"கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்"
(மத்.20:16)
-----------------------------------------------------------
திராட்சைத் தோட்ட உவமை..
ஒரு குட்டித் தியானம்.
திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அழைப்பின் படி தோட்டத்தில் வேலை செய்தவர்களில் பணி நேரம்:
விடியற்காலை 6 மணி மாலை 6 மணிவரை 12 மணிநேரம்.
முற்பகல் 9 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 9 மணிநேரம்.
பகல் 12 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 6 மணிநேரம்.
பிற்பகல் 3 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 3 மணிநேரம்.
பிற்பகல் 5 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 1 மணிநேரம்.
திராட்சைத் தோட்டத்தில் சிலர் 12 மணி நேரம் வேலை செய்தார்கள்..
சிலர் 9 மணி நேரம் வேலை
செய்தார்கள்.
சிலர் 6 மணி நேரம் வேலை செய்தார்கள்..
சிலர் 3 மணி நேரம் வேலை செய்தார்கள்.
சிலர் 1 மணி நேரம் வேலை செய்தார்கள்.
எல்லோருக்கும் சம்பளம் 1 வெள்ளிக்காசு.
சம்பளத்தின் அடிப்படையில்
12 மணி நேரம் = 9 மணி நேரம் =
6 மணி நேரம் = 3 மணி நேரம் = 1 மணி நேரம்.
12 மணி நேரம் = 1 மணி நேரம்.
முதலில் வந்தவர்கள் = கடைசி வந்தவர்கள்.
ஆக எல்லோரும் சமம்.
எல்லோரையும் சமமாக்கியது எது?
அவர்கள் வாங்கிய சம்பளமா?
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும்.
ஆழ்ந்து யோசிப்போம்.
எல்லோரையும் சமமாக்கியது திராட்சைத்தோட்டக்காரரா?
இன்னும் ஆழ்ந்து யோசிப்போம்.
"நான் நல்லவனாய் இருக்கிறேன்"
தோட்டத்தின் உரிமையாளர் நல்லவராய் இருப்பதால்தான் அவரிடம் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் சமம் ஆகிறார்கள்.
"விண்ணரசு, தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாகும்."
இயேசு "விண்ணரசை"
தன்திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்திய
"வீட்டுத்தலைவனுக்கு" ஒப்பிடுகிறார்.
நம் எல்லோரையும் விண்ணரசுக்கு அழைக்க வந்தவர் இயேசு.
இயேசு இறைவன், விண்ணக வீட்டின் தலைவர்.
நம் எல்லோரையும் திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தில் உழைக்க அழைத்திருப்பவர் அவரே.
உவமையில் இயேசு
விண்ணரசை
தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற
வீட்டுத்தலைவனுக்கு ஒப்பிடுகிறார்.
விண்ணரசு = வீட்டுத்தலைவர் =
இயேசு, இறைவன்.
உலகத்தில் நாட்டின் அரசன் நாடு அல்ல.
நாடு என்பது மக்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி.
மன்னன் அந்த நிலப்பகுதி அல்ல.
ஆனால், விண்ணகம் என்பது ஒரு இடம் அல்ல.
.
வாழ்க்கை நிலை. அதாவது நம்மைப் படைத்த இறைவனோடு நாம் ஒன்றித்து இருக்கும் பேரின்ப நிலை.
இயேசு விண்ணரசை திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடவில்லை.
திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களை அழைக்கும் உரிமையாளருக்கு ஒப்பிடுகிறார்.
திராட்சைத் தோட்டம் : திருச்சபை
அழைத்தது: விண்ணரசு.
அழைக்கப்பட்டோர் : நாம்.
தாய்த் திருச்சபைதான் திராட்சைத் தோட்டம். சிலர் சிறு குழந்தையாய் இருக்கும்போது ஞானஸ்நானம் பெற்று, திருச்சபைக்குள் நுழைந்து சாகும்வரை திருச்சபைக்காக உழைக்கிறார்கள்.
30 வயதில் ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.
50 வயதில் ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.
மரிப்பதற்கு முந்திய நாள் ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.
மரிக்கும்போது ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.
பணிக்காலம் (Service period) எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்காது.
எல்லோருக்குமே விண்ணரசில் இடம் கிடைக்கும், அதாவது, எல்லோரையும் இறைவன்
தன்னோடு இணைத்துக் கொள்கிறார்.
ஏனெனில், அவர் நல்லவர்.
இயேசு விண்ணரசைப் பற்றி பல உவமைகள் கூறியுள்ளார்.
ஒவ்வொரு உவமையும் விண்ணரசின் ஒரு அம்சத்தை விளக்கும்.
திராட்சைத் தோட்ட உவமை
எப்போது மனம் திரும்பினாலும் , விண்ணரசிற்குள் நுழையலாம்
என்ற கருத்தை விளக்குகிறது.
நல்ல கள்ளன் ஒரு நல்ல உதாரணம்.
இயேசு விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்ததன் நோக்கம்,
திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தை நிறுவி,
அதில் உழைக்க நம்மை அழைத்து,
உழைப்பிற்குச் சம்பளமாகத் தன்னையே கொடுப்பதற்காகத்தான்.
திருச்சபையில் நாம் பணி புரிவதற்கு சம்பாவனையாக இயேசுவோடு நித்திய காலம் வாழ்வோம்.
இயேசு உலகில் மனிதனாக வாழ்ந்த காலம் 33 ஆண்டுகள்.
தான் விண்ணகம் செல்லும் முன் தனது பணியை உலகில் தொடர்ந்து செய்வதற்காகத் தன் சீடர்களை அனுப்பினார்.
தான் உலகம் முடியுமட்டும் அவர்களுடன் இருப்பதாக வாக்களித்தார்.
சீடர்கள் ஆற்றிய பணியை அவர்களது வாரிசுகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இயேசுவும் அவர்களோடு இருந்து அவர்களை வழிநடத்தி வருகிறார்.
இன்றும் தன் சீடர்களோடு இருந்து அவரது திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிய அழைப்பு விடுப்பவர் அவர்தான்.
நாம் எல்லோரும் அங்குதான் பணிபுரிகிறோம்.
எல்லோரும் இயேசுவின் விருப்பப்படி பணிபுரிவோம்.
நமக்கு விண்ணரசு, அதாவது, இயேசு நித்தியத்துக்கும். கிடைப்பது உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment