Tuesday, September 8, 2020

"உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக். 1:38) (தொடர்ச்சி)

"உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 
(லூக். 1:38) (தொடர்ச்சி)
.***************************************

நமது அன்னையின் நற்குணங்களை நாம் பிரதிபலிக்க வேண்டும். 

.நமக்குத் தெரியும், மாதா

"இதோ ஆண்டவரது அடிமை" 
என்ற வார்த்தைகள் மூலம்

 தன்னையே முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்தாள்.

அடிமை என்ற வார்த்தை அவளது தாழ்ச்சியைக் காண்பிக்கிறது.

தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவின் மீட்புப் பணிக்கு தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தாள்.

நாம் நமது தாயைப் போல இருக்கிறோமா என்பதைத் தியானித்துப் பார்க்க வேண்டும்.

நம்மிடம் தாழ்ச்சி இருக்கிறதா?

இயேசு இறைவன்,

 விண்ணிலிருந்து நமக்காக இறங்கி வந்தார்.

நாம் அடிமட்டத்தில் இருக்கிறோம், இதற்குக் கீழே நம்மால் இறங்க முடியாது.

நம்மிடம் இருக்கும் எதுவும் நமக்குச் சொந்தமானது அல்ல.

நம்முடைய உண்மையான நிலையை ஏற்றுக்கொள்வதே நமக்குத் தாழ்ச்சி.

நாம் ஒன்றும் இல்லாதவர்கள் என்பதை  முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதை முதலில் ஏற்றுக் கொண்டால் நம்மிடம் இருக்கும் திறமைகள் (talents) எல்லாம் இறைவனிடமிருந்து வந்தவை என்பது புரியும்.

இதைப் புரிந்து கொண்டால் நாம் எப்போதும் இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்.


 நமது திறமைகளை இறைவனுக்காக மட்டும் பயன்படுத்துவோம். 

இறைவனுடைய மகிமைக்காக மட்டுமே வாழ்வோம்

அவருக்கு எதிரான எதையும் செய்யமாட்டோம். 

நமக்கு ஏதாவது அவமானம் ஏற்பட்டால் அதற்காக வருத்தப்பட மாட்டோம்.

நமது மனது புண்படும்படியாக யாரும் பேசினாலும் அது நம்மை பாதிக்காது.

நம்மிடம் தாழ்ச்சி இருந்தால் ego இருக்காது.

தாழ்ச்சி இருந்தால்தான் நம்மால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும்.

அனைவரையும் விட நாம் தான் பெரியவர்கள்  என்று எண்ணினால் நம்மால் மற்றவர்களுக்கு  பணிவிடை புரிய முடியாது.


தாழ்ச்சி இருந்தால் நாம் செய்கிற சேவைகளுக்கு யாரிடமிருந்தும் பாராட்டை எதிர்பார்க்க மாட்டோம்.

தாழ்ச்சிதான் மற்ற எல்லா புண்ணியங்களுக்கும்  தாய்.

ஆகவே முதலில் மாதாவிடமிருந்து தாழ்ச்சியைக் கற்றுக் கொள்வோம்.


அடுத்து, மாதாவைப் போல நாமும் இறைப்பணிக்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணிப்போம்.


யார் கேட்கிறதோ காதில் விழுகிறது:

இறைப்பணிக்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து விட்டால், நமது வேலையைப் பார்ப்பது யார்?

இது இறைப்பணியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் கேட்கும் கேள்வி.

இறைப்பணி இறை அன்பை அடிப்படையாகக் கொண்டது.

இறைவனிடமிருந்து பெறும் அன்பு இறையன்பு.

இறைவன் தன்னை நேசிக்கிறார்.
தன்னை நேசிப்பதுபோலவே நம்மையும் நேசிக்கிறார்.

இறைவன் தன்னை நேசிப்பதுபோலவே

 அவரது சாயலில் படைக்கப்பட்ட நாம் நம்மை நேசிக்க வேண்டும். 

Charity begins at home.

கடவுள் நம்மைப் படைக்கும் போதே நமது இருதயத்தில் அன்பு என்னும் ஊற்றோடுதான் படைத்தார்.

அங்கு ஊறும் அன்பு நேரே தன்னைப் படைத்த கடவுளை நோக்கி எழ வேண்டும்.


அடுத்து அவரால் படைக்கப்பட்ட நமது அயலானை நோக்கிப் பாய வேண்டும்.

நம்மை நாமே நேசிப்பதற்கு கட்டளை தேவையில்லை.

இறைவனை நேசிப்பதற்கும், நம் அயலானை நேசிப்பதற்கும்தான் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதற் கட்டளை, எல்லாவற்றுக்கும் மேலாக, நமது முழு இருதயத்தோடு, இறைவனை நேசிக்க வேண்டும்.

இரண்டாவது கட்டளை, நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க  வேண்டும்.

இறைவனிடமிருந்து பெற்ற அன்பைக்  கொண்டுதான் 

நாம் அவரை நேசிக்கிறோம்.

 நம்மை நேசிக்கிறோம்.

 அயலானையும் நேசிக்கிறோம்.

 நமது உடலும் ஆன்மாவும் நமக்கு இறைவன் தந்தவை.

 ஆகவே அவற்றை பாவத்திற்கு இடங்கொடாமல் நேசிப்பதும் பேணுவதும் நமது கடமை.

நமது ஆன்மாவை இறை நெறியில் நடத்தி விண்ணக பாதையில்  நடை போடுவதும் இறைப்பணிதான்.

நமது ஆன்மா இறைவனுக்குச் சொந்தமானதுதான்.

இறைவனுக்குச் சொந்தமான ஒன்றை நாம் பேணுவது இறைப் பணிதான்.

திருப்பலி காணுதல், திருவிருந்து அருந்துதல், ஒப்புரவு அருட்சாதனம் பெறுதல் போன்ற ஆன்மீக வளர்ச்சி சம்பந்தப்பட்ட காரியங்களும் இறைப் பணியைச் சேர்ந்தவைதான். 

அவரால் தரப்பட்ட நமது உடலையும் பேணுவது நாம் அவருக்கு செய்யும் பணிதான்.

 நமது உடல் பாவத்தில் விழாதபடி கவனித்துக் கொண்டு,

 அதை இறைப்பணிக்கு பயன்படுத்த வேண்டும்.

 நாம் செய்ய வேண்டிய வேலையை செய்வதும் இறைப்பணி தான்.

ஆசிரியர் பணி புரிவோர்  இறைவனுக்குதான் பணி புரிகிறார்கள்.

விவசாயம் செய்வோர் இறைவனுக்குதான் பணி புரிகிறார்கள்.

அலுவலகங்களில் பணிபுரிவோரும்
இறைவனுக்குதான் பணி புரிகிறார்கள்.

இவை எல்லாம் அந்தஸ்தின் கடமைகள்.

செய்கின்ற பணியை அர்ப்பண உணர்வோடு செய்ய வேண்டும்.

நமது அயலானுக்கு சேவை செய்வதில் மூலமே இறைவனுக்கு சேவை செய்கிறோம்.

பசித்தவனுக்கு உணவு கொடுக்கும் போது இறைவனுக்கே கொடுக்கிறோம்.

உடை இல்லாதவனுக்கு உடை கொடுக்கும்போது இறைவனுக்கே கொடுக்கிறோம்.

அன்னியனுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது இறைவனுக்கே கொடுக்கிறோம்.

நோயாளியை கவனிக்கும்போது இறைவனையே கவனிக்கிறோம்.

பள்ளிக்கூட fees கட்ட முடியாதவனுக்கு உதவி செய்தால் இறைவனுக்கே உதவி செய்கிறோம்.

'இறைவனுக்காக, இறைவனது மகிமைக்காக நாம் செய்யும் பிறர் பணி அனைத்தும் இறை பணியே.

தாய்த் திருச்சபை சம்பந்தப்பட்ட நமது பணிகளையும் அர்ப்பண உணர்வோடு செய்ய வேண்டும்.

அர்ப்பண உணர்வோடு நாம் வாழும் வாழ்க்கை உண்மையான இறைப்பணி.


அன்னை மரியாள் ஆண்டவரது மீட்புப் பணியில் அவரோடு ஒத்துழைத்தது போல

 நாமும் இயேசுவோடு ஒத்துழைக்க வேண்டும்.

அவர் நமக்குத் தரும் அருள் வரங்களை சரியாகப் பயன்படுத்தி ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைய வேண்டும்.

ஆசிரியரோடு ஒத்துழைக்காவிட்டால் மாணவனால்   அவன் கற்பதன் நோக்கத்தை அடைய முடியாது.

நான் பணிபுரிந்த பள்ளியில் வழக்கமாக பத்தாவது வகுப்பில் மாணவர்களை புதிதாக சேர்ப்பதில்லை.

அரசு ஊழியர் ஒருவர் transfer காரணமாக பாவூர்சத்திரத்தில் குடியேறினார்.

அவருடைய பையனை சலுகை அடிப்படையில் பத்தாவது வகுப்பில்  சேர்த்தார்கள். 

என்னுடைய  வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்கள்.

 அப்பா என்னிடம் வந்தார்.

"என்னுடைய பையன் படிப்பில் weak. ஒன்பதாவது வகுப்பில் Just பாஸ் பண்ணி வந்திருக்கிறான்.

S. S. L. Cயில் அவனை நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் பண்ண  வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு." என்றார்.

"பாடம் நடத்துவதும் வழிகாட்டுவதும் ஆசிரியர்களின் வேலை. நன்றாக படிக்கவேண்டியது பையன். எங்களோடு ஒத்துழைத்தால் பையன் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவான்."

"பையன் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பான். அவனை உங்களோடு ஒத்துழைக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நீங்கள் அதற்காக என்ன செய்தாலும் நான் குறுக்கிட மாட்டேன். அவன் நல்ல மதிப்பெண் பெறுவது தான் முக்கியம்."

".பையனை ஒத்துழைக்க வைக்க எங்களுக்கு magic எதுவும் தெரியாது.
அந்த வேலையை பிரம்பு பார்த்துக்கொள்ளும்."

"இனி அவன் உங்கள் பிள்ளை. நான் தலையிட மாட்டேன்."

போய்விட்டார்.

பிரம்பு அதன் வேலையை சூப்பரா செய்தது. அவன் சூப்பர் மார்க் வாங்கி வெற்றி பெற்றான்.

M.B.B.S தேர்வில் வெற்றி பெற்றவுடன் நன்றி சொல்லி கடிதம் எழுதினான். அவனுக்கு அடி கொடுத்த பிரம்பிற்கும் நன்றி கூறினான்.



நாம் இறைவனோடு ஒத்துழைக்க வேண்டும். 

அவரது கட்டளைகளை அனுசரிக்க வேண்டும்.

அவரது தூண்டுதல்களுக்கு செவிமடுத்து செயல்படுத்த வேண்டும்.

நற்செயல் புரிவதற்கு அவர் தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும்.

இறைவன் நல்ல ஆசிரியர்.

நாம் ஒத்துழைக்க மறுக்கும்போது அப்பப்போ பிரம்பையும் கையில் எடுப்பார்.

பிரம்பைப் பார்த்து முணுமுணுக்கக் கூடாது.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்கள் இறைவனிடம் வாங்கிய அடிகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்மைத் திருத்தி நல்வழிப் 
படுத்ததான் அப்பப்போ அடி விழும்.

நாம் திருந்தி இறைவனோடு ஒத்துழைக்க வேண்டும்.

நாம் இறைவனோடு ஒத்துழைத்தால் மட்டுமே மீட்புப் பெற முடியும்.

தாழ்ச்சியாய் இருப்போம்.

அர்ப்பணிப்போம்.

ஒத்துழைப்போம்.

மரியாளின் பிள்ளைகளாய் வாழ்வோம்.

மரியாளின் மைந்தன் நம்மை ஏற்றுக் கொள்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment