கூடாது. கையில் எதுவும் இருந்தால் உள்ளே நுழைய முடியாது." 

என்று கூறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

கையில் எதுவும் இல்லாதவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் உள்ளே நுழைந்து போகிறார்கள்.

ஒருவன் கையில் ஒரு பந்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயல்கிறான். முடியவில்லை.

உள்ளே நுழைய முடியாமைக்கு அரசு காரணமா? அல்லது அவனது கையில் உள்ள பந்து காரணமா?"

"கையில் உள்ள பந்துதான் காரணம்."

",கையில் எதுவும் இல்லாதவர்கள் மோட்சத்திற்குள் வரலாம் என்று கடவுள் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

ஒருவன் கையில் பாவத்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயல்கிறான்.

நுழைய முடியுமா?"

'' முடியாது."

",முடியாததற்கு கடவுள் காரணமா, கையில் உள்ள பாவம் காரணமா?"

"பாவம் தான் காரணம். ஆனால் பாவம் உள்ளவர்கள் உள்ளே நுழைய முடியாது என்று கடவுள்தானே சொல்லியிருக்கிறார்."

",கடவுளை வேண்டாம் என்று சொல்வது தானே பாவம்.

பாவம் உள்ளவர்கள் மோட்சத்திற்கு போக முடியாது என்று கடவுள் சொன்னால் என்ன அர்த்தம்?"

"நான் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள் உள்ளே வருவார்கள்.

நான் வேண்டாம் என்று நினைப்பவர்கள் உள்ளே வர மாட்டார்கள்." என்றுதான் அர்த்தம்."

",கடவுளை வேண்டாம் என்பவர்கள் அவர் இருக்கும் இடத்துக்குப் போக மாட்டார்கள் என்பதுதான் உண்மை."

"இப்பொழுது ஒரு உண்மை புரிவது போல் தெரிகிறது.

அவரை நேசிக்காதவர்களை பார்த்து, அதாவது பாவம் செய்கின்றவர்களை பார்த்து,

"மக்களே, நான் உங்களை நேசிக்கிறேன்.

நீங்களும் என்னை நேசியுங்கள்.

என்னோடு நித்திய காலம் வாழ விண்ணுலகுக்கு வாருங்கள்."

என்று தனது வாழ்க்கையின் மூலம் நம்மை  அழைப்பதற்காகவே

நம்மைப் போல மனிதனாய்ப் பிறந்தார் என்று நினைக்கிறேன்.

அவர் நம்மை போல உலகில் வாழ்ந்தது,

பாடுகள் பட்டது,

சிலுவையில் மரித்தது 

நம் மீது அவள் கொண்டுள்ள அளவற்ற அன்பை 

நமக்குச் செயல் மூலம் வெளிப்படுத்துவதற்காகத் தான் என்று நினைக்கிறேன்."

",அவரை நாம் வேண்டாம் என்று சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் 

தன் உயிரை பலியாக்கி பாவப் பரிகாரம் செய்தார்.

அவருடைய உயிரைக் கொடுத்து நீக்கும் அளவிற்கு நமது பாவம் அவ்வளவு கனமானது.

ஒரு பெரிய கருங்கல் பாறையை கையினால் பெயர்த்து எடுக்க முடியாது. வெடிகுண்டு வைத்து தான் பெயர்க்க வேண்டும்.

கடவுளே தனது உயிரைக் கொடுத்து பெயர்க்க வேண்டிய அளவுக்கு நமது பாவம் அவ்வளவு கனமானது

 என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்

 கடவுள் தன் உயிரை கொடுப்பதற்காக மனிதனாய்ப் பிறந்தார்.

 தனது தேவ சுபாவத்தில் இயேசு மரணம் அடைய முடியாது.

மரணம் அடைவதற்காகவே மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

மரணம் அடைய முடியாத இறைமகன் 

மரணம் அடைவதற்காகவே மனுமகனாய்ப் பிறந்தார்.

  இது அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின் அளவற்ற தன்மையை காட்டுகிறது."

"அப்படியானால் நமக்காக மரணம் அடையவே இயேசு பிறந்திருக்கிறார்."

",நாமும் அவருக்காக, 

அவருக்கு சாட்சி சொல்வதற்காக,

 வேத சாட்சிகளாக மரணிக்கவே பிறந்திருக்கிறோம்.

பிறப்பு உலகத்திற்கு நுழைவு வாசல்,

மரணம் மோட்சத்திற்கு நுழைவு வாசல்.

நாம் செல்ல வேண்டிய இடம் மோட்சம்.

லூர்து செல்வம்.

Wednesday, December 14, 2022

"தயவு செய்து, நீரே உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்."

"தயவு செய்து, நீரே உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்."


இயேசு எதற்காக  மனிதனாய்ப் பிறந்தார்?

மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்து உறங்க?

இடையர்களால் ஆராதிக்கப்பட?

கீழ்த்திசை ஞானிகளிடமிருந்து பரிசுகள் பெற?

எகிப்தில் மூன்று ஆண்டுகள் வாழ?

நாசரேத்தூரில் தச்சு வேலை செய்து பிழைக்க?

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவிக்க?

நோயாளிகளுக்கு குணமளிக்க?

இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க?

பேய்கள் பிடித்தோரிடமிருந்து பேய்களை ஓட்ட?

ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளிக்க?

இவற்றையெல்லாம் இயேசு செய்தார்.

ஆனால் இவற்றிற்காக  அவர் மனிதனாய் பிறந்தாரா?

இவை அவர் மனுவுரு எடுத்ததன் நோக்கமா?

இல்லவே இல்லை.

இவற்றுக்காக அவர் மனிதனாகப் பிறக்கவில்லை.

இவையெல்லாம் அவரது வாழ்வின் நிகழ்வுகள், நோக்கங்கள் அல்ல.

இவற்றையெல்லாம் அவர் படைத்த மனிதர்கள் மூலமே செய்திருக்கலாம்.

ஆனால் மனிதர்கள் யாரும் செய்ய முடியாத ஒன்றை,

மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பின் காரணமாகச் செய்ய

மனிதனாய்ப் பிறந்தார்.

தங்கள் அன்பை வெளிப்படுத்த யாரும் யாருக்கும் உணவளிக்கலாம்.

ஆனால் யாரும் தன்னையே யாருக்கும் உணவாக அளிக்க முடியாது.

தன்னால் படைக்கப்பட்டவர்களது ஆன்மீக நலனுக்காக தன்னையே உணவாக அளிக்க இறைவன் விரும்பினார்.

தனது வல்லமையினாலும், ஞானத்தினாலும், பராமரிப்பினாலும் மனிதரோடு இருந்த இறை மகன்,

மனிதர்கள் தன்னை நேருக்கு நேர் பார்த்து உறவாட, உரையாட விரும்பினார்.

அந்த விருப்பத்தை நிறைவேற்ற மனிதனாக பிறந்தார்.

மனிதர்களோடு மனிதனாக பழக விரும்பினார்.

தனது உண்மையான ஆன்மாவோடும், உடலோடும் திவ்ய நற்கணையில் இருந்து,

முழுமையாக நமக்கு,
நமது ஆன்மீக நல்லணுக்காக

 தன்னையே உணவாகத் தருகிறார்.

நாம் அவரை நமது கண்களால் பார்க்கிறோம்,

 நாக்கினால் ருசித்து விழுங்குகிறோம்.

அவரது அருள் வரங்களால் ஆன்மீகத்தில் வளர்கிறோம்.'


அளவு கடந்த கடவுளுக்கு விரோதமாக அளவுள்ள மனிதர்களாகிய நாம் செய்த பாவங்களுக்கு முழுமையாக பரிகாரம் செய்ய முடியாது.

அளவு கடந்த கடவுளுக்கு, 

அளவு கடந்தவரால் மட்டுமே முழுமையான பரிகாரம் செய்ய முடியும்.

ஆனால் கடவுளைத் தவிர அளவு கடந்தவர் வேறு யாருமே இல்லை,

ஆகவே அவரே அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.

மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆகவே மெய்யாகவே கடவுளாக இருக்கும் இறைமகன்,

மெய்யாகவே மனிதனாகப் பிறந்து நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

பரிகாரம் செய்தவர் மனிதனாகப் பிறந்த கடவுள்.

குற்றவாளி மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக

 நீதிபதியே குற்றவாளி அனுபவிக்க வேண்டிய தண்டனையை ஏற்றுக் கொள்வது போல 

நம் மீது கொண்ட அன்பின் காரணமாக 

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை கடவுளே ஏற்றுக் கொண்டார். 

அவர் நமக்காக பாவப்பரிகாரம் செய்ததினால் தான், 

 நாம் நமது பாவங்களுக்காகச் செய்யும் பரிகாரம் அவர் முன்னால் செல்லுபடியாகிறது.

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக்கி,

 நாம் செய்த பாவங்களை மன்னிக்கவே மனிதனாகப் பிறந்தார்.

இயேசுவை உண்மையான ஆன்மீக உணவாகவும்,

பலிப் பொருளாகவும்,

மீட்பராகவும்,

பாவ மன்னிப்பு அளிப்பவராகவும் 

ஏற்றுக்கொள்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

இயேசு குணமளிக்கிறார்,

பாவங்களை மன்னித்து ஆன்மாவிற்கு குணமளிக்கிறார்.

அதை மறந்து, உடலைச் சார்ந்த நோய்களுக்கு குணம் பெற மட்டும்
இயேசுவை அணுகுபவன்,

அவரை மருத்துவராக மட்டுமே ஏற்றுக் கொள்கிறான்,

மீட்பராக அல்ல.

இப்போதெல்லாம் நம்மவர்களே குணமளிக்கும் செபக் கூட்டங்கள் நிறைய நடத்துகிறார்கள்   .

அவற்றுக்கு செல்லும் பெரும்பாலானோர் தங்களது உடலைச் சார்ந்த நோய்களிடமிருந்து குணம் பெறவே செல்கின்றார்கள்.

நோய்கள் சுகமானதாக சாட்சியம் அளிக்கின்றார்கள்.

ஆண்டவரே இவ்வுலகில் நிறைய நோயாளிகளை குணமாக்கினார்.

விசுவாசத்தோடு அவரை அணுகியவர்கள் குணம் பெற்றார்கள்.

குணம் அளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் விசுவாசத்தோடு கலந்து, குணம் பெறுவது  நல்லது தான்.

ஆனாலும் அவர்களில் எத்தனை பேர் தங்களின் ஆன்மாவிற்கு சுகம் அளிக்கும் பாவ சங்கீர்த்தனம் செய்கிறார்கள் என்று அவரவர்தான் யோசித்து பார்க்க வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் உடல் சார்ந்த நோய்கள் மட்டும் குணம் பெற செல்பவர்கள் கிறிஸ்துவை ஆன்மீக மீட்பராக ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாதவர்கள்  

கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்றவர்கள் அல்ல.


திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கிறார் என்று விசுவசிக்கிறோமா அல்லது  விசுவசிப்பதாகச் சொல்கிறோமா?

உண்மையிலேயே விசுவசித்தால் 
இயேசுவை  மற்றவர்கள் காலால் மிதிக்க அனுமதிப்போமா?

நற்கருணையை கையில் வாங்கும் போது அதில் உள்ள துகள்கள் நமது கையில் விழும் என்று நமக்கு தெரியாதா?

ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியாதா?

கையை உதறிவிட்டு போகும்போது துகள்கள் தரையில் விழும் என்றும் நமக்குத் தெரியாதா?

தரையில் விழும் துகள்கள் மற்றவர்கள் காலில் மிதிபடும் என்றும் நமக்குத் தெரியாதா?

கால்களில் மிதிபடுபவர் நம்மைப் படைத்த கடவுளாகிய இயேசு என்றும் நமக்குத் தெரியாதா?

இந்த உண்மை  நற்கருணை கொடுப்பவருக்கும் தெரியும்,

வாங்குபவருக்கும் தெரியும்.

இதை நம்மைப் படைத்தவரை தவிர வேறு யாரிடம் போய் முறையிடுவோம்?

"இயேசுவே,  நீர் பாடுகள் படும்போது உம்மைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்ளாத யூத மதத்தவர்களால் அடிபட்டு, மிதி பட்டு, அவமானப் படுத்தப் பட்டீர்.

அதை எங்களது பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக் கொண்டீர்.

இப்போது உம்மைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்பவர்களால் மிதி பட வேண்டுமா?

ஆண்டவரே நீர் மிதிபடாமல் நீரே உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்."

லூர்து செல்வம்.