Wednesday, September 30, 2020

வசன வாதி VS விசுவாசி(தொடர்ச்சி)

வசன வாதி  VS விசுவாசி
(தொடர்ச்சி)
---------------------------------------------------------

மனிதன் அவனது அனுபவ அடிப்படையில் 

குற்றத்தின் 
கனாகனத்தை அதற்கான தண்டனை அடிப்படையில்தான் புரிந்து கொள்வான்.

ஒரு குற்றத்திற்கானத் தண்டனை ஒரு மாதம் ஜெயில்.

மற்றொரு குற்றத்திற்கானத் தண்டனை ஒரு வருடம் ஜெயில்.

மற்றொரு குற்றத்திற்கானத் தண்டனை 26 வருடம் ஜெயில்.

26 வருடம் ஜெயில் குற்றம்தான் மிகப் பெரிய குற்றம்,

தண்டனையே இல்லாவிட்டால் அது குற்றமே அல்ல.


"என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்." 

 கடவுளை புறக்கணிப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே மோயீசன்

இலக்கிய யுக்தியைப் பயன்படுத்தி இறைவனுக்கு மனித உணர்வுகளைக் கொடுத்து எழுதியுள்ளார்.


"மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்."

என்று சொல்வதன் மூலம் பாவம் மிகப் பெரியது என்பதை புரிய வைக்கிறார்.

யாரையும் தண்டிப்பது இறைவனின் சுபாவம் அல்ல. 

சின்னக் குறிப்பிடத்தில்

தாய்த் திருச்சபை இறைவனின் ஆறு குணங்களைக்  கூறுகிறது.

அவற்றில் ஒன்று

"அளவில்லாத சகல நன்மை சு௹பியாய் இருக்கிறார்."

 God is infinitely good.

அளவில்லாத சகல நன்மைகளில் அன்பு, இரக்கம், பரிவு, நீதி, ஞானம் போன்ற நன்மைகளைக் குறிக்கும்.

மனித நீதி குற்றவாளியைத் தண்டிக்கும்.

இறை நீதி மனிதர் செய்த பாவங்களுக்கு  தானே பரிகாரம் செய்யும்.

மனித நீதிமன்றத்தில் அன்புக்கு இடமில்லை. தண்டனை அல்லது விடுதலை

இறைவனது நீதியும், அன்பும் சேர்ந்தே இயங்கும், மன்னிப்பதற்காக.

யாரையும் தண்டிப்பது இறைவனின் சுபாவம் அல்ல என்றால், நரகம்?

மோட்சமும், நரகமும் இரண்டும் வாழ்க்கை நிலைகள். (States of life)

 உலகில் இறைவனுக்காக வாழும் மனிதன் மோட்ச நிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.
 
உலகில் இறைவனுக்கு எதிராக வாழும் மனிதன் நரக நிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.
.
இறைவன் மனிதனுக்கு பரிபூரண சுதந்தரைத்தைக் கொடுத்திருக்கிறார்.

தன் சுதந்தரைத்தைப் பயன்படுத்திதான்நரக நிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.

கடவுள் தண்டிப்பதில்லை.

இறந்தவுடன் ஆன்மா அது தேர்ந்தெடுத்த நிலைக்குச் சென்றுவிடுகறது.

பொதுத் தீர்வையின்போது, எல்லோரும் தங்கள், தங்கள் உடலோடு உயிர்த்தெழுந்து

அவரவர் தேர்நதெடுத்த நிலையை அடைவார்கள்.

கடவுள் மாறாதவர். அவரது அன்பும் மாறாது.

மோட்ச நிலையில் உள்ளவர்களையும்,

நரக நிலையில் உள்ளவர்களையும்

அவர் நித்தியமும் அன்பு செய்கிறார்.

மோட்ச நிலையில் உள்ளவர்கள்
அவரது அன்பை அனுபவிப்பார்கள்.

நரக நிலையில் உள்ளவர்கள் அவரது அன்பை அனுபவிக்க மாட்டார்கள்.


அப்படியானால்

."என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்."  க்கு என்ன விளக்கம்?

வசனத்தில் உள்ள இறைச் செய்திதான் இதன் விளக்கம்.

என்ன செய்தி?

*என்னைப் புறக்கணிப்பது மிகப் பெரிய பாவம்.*

இந்த செய்திக்கு  அழுத்தம் கொடுக்கவே வசனம் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

மற்றொரு வசனம்:

"ஆண்டவருக்குக் கோபம் தணிய, தாம் மக்களுக்கு எவ்விதக்கேடும் செய்வதாகச் சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டு விட்டார்." (யாத். 32:14) 

உண்மையில் கடவுளுக்கு கோபமே வராது, அது நமது குணம்,

அவர் தனது திட்டத்தை மாற்றவும் மாட்டார். 

அப்படியானால் கோபம், கேடு, 
செய்யாமல் விட்டு விட்டார் என்ற வார்த்தைகளை 

வசனத்தை எழுதிய மோயீசன் பயன் படுத்துவது ஏன்?

இஸ்ரயேலர்கள் வார்ப்பு வேலையாலான கன்றுக்குட்டியை தொழுதது பாவம்.

மக்கள் செய்த பாவத்தின் கனா கனத்தை உணர்த்தவே

"நமது *கோபம்* அவர்கள் மேல் மூண்டு அவர்களை அழித் தொழிக்கும்."

என்று 10வது வசனத்தில் எழுதி

மோயீசன் மக்கள் சார்பாக மன்றாடிய பின் கோபம் தணிந்ததாக 14வது வசனத்தில் அவர் எழுதியிருக்கிறார்.


எதிர்பாராத ஒரு தவறு நடந்தால் தான் கோபம் வரும். கோபம் உணர்ச்சி வசப்படுதலின் விளைவு. (effect of emotions)

கடவுள் உணர்ச்சி வசப்படுவதற்கு அப்பாற்பட்டவர்.

God is beyond emotions.

கடவுளைப் பொறுத்தமட்டில் எதெது எப்பெப்போ நடக்கும் என்று நித்திய காலமாகவே  தெரியுமே.

அவரால் எப்படிக் கோபப்பட முடியும்?

கோபம் அவரது சுபாவமே இல்லையே.

இருட்டும், ஒளியும் சேர்ந்து இருக்க முடியுமா?

பரிவும், கோபமும் சேர்ந்து இருக்க முடியுமா?

விக்கிரக ஆராதனையின் கனா கனத்தை நமக்கு உணர்த்தவே மோயீசன் கோபம் என்ற மனித உணர்வை இறைவனுக்குக்

 கொடுத்து  எழுதினார்.

நம்மைப் பொறுத்த மட்டில் ஒரு காரியம் நல்லதா கெட்டதா என்பதை 

நமக்கு சந்தோசம் அல்லது கோபத்தின் அடிப்படையில்தான் தீர்மானிப்போம்.

மகன் ஏதோ ஒரு காரியம் செய்கிறான்.

அதைப் பார்த்து அவனது அப்பா சந்தோசப்பட்டால் அது நல்ல காரியம். 

கோபப்பட்டால் அது கெட்ட காரியம்

ரொம்ப சந்தோசப்பட்டால் அது மிக நல்ல காரியம். 

ரொம்ப  கோபப்பட்டால் அது மிகக் கெட்ட காரியம்.

இறைவன் ரொம்ப கோபப்பட்டார் என்று சொன்னால்தான் மக்களுக்கு தாங்கள் செய்தது பெரிய பாவம் என்பது புரியும்,

இங்கு இலக்கிய யுக்திப்படி கடவுளுக்கு மனித உணர்ச்சிகளைக் கொடுத்திருக்கிறார்.


*கேடு, செய்யாமல் விட்டு விட்டார்.*

முதலாவது கடவுளால் கேடு நினைக்கவே முடியாது. 

இரண்டாவது கடவுள் தனது நித்திய திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறார்.

 *அவரது திட்டத்தில் 'செய்யாமல் விட்டு விடு' என்ற சொற்றொடருக்கே இடமில்லை.*

வசனத்தின் மூலம் இறைவன் தரவிருக்கும் செய்தியை மட்டுமே உள்வாங்கவேண்டுமே யொழிய, வார்த்தைகளை அல்ல.

"ஆண்டவருக்குக் கோபம் தணிய, தாம் மக்களுக்கு எவ்விதக்கேடும் செய்வதாகச் சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டு விட்டார்" 

சொல்லும் செய்தி

* கடவுள் இரக்கம் உள்ளவர். நமது பாவம் எவ்வளவு பெரியதாய்  இருந்தாலும் மன்னிக்கக் கூடியவர்.*

மற்றொரு வசனம்:

"ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.

3 நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.

4 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."
(யாத். 20: 2 - 5)

4வது வசனத்தைச் சொல்லிச் சொல்லி பிரிந்து சென்ற நம் சகோதரர்கள் நம்மை விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்கிறார்கள்.

வசனத்தின் உண்மையான பொருள் அவர்களுக்கும் தெரியும். தெரியாத அளவுக்கு அவர்கள் படியாதவர்கள் அல்ல.

ஆனால் தெரியாதது மாதிரி நடிப்பார்கள்.

ஒரு பையனுக்கு ஒரு அப்பாதான் இருக்க முடியும், அவர் அவனை பெற்றவர்.

 நமக்கு ஒரு கடவுள்தான்  இருக்க முடியும், அவர் நம்மை படைத்தவர்.

வேறு தேவர்கள் இருக்க முடியாது. 

எகிப்தில் வாழ்ந்த அஞ்ஞானிகள் இல்லாத தேவர்களுக்கு விக்கிரகங்கள் செய்து அவற்றை ஆராதித்து  வந்தார்கள்.

அவர்களோடு வெகுநாள் வாழ நேரிட்ட இஸ்ரயேலர்களுக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. 

அவர்களுக்கு கடவுள் மோயீசன் மூலம் அறிவுரை கூறினார். 

"நானே உங்களைப் படைத்து பராமரித்து வரும் கடவுள். நீங்கள் ஆராதிக்க வேண்டியது என்னை மட்டும்தான்.
 

ஆராதிப்பதற்கென்று
விக்கிரகம் எதையும் நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்"

இதுதான் வசனங்களின் பொருள்.

*எகிப்தில் இருக்கும்போது அவர்கள் சிலை செய்தது*

*அவர்களைப்  படைத்த உருவம் இல்லாத கடவுளுக்கு அல்ல,* 

இல்லாத கடவுளுக்கு.

ஆகவே நமது நண்பர்கள் கூறுவது போல, யாரும், Pagans உட்பட, உண்மையான, உருவம் அற்ற கடவுளுக்கு சிலை வைக்கவில்லை.

"கடவுளுக்கு உருவம் இல்லையே, எப்படி சிலை வைக்கலாம்?" என்ற கேள்வி அர்த்தம் இல்லாதது.

உண்மையான கடவுளுக்கு யாரும் சிலை வைக்கவில்லை.

எகிப்தியர்
ஆராதிப்பதற்கென்றே சிலை செய்தார்கள். சிலையை கடவுள் என்று அவர்கள்  கூறிக்கொண்டார்கள்.
அதை ஆராதித்தார்கள்.

ஆராதிப்பதற்கென்று செய்யப்பட்ட சிலைதான் விக்கிரகம்.

ஆராதிப்பதற்காக அல்லாமல் மற்ற பயன்பாட்டிற்காக செய்யப்படும் உருவங்கள் விக்கிரகங்கள் அல்ல.

ஆராதிப்பதற்கு என்று விக்கிரகங்கள் செய்வதுதான் பாவம்.

"பொன் தகட்டால் இரண்டு கேருபிம் செய்து மூலத்தானத்தின் இரு புறமும் வைக்கக்கடவாய்.


19 பக்கத்திற்கு ஒன்றாக அவற்றை இருபக்கமும் வைக்கக்கடவாய்.


20 அந்தக் கேருபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையையும் கடவுள் பேசும் மூலத்தானத்தையும் மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர் முகமுள்ளவைகளுமாய் இருப்பனவாக."
(யாத்.25:18-20)

இதையும் சொன்னவர் இறைவன் தான்.

கேருபிம்கள் ஆராதிப்பதற்காகச் செய்யப்படவில்லை.

அதே போல்தான்

கத்தோலிக்கர்கள் ஆராதிப்பதற்காக சுருபங்களைச் செய்யவில்லை.

உருவம் அற்ற கடவுளுக்கு சுருபங்களைச் செய்யவில்லை.

உருவம் அற்ற இறைமகன் மனிதனாய் பிறந்தார்.

இயேசுவுக்கு நம்மைப் போலவே உருவம் இருந்தது.

மனித உரு எடுத்த இயேசு நம்மைப் போலவே வாழ்ந்தார், கஷ்டப்பட்டார், மரித்தார்.

மனித உரு எடுத்த இயேசுவுக்கு சுரூபங்கள் செய்திருக்கிறோம்,

ஆராதிக்க அல்ல.

நற்கருணை நாதரை மட்டுமே ஆராதிக்கின்றோம்.

புனிதர்களுக்கு சுரூபங்கள் செய்திருக்கிறோம், ஆராதிக்க அல்ல. 

 அப்படியானால், எதற்காக?

(தொடரும்)

லூர்து செல்வம்.

Tuesday, September 29, 2020

வசன வாதி VS விசுவாசி.

http://lrdselvam.blogspot.com/2020/09/vs.html


வசன வாதி  VS விசுவாசி
---------------------------------------------------------

அதென்ன வசனவாதி, விசுவாசி?

பேசியவரை நம்புவதைவிட அவர் பேசிய வசனத்தை நம்புபவர் வசன வாதி.
                     
வசனத்தைவிட அதைச் சொன்னவரை  நம்புபவர் விசுவாசி.

                       **
வசனத்தின் அடிப்படையில் பேசியவரை மதிப்பிடுபவர் வசனவாதி,

பேசியவரின் அடிப்படையில் வசனத்தை மதிப்பிடுபவர் விசுவாசி.


இங்கு நாம் வசனம் என்று சொல்வது இறைவாக்கு. (பைபிள்)

இறைவாக்குக்கு சரியான பொருள் காணவேண்டுமானால்,

முதலில் அந்தவாக்கைச் சொன்ன இறைவனைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

We must know God well before Interpreting His Word.

வசன வாதி சொல்வான்,

" தன் வசனத்தின் மூலம் தான் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார்.

வசனத்தை வாசிக்கு முன் எப்படி இறைவனைப் பற்றி நன்கு அறிய முடியும்?"

இதற்குப் பதில் கூறுமுன் ஒரு அடிப்படை உண்மையை முதலில்
புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு  ஆள் ஒரு பையனைப் பார்த்து கோபமாகக் கத்துகிறார்,

"Get out and get lost. திரும்பி வந்த 
கொன்னுப்புடுவேன்."

அவர் சொன்ன வார்த்தைகள் பயங்கரமாக தெரிகின்றன அல்லவா.

உண்மையில் அவை எப்படிப்பட்டவை என்பதை அறிந்துகொள்ள முதலில் சொன்னவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேற்படி வசனத்தை நான் வகுப்பில் பல முறை பயன்படுத்தி இருக்கிறேன்.

நான் ஒரு ஆசிரியர்.

ஆசிரியர் மாணவனைப் பார்த்து பேசுவதற்கும், அவனோடு சம்பந்தம் இல்லாதவர் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனது வார்த்தைக்கு மாணவனின் reaction எப்படி இருந்தது என்பதை கவனித்தால் வார்த்தைகளின் உண்மையான பொருள் புரியும்.

மாணவனுக்கு நான் யார் என்பது தெரியும்.

 எனது ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள் என்று அவனுக்கும் தெரியும்.

 யார் யாரிடம் எப்படிப் பேசினால் என்ன விளைவு ஏற்படும் என்று ஆசிரியருக்கும் தெரியும்.

எல்லா ஆசிரியர்களும் Child psychology படித்துவிட்டுதான் வேலைக்கு வருவார்கள்.

"Get out and get lost. திரும்பி வந்த 
கொன்னுப்புடுவேன்,"

என்று சொன்னதும்,

 அவன் 

" சார் சார் மன்னிச்சுடுங்க சார்.

 இனிமேல் ஒழுங்காக இருப்பேன் சார்.

 சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவேன், சார்.

 வீட்டுப் பாடங்களைப் படித்து விட்டு வருவேன் சார்.

 இனி அப்படி வராவிட்டால் என்னை வெளியே அனுப்புங்கள் சார்."

" வராதவனை எப்படில வெளியே அனுப்ப முடியும்?"

வகுப்பில் சிரிப்பு.

" சரி, சரி. இனிமேலாவது ஒழுங்காக நட. போய் இடத்தில உட்கார்."

ஆசிரியரது வார்த்தைகள் கடினமாக இருக்கலாம்.

 ஆனால் அவை மாணவனின் நலன் கருதியே சொல்லப்படுகின்றன.

 அவர் திட்டும் போது அவரது வார்த்தைகளுக்கு அகராதி அர்த்தம் (Dictionary meaning) கொடுக்கக் கூடாது.

ஆசிரியர் திட்டும் போதே  திட்டுவது ஆசிரியர் என்று மாணவனுக்குத் தெரியும்.

மாணவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்தான் என்று மாணவனுக்குத் தெரியும்.

தெரிந்திருக்காவிட்டால் தன் வெற்றிக்காக தன்னை அவரிடம் ஒப்படைத்திருக்க மாட்டான்.

இந்த அடிப்படையில்தான் மாணவன் ஆசிரியரின் கூற்றுக்குப் பொருள் கொடுக்க வேண்டும்.

பைபிள் எழுதப்படுவதற்கு முன்பேயே மக்களிடம் இறை நம்பிக்கை இருக்கிறது.

நாத்திகம் தோன்றுவதற்கு முன்பேயே மக்களிடம் இறை நம்பிக்கை இருக்கிறது.

உலகில் தோன்றிய எல்லா சமையங்களுமே இறைவன் அன்பு உள்ளவர் என்றே போதிக்கின்றன.

கிறிஸ்தவ சமயத்தில் பிறந்து வளர்ந்த நமக்கு பைபிளை கையில் எடுக்கும் முன்பே கடவுள் நம் மீது அன்பு உள்ளவர் என்று தெரியும்.

நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனு உரு எடுத்தார் என்றும், அதற்காகவே பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார் எனவும்,

இதை எல்லாம் நம் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே செய்தார் எனவும்

பைபிளை கையில் எடுக்கும் முன்பே  நமக்குத் தெரியும்.

கடவுள் அன்பு மயமானவர் விசுவாச உணர்வோடு பைபிளைக் கையில் எடுக்கும் நாம்

அந்த அடிப்படையில்தான் நாம் வாசிக்கும் வசனங்களுக்கு விளக்கம்  காணவேண்டும்.

பைபிள் வசனங்களுக்கு அகராதி அர்த்தம் கொடுத்தால்

அவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இறைவனைப் பற்றி நினைக்க நேரிடும்.

உதாரணத்திற்கு ஒரு வசனம்:


"என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்." 
 (யாத்.20:5)
.
இந்த வசனத்தை வாசித்து விட்டு அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே  பொருள் கொண்டால்

இறைவன் நமது பெற்றோர் செய்த பாவத்திற்காக 

பாவம் செய்யாத நம்மையும், 

நம் பிள்ளைகளையும் தண்டிப்பார் என்று தோன்றவில்லை?  

கடவுள் அன்பு மயமானவர் என்று நமக்குத் தெரியும். 

God is Love.

அன்பிற்குள் அன்போடு ஒத்து வராத எந்த பண்பும் இருக்க முடியாது.

இரக்கம், பரிவு, மன்னிப்பு ஆகிய பண்புகள் அன்போடு சம்பந்தம் உள்ளவை. அவை அன்போடு இருக்கும். 

அன்பைப் போலவே அவையும் அளவில்லாதவை.

இறை அன்பிற்குள் கோபம், உணர்ச்சி வசப்படுதல், தண்டிக்கும் மனப்பான்மை ஆகியவை இருக்க முடியாது.

இறைவன் அன்பு செய்பவர், வெறுப்பவர் அல்ல.

சாந்தமுள்ளவர், கோபப்படுபவர் அல்ல.

மன்னிப்வர், தண்டிப்பவர் அல்ல.

ஆனால் இறை வசனம் அப்படிச் சொல்கிறதே.

பைபிளை வாசித்து ஒழுங்காகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சில அடிப்படை உண்மைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 



கடவுள் காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டவர்.

God is beyond time and space

நாம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள்.

நம்மால் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட விசயங்களை மட்டுமே புரிந்து கொள்ள முடியும், அப்பாற்பட்ட விசயங்களை புரிந்து கொள்ள முடியாது.

கடவுள் அளவு கடந்தவர், நாம் அளவுள்ளவர்கள்.

அளவு கடந்த விசயங்களை அளவுள்ள நம்மால் புரிந்துகொள்ள இயலாது.

கடவுள் உருவம் அற்றவர். நாம் உருவம்  உள்ளவர்கள்.

கடவுள் மாறாதவர், நாம் மாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.

கடவுள் வலி, துன்பம், உணர்ச்சிவசப்படுதல் (emotions) ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்.

நாம் அவற்றுக்கு உட்பட்டவர்கள்.

அளவுள்ள நம்மை படைத்த அளவு இல்லாத கடவுள் நம்மை நன்கு புரிந்து கொள்கிறார்.

ஆனால் அளவு உள்ள நம்மால் அளவற்ற கடவுளை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது..

நம்மால் கால வரையறைக்கு உட்பட்ட 

நமது உணர்ச்சிகளுக்கு உட்பட்ட

 நமது அனுபவங்களுக்கு உட்பட்ட விஷயங்களை மட்டும்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பைபிள் இறைவனின் தூண்டுதலால் (inspiration) எழுதப்பட்டது. 

தூண்டியது கடவுள், எழுதியது மனிதர்.

இறைவாக்கினர் மனதில் கடவுள் அவருடைய செய்தியை தூண்டுகிறார்.

God inspires His message in the minds of the prophets.

இறைவன் உருவமற்றவர் அதேபோல் அவரது  செய்தியும் உருவமற்றது.

உருவம் உள்ளதைத்தான் மனித மனதால் புரிந்துகொள்ள முடியும்.

ஆகவே இறைவனது செய்தியை உணர்ந்த இறைவாக்கினர் 

அதை மனிதருக்குக் கொடுக்கு முன் அதற்கு மனிதரால் புரிந்து கொள்ளக்கூடிய உருவத்தைக் கொடுத்து 

செய்தி அவர்களுக்குச்  சென்று அடையும் வகையில் அவர்கள் பேசிய மொழியிலேயே அவர்களுக்கு அளித்தார்கள்.

கடவுளுக்கு உருவம் கிடையாது.

உருவம் உள்ளவர் பேசி கேட்டு தான் மக்களுக்கு அனுபவம்.

ஆகவே கடவுளுக்கு நமது உருவத்தையும் கொடுத்தார்கள்.
(anthropomorphism)

நமது உணர்ச்சிகளையும் கொடுத்தார்கள்.
(Anthropopathism)

இது ஒரு இலக்கிய யுக்தி.
(Literary technique.)

(தொடரும்) 

லூர்து செல்வம்

Monday, September 28, 2020

*புண்ணியங்களின் அரசி.*

http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_28.html



*புண்ணியங்களின் அரசி.*
***    ***    ***    ***     ***       ***



தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி.

Humility is the Queen of all the virtues.

தாழ்மை என்ற சொல்லிலிருந்து பிறந்தது தாழ்ச்சி.

சர்வமும் ஆன கடவுளுக்கு முன் நாம் ஒன்றுமே இல்லாதவர்கள்.

கடவுள்  மேன்மையானவர்.
நாம் தாழ்மையானவர்கள்.

நமது உண்மையான  நிலையை, ஒன்றுமில்லாமையை ஏற்றுக் கொள்வதுதான் தாழ்ச்சி.

நாம் இறைவனின் படைப்பாகையால் நமது இருப்பிற்கு ( Existence) அவரையே
சார்ந்திருக்கிறோம்.

நாம் அவரையே
சார்ந்திருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொண்டால் தான்,

நாம்  தொடர்ந்து இருப்பதற்கான அருள்வரங்களைக் கேட்டுக் கொண்டேயிருப்போம்.

அதை ஏற்றுக்கொள்ளா விட்டால், 

நாம் சுயமாக இயங்கலாம் என்று எண்ணிக்கொண்டு,

 அவரிடம் உதவி ஏதும் கேட்க மாட்டோம்.

அவருடைய உதவி இல்லாமல். நமது வாழ்வின் நோக்கத்தை அடைய முடியாது.

ஆகவே நமது ஞான வாழ்வு (Spiritual life) தாழ்ச்சியில்தான் ஆரம்பிக்கிறது.

"நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்." (மத்.11:29)

அவர் சர்வ வல்லவராய் இருந்தாலும்,

இயேசு தந்தைக்கும் அவருக்கும் ஒரே சித்தமாய் இருந்தாலும்

 பேசும்போது தன் தந்தையையே முன்னிருத்தி பேசுவார்.

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்." (அரு. 6:38)

இது நமக்கு முன்மாதிரிகையாக இருப்பதற்காக.

நாமும் நமது வாழ்நாளில் எதையாவது சாதித்தால், அது இறைவன் அருளால்தான், நமது திறமையினால் அல்ல என்பதை உணரவேண்டும்.

சுயமாக நம்மால் ஒரு அணுவைக் கூட அசைக்க முடியாது.

நாம் எதைச் செய்தாலும்

நமது திறமையை வெளி காட்டுவதற்காகச் செய்யக் கூடாது.

  நமக்குச் சொந்தமான திறமை ஒன்றுகூட நம்மிடம் இல்லை.

 நம்மிடம் இருப்பதெல்லாம் இறைவன் நமக்குத் தந்த  நன் கொடையே,

 ஆகவே நாம் எதை செய்தாலும் 

 *இறைவனின் அதிமிக மகிமைக்காக*

 என்ற மகத்தான நோக்கத்திற்காகச் செய்ய வேண்டும்.

அதைச் செய்து முடித்த பின்பு,

'அது இறைவனின் அருளால் மட்டும் சாத்தியமாயிற்று'
 
என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்தி,

 அவரை மகிமைப்படுத்த வேண்டும்.

இறைவனின் அதிமிக மகிமைக்காக சாதனைகள் புரிய வேண்டுமென்றால் 

முதலில் நம்மையே முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

 அவரை நம்மில் செயலாற்ற விட்டுவிட வேண்டும்.

 நாம் அவரது கருவியாக மட்டும் பயன்பட  வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்பதற்காக தூண்டுதல்களை (inspirations)

அவரே நமது உள்ளத்தில் கொடுப்பார்.

 நாம் அவரது தூண்டுதல் படி செயல்புரிய வேண்டும்.

இப்போது செயல்படுவது நாம் அல்ல, இறைவனே நம்மில் செயல் ஆற்றுவார்.

 நாம் கொடுக்க வேண்டியதுதான் நம்முடைய ஒத்துழைப்பை மட்டும்தான்.

 சாதனையின் முடிவில் நமக்குத் தெரியும், சாதித்தது நாம் அல்ல,

  இறைவனே நம்மை கருவியாக பயன்படுத்து சாதித்துள்ளார் என்று.

 ஆகவே அதன் மகிமை முற்றிலும் அவருக்குச் சேர வேண்டும்.

 நம்மை கருவியாக பயன்படுத்திய மைக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.

நமது இயலாமையையும் ஒன்றுமில்லாமையையும் நாம் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டால்

 இறைவன் பெரிய பெரிய சாதனைகளை சாதிக்க நம்மைக் கருவியாக பயன்படுத்திக் கொள்வார்.

நாம் ஒவ்வொரு நாளையும் 
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்தால் 

நம்மில் வாழும் திரியேக தேவன் அன்றைய நாள் முழுவதும் நம்மில் செயலாற்றி கொண்டிருப்பார்.

நாளை மட்டுமல்ல,

 ஒவ்வொரு வேலையையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பரிசுத்த  தமதிரித்துவத்தின் பெயராலேயே ஆரம்பிக்க வேண்டும்.

தாழ்ச்சியால் மிக மேன்மையான காரியங்களைச் சாதிக்க முடியும்.

மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த  இறைவன் மனத் தாழ்ச்சி உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்.

மரியாளின் தாழ்ச்சிதான் அவளை இரட்சகரின் தாயாகும் தகுதியைப் பெற்றுக் கொடுத்தது.

*"தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார்.* 

இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.


 *ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர்  புனிதமாமே."*

என்ற மரியாளின் வார்த்தைகள்

*அடிமையான* அவளுக்கு வல்லமை மிக்கவர் அரும்பெரும் செயல் பல புரிந்ததை சுட்டிக் காண்பிக்கின்றன.

தாழ்ச்சி உள்ளவர்களையே இறைவன் மேன்மைப்படுத்துவார்.

13ம் நூற்றாண்டில் பொருளாசையினால் ஏற்பட்ட தீமைகளிலிருந்து திருச்சபையைக் காப்பாற்ற அசிசி நகர் *ஏழையை* இறைவன் தேர்ந்தெடுத்தார்.

ஏழ்மையின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவே அவர் பிரான்சிஸ்கன் சபையை நிருவினார்.

பிரான்சிஸ் அசிசி தாழ்ச்சி மிக்கவர். புனிதத்துவம் மிக்கவராய் இருந்தாலும்,

 குருத்துவ அந்தஸ்துக்கு தான் தகுதி இல்லை எனக் கருதி 

கடைசி வரை சகோதரராகவே வாழ்ந்தார்.

"தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி."

என்ற வாக்கியத்திலேயே தாழ்ச்சியின் பெருமை இருக்கிறது.

அரசி என்றால் ஆள்பவள். உயர்ந்தவள்.

தன்னையே தாழ்த்திக்கொள்ளும் தாழ்ச்சி மற்ற புண்ணியங்களை விட உயர்ந்தது. 

தாழ்ச்சி உள்ளவர்கள்தான் 

பொறுமை,
கற்பு,
உதாரம்,
மட்டசனம்,
பிறர் சிநேகம்.
சுறுசுறுப்பு.

ஆகிய மற்ற புண்ணியங்களையும் 
உடையவர்கள் ஆக முடியும்.


"தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்." (மத்.23:12)
என்பது இயேசுவின் வாக்கு. 

நமது ஒன்றுமில்லாமையை ஏற்றுக் கொள்வோம்.

எல்லாம் வல்ல இறைவன் நம்மை விண்ணகத்துக்குள் ஏற்றுக்கொள்வார்.

லூர்து செல்வம்.

Sunday, September 27, 2020

*"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்".*

*"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்".*
***    ***    ***    ***     ***       ***

சோதனைகள் வரும்.
சோதிப்பவன் சோதித்துக் கொண்டுதான் இருப்பான். அவனை மாற்ற நம்மால் முடியாது.

ஆனால் சோதனையில் விழாமல் இருக்க நம்மால் முடியும், இறைவன் அருளோடு.

நல்ல வாழ்வு வாழ தேவையான அருளை நமக்கு இறைவன் தந்து கொண்டு இருக்கிறார்.

ஆனால்  அந்த அருளை நிராகரித்து, பாவம் செய்யும் படி சாத்தான் நம்மைத் தூண்டிக் கொண்டே யிருப்பான்.

நமது முதல் பெற்றோரை அவன் சோதித்து அவர்களைப் பாவத்தில் விழ வைத்தது நமது ஜென்மப் பாவத்திற்கான காரணம்.

ஜென்மப் பாவம் நமது ஆன்மாவைப் பலகீனப்படுத்தி விட்டது.

இந்த பலகீனம்தான் நாம் சோதனையை வெல்ல கஷ்டப் படுவதற்குக் காரணம்.

ஆனால், நமது பாவத்திற்கான முழுப்பழியையும் சாத்தான் மீது போட்டுவிட்டு நாம் தப்பிக்க முடியாது.

இதைத்தான் நமது முதல் பெற்றோர் செய்தார்கள்.

ஆதாம் ஏவாள் மீது பழியைப் போட்டான்.

போடும்போது கடவுளையும் அந்த  list ல் சேர்த்துக் கொண்டான்.

"எனக்குத் துணைவியாய் இருக்கும்படி

நீர் எனக்குத் தந்தருளிய அந்தப் பெண்ணே

அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்"

ஏவாள் சாத்தான் மீது பழியைப் போட்டாள்.

கடவுள் நம்மிடம் வந்து

"ஏன் பாவம் செய்தாய்?"

என்று கேட்டால்,

" நீர் எனக்குத் தந்த உடல் தான் தன் இச்சையைப் பூர்த்தி செய்ய என்னைத் தூண்டியது.

நீர் படைத்த எனது முதல் பெற்றோர் தங்களது பாவத்தினால் என்னைப் பலகீனப்படுத்திவிட்டார்கள்."

என்போம்.

" ஏன்  அப்படிச் சொல்கிறாய்?". என்று கேட்டால்,

" இது பரம்பரை குணம். ஆதாமின் gene தான் எங்களிடம் உள்ளது"

என்று அறிவியல் ரீதியாக பதில் சொல்வோம்.

ஆனால் இந்த மாதிரி பேசுவதால் problem solve ஆகிவிடாது. 

இறைமகன் இயேசுவின் அணுகு முறையையே நாம் பின்பற்ற வேண்டும்.

இயேசுவால் பாவம் செய்ய முடியாது.

ஆனாலும் நாம் செய்த பாவங்களை எல்லாம் தன்மேல் சுமந்து கொண்டு நாம் செய்திருக்க வேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்.

அப்படியானால் நாம் பரிகாரம் செய்ய வேண்டாமா?

இயேசு தான் செய்த பரிகாரத்தின் மூலம் பாவ மன்னிப்பிற்கான கதவைத் திறந்து வைத்துவிட்டார்.

நாம் பிறர் மீது பழி போடும் பழக்கத்தை விட்டு விட்டு,

நாம் செய்த பாவங்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொண்டு,

அவற்றிற்காக மனஸ்தாபப்பட்டு இறைவனின் மன்னிப்பைக் கோர வேண்டும்.

  சிலர்

"இயேசு நாம் செய்த பாவங்களுக்கான பரிகாரத்தைச் செய்துவிட்டார். இனி நமக்குக் கவலை இல்லை. விசுவசித்தாலே போதும், நாம் இரட்சிக்கப்பட்டு விடுவோம்."

என்று நினைப்பது போல் தெரிகிறது.

அது தவறு.

அவர் தனது சிலுவைப் பலியின் மூலம் நமது பாவமன்னிப்பிற்கான ஏற்பாட்டைச்  செய்து விட்டார்.

அவர் ஏற்பாடு செய்து விட்ட பாவமன்னிப்பைப் பெற விசுவசித்தால் மட்டும் போதாது.

நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும், பரிகாரம் செய்யவும் வேண்டும்.

பாவச் சோதனைகளுக்குள் விழாதபடி கவனமாய் இருக்க வேண்டும்

அநேக சமயங்களில் சாத்தான் வந்து நம்மைச் சோதிப்பதைவிட  நாம்தான் சோதனையைத் தேடிப் போய் மாட்டிக் கொள்வோம்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

மதுவிலிருந்து விடுபட விரும்புகிறவன் மதுக்கடை பக்கம் போகக் கூடாது.

சூதாட்டத்திலிருந்து தப்பிக்க விரும்புகிறவன் சூதாடிகளின் நட்பைக் கைவிட வேண்டும்.

பழைய அனுபவங்கள் மூலம் பாவச் சோதனைக்கான இடங்களைக் கண்டறிந்து, அங்கு போவதைத் தவிர்க்க வேண்டும்.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இக்காலத்தில், பாவச் சோதனைகளைத் தேடிப்போகாமல் அவற்றை வீட்டிற்கே கொண்டு வந்து விடுகிறோம்.

ஒழுங்காகப் பயன்படுத்துபவர்களுக்கு உதவிகரமாய் இருக்கக்கூடிய Smartphone ம், TV.யும்,

தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சாத்தான்களாக மாறிவிடுகின்றன.

ஒவ்வொரு நாளும்

" எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்"

என்று பல முறை நமது விண்ணகத் தந்தையை நோக்கி ஜெபிக்கிறோம்.

நாம் சோதனைக்குள் விழாதபடி நமக்கு உதவி செய்யப் போதுமான அருள் வரத்தைத் தந்தை தருகிறார்.

ஆனால் நமது ஒத்துழைப்பும் இருந்தால்தான் இறைவன் அருள் நமக்கு உதவியாய் இருக்கும்.

உதட்டளவில் இறைவன் அருளை வேண்டி விட்டு, செயலளவில் நாமே சோதனைக்குள் குதித்தால்

ஏற்படும் பாதிப்புக்கு நாம்தான் பொறுப்பு.

திருப்பலியைப் பார்க்க எண்ணிக் கொண்டு Youtubeற்குள் நுழைவோம்.

ஆனால் அதைத் தேடிக் கொண்டிருக்கும்போதே தேவையற்ற வீடியோக்கள் குறுக்கே பாயும்.

கண்ணை மூடிக்கொண்டு திருப்பலியை நோக்கி நகர வேண்டும்.

"கொஞ்சம் போல பார்த்து விட்டு போவோம்"  என்று நின்றால்,

"கொஞ்சம் போல  ருசி பார்த்து விட்டுப் போவோம்" என்று ஆரம்பித்துவிட்டு

முழுப்பாட்டிலுக்குள்ளும் விழுந்து விட்ட குடிகாரன் கதைதான்.

நாம் சோதனைக்கு இடம் கொடுக்கவும் கூடாது, அதற்குள் விழவும் கூடாது

அதை விட முக்கியம் ஒன்று இருக்கிறது.

நாம் மற்றவர்களுக்குச் சோதனையாக மாறிவிடக் கூடாது.

*பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாக இருக்க வேண்டும்.*

*முன்மாதிரிகையாக இல்லாத பெற்றோர் பிள்ளைகளுக்கு சோதனையாக மாறிவிடுகிறார்கள்.*

அப்பா ஞாயிற்றுக் கிழமை பூசைக்குப் போகாதவறாய் இருந்தால்,

அம்மாவுடன் பூசைக்குப் போகும் பையனுக்கு

" அப்பாவைப் போல் ஒரு நாள் இருந்தால் என்ன?" என்று சோதனை வரும்.

அப்பா மதுக்கடைக்குப் போனால் மகனுக்கும் சோதனை வரும்.

பையன் வீட்டில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது இடையிடையே போனை எடுத்து பேசிக்கொண்டிருந்தான்.

அப்பா சொன்னார்,

"ஏல, பாடம் படிக்கும்போது பாடத்தை மட்டும் படி,

இடையிடையே phoneல் பேசி நேரத்தை வீணாக்காதே."

மகன் சொன்னான்,

" நீங்க மட்டும் பூசை நேரத்தில phone பேசலாமோ?"

நான் ஆசிரியர். நானே வகுப்பிற்கு அடிக்கடி பிந்திச் சென்றால் என் மாணவர்களிடம் பிந்தி வரக்கூடாது என்று சொல்ல முடியுமா?

பொறுப்பில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.

கோவில் இறை வழிபாட்டிற்கான இடம். கோவிலுக்கு வருபவர்கள்  எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு சோதனையாக இருந்து விடக்கூடாது.

சிலருடைய indecent dress பலருடைய பராக்குக்கு காரணமாகிவிடும்.

பூசை நேரத்தில் வெளியே நின்று பேசிக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களுக்கும் சோதனையாய் இருக்கிறார்கள்.

ஞாயிற்றுக் கிழமை பூசைக்கு வராதவர்களை விட,

வந்து, வந்திருக்கும் மற்றவர்களுக்குச் சோதனையாய் இருப்பவர்கள்தான் பெரிய குற்றவாளிகள்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு.

"மேய்த மாட்டைக் கெடுக்குமாம் மெனக்கெட்ட மாடு."

விபசாயி இரண்டு மாடுகளை மேய விட்டிருப்பான்.

ஒரு மாடு மேய்ந்து கொண்டிருக்கும்.

அடுத்த மாடு அதன் பக்கத்தில் போய்ப் படுத்துக் கொள்ளும்.

அதைப் பார்த்த அடுத்த மாடும் படுத்துக் கொள்ளும்.

அண்ணன் பக்தியுடன் பைபிள் வாசித்துக் கொண்டிருப்பான்.

தம்பி அங்கு வந்து அமர்ந்து அவனுடைய phoneல் சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுவான்.

கொஞ்ச நேரத்தில் அண்ணனும் பைபிளைக் கீழே வைத்துவிட்டு தம்பியுடன் சேர்ந்து கொள்வான்.

"ஏங்க, எழுந்திருங்க, மணி ஏழாகுது, எட்டு மணிக்குப் பூசை."

"எட்டு மணிக்குத்தான. ஏழே முக்காலுக்குப் புறப்பட்டால் போதாது?"

" அதற்கு முன் பல் தேய்த்துவிட்டு, குளிக்க வேண்டாம்?"

" நீ போ. நான் எப்படியும் வந்துவிடுவேன்."

தான் போய்விட்டால் கணவன் தப்பித்து விடுவான் என்று அவளுக்குத் தெரியும்.

" அதெல்லாம் முடியாது. சேர்ந்து தான் போக வேண்டும்."

பாடா பட்டு புருசனை எழுப்பி,  தயார் செய்து, கோவிலுக்குத் தள்ளிக்கொண்டு சேர்க்கும்போது சாமியார் பிரசங்கத்தை முடித்துவிட்டார்!

வீட்டுக்கு வந்தவுடன்:

" Sorry டா!"

" எதுக்கு?"

"இன்பத்திலும், துன்பத்திலும் பங்குன்னு சொல்லி கைப் பிடித்தோம்.

ஆனால் இன்று என்னுடைய பாவத்திலும் பங்கு எடுத்துக் கொண்டாயே!

போனது போகட்டும்.

அடுத்த வாரத்திலிருந்து உனக்கு முன்னாலேயே பூசைக்கு புறப்பட்டு  நிற்பேன், போதுமா?"

" Thanks ங்க."

நாமே யாருக்கும் சோதனையாய் இருந்து விடாதபடி பார்த்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, September 26, 2020

*நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?*

http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_26.html

*நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?*
---------------------------------------------------------
நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?

இதற்குறிய  பதில் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

சிலர் உடலையடுத்த வாழ்வையும் ஆன்மாவிற்காக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

சிலர் ஆன்மாவையடுத்த வாழ்வையும் உடலுக்காக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

கேள்வியை மாற்றிக் கேட்போம்.

நாம் இவ்வுலகில் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?

ஒருவன் கல்லூரியில் admission போடுவதற்காக admission fees சோடு சென்னைக்குப் போய்க்  கொண்டிருக்கிறான்.

" என்ன வேலையாக சென்னைக்குப் போகிறாய்?" " என்று கேட்டால்,

"கல்லூரியில் admission போடுவதற்காக"

என்று சொல்வானா, அல்லது,

"கையில்  இருக்கும் பணத்தை கல்லூரியில் கொடுத்து விட்டு வருவதற்காக."

என்று சொல்வானா?

நாம் உடலோடும், ஆன்மாவோடும் வாழ்கின்றோம்.

ஆன்மாவுக்காக உடல் வாழ்ந்தால் நாம் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

உடலுக்காக ஆன்மா வாழ்ந்தால் நாம் வாழ்வது உடலையடுத்த வாழ்வு.

ஏதாவது ஒரு வாழ்வு தான் நம்மால் வாழ முடியும்.

கிறிஸ்தவர்களாகிய நாம்இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

ஆன்மீக வாழ்விற்கான உணவு நாம் இறைவனிடமிருந்து பெறும் அருள் வரங்கள்.

நமது ஆன்மீக வாழ்விற்கான அருள் வரங்களை

இறைவனிடமிருந்து நம்மிடம் கொண்டுவரும்  வாய்க்கால்கள் ஏழு தேவத்திரவிய அனுமானங்கள்.

ஞானஸ்நானம், உறுதிப்பூசுதல், நற்கருணை, பாவசங்கீர்த்தனம்,  திருமணம், குருத்துவம், அவஸ்தைப் பூசுதல்.

இந்த ஏழில் ஞானஸ்நானம், பாவசங்கீர்த்தனம், அவஸ்தைப் பூசுதல் ஆகிய மூன்றும் பாவமன்னிப்புக்கு உரியவை.

நற்கருணை (திருப்பலி) பாவப் பரிகாரத்துக்கு உரியது.

பாவப் பரிகாரமாக திருப்பலி ஒப்புக்கொடுக்கிறோம். பலி முடிந்தவுடன் பலிப்பொருளை உண்கிறோம்.

உறுதிப்பூசுதல் மூலம் பாவம் செய்யாதிருக்கவும், ஆன்மீகத்தில் வளரவும் வேண்டிய திடனைப் பெறுகிறோம்.

திருமணம் மூலம் குடும்ப ஆன்மீக வாழ்வைத் தொடங்குகிறோம்.

குருத்துவம் கிறிஸ்துவின் பிரதிநிதிகளை உருவாக்குகிறது. அவர்கள் மூலம் கிறிஸ்து நம் பாவங்களை மன்னிக்கிறார்.

ஆக ஏழில் நான்கு தேவத்திரவிய அனுமானங்கள் பாவமன்னிப்பு, பாவப் பரிகாரம் சம்பந்தப்பட்டவை.

இதிலிருந்து நமது ஆன்மீக வாழ்வில் பாவமன்னிப்பும், பாவப் பரிகாரமும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

அவை இல்லாமல் மீட்பு இல்லை.

திருமண வாழ்வு உலகவாழ்வு அல்ல. முழுக்க முழுக்க ஆன்மீக வாழ்வு.

குழந்தைப்பேறு ஆன்மீகம் சார்ந்த நற்செயல்.

குழந்தைகளை வளர்க்கும்போது இறைவனின்  பிள்ளைகளைத்தான் வளர்க்கிறோம். அதுவும் ஆன்மீகம் சார்ந்த நற்செயலே.

திருமணத்தினால் நாம் அனுபவிக்கும் சிற்றின்பம் ஆன்மீகம் சம்பத்தப்பட்டதா?

திருமணத்தினால் நாம் அனுபவிக்கும் சிற்றின்பம் இறைவனால் தரப்பட்டது.

அதை இறைவனைக்கே  ஒப்புக் கொடுத்தால் அது ஆன்மீகம்
சம்பத்தப்பட்டது.

இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கா விட்டால் அதில் ஆன்மீகம் இருக்காது.

உண்பது, உடுத்துவது, உறங்குவது, நடப்பது, நமது அலுவக வேலை, நமது வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும்

இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்படும்போது ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.

*அதேபோல ஆன்மா சம்பந்தப்பட்ட செயல்களைக் கூட கடவுளுக்காகச் செய்யாமல்*

*உலக நோக்கங்களுக்காகச் செய்தால் அவை தம் ஆன்மீகத் தன்மையை இழந்து விடுகின்றன.*

இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

இயேசு,  உலகம்.

உலகத்தின் பிரதிநிதி பணம்.

பணத்தை இறை ஊழியத்துக்காக பயன்படுத்தும் போது, அது ஆன்மீகத்துக்கு உதவுகிறது.

ஆனால் இறை ஊழியத்திற்கான காரியங்களில் நமது மனது பணத்தின் பக்கம் சாய்ந்து விட்டால்,

நாம் செய்வது இறை ஊழியம் ஆகாது.

இறைவனையே பணம் ஈட்ட பயன் படுத்துவதுபோல் ஆகிவிடும்.

இதைத்தான்  யூதாஸ் செய்தான்.

30 வெளளிக்காசு சம்பாதிக்க இயேசுவை பயன்படுத்திக் கொண்டான்.

மருத்துவ சேவை செய்வது இறை ஊழியம்.

ஆனால் அளவுக்கு மிஞ்சிய பணம் ஈட்ட அதை பயன்படுத்துவது பண ஊழியம்.

கல்விப்பணி செய்வது இறை ஊழியம்.

ஆனால் அதையே பணம் ஈட்ட  பயன்படுத்துவது பண ஊழியம். 

நம்மிடம் ஒரு இயல்பு உண்டு. முதலில் பணத்தைச் 
செலவழிப்பதற்காக ஈட்டுவோம்.

காலப் போக்கில் பணத்தை
பணத்திற்காக ஈட்ட ஆரம்பிப்போம்.

முதலில் பணம் நமக்கு அடிமையாய் இருக்கும்.

அடுத்து நாம் பணத்துக்கு அடிமையாகிவிடுவோம்.

அது நமக்கு அடிமையாய் இருக்கும் போது, அதை இறை ஊழியத்துக்கு பயபடுத்த  நம்மால் முடியும்.

ஆனால் நாம் அதற்கு அடிமையாகிவிட்டால் அதை ஈட்ட எந்த எல்கைக்கும் போவோம், யூதாஸைப் போல.

நாம் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டுமென்றால்,

உடல் சம்பந்தப்பட்ட,

அதாவது உலகம் சம்பந்தப்பட்ட,

அதாவது பணம்  சம்பந்தப்பட்ட வாழ்வு,

நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவியாய் இருக்க வேண்டும்.

உதவியாக இருந்தால்

உலக சம்பந்தப்பட்ட வாழ்வும் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

உலகில் நாம் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்வு மட்டும்தான்.

அதுதான் விண்ணகத்திலும் தொடரும்.

லூர்து செல்வம்.

Friday, September 25, 2020

"அவரைக் காண வாய்ப்புத் தேடினான்."(லூக. 9:9)

.

"அவரைக் காண வாய்ப்புத் தேடினான்."
(லூக. 9:9)
---------------------------------------------------------
1955. S.S.L.C. தேர்வு எழுதிவிட்டு, ஊருக்குப் போவதற்காக மதுரை சந்திப்பில், திருவனந்தபுரம் விரைவு வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பெரியவர் என்னிடம் வந்து,

"தம்பி, வண்டி கள்ளிக்குடி ஸ்டேசன்ல நிற்குமா?" என்றார்.

" தாத்தா, இது விரைவு வண்டி. சின்ன ஸ்டேசன்ல எல்லாம் நிற்காது " என்றேன்.

பெரியவர் Cement bench ல உட்கார்ந்து கொண்டார்.

10 நிமிடம் கழித்து train வந்தது.

நான் luggage ஐ எடுத்துக்கொண்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

என்னிடம் விசாரித்த பெரியவரும் வண்டிக்குள் ஏறி என் அருகே அமர்ந்து கொண்டார்.

" தாத்தா, வண்டி கள்ளிக்குடியில் நிற்காது என்று சொன்னேனே."

" ஆமா, சொன்னாய். நான் இறங்க வேண்டியது ராஜபாளையத்தில்,"

" பிறகு ஏன் கள்ளிகுடி பற்றி விசாரித்தீர்கள்?"


" சென்ற முறை நான் மதுரைக்கு வந்து கொண்டிருந்தபோது வண்டி அங்கு நின்றது.

பிளாட்பாரத்தில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒரு ரூபாய்க்கு முறுக்கு வாங்கினேன். காசு கொடுக்கு முன் வண்டி கிழம்பிவிட்டது.

" காசு, காசு" என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான்.

நான் பார்க்காதது மாதிரி உட்கார்ந்து கொண்டேன்.

இப்போ வண்டி அங்கே நின்றால், கட்டாயம் என்னைப் பார்ப்பான், காசு கேட்பான்.

ஒரு முன் எச்சரிக்கைக்காக விசாரித்தேன்."

வழக்கமாக ஊருக்குப் போவதற்கு வழி கேட்பார்கள்.

போகாமல் இருப்பதற்கு வழி கேட்பவர்களும் இருக்கிறார்கள். 

ஏரோது மன்னன் இயேசுவைக் காண வாய்ப்புத் தேடினான்.

எதற்கு?

நோயிலிருந்து குணம் பெறவா?
இல்லை.

நற்செய்தியை அறியும் ஆவலாலா?
இல்லை.

தன் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறவா? 
இல்லை.

வேறு எதற்கு?


   ஏரோது மனம் கலங்கினான். ஏனெனில், சிலர், "அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார்" என்றனர்.
(லூக்.9:7)


தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே

அவரைக்  காண வாய்ப்புத் தேடினான்.


அவன் தேடிய வாய்ப்பு 
வெகு நாட்களுக்குப் பிறகு அவன் தேடாமலே கிடைத்தது.

யூதர்கள் இயேசுவைக் கொல்வதற்காக கைது செய்து பிலாத்துவிடம் கொண்டுவந்த போது,

இயேசு ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்து

 அவரை அவனிடம் அனுப்பினான்.

இப்போது அவன் மனதில் இயேசு அருளப்பரா என்ற சந்தேகம் இல்லை.

 இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான்.

 ஏனெனில் அவர் செய்த புதுமைகள் பற்றிக்  கேள்விப்பட்டிருந்தான். 

ஆகவே, அவர் தன்னிடமும் புதுமை எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான்.

இது வெறும் விநோதப் பிரியம்.

ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லை.

தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அவர்மீது மும்முரமாகக் குற்றஞ்சாட்டியவண்ணம் நின்றனர்.

ஏரோது தன் படையோடு சேர்ந்து அவரை அவமானப்படுத்தி, 

எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான்.

ஆக அவரைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தவன், 

வாய்ப்புக் கிடைத்தபோது, அதை அவரை அவமானப்படுத்தவே பயன்படுத்திக் கொண்டான். 

தீமை செய்தவர்களுக்கு நன்மையே செய்யும் இயேசு 

 அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதுவையும் பிலாத்தையும்  நண்பர்களாக்கினார்.

வெறுமனே வாசித்துவிட்டுப் போவதற்காக  இந்நிகழ்ச்சிகள் பைபிளில்  பதிவு செய்யப்படவில்லை.

நாம்  வாசித்து  தியானித்து பயன் பெறவே இவை பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாமும் இயேசுவைக் தேடுகிறோம். எதற்காக?

நாம் எதற்காக குற்றாலத்திற்கு போகிறோம்?

அருவியில் குளிப்பதற்காக.

 போகும்போது பேருந்தில் பயணிக்கிறோம்.

ஆனால் பேருந்தில் பயணிப்பதற்காக குற்றாலத்திற்கு போகவில்லை.

குளித்தபின் ஹோட்டலில் சாப்பிடுகிறோம்.

 ஆனால் சாப்பிடுவதற்காக குற்றாலத்திற்குப் போகவில்லை.

நமது பிள்ளைகளை அங்கு உள்ள பூங்காவில் விளையாட விடுகிறோம்.

 ஆனால் விளையாட விடுவதற்காக குற்றாலத்திற்குப் போகவில்லை.

ஒருவன் குற்றாலத்திற்குப் போய் அருவியில் குளிக்காமல்,

 ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு,

 பூங்காவில் விளையாடிவிட்டு

 வீட்டிற்கு வந்தால் அவளைப் பற்றி என்ன நினைப்போம்?


குளிக்க வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு 

பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.


இயேசு நம்மை படைத்து உலகத்தில் வாழ விட்டிருப்பது

 பரிசுத்தமான ஆன்மீக வாழ்வு வாழ்ந்து 

வாழ்க்கையின் இறுதியில் விண்ணகத்திற்குச் செல்வதற்காகத்தான்.

இவ்வுலக சம்பந்தமான காரியங்கள்  நமது ஆன்மீக வாழ்விற்கு உதவுவதற்காகத்தான்.

நாம் இயேசுவிடம் பேசும்போது

நாம் அவரிடம் கேட்க வேண்டியது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டிய அருள் வரங்களைத்தான்.

 நமது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்காக எதுவும் கேட்காமல் 

இவ்வுலக காரியங்களுக்கு  வேண்டியது மட்டுமே கேட்டால் 
இயேசு நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

இயேசுவின் சிலுவைப் பலி நமது பாவ மன்னிப்புக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 அப்பலியை ஒப்புக்கொடுக்கவே இறைமகன் இயேசு மனிதன் ஆனார்.

ஆனால் நாம் திருப்பலியை எதற்காக ஒப்புக்கொடுக்கிறோம்?

குருவானவர் திருப்பலியை பாவ மன்னிப்பிற்காகத்தான் ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் நாம் திருப்பலிக்கான கருத்து எழுதிக்கொடுக்கும்போது

 எத்தனை பேர் "எங்களது பாவமன்னிப்பிற்காககவும், பாவப் பரிகாரமாகவும்"  என்று எழுதி கொடுக்கிறோம்?

உடல் நலம், பிள்ளைகளுடைய படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற உலகைச் சார்ந்த காரியங்கள்தான் நமது பூசைக் கருத்துக்களில் இடம் பெறுகின்றன.

அதில் தப்பே இல்லை.

எப்படி குற்றாலத்திற்கு குளிக்கப் போகின்றோமோ, 

அதேபோல

நாம் திருப்பலியில் பங்கேற்பது நம்முடையவும், உலகத்துடையவும் பாவ மன்னிற்காகவும், பாவப் பரிகாரத்திற்காவும்தான்.

மற்றக் கருத்துக்கள் இரண்டாவது பட்சம்தான்.

நாம் இறைவனிடம் வேண்டும் போதும் முதலில் பாவமன்னிப் பிற்காக வேண்டி விட்டு, விண்ணப்பங்களை அடுத்து வைக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை மூலம் அவர் நம்மிடம் வரும்போது  நாம் முதலில் அவரிடம் வேண்டவேண்டியது நமது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கத்தான்.

பாவ மன்னிப்பு பற்றி எதுவும் வேண்டாமல் திருப்பலி கண்டு வந்தால் 

அது தண்ணீரே ஊற்றாமல் குளித்துவிட்டு வந்தது மாதிரி.


வேளாங்கண்ணி, உவரி போன்ற திருத்தலங்களுக்கு திருயாத்திரை செல்கிறோம். 

எதற்காக? 

நேர்ச்சைகளை நிறைவேற்றுவதற்காக.

எதற்காக நேர்ச்சை?

திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, நோயிலிருந்து குணம் போன்ற எத்தனையோ காரியங்களுக்காக. 

தப்பே இல்லை.

புனிதர்களிடம் உதவி கேட்பதற்கு நமக்கு முழு உரிமை இருக்கின்றது.

அவர்களும் உறுதியாக நமக்கு உதவி செய்வார்கள்.

செய்த உதவிக்கு நன்றியாக எத்தனை முறை வேண்டுமானாலும் திருயாத்திரை செல்லலாம்.

ஆனால் இவற்றுக்காக வேண்டுமுன் முதலில் செய்ய வேண்டியது 

நல்ல பாவ சங்கீர்த்தனம், 

 பக்தியுடன்  திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ளுதல்.

நம்மவர்களிடையே பாவசங்கீர்த்தனம் செய்யும் பழக்கம் கணிசமாக குறைந்துவிட்டது 

என்று எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள்.

 இது பாவங்கள் குறைந்து விட்டன என்பதை காண்பிக்கிறதா?

 அல்லது 

நமக்கு பாவத்தைப் பற்றியோ, மன்னிப்பைப் பற்றியோ, மீட்பைப் பற்றியோ அக்கரை இல்லை என்பதைக் காண்பிக்கிறதா?

  நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

அநேகர் எந்த தயாரிப்பும் இல்லாமலேயே திருவிருந்தில் கலந்து கொள்கிறார்கள்.

சாதாரண உணவு உட்கொள்ளும்போது கைகளைச் சுத்தம் செய்து விட்டு தான் உண்கிறோம்.

*திருவிருந்தை அருந்து முன் நமது ஆன்மாவை முதலில் சுத்தம் செய்ய வேண்டாமா?*

சுத்தமில்லாத ஆன்மாவோடு நற்கருணை உட்கொள்வது இயேசுவை அவமானப்படுத்துவதற்குச் சமம், ஏரோதுவைப் போலவே.

லூர்து செல்வம்.

Wednesday, September 23, 2020

"யார்ட்ட idea கேட்டுவிட்டு குழந்தை இயேசுவுக்கு கோவில் கட்டினீங்க?"வீடியோ ஞானவான் கேட்கிறார்.

"யார்ட்ட idea கேட்டுவிட்டு குழந்தை இயேசுவுக்கு கோவில் கட்டினீங்க?"
வீடியோ ஞானவான் கேட்கிறார்.
---------------------------------------------------------

கோவிலில் பத்தாம் திருவிழா.

காலை எட்டுமணிக்கு Bishop தலைமையில திருப்பலி.

கோவிலுக்குள் மட்டுமல்ல,   கோவிலை ஒட்டிய தெருக்களிலும் பயங்கரக் கூட்டம்.

தெருக்களில் உள்ள கூட்டத்தினரை குஷிப் படுத்துவதற்கென்று ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருந்தது.


நான் திருப்பலி காண்பதற்காக தெருவிலுள்ள கூட்டத்திற்குள் நுழைந்து, நெளிந்து சென்று கொண்டிருந்தேன்.

ஒரு இடத்தில் கூட்டம் வட்டமாக நின்று எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

நான் பார்க்காமல் போயிருக்க வேண்டும்.

ஆனால் கூட்டத்திற்குள் தலையை விட்டு என்ன நடக்கிறது என்று பார்த்தேன். ஒரு  சிறு பையன் Super ஆ வித்தை அடித்துக் கொண்டிருந்தான்.

நின்று ரசித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம் ஒரு சிறுபையன் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்தான்.

அதையும் பார்த்து இரசித்தேன்.

அவன் இறங்கியபின்தான் திருப்பலி ஞாபகம் வந்தது.

திரும்பி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கோவில் வாசலை நெருங்கும்போது
Speaker ரிலிருந்து குரல் வந்தது,

" சென்று வாருங்கள், பூசை முடிந்தது!"

கொரோனாவின்  வருகைக்குப் பின் திருப்பலி காண்பதற்காக youtube ற்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது.

அங்கும் இப்படித்தான் திருப்பலியைத் தேடித் கொண்டிருக்கும்போது

பல வித்தைக் காரர்களும், களைக் கூத்தாடிகளும் குறுக்கே  பாய்வார்கள், video வடிவில்.

அப்படிப் பாய்ந்த video ஒன்றில் ஞானவான் ஒருவர் இராயப்பருக்குரிய அதிகாரத்
தொனியில்  பேசிக் கொண்டிருந்தார்.

"குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டி,

குழந்தை இயேசுவை வழிபட்டால்,

குழந்தை இயேசு நமக்குச் செய்வார் என்ற idea வை யார் கொடுத்தது?"

Leave letter கொடுக்காமல் ஒரு மாணவன் Leave எடுத்திருந்தால்,

" யார்ட்ட கேட்ல லீவ் எடுத்த" என்று மாணவனிடம் கேட்க ஆசிரியருக்கு அதிகாரம் இருக்கிறது.

" யார்ட்ட சொல்லிவிட்டு சினிமாவுக்குப் போன?" என்று மகனிடம் கேட்க அப்பாவுக்கு அதிகாரம் இருக்கிறது.

சம்பந்தமே இல்லாத ஒருவர் நம்மிடம் வந்து,

"யார்ட்ட idea கேட்டுவிட்டு கோவில் கட்டினீங்க?"

என்று எந்த அதிகாரத்தோடு கேட்கிறார்?

எனக்குப் புரியவில்லை.

அவருக்குப் பதில் சொல்வது எனது நோக்கம் அல்ல.

சொன்னாலும் புரியமாட்டார்.

நம்மவர்களோடு பேச நமக்கு அதிகாரம் தேவை இல்லை, உறவு ஒன்றே போதும்.

அந்த வீடியோ ஞானி கேட்கிறார்,

"குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டிய நீங்க

வாலிப இயேசுவுக்கும் கட்டியிருக்கணுமா இல்லையா? அதை ஏன் கட்டல ?"

என்ன புத்திசாலித்தனமான கேள்வி!

இந்தக் கேள்வியை விட  அதிபுத்திசாலித்தனமான  statement ஒன்றையும் கொடுத்திருக்கிறார்:

இயேசுவின் பொதுவாழ்வு ஆரம்பிக்கிறதற்கு முன்னால் உள்ள

குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டும்போது

கர்த்தருடையை வசனத்தை மீறி இஸ்டம் போல்
செயல்படுகிரோமாம்!

குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டக்கூடாது என்று சொல்லுகிற வசனத்தை இனிமேல்தான் பைபிளில் தேடிப்பார்க்க வேண்டும்!

இயேசு தன் பெற்றோருக்கு    30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்த பின்புதான் அவரது பொதுவாழ்வு ஆரம்பித்தது.

அவரது மீட்புப் பணி எப்போது ஆரம்பித்தது?

ஒரு வேலையை செய்ய திட்டமிடும் போதே அந்த வேலை ஆரம்பித்து விட்டது.

அப்படிப் பார்த்தால் இயேசுவின் மீட்புப் பணி நித்திய காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது.

அவர் செய்தது எல்லாம் அவரது நித்திய திட்டப்படி தான்.
(Eternal plan)

பூமியில் மனிதனாய் அவதரித்தது

" இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது."

என்று

இறைமகனுக்கு  மனுவுரு  கொடுக்க மரியாள் சம்மதித்த வினாடியில்.

அவரது நித்திய திட்டப்படி மனுவுரு எடுத்த வினாடியிலேயே  உலகில்  அவரது பணி ஆரம்பித்துவிட்டது.

அவர் கருத்தரித்த நாளிலிருந்து விண்ணகம் ஏகும் வரை ஒவ்வொரு வினாடியையும் நாம் விழாவாகக் கொண்டாடலாம்.

விழாவாகக் கொண்டாடுவது ஆடிப்பாடி மகிழ்வதற்காக அல்ல,

இயேசுவைப் பற்றி தியானிக்கவும்,

தியானத்தின் மூலம் ஆண்டவரின் அருள்வரங்களை அபரிமிதமாகப் பெற்று

விண்ணகப் பயணத்தில் வீறுநடை போடுவதற்காகத்தான்.

ஜெபமாலை சொல்லும்போது அதைத்தான் செய்கிறோம்.

153 மணி ஜெபமாலை சொல்லும்போது ஆண்டவரது இவ்வுலக வாழ்க்கை முழுவதையும் தியானித்துவிடுவோம். 

ஆலயங்கள் கட்டுவது எதற்காக?

இறைவனை வழிபடத்தானே.

தாயின் வயிற்றில் இருந்த போதும்,

பிறந்த குழந்தையாய் இருந்த போதும்,

வளர்ந்து பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த போதும்.

பொது வாழ்வில் ஈடுபட்ட போதும்,

எப்போதுமே இயேசு இறைவன் தானே.

அப்படியிருக்க இறைவன் குழந்தை இயேசுவை வழிபட ஆலயம் கட்டுவதில் என்ன தவறு?

குழந்தை இயேசுவை வழிபடுவதால் இயேசு இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல.

ஒவ்வொரு ஜெபமாலை சொல்லும்போதும்

" கர்த்தர் பிறந்ததைத் தியானிப்போமாக" என்று சொல்கிறோம்.

சர்வலோகத்தையும் படைத்த கடவுள்,

உலகத்திலுள்ள அனைத்து இடங்களும் சொந்தமாய் இருக்க,

தான் மனிதனாய்ப் பிறப்பதற்கு வசதியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்காமல்,

'ஒரு மாட்டுத்தொழுவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம்,

நமக்கு எளிமையின் மகிமையைப் போதிப்பதைத் தியானிக்கிறோம்.

தனது உலக வருகையை முதலில் தெரிவிக்க ஏழை ஆயர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம்,

அவர் ஏழைகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைத் தியானிக்கிறோம்.

முதல் கிறிஸ்மஸ் செய்தியாக

*பூமியில் நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம் உண்டாகுக*

என்ற வாழ்த்தை முதல் கிறிஸ்மஸ் செய்தியாக வானவர் மூலம் தந்ததைத் தியானிக்கிறோம்.

" எளிய மனதோர் பேறுபெற்றோர்"

என்று தனது பொதுவாழ்வின் போது தரவிருக்கும் தன் போதனையைத்

தன் பிறப்பின் போதே சாதனையாக்கிய மாண்பைத் தியானிக்கிறோம்.

இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதும்,

அவரை மாதாவும் சூசையப்பரும் எகிப்திற்கு எடுத்துச் சென்றதும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே.

கோவிலில்
ஏழைகளே காணிக்கையாக கொடுக்கக்கூடிய இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளை

மாதாவும், சூசையப்பரும் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.

இங்கேயும் இயேசுவின் எளிமை ஒளிவீசுகிறது.

எகிப்துக்குச் சென்ற நிகழ்ச்சி மாதாவும், சூசையப்பரும் இறைவனின் கட்டளைக்கு

எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்படிந்ததை நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது.

இயேசுவின் எளிமையையும், கீழ்ப்படிதலையும் நாம் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற பாடம் பற்றியும் தியானிக்கிறோம்.

குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டியதன் மூலம்,

இயேசுவின் குழந்தைப் பருவப் போதனையை நாம் ஏற்றுக் கொண்டு,

அதன்படி நடப்போம் என்ற நமது உறுதிப்பாட்டை வெளிப்படையாகக் காண்பிக்கிறோம்.

எதற்கெடுத்தாலும் "பைபிளில் இருக்கிறதா?" என்று கேட்பவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில்:

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத். 28:20)

என்ற வாக்குறுதியின்படி இயேசு இன்றும், ஒவ்வொரு வினாடியும், திருச்சபையில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

"எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்"
(மத். 16.19)

என்ற வாக்குறுதியின்படி

இயேசு திருச்சபையின் நிர்வாகத்தில்

இராயப்பருக்கும், அவரது வாரிசுளுக்கும் சர்வ அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் திருச்சபை பைபிளுக்கு உருவம் கொடுத்தது.

எந்தெந்த நூல்கள் பைபிளில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானித்தது திருச்சபைதான்.

ஆகவே, எதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்

அது திருச்சபையின் போதனையில் இருக்கிறதா என்பதை மட்டும் நாம் பார்த்தால் போதும்.

அது இயேசுவின் போதனைப்படி இருக்கிறதா என்பதை திருச்சபை பார்த்துக் கொள்ளும்.

டாக்டரின் கவனிப்பில் இருப்பவன் டாக்டர் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

அந்த மருந்து சரியானதுதானா என்பதைப் பார்க்க வேண்டியது டாக்டர்.

ஒவ்வொரு முறையும் டாக்டர் மருந்து தரும்போது,

" இது மருத்துவ விதிகளின்படி இருக்கிறதா?"

என்று நோயாளி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் அவனுக்கு டாக்டர் மேல் நம்பிகை இல்லை என்று அர்த்தம்.

"உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."
(மத்.16: 18)

இராயப்பரைத் தலைவராகக் கொண்ட திருச்சபையின் போதனையில் தவறுகள் நுழைய முடியாது என்பதற்கு இயேசுவின் வாக்கே சான்று.

இராயப்பர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்யலாம்.

ஆனால் இயேசுவின் போதனையை மக்களுக்கு
எடுத்துரைக்கும் போது அவர் தவறாதபடி

அவருள் இருந்து வழிநடத்தும்  இயேசுவே பார்த்துக் கொள்கிறார்.

இயேசுவின் உறுதிமொழி இராயப்பருடைய வாரிசுகளுக்கும் பொருந்தும்.

இயேசுவை நம்புவோர் அவரது வார்த்தைகளையும் நம்ப வேண்டும்.

ஆகவே எதற்கெடுத்தாலும் ''பைபிளில் இருக்கிறதா?" என்று கேட்பதை விட்டுவிட்டு

"திருச்சபையின் போதனையில் இருக்கிறதா?"

என்பதை மட்டும் கவனித்து திருச்சபையில் போதனை  வழி நடப்போம்.

திருச்சபையின்  வழி நடப்பது கிறிஸ்துவின் வழி நடப்பது தான்.

" உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான்.

உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான்.

என்னைப் புறக்கணிப்பவனோ என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறான்."
(லூக்.10:16)

குழந்தை இயேசு ஆலயம் தாய்த் திருச்சபையால்தான் கட்டப்பட்டிருக்கிறது,  

இறை வழிபாட்டிற்காக.

தாய் திருச்சபையின் சொல் இயேசுவின் சொல்.

தாய் திருச்சபையின் செயல் இயேசுவின் செயல்.

திருச்சபையின் வழி நடப்போம்,

நிலை வாழ்வை உரிமையாக்குவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, September 22, 2020

நடப்பதெல்லாம் நன்மைக்கே.

http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_22.html

நடப்பதெல்லாம் நன்மைக்கே.
---------------------------------------------------------
ஒரு ஊருக்குச் செல்லவேண்டும். நமக்கு வழி தெரியாது.

அவ்வூருக்கு வழி தெரிந்த, நம்பகரமான, ஒருவரின் வாகனத்தை வாடகைக்கு அமர்த்துகிறோம். 

நம்பகரமான ஆளாக இருப்பதால்  அவர் கையில் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, அமைதியாக இருக்கிறோம்.

அவர் வாகனத்தை எப்படிச் செலுத்தினாலும், சந்தேகப்படாமல் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

சந்தேகப்பட்டால் நம்மை அழைத்துச் செல்பவரைப் புண்படுத்துவதுபோல் ஆகி விடும்.

இதே அணுகு முறையை நமது ஆன்மீகப் பயணத்தில் கடைப்பிடிக்கிறோமா?

விண்ணகத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு வழி தெரியாது.

நம்மை கை பிடித்து அழைத்துச் செல்பவர் வாடைக்கு அமர்த்தப்பட்டவர் அல்ல.

விண்ணகத்தில் வாழ்பவரும், நம்மைப் படைத்தவருமாகிய இறை மகன் இயேசு.

அவர் நமக்கு வழிகாண்பிப்பவர் அல்ல, வழியே அவர்தான்.

நமக்கு உண்மையைச் சொல்ல வந்தவரல்ல, உண்மையே அவர்தான். உண்மையாகிய தன்னை நமக்குத் தரவே வந்தார்.

நமக்கு உயிர் தர வந்தவரல்ல, நமது உயிரே அவர் தான்.

நமது வழியும், ஒளியும், உண்மையும், உயிருமான  இறைமகன் இயேசுவின் மீது

நமக்கு அசைக்கமுடியாத விசுவாசம் வேண்டும்.

விசுவாசத்தை சுருக்கமாக விபரிக்க வேண்டுமென்றால்

இயேசுவை 'முழுமையாக' ஏற்றுக்  கொள்ளுதல்,

நம்மை 'முழுமையாக' அவரிடம் ஒப்படைத்துவிடல்.

இதைத்தான் நமது அன்புத்தாய் மரியாளும் செய்தாள்.

மிகமுக்கியம்: 'முழுமையாக.'

முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போது நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அவர் மட்டும்தான் இருப்பார்.

அவர் மட்டும்தான் இருப்பார் என்றால் வேறு எதைப் பற்றியும் சித்திக்க மாட்டோம் என்று அர்த்தம் அல்ல.

நமது உணவைப் பற்றி சிந்தித்தாலும்,

உடையைப் பற்றி சிந்தித்தாலும்,

வேலையைப் பற்றி சிந்தித்தாலும்,

எதைப் பற்றி சிந்தித்தாலும்

அங்கு இயேசு இருப்பார்.

நரம் சிந்திப்பது இயேசுவுக்குப் பிடிக்குமா என்ற எண்ணம் அதோடு இருக்கும்.

உண்ணும் போது இயேசுவின் நினைவு இருந்தால்,

போசனப் பிரியர் ஆக மாட்டோம்.

உடுத்தும்போது அவர் நினைவு இருந்தால்,

அசிங்கமாக (indecently) உடுத்த மாட்டோம்.

சொல்லுக்கும், செயலுக்கும் இது பொருந்தும்.

யாரோடும், எதைப்பற்றிப் பேசினாலும் நமது பேச்சு இயேசுவுக்கும் பிடிக்குமா என்ற யோசனையோடு பேசுவோம்.

அப்படிப் பேசும்போது நமது பேச்சில் கோபம் இருக்காது, புறம் பேசுதல் இருக்காது,

கனிவு இருக்கும், பரிவு இருக்கும், மற்றவர்களுக்கு ஆறுதல் இருக்கும்.

நமது செயல்கள் யாவும் அன்பைப் பிரதிபலிக்கும் நற்செயல்களாகவே இருக்கும்.

நம்மில் இயேசு முழுமையாக இருந்தால்,

இயேசுவைப் போலவே சிந்திப்போம்,

இயேசுவைப் போலவே பேசுவோம்,

இயேசுவைப் போலவே செயல்படுவோம்.

நம்மை 'முழுவதும்' அவரிடம் ஒப்படைத்து விட்டால்,

நமக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டோம்,

ஏனெனில் நாம் இருப்பது சர்வ வல்லவரின் கையில்.

நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்தி,

விண்ணக வீட்டிற் கொண்டுபோய் சேர்ப்பது உறுதி.

ஒரு மாணவன் தான் கற்கும் கல்வியின் முழுப்பயனையும் அடைய வேண்டுமென்றால்

கல்வி கற்கும் காலத்தில் தன்னை முழுவதும் ஆசிரியர்கள் கையில் ஒப்படைத்துவிட வேண்டும்.

வகுப்பிற்குள் நுழையும் முன் தனது சுதந்திரத்தை வெளியே விட்டு விட்டு உள்ளே வர வேண்டும்

அப்போது வகுப்பில் ஆசிரியர் சொல்வதற்குக் கட்டுப்பட்டு நடப்பான்.

ஆசிரியர் எதிர்பார்க்கிற result ஐ அவனால் கொடுக்க முடியும்.

அதேபோல் தான் நம்மை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்தால் தான்

கடவுள் எதிர்பார்க்கிற பலனை நம்மால் கொடுக்க முடியும்.

கடவுள் நமக்குச் சுதந்தரத்தைக் கொடுத்திருப்பது அதைப் பயன்படுத்தி நித்திய பேரின்பத்தை சம்பாதித்துக் கொள்வதற்காகத்தான்

அதை இழப்பதற்காக அல்ல.

வயதான நண்பர் ஒருவரிடம் கேட்டேன்,

" கொரோனா தொற்றிக் கொண்டால் என்ன செய்வீர்கள்?"

என்று.

" இயேசுவே எனக்கு மோட்சத்திற்கு ticket book பண்ணிவிட்டார்" என்று நினைத்து மகிழ்வேன்."  என்றார்.

நம்மை 'முழுவதும்' அவரிடம் ஒப்படைத்து விட்டால், நம் சார்பாக எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார்.

இப்படி நினைத்து மகிழ்வதற்கு நமது விசுவாசம் மிக உறுதியானதாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் நமது வீட்டிற்கு வர 20 மணி நேரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம்.

விமானத்தின் வேகம் வழக்கத்தைவிட இரு மடங்கு இருந்ததால் பத்து மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டால் மகிழ்வோமா? வருந்தோமா?

நமது விண்ணகப் பயணத்திலும் இது நிலை ஏற்பட்டால் மகிழ வேண்டுமா?  வருந்த வேண்டுமா?

நாம் மகிழ்வதும் வருந்துவதும் நமது விசுவாசத்தை பொறுத்தது.

நமது விசுவாசத்தின் அடிப்படையில் நம்மை முழுவதும் இறைவனுக்கு கொடுத்துவிட்டால்

அவர் நம்மை என்ன செய்தாலும் நாம் கவலைப்படத் தேவை இல்லை,

ஏனென்றால் நமது ஆரம்பமும் அவர்தான், முடிவும் அவர்தான்.

பெரும்பாலான மக்களிடம் ஒரு தவறான கருத்து நிலவுகிறது.

உலகில் நாம் செல்வச் செழிப்போடும், நோய் நொடிகள், பிரச்சினைகள் எதுவும் இல்லாமலும்  வாழ்ந்தால்

இறைவனது அருள் நம்மோடு இருக்கிறது என்றும்,

வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் நிறைந்து இருந்தால்

இறைவன் நம்மைக் கவனிக்கவில்லை என்றும்

என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

உண்மையில் அவர் ஒவ்வொரு வினாடியும் நம் நினைவோடுதான் இருக்கிறார்.

நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் 

நமது விண்ணக பயணத்தில் நமக்கு உதவியாக இருக்கும்படி அவர் கவனித்துக் கொள்கிறார்.

உலக நோக்கில் நமக்கு கஷ்டமாக தெரிபவை , ஆன்மீக நோக்கில்
ஆசீர்வாதங்களாகத் தெரியும்.

உண்மையில் அவை ஆசீர்வாதங்களே.

'நடப்பதெல்லாம் நன்மைக்கே'
என்பதில் நன்மைக்கே என்பது ஆன்மீக நன்மையைக் குறிக்கும்.

அதாவது ஒவ்வொரு நிகழ்வும், நாம் முழுமனதோடு ஏற்றுக் கொண்டால்,

நாம் விண்ணக வீட்டை நெருங்குவதற்கே அது உதவி செய்யும்.

ஆகவே என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

இறைவன் நமது நன்மைக்கே நம்மைப் படைத்தார்.

ஆகவே என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்கே செய்வார்.

ஏற்றுக் கொள்வோம்.

இறுதி நாளில் அவரும் நம்மை ஏற்றுக் கொள்வார்.

லூர்து செல்வம்.
.

Monday, September 21, 2020

"கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்"(மத்.20:16)

"கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்"
(மத்.20:16)
-----------------------------------------------------------
திராட்சைத் தோட்ட உவமை..
ஒரு குட்டித் தியானம்.

திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அழைப்பின் படி தோட்டத்தில் வேலை செய்தவர்களில் பணி நேரம்:

விடியற்காலை 6 மணி மாலை 6 மணிவரை 12 மணிநேரம்.

முற்பகல் 9 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 9 மணிநேரம்.

பகல் 12 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 6 மணிநேரம்.

பிற்பகல் 3 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 3 மணிநேரம்.

பிற்பகல் 5 மணி முதல் மணி மாலை 6 மணிவரை 1 மணிநேரம்.

திராட்சைத் தோட்டத்தில் சிலர் 12 மணி நேரம் வேலை செய்தார்கள்..

சிலர் 9 மணி நேரம் வேலை
செய்தார்கள்.

சிலர் 6 மணி நேரம் வேலை செய்தார்கள்..

சிலர் 3 மணி நேரம் வேலை செய்தார்கள்.

சிலர் 1 மணி நேரம் வேலை செய்தார்கள்.

எல்லோருக்கும் சம்பளம் 1 வெள்ளிக்காசு.

சம்பளத்தின் அடிப்படையில்

12 மணி  நேரம் = 9 மணி  நேரம் =
6 மணி  நேரம் = 3 மணி  நேரம் = 1 மணி நேரம்.

12 மணி  நேரம் = 1 மணி நேரம்.

முதலில் வந்தவர்கள் = கடைசி வந்தவர்கள்.

ஆக எல்லோரும் சமம்.

எல்லோரையும் சமமாக்கியது எது?
அவர்கள் வாங்கிய சம்பளமா?

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும்.

ஆழ்ந்து யோசிப்போம்.

எல்லோரையும் சமமாக்கியது திராட்சைத்தோட்டக்காரரா?

இன்னும் ஆழ்ந்து யோசிப்போம்.

"நான் நல்லவனாய் இருக்கிறேன்"

தோட்டத்தின்  உரிமையாளர் நல்லவராய் இருப்பதால்தான் அவரிடம் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் சமம் ஆகிறார்கள்.

"விண்ணரசு, தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாகும்."

இயேசு "விண்ணரசை"
தன்திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்திய
"வீட்டுத்தலைவனுக்கு" ஒப்பிடுகிறார்.

நம் எல்லோரையும்  விண்ணரசுக்கு அழைக்க வந்தவர் இயேசு.

இயேசு இறைவன், விண்ணக வீட்டின் தலைவர்.

நம் எல்லோரையும் திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தில் உழைக்க அழைத்திருப்பவர் அவரே.

உவமையில் இயேசு

விண்ணரசை

தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற

வீட்டுத்தலைவனுக்கு ஒப்பிடுகிறார்.

விண்ணரசு = வீட்டுத்தலைவர் =
இயேசு, இறைவன்.

உலகத்தில் நாட்டின் அரசன் நாடு அல்ல.
நாடு என்பது  மக்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி. 
மன்னன் அந்த நிலப்பகுதி அல்ல.

ஆனால், விண்ணகம் என்பது ஒரு இடம் அல்ல.
.
வாழ்க்கை நிலை. அதாவது நம்மைப் படைத்த இறைவனோடு நாம் ஒன்றித்து இருக்கும் பேரின்ப நிலை.

இயேசு விண்ணரசை திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடவில்லை.

திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களை அழைக்கும் உரிமையாளருக்கு ஒப்பிடுகிறார்.

திராட்சைத் தோட்டம் : திருச்சபை
அழைத்தது: விண்ணரசு.
அழைக்கப்பட்டோர் : நாம்.

தாய்த் திருச்சபைதான் திராட்சைத் தோட்டம். சிலர் சிறு குழந்தையாய் இருக்கும்போது ஞானஸ்நானம் பெற்று,  திருச்சபைக்குள் நுழைந்து சாகும்வரை திருச்சபைக்காக உழைக்கிறார்கள்.

30 வயதில் ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.

50 வயதில் ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.

மரிப்பதற்கு முந்திய நாள்  ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.

மரிக்கும்போது  ஞானஸ்நானம் பெறுவோரும் உண்டு.

பணிக்காலம் (Service period) எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்காது.

எல்லோருக்குமே விண்ணரசில் இடம் கிடைக்கும், அதாவது, எல்லோரையும்  இறைவன்
தன்னோடு இணைத்துக் கொள்கிறார்.

ஏனெனில், அவர் நல்லவர்.

இயேசு விண்ணரசைப் பற்றி பல உவமைகள் கூறியுள்ளார்.

ஒவ்வொரு உவமையும் விண்ணரசின் ஒரு அம்சத்தை விளக்கும்.

திராட்சைத் தோட்ட உவமை

எப்போது  மனம் திரும்பினாலும் , விண்ணரசிற்குள் நுழையலாம்

என்ற கருத்தை விளக்குகிறது.

நல்ல கள்ளன்  ஒரு நல்ல உதாரணம்.

இயேசு விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்ததன் நோக்கம்,

திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தை நிறுவி,

அதில் உழைக்க நம்மை அழைத்து,

உழைப்பிற்குச் சம்பளமாகத் தன்னையே கொடுப்பதற்காகத்தான்.

திருச்சபையில் நாம் பணி புரிவதற்கு சம்பாவனையாக இயேசுவோடு நித்திய காலம் வாழ்வோம்.

இயேசு உலகில் மனிதனாக வாழ்ந்த காலம் 33 ஆண்டுகள்.

தான் விண்ணகம் செல்லும் முன் தனது பணியை உலகில் தொடர்ந்து செய்வதற்காகத் தன் சீடர்களை அனுப்பினார்.

தான் உலகம் முடியுமட்டும் அவர்களுடன் இருப்பதாக வாக்களித்தார்.

சீடர்கள் ஆற்றிய பணியை அவர்களது வாரிசுகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இயேசுவும் அவர்களோடு இருந்து அவர்களை வழிநடத்தி வருகிறார்.

இன்றும் தன் சீடர்களோடு இருந்து அவரது திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிய அழைப்பு விடுப்பவர் அவர்தான்.

நாம் எல்லோரும் அங்குதான் பணிபுரிகிறோம்.

எல்லோரும் இயேசுவின் விருப்பப்படி பணிபுரிவோம்.

நமக்கு விண்ணரசு, அதாவது, இயேசு நித்தியத்துக்கும். கிடைப்பது உறுதி.

லூர்து செல்வம்.

Sunday, September 20, 2020

"விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல்."(1கொரி.15:44)

"விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல்."
(1கொரி.15:44)
-----------------------------------------------------------

காலத்திற்கு (Time)  உட்பட்டது மண்ணுலகம்.

காலத்திற்கு அப்பாற்பட்டது விண்ணுலகம்.

காலத்திற்கு  துவக்கமும், முடிவும் உண்டு.

காலத்திற்கு அப்பாற்பட்ட நித்தியத்திற்கு (eternity) துவக்கமும், முடிவும் இல்லை.

மண்ணுலகம் சடப்பொருள்.
விண்ணுலகம் வாழ்க்கை நிலை.

மனிதனின் உடல் சடப்பொருள்.  ஆன்மா ஆவி.

மண்ணுலகில் வாழும் மனிதனின் வாழ்வின் நோக்கம், இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வது அல்ல.

நிரந்தரமான விண்ணுலக வாழ்க்கை நிலையை அடைவதுதான்.

இவ்வுலகில் நமது வாழ்வு முடிவுக்கு வரும்போது ஆவியாகிய ஆன்மா,

 சடமாகிய உடலை பூமியில் விட்டுவிட்டு , 

விண்ணுலகிற்குச்  சென்றுவிடுகிறது.

காலத்தை விட்டுவிட்டு நித்தியத்திற்குள் சென்று விடுகிறது.

பூமியில் விடப்பட்ட உடல் மண்ணோடு  மண்ணாகி விடுகிறது.

விண்ணுலகிற்காகப் படைக்கப்பட்டது மனிதன், ஆன்மாவும், உடலும் சேர்ந்து படைக்கப்பட்ட மனிதன்.

நமது மரணத்தின்போது ஆன்மா மட்டும் விண்ணுலகிற்குச் சென்றுவிடுகிறது.

மண்ணிற்குள் சென்று மண்ணாகி விட்ட உடல்  உலகின் இறுதி நாளில் 

ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலாய்
உயிர்த்தெழுந்து

விண்ணகத்திலுள்ள ஆன்மாவுடன் சேர்ந்து கொள்கிறது.


'ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலாய்'
என்றால் என்ன?

இயேசு மனிதனாய்ப் பிறக்கும்போது
' முழுவதும் மனிதனாய்ப்' (fully man) பிறந்தார்.

அதாவது அவரது உடல் நமது உடலைப் போலவே சடப்பொருளாகத்தான் இருந்தது.

நம்மைப் போலதான் உண்டார், உறங்கினார், பேசினார், நடந்தார், வேதனைகள் அனுபவித்தார், அழுதார், மரித்தார்.

மரித்த பின் நமது உடலைப் போல் அவருடைய உடலும் கல்லறையில் அடக்கம்  செய்யப்பட்டது.

அடக்கம் பண்ணப் படும்போது அவருடைய உடல் மனித உயிர்கொண்ட உடலாய் இருந்தது.

 உயிர்த்தெழும்போது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலுடன் (spiritual body) உயிர்த்தார்.

உலக முடிவில் நமது உடலும்     ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலாக மாறி ( spiritual body) உயிர்க்கும்.

இப்போது நம்மிடம் உள்ள சடப்பொருள் உடல் (material body) விண்ணகத்திற்குள் நுழைய முடியாது. 

"ஊனும் இரத்தமும் கடவுளின் அரசை உரிமையாகப் பெற முடியாது: "
(1 கொரி. 15:50)

நாம் உயிர்த்த பின் ஆவியான ஆன்ம சரீரத்தோடு (spiritual soul and body) விண்ணகத்தில் வாழ்வோம்.

"விண்ணைச் சார்ந்த இவர் (இயேசு) எப்படியோ, அப்படியோ விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்."
(1 கொரி. 15:48)


"மண்ணைச் சார்ந்தவனின் சாயலைத் தாங்கியிருந்தது போல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் தாங்கியிருப்போம்."
1 கொரி. 15:49)

பூமியில் வாழும் போது மண்ணைச் சார்ந்தவனின்,

 அதாவது, உடலைப் பொறுத்தமட்டில் ஆதாமின் சாயலைத் தாங்கியிருக்கிறோம்.

விண்ணில் வாழும் போது விண்ணைச் சார்ந்தவரின், 

அதாவது, இயேசுவின் சாயலைத் தாங்கியிருப்போம்.


விண்ணகம் சென்றபின்   உலகைச் சார்ந்த தேவைகள் எதுவும் இருக்காது.

ஆன்மாவிற்கு உரிய அன்பு, அருள், பேரின்பம் யாவும் நிறைவாய் இருக்கும்.

எல்லோருக்கும் ஒரே அளவு இருக்குமா?

வண்டியில் தண்ணீர் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

யார் வேண்டுமானாலும்,
 எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

பெரிய பாத்திரம்  கொண்டுவருவோர் அது நிறைய தண்ணீர் பிடிப்பார்கள்.

சிறிய பாத்திரம்  கொண்டுவருவோர் அது நிறைய தண்ணீர் பிடிப்பார்கள்.

ஒரு தம்ளர் மட்டும் 
கொண்டுவருவோர் அது நிறைய தண்ணீர் பிடிப்பார்கள்.

எல்லோரும் ஒரே அளவு தண்ணீர் கொண்டு போக மாட்டார்கள்.

 ஆனால் அவரவர் கொண்டுவந்த பாத்திரத்தில் நிறைய தண்ணீர் கொண்டு போவார்கள்,

 தண்ணீர் அதிகம் வேண்டுமென்றால், பெரிய பாத்திரமாக கொண்டு போக வேண்டும்.

விண்ணகத்தில் நாம் அனுபவிக்க போகும் பேரின்பத்தின் அளவை

பூமியில் நாம் வாழும் ஆன்மீக வாழ்க்கையே தீர்மானிக்கும்.

நமது ஜெப, தவ, தியான வாழ்வின் தன்மை (quality), 

 நாம் செய்யும் நற்செயல்களின் தன்மை,

 நமது அர்ப்பணவாழ்வின் தன்மை போன்றவற்றிற்கு ஏற்பதான் 

நமது விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவு இருக்கும்.

ஆனாலும் நிறைவாய் இருக்கும்.

நம்மை விண்ணுலக பேரின்பத்தைப் பெறப்போகும் பாத்திரங்களாக கற்பனை செய்து கொள்வோம்.

நமது ஆன்மீக வாழ்வின் தரத்துக்கு ஏற்ப நமது  Size இருக்கும்..

நாம் இவ்வுலகின் வாழும் பரிசுத்தமான வாழ்க்கையாலும், நற்செயல்களாலும் நமது   Size ஐ பெரியதாக்கிக்கொள்ள வேண்டும்.

நிறைய  நற்செயல்கள் செய்பவர்கள் பெரிய Size ஆக இருப்பர்.

குறைவாக  நற்செயல்கள் செய்பவர்கள் சின்ன Size ஆக இருப்பர்.

ஒரே ஒரு சிறு நற்செயல் மட்டும் செய்பவர் ஒரு தம்ளர் Size ல இருப்பார்.

தம்ளர் Size ல இருப்பவருக்கு  மற்றவர்களை விட குறைந்த அளவு பேரின்பம் கிடைத்தாலும்,

அது தம்ளர் அளவு நிறைவாகவே இருக்கும்.

ஆகவே எல்லோருமே நிறைவாய் பேரின்பத்தை அனுபவிப்போம்.

 பூமியில் வாழும் போது துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோம்.

 வந்த துன்பம் விரைவில் நீங்கும்படி இறைவனை வேண்டுகிறோம்.

அரசு நம் ஒவ்வொருவருக்கும் பின் தேதியிட்ட, 

 Cheque ஒன்றைக் கொடுத்தால் அதை வேண்டாம் என்று சொல்வோமா?

உறுதியாக வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்.

 ஏனெனில் குறிப்பிட்ட தேதியன்று 

Cheque ல் குறிப்பிட்ட தொகையைப்

  பெற்றுக்கொள்ளலாம் அல்லவா.

 யாராவது இலவசமாக அரசாங்கம் தருவதை வேண்டாம் என்று சொல்வார்களா?

நாம் இவ்வுலகில் அனுபவிக்கும் துன்பங்கள் விண்ணுலகில் நாம் அனுபவிக்கப் போகும் பேரின்பத்திற்கான  Cheque,

நமக்கு வரும் துபைங்களை ஆண்டவர் சுமந்த சிலுவையாகக் கருதி,

 அவற்றை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, 

ஆண்டவருக்காக அவற்றை அனுபவித்து, 

ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால்

நமது Cheque ல் விண்ணகப் பேரின்பத்திற்கான அளவு தொகை ஏறிவிடும்.

துன்பங்களின் அளவு கூட கூட பேரின்பத்திற்கான அளவு தொகையும் கூடிக்கொண்டே போகும்.

விண்ணகம் செல்லும்போதும், இந்த 
Cheque ஐ பேரின்பமாக மாற்றிக் கொள்வோம்.

வரும் துன்பத்தை வேண்டாமென்று  ஆண்டவரிடம் கேட்டால், அது

"ஆண்டவரே, பேரின்ப Cheque ஒன்றும் வேண்டாம். எனக்குக் குறைந்த அளவு பேரின்பமே போதும்."

என்று சொல்வதற்குச் சமம்.



ஆன்ம சரீரத்தோடு இருந்தாலும் ஆவியின் தன்மையில் சம்மனசுக்களைப் போல இருப்போம்.
 
முடிவில்லாத காலம் இறைவனை நேசிப்பதும், 

அவரது நேசத்தை முழுமையாக அனுபவிப்பதும், 

இறைவனை ஆராதிப்பதும், புகழ்வதும் மட்டுமே 

நமது வேலை.

உலகில் வாழும்போது இறைவனை விசுவசிக்கிறோம்.

ஆனால் விண்ணுலகில் விசுவாசம் இருக்காது.

ஏனெனில் இறைவனை முகத்துக்கு முகம் (face to face) பார்ப்போம்.

உலகில் வாழும்போது இறைவனை நம்புகிறோம்.

ஆனால் விண்ணுலகில் நம்பிக்கை இருக்காது.

ஏனெனில் எவையெல்லாம் இறைவன் தருவார் என்று நம்புகிறோமோ

அவையெல்லாம் நமக்குத் கிடைத்துவிடும்.

விண்ணுலகில் இப்போது ஆன்ம சரீரத்தோடு இருப்பவர்கள் இயேசுவும், மாதாவும் மட்டும்தான்.

விண்ணுலகில்  ஆன்ம சரீரத்தோடு இருப்பதற்கும்,

மண்ணுலகில்  ஆன்ம சரீரத்தோடு இருப்பதற்கும்  

என்ன வித்தியாசம்?

மண்ணுலகில் நமது உடல் சடப் பொருளாய் இருக்கிறது.

விண்ணுலகில் இயேசுவும், மாதாவும் ஆவியாய் இருக்கிறார்கள்.
(with spiritual body and spiritual soul)

மண்ணுலகில் நம்மால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்.

நம்மால் ஒரு நேரத்தில் அப்போது நமது தொடர்பில் இருப்பவர்களிடம் மட்டும்தான் பேச முடியும்.

ஆனால்,

இயேசுவும், மாதாவும், இன்னும் உடலோடு இணையாத மற்ற புனிதர்களும்  நாம் நினைக்கிற நேரத்தில், நினைக்கிற இடத்தில் இருப்பார்கள்.

அதனால்தான் உலகில் எந்தப் பகுதியில் இருந்து யார் கூப்பிட்டாலும் அவர்கள் கேட்பார்கள்.


உலகின் அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் கூப்பிட்டாலும் அவர்கள் கேட்பார்கள்.

விண்ணுலகில் நேரமும் (time) கிடையாது, இடமும் (Space)  கிடையாது.

 ஆகவேதான் 

"நாம் நினைக்கிற நேரத்தில் நினைக்கிற இடத்தில் ".

என்று சொன்னேன்.

நமக்கு நேரம் உண்டு, ஆனால் அது நம்மைக் கடந்து போய்க் கொண்டே இருக்கும்.

போன நேரம் திரும்பி வராது.

நாளைய நேரத்தை நாம் சந்திப்பது உறுதி இல்லை.

நாம் இருக்கிற நேரத்தை வீணாக்கினால், வீணாகப்போவது நேரமல்ல, நாம் தான்.

ஆகவே, இருக்கிற நேரத்தை நன்கு பயன்படுத்தி,

பேரின்பம் நிறைந்த நித்தியத்திற்குள் செல்ல நம்மை நாமே தயாரிப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, September 19, 2020

சமத்துவமா? அப்படீன்னா?(தொடர்ச்சி)

சமத்துவமா? அப்படீன்னா?
(தொடர்ச்சி)
-------------______-----------______--------------

கடவுள் அன்பு மயமானவர்.

அவர் மூன்று ஆட்களாக இருந்தாலும் மூவரும் ஒரே அன்பாய் இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.

ஒரே அன்பு,  
ஒரே சித்தம், 
ஒரே வல்லமை,
ஒரே தேவ சுபாவம், 
ஒரே ஞானம்,
ஒரே கடவுள்.

கடவுள் தனது அன்பைத்தான் மனிதர்களோடு பகிர்ந்து கொண்டார்.

அன்பு ஒன்று தான் மனிதர்களை  இணைக்கும் ஈர்ப்பு சக்தி.

பிரபஞ்சத்தில் உள்ள சடப் பொருள்கள்  ஆன்மா அற்றவையாய் இருப்பதால்

அவை சிந்தித்து 
செயலாற்றுவதில்லை.

அவற்றால் விதிகளை மீற முடியாது.

ஆனால் மனித ஆன்மாவிற்கு சுயமாக, சுதந்திரமாக சிந்தித்து  செயலாற்றும் தன்மையை இறைவன்  கொடுத்திருக்கிறார்.

கடவுள் விரும்புவதுபோல் மனிதன் தன் அன்பு என்னும் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தினால்

அவனிடமுள்ள ஏற்ற தாழ்வுகள் அப்படியே இருந்தாலும் அன்பின் முன் அவை சமமாகிவிடும்.

பிரபஞ்சத்தின் உறுப்புகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், 

ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்படுவதில் சமமாக இருப்பதுபோல,

மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், 

அன்புக்குக் கட்டுப்படும் போது அனைவரும் சமமாகிவிடுவோம்.

ஆனால் மனிதர் தங்களிடம் உள்ள அன்பை சரியாக பயன்படுத்துவது இல்லை,

அதாவது,

மற்றவர்களை கடவுள் எதிர்பார்க்கிற படி அன்பு செய்வதில்லை.

அவன் இஷ்டத்திற்கு ஏற்ப அன்பு செய்கிறான் அல்லது அன்பு செய்ய மறுக்கிறான். 

இறைவன் நமக்கு தந்திருக்கும் கட்டளை,

" உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்."

இக்கட்டளை அனைவருக்கும் பொதுவான  கட்டளை.

அரசன் தன்னை அன்பு செய்வது போல அவனது சேவகனையும் அன்பு செய்ய வேண்டும்.

அரசன், சேவகன் இந்த சமூக ஏற்றத்தாழ்வு அப்படியே இருக்கும் ஆனால் அன்பின் முன் இருவரும் சமம்.

அரசன் தன்னை அன்பு செய்வது போல, தன் சேவகனை அன்பு செய்கிறான்

அரசன் தன்மீது கொண்டுள்ள அன்பு = சேவகன் மீது கொண்டுள்ள அன்பு.

சமூகத்தில்:  அரசன் > சேவகன்.
அன்புக்கு: அரசன் = சேவகன்.

எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும்.

கணவன், மனைவி:
--------------------------------

உடல் பலத்தில்: கணவன் > மனைவி
அன்பில்:             கணவன் = மனைவி

ஆசிரியர், மாணவர்
-----------------------------------
பதவியில்:   ஆசிரியர்  >  மாணவர்
அன்பில்:    ஆசிரியர்  =   மாணவர்

சமூக அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்,

இருக்க வேண்டும்.

ஆனால் அன்பின் முன் அனைவரும் சமம்.

அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் நாம் அவர்களில் இயேசு வைத்தான் காண வேண்டும்.

 இருவரிலும் நாம் அன்பு செய்வது இயேசுவைத்தான்.

நிலத்திற்கு உரிமையாளரும், நிலத்தில் வேலை செய்யும் கூலியாளும் சமூக அந்தஸ்தில் ஏற்ற தாழ்வு உள்ளவர்கள். 

முறைப்படி அன்பு செய்தால்

நில  உரிமையாளர் கூலியாளில் இயேசுவைக் காண்பார்.

கூலியாள் நில  உரிமையாளரில் 
இயேசுவைக் காண்பார்.

இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யும்போது, இருவரும் இயேசுவைத்தான் அன்பு செய்கிறார்கள்.

இயேசுவின் மேல் உள்ள அன்பு இருவரையும் சமமாக்கிவிடுகிறது.

இறைவனை நமது முழு இருதயத்தோடும், முழு ஆற்றலோடும்
அன்பு செய்ய வேண்டும்.

கேள்வி எழலாம்.

முழு இருதயத்தையும் இறைவனுக்குக் கொடுத்த பிற்பாடு நம் அயலானுக்கு எதைக் கொடுக்க?

இறைவன் தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.

ஆகவே எல்லா மனிதர்களும் இறைவனுடைய அன்பிற்குள் இருக்கிறார்கள்.

ஆகவே நாம் இறைவனை அன்பு செய்யும்போது நாம் எல்லா மனிதர்களையும் அன்பு செய்கிறோம்.

இறைவனை உண்மையிலேயே நேசிப்பவர்கள், தங்கள் அயலானையும் உண்மையிலேயே
நேசிக்கிறார்கள்.

உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

சிலருடைய நேசம் உதட்டில்தான் இருக்கும்.

" எனக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை. மனிதரை நேசிக்கிறேன்."

என்று ஒருவன் சொன்னால் அவனது மனித நேயம் பொய்யானது.

இறைவன் தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

இறையன்புடன், இறைவனுக்காக, பிறரை அன்பு செய்தால்தான் அது உண்மையான அன்பு. 

இறைவன் எல்லா மனிதர்களையும் அளவுகடந்த விதமாய் அன்பு 
செய்கிறார்.

அவரது அன்பின் முன் நாம் அனைவரும் சமம்.

நம் அனைவருக்கும் இறைவனின் அன்பை அனுபவிக்க முழு உரிமை உண்டு.

இறையன்பு ஒன்று தான் நமக்கு சம உரிமை தந்திருக்கிறது.

ஆகவே உண்மையான சமத்துவத்தை தேட வேண்டியது இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பில் மட்டும் தான்,

 சமுதாய அமைப்பில் அல்ல.

நமது உடல் அமைப்பில் சமத்துவம் இல்லை.

 ஆனால் நமது உடலுறுப்புக்கள் மீது நாம் காட்டும் அக்கரையில் சமத்துவம் இருக்கிறது,

 தலைக்கு காட்டும் அக்கரையைத் தான் காலுக்கும் காட்டுகிறோம்.

அதேபோல்தான் சமுதாய அமைப்பில் சமத்துவம் இல்லை.

 ஆனால் நாம் சமூகத்தின் மீது காட்டும் அன்பில் சமத்துவம் இருக்கிறது.

அன்பு செய்பவர்கள் ஏற்றத் தாழ்வுகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

நமது வீட்டில், அதாவது, விண்ணகத்தில் அன்பு மட்டுமே இருக்கும்.

லூர்து செல்வம்.

Friday, September 18, 2020

சமத்துவமா? அப்படீன்னா?

http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_18.html

.சமத்துவமா? அப்படீன்னா?
-------------______-----------______--------------

எனது மூத்த மகனுக்கு அப்போது நான்கு வயது.

ஒரு நாள் காலையில் ஆசையோடு என்னிடம் சொன்னான், " அப்பா, பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்கிறது." 

11 மணி அளவில் சைக்கிளில் அவனை அழைத்துக்கொண்டு தென்காசிக்குச் சென்றேன்.

முன்சீப் கோர்ட்டிக்கு எதிரில் அப்போது இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று

இரண்டு கால் பிளேட் பிரியாணிக்கு order கொடுத்தேன்.

வந்தது.

பிளேட்டைப் பார்த்த என் பையன்,

" அப்பா, இது வேண்டாம். நான் கேட்டது பிரியாணி, சாப்பாடு அல்ல."

" அடே, இதற்குப் பெயர்தான் பிரியாணி."

"நான் இதைக் கேட்கவில்லை."

"பரவாயில்லை, சாப்பிடு "

எவ்வளவு கெஞ்சியும் சாப்பிட மறுத்து விட்டான்.

வேறு வழி இல்லாமல் இரண்டு பிளேட்டையும் நானே விழுங்கினேன்.

"சரிடா, நீ கேட்டதைக் காண்பி. வாங்கித் தருகிறேன்."

  என்று சொல்லிக் கொண்டே bill ஐக் கட்டுவதற்காக கல்லாப் பெட்டிக்கு வந்தேன்.

" அப்பா, இந்தா இருக்கு பிரியாணி."

அவன் கை காண்பித்த  இடத்தை பார்த்தேன்.

அங்கிருந்த மேஜையின் மேல் ஒரு தட்டில் பீடா அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

"அடேய் இது பிரியாணி அல்ல, பீடா. அதாவது வெற்றிலை."

"அப்பா இதுதான் பிரியாணி. இதைத் தான் கேட்டேன்."

அவன் 10 பைசா பீடா கேட்டிருக்கிறான், பிரியாணி என்ற பெயரில்!!

வாங்கிக் கொடுத்தேன்.

பையனுக்கு வயது நான்கு. ஆகவே அவன் சொன்னதைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தேன்.

ஆனால் இதையே ஒரு ஐம்பது வயதுக்காரர் சொன்னால் சிரிப்பு வராது.

நன்கு முதிர்ச்சி அடைந்தவர்களாக தோன்றுகிற மனிதர்கள் இதேபோல இடம்மாறி பயன்படுத்துகிற வார்த்தை ஒன்று இருக்கிறது.

சமத்துவம். (equality)

வார்த்தை இருப்பதால் அது குறிக்கும் கருத்து (concept) ஒன்றும் இருக்கிறது.

ஆனால்  நம்மவர்கள் இல்லாத, இருக்க முடியாத ஒன்றுக்கு,

வேறு ஒன்றுக்கு இருக்கிற சமத்துவம் என்ற பெயரை இட்டு,

அதற்காகப் போராடுகிறார்கள்.

சமத்துவம் என்ற கருத்து இருக்கிறது.
சமத்துவத்தை தேட வேண்டிய இடமும் இருக்கிறது.

ஆனால் நம்மவர்கள் சமத்துவம் இருக்கவே முடியாத இடத்தில் அதைத் தேடுகிறார்கள்.

"பறவையைப் பார்த்தான், விமானம் படைத்தான்" என்ற பாடல் வரி ஒன்று உண்டு.

அதாவது மனிதன் இயற்கையைப் பார்த்து கற்றான் என்பது பாடல் வரியின் பொருள்.

ஆனால் சமத்துவத்தைப் 
பொறுத்தமட்டில் மனிதன் இயற்கையைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவே இல்லை.

ஏற்ற தாழ்வு இல்லாத,
மேடு பள்ளம் இல்லாத,
மலைகள், பள்ளத்தாக்குகள் இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்.

புவியியல் ஆசிரியர் வகுப்புக்குக் கொண்டு வருவாரே, பூமி உருண்டை (Globe),

 அதைப்போல்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட உலகைச் சுற்றி கடல் மட்டும் தான் இருக்கும்.

பூமியும் இருக்கும், கடலுக்கு அடியில்.

அப்படிப்பட்ட உலகில் நீர்ப் பிராணிகள் மட்டும்தான் வாழ முடியும்.

உயர்வும், தாழ்வும், மேடும் பள்ளமும் இருப்பதால் தான் நீர்வீழ்ச்சிகளும், ஆறுகளும் இருக்கின்றன.

வெப்பமும், குளிர்ச்சியும் இருப்பதால்தான் காற்று வீசுகிறது.

காற்று வீசுவதால்தான் மழை பெய்கிறது.

 சமத்துவம் அற்ற இயற்கையில் இருந்து அதில் வாழும் மனிதன் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
'
ஏற்றதாழ்வுகள் உள்ள இயற்கையில் வாழும் மனித சமுதாயம் ஏற்றதாழ்வுகள் இல்லாமல் இயங்க முடியாது.

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு நாள் அவர் மூத்த பையனிடம் பத்து ரூபாய் கொடுத்தார்.

இளைய பையனிடம்  ஐந்து ரூபாய் கொடுத்தார்.

 உடனே இளையவன்,

" அப்பா அண்ணனுக்கு பத்து ரூபாய் கொடுத்திருக்கீங்க.

 எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருக்கீங்க.

இருவரும் உங்கள் பிள்ளைகள்தானே,

இருவரையும் சமமாக நடத்துங்கள்.

எனக்கும் பத்து ரூபாய் கொடுங்க."

அவன் சமத்துவம் பேசினான்.

அப்பா சொன்னார்,

" இருவரும் என் பிள்ளைகள் தான்.

ஆனால் அண்ணனுக்கு வயது பத்து. உனக்கு வயது ஐந்து.

சமவயதுள்ள பிள்ளைகளை அம்மாவால் பெற முடியுமா?

(Can a mother give birth to two children simultaneously?)

உலகில் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள்.

ஒரே இறைவன் தான் எல்லோரையும் படைத்தார். 

ஆனால் எல்லோரையும் ஒரே மாதிரி படைக்கவில்லை.

எல்லோருக்கும் ஒரே மாதிரி திறமைகளைக் கொடுக்கவில்லை.

அவரவருக்கு கொடுக்கப்பட்ட திறமைகளை அவரவர் திறம்பட பயன்படுத்த வேண்டும்.

ஏற்ற தாழ்வுகள் இருந்தால்தான் சமுதாயம் இயங்கும். 

குடும்பத்தை எடுத்து கொள்.

நானும் அம்மாவும் பெரியவர்கள். நீங்கள் இருவரும் சிறியவர்கள்.
 

நானும் அம்மாவும் ஒரே மாதிரியா இருக்கிறோம்?

என்னிடம் உடல் பலம் அதிகம். அம்மாவிடம் மனோபலம் அதிகம்.
 
என் முகத்தில்  மீசை, தாடி இருப்பது போல் அம்மா முகத்தில் இல்லை.

அம்மாதான் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்தாள், நான் ஆசைப்பட்டாலும் என்னால் அது முடியாது.

சுருக்கமாகச் சொன்னால் இறைவன் எல்லோரையும் சமமாகப் படைக்கவில்லை.

புரிகிறதா"

இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும் பிரதம மந்திரிகளாக இருந்தால் எப்படி இருக்கும?

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோரும் மேனேஜர்களாக இருந்தால் அலுவல் எப்படி நடக்கும்.?  

ஏற்றதாழ்வுகள் இருந்தால்தான் சமூகம் இயங்கும்.

பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த முடியுமா?

முடியவே முடியாது.


இந்தியாவிலுள்ள மொத்த பணத்தையும் 130 கோடி பங்கு வைத்து எல்லோருக்கும் சமமாகப் பிரிந்துக் கொடுத்து,

"பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தியாகி விட்டது. 

சமத்துவம் நீடிக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் அவரவரிடம் இருப்பதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.  

''பணம் கூடினாலும், குறைந்தாலும் ஆயுள் தண்டனை"

என்று உத்தரவு போட்டுவிட்டால் எப்படி இருக்கும்?!

சமத்துவத்துக்காகப் போராடுகின்றவர்கள் இல்லாத ஒன்றுக்காக போராடுகிறார்கள்.

கணிதத்தில் 3 + 4 = 7. சரி.

ஆனால்

3 கழுதைகள் + 4 குதிரைகள் = 7 யானைகள் கூறுவது எப்படிச் சரியாகும்?

சமூகத்திலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் சமத்துவத்தை தேடினால் கிடைக்காது,

 அப்படியானால், அதை எங்கே தேட வேண்டும்?

அதற்கும் நமக்கு இயற்கைதான் பாடம் கற்று தருகிறது.

சமூகத்திலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும்  மனிதன் சமத்துவத்தை தேடி போராடிக் கொண்டிருக்கிறான்.

ஏனெனில் ஏற்ற தாழ்வுகள்தான் உலகின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று அவன் நினைக்கிறான்.

ஆனால் ஏற்ற, தாழ்வுகள் உள்ள இயற்கை  கோடானுகோடி ஆண்டுகளாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதே, அது எப்படி?

இப்போது யாருடைய குரலோ கேட்கிறது, 

" நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு  எல்லாம் பிரச்சனைகள் இல்லையா?"

இல்லை. அவை இயற்கை நிகழ்வுகள்.

இயற்கையின் விதிகள் படி நடப்பவை.

மனிதன்தான் அவற்றைப் பிரச்சனைகள் என்று நினைக்கிறான்.

நமது உடல் இயற்கையின்  ஒரு பகுதிதான். கோடிக்கணக்கான cell களால் ஆனது.

கோடிக்கணக்கான cell களும் தனித்தனியே இயங்கினாலும், இஷ்டம்போல் இடம் பெயர்ந்து போகாமல், அததன் இடத்தில் இருந்து மற்ற செல்களோடு ஒத்துழைத்து இயங்குவது எதனால்?

செல்களுக்குள் இருக்கும் ஈர்ப்பு சக்தியால். (magnetic power)

உலகில் வாழும் கோடானுகோடி பிராணிகளும் பூமியோடு ஒட்டி வாழ்வது எதனால்?

பிராணிகளுக்கும் பூமிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு சக்தியால்.

நட்சத்திரங்களும், கோள்களும் அததன் பாதையில் ஒழுங்காக வலம் வந்துகொண்டிருப்பது எதனால்?

அவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்பு சக்தியால்.

ஈர்ப்பு விசையின் காரணமாகத்தான் பிரபஞ்சமே கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை விதிகளின்படி இயங்கிக் கொண்டிருக்கிறது.

அணுக்களுக்கு இடையே இருக்கும் ஈர்ப்பு விசை தான் அண்டம் முழுவதும் இருக்கிறது.

ஏற்றதாழ்வுகள் உள்ள பிரபஞ்சம் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு இருக்கிறது. 

 மிகப் பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும், மிகச் சிறிய அணுக்களாக இருந்தாலும் ஈர்ப்பு விசையின் முன் அனைத்தும் சமம்.

மனிதர்களை மனுக்குலமாக கட்டி வைத்திருப்பது அவர்களுக்கு இடையே உள்ள ஈர்ப்புவிசையாகிய அன்பு ஒன்றுதான்.


  அன்பின் முன் அனைவரும் சமம்.

நாம் நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க வேண்டும்.

 நாம் நம்மையே வெறுக்க மாட்டோம்.

ஆகவே பிறர் அன்பு இருக்குமிடத்தில் வெறுப்பு இருக்காது.

நாம் நம்மையே பகைக்க மாட்டோம்.

ஆகவே பிறர் அன்பு இருக்குமிடத்தில் பகை இருக்காது.

நரம் நம்முடனே சண்டை போட மாட்டோம்.

ஆகவே பிறர் அன்பு இருக்குமிடத்தில் சண்டை இருக்காது.

சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

ஆனால் பிறர் அன்பின் அடிப்படையில் 

 பொருள் உள்ளவன் பொருள் இல்லாதவரோடு தன்னிடமுள்ள பொருளை பகிர்ந்து கொள்வான்.

அன்பின் முன் இருவரும் சமம் ஆகிவிடுவர்.

 உடை உள்ளவன் இல்லாதவனுக்கு உடையைக்  கொடுக்க வைப்பது அவனிடமுள்ள அன்பு.

அன்பு எல்லோரையும் சமமாக்கிவிடும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.



.