" இயேசுவே உம்மைத் தேடி வருகிறேன்."
(தொடர்ச்சி)
***************************************
"நான் இயேசுவின் சகோதரன் அவருடைய தாய் எனக்கும் தாய்.
என் தாயை நான் நேசிக்கிறேன்.
நீங்கள் இயேசுவின் சகோதரனா?"
நண்பர் யோசிக்கவே இல்லை.
"அதிலென்ன சந்தேகம்?
நான் இயேசுவின் சகோதரன் மட்டுமல்ல,
அவரால் இரட்சிக்கப்பட்டவன்."
"இரட்சிக்கப்பட்டதுபற்றி இப்போது கேட்கவில்லை.
இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்." (மத். 24:13)
இயேசுவைச் சகோதரனாக. ஏற்றுக்கொண்டால் அவருடைய தாயை நம் தாயாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?"
"அப்படி பைபிள் சொல்கிறதா?"
"அவருடைய தாயை நம் தாயாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பைபிள் சொல்கிறதா?"
" மாதா இயேசுவின் தாய் என்று பைபிள் சொல்கிறது.
அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் அவளுக்கு நீங்கள் கொடுக்கிற அளவு முக்கியத்துவம் கொடுக்க பைபிளில் சொல்லப்படவில்லை.
ஆகவே நாங்கள் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
நீங்கள் எதன் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?"
" எந்த திருச்சபையை இராயப்பர் என்ற பாறையின் மேல் இயேசு கட்டினாரோ
அதே கத்தோலிக்க திருச்சபையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப,
நாங்கள் அன்னை மரியாளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறோம்."
".எங்களுக்கு பைபிள் மட்டும் போதும்."
"நாங்கள் இயேசுவின் ஞான உடலாகிய தாய்த் திருச்சபையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
தாயை முழுமையாக ஏற்றுக் கொள்பவன் தாய் தருபவற்றையும் ஏற்றுக் கொள்கிறான்.
தாய்த் திருச்சபையை எங்களுக்கு தந்திருக்கிற பைபிளையும் ஏற்றுக் கொள்கிறோம்.
நாங்கள் தாயை ஏற்றுக் கொள்கிறோம், தாய் சொற்படி நடக்கிறோம்.
தாயை விட்டு போனவர்களுக்கு கட்டுப்பாடு கிடையாது.
நாங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள்.
தாய் சொல்லை கேட்பவனை பார்த்து
"ஏன் தாய் சொல்லைக் கேட்கிறாய்?"
என்று கேட்பது அபத்தம் என்று தெரியவில்லை?"
" பைபிள் இறைவார்த்தை என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?"
"பைபிள் இறைவார்த்தை என்று உங்களுக்கு சொன்னது யார்?"
"ஹலோ நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க."
"பைபிள் இறைவார்த்தை என்று கத்தோலிக்க திருச்சபை சொல்வதால் அதை ஏற்றுக்கொள்கிறோம்.
"இதுதான் பைபிள்" என்று எங்கள் கையில் பைபிளைத் தந்தது திருச்சபை தான்.
பைபிளை பெற்றெடுத்த தாய் கத்தோலிக்கத் திருச்சபைதான்.
பழைய ஏற்பாட்டு நூல்கள் இயேசு பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டு விட்டன.
புதிய ஏற்பாட்டு நூல்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டன.
எந்தெந்த நூல்கள் பைபிளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானித்தது கத்தோலிக்க திருச்சபை மட்டும்தான்.
பழைய ஏற்பாட்டில்46 புத்தகங்கள் என்றும்
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் என்றும் தீர்மானித்து
முழு பைபிளையும் கத்தோலிக்க திருச்சபை உருவாக்கியபோது,
பிரிவினை சபைகள் எதுவும் இல்லை.
முழு பைபிளும் உருவாக்கப்படும் முன்பே திருச்சபை இருந்தது.
திருச்சபை பைபிளை நமக்குத் தந்தது கி.பி. நான்காம் நூற்றாண்டில்.
பிரிவினை சபைகள் தோன்றியது பதினாறாம் நூற்றாண்டில்.
கத்தோலிக்க திருச்சபையின் சொத்தாகிய பைபிளைத்தான் பிரிவினை சபைகள் எடுத்துக்கொண்டு போயின.
அதுவும் முழுமையாக எடுத்துச் செல்லவில்லை.
தாங்கள் விரும்பாத நூல்களை அகற்றிவிட்டுப் போய்விட்டார்கள்.
எடுத்துச் சென்றவற்றை தங்கள் இஷ்டம் போல் மொழிபெயர்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் எடுத்துச் சென்றது முழுமையான பைபிள் அல்ல.
இப்போ சொல்லுங்க
"பைபிள் இறைவார்த்தை என்று உங்களுக்குச் சொன்னது யார்?"
இந்தக் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது.
ஏனெனில் பைபிள் இறைவார்த்தை என்று சொன்ன தாயை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.
தாயின் கட்டுப்பாட்டிற்குள் வாழும் மக்கள் தவறு செய்தால்
அதைப் பற்றி அவர்களது அம்மாவிடம்
போய் முறையிடலாம்.
ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்கள் தவறு செய்தால்
அரசிடம் போய் முறையிடலாம்.
ஆனால் யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பவர்கள் தவறு செய்தால்
யாரிடம் போய் முறையிட?
இயேசுவிடம் தான் போக வேண்டும்.
" இயேசுவே உம்மைத் தேடி வருகிறோம்,
உமது வார்த்தையைத் தவறாக பயன் படுத்துபவர்களைத் திருத்த
உம்மிடம் வேண்டுவதற்காக.
ஆண்டவரே உமது மந்தையை விட்டு பிரிந்து சென்ற ஆடுகளை
திரும்பவும் உமது மந்தைக்குள் கொண்டு வந்து சேரும்.
ஒரே மேய்ப்பனும், ஒரே மந்தையுமாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment