Friday, May 1, 2020

சாபமா? வரமா?


சாபமா? வரமா?

**  **  **   ** ** **   ** ** ** ** **


.இறைவன் சர்வவல்லவர்.


உண்டாகுக என்று சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை, 


நினைத்தாலே போதும். 


பிரபஞ்சம் முழுவதும் நொடியில் படைக்கப் பட்டு விடும்.


ஆயினும் பைபிள் உலகைப் படைக்க இறைவன் 6 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும், ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததாகவும் கூறுகிறது.


இறைவனைப் பொறுத்தமட்டில் உழைப்புக்கும், ஓய்விற்கும் பொருள் இல்லை என்று நமக்கு தெரியும். 


ஏனெனில் இறைவன் நினைத்தது நடக்கும்.


 நம்மைப்போல் உழைப்பு தேவை இல்லை.


 அவருக்கு ஓய்வும் இல்லை.


 எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்.


 உழைப்பு, ஓய்வு பற்றிய இறைச் செய்தியை (Divine message) நமக்குத் தெரிவிப்பதற்காகவே


 பைபிளில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.



1. நாம் வாரத்தின் ஆறு நாட்கள் நமக்காக உழைத்து விட்டு ,


ஏழாம் நாளை இறைவனுக்காகச் செலவழிக்க வேண்டும்.


 ஏழாம் நாள் உழைப்புக்கு ஓய்வு, செபத்தில் அமர்வு.


ஆனால் மற்ற நாட்களில் செபம் தேவை இல்லை என்று நினைத்துவிடக்கூடாது.


 ஆறு நாட்களிலும் உழைப்பை செபமாக மாற்ற வேண்டும்.


 ஏழாவது நாள் உழைப்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு செபிக்க மட்டும் செய்ய வேண்டும்.


திருப்பலி,


 பக்தி முயற்சிகள், 


தவ முயற்சிகள், 


பிறர் உதவி முயற்சிகள், நோயாளிகளை சந்தித்தல்


 போன்றவை செபத்தில் அடங்கும்



2. உழைப்பவர்களுக்கு மட்டுமே ஓய்வு எடுக்க தகுதி உண்டு.


உழைக்காமல் ஓய்வு மட்டும் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் சோம்பேறிகள்.


பைபிளின் ஆரம்பமே இறைவன் உழைப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் 

தருகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.



 உண்ண வேண்டாமென்று இறைவன் விலக்கியிருந்த மரத்தின் கனியை    ஆதாம் தின்றதினாலே,


இறைவன் அவனை நோக்கி


" உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்: நீ உழைத்துத் தான் உன் வாழ்நாளெல்லாம் அதன் பலனை உண்பாய்."


இறைவனின் அன்பை பாருங்கள்.


 பாவம் செய்தவன் ஆதாம்


 ஆனால் இறைவன் அவனை சபிக்கவில்லை.


 

பூமியைப் பொறுத்தமட்டில் கூட 'சபிக்கப்பட்டிருக்கும்' என்ற வார்த்தையை 


உண்மையில் ஆதாம் செய்த பாவத்தின் கனா கனத்தை உணர்த்துவதற்காகத்தான் 

இறைவன் பயன்படுத்தியிருப்பார்.


உண்மையிலேயே 

சபித்திருந்தால் ஆதாமால் பூமியில் வாழ்ந்திருக்கவே முடியாது.


சிங்கார வனத்தில் ஆதாமும் ஏவாளும் வாழ்ந்தபோது


 அவர்கள் உணவிற்கு வேண்டிய பழ மரங்கள் ஏற்கனவே படைக்கப் பட்டிருந்தன.


'கஷ்டமின்றி உண்டு அவர்கள் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பார்கள்.


ஆனால் இனி அவர்கள் சிங்கார வனத்தை விட்டு வெளியேறியபின் உழைத்து தான் வாழ வேண்டி இருந்தது.


பூமியின் செல்வங்கள் பூமிக்கு உள்ளே மறைந்திருக்கும்.


 ஆதாம் நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி உழைத்து செல்வங்களை வெளிக்கொணர வேண்டும்.


ஆதாம் உழைத்தால்தான் செல்வங்களை கொடுக்கும்படி பூமியை மாற்றிவிட்டார் அவ்வளவுதான்.


மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு உழைப்பில் தானே தன் பணியை ஆரம்பித்தார்.


 தனது வளர்ப்புத் தந்தையாக ஒரு உழைப்பாளியைத்தானே தேர்ந்தெடுத்தார்.


சிறுவயதிலிருந்து பொதுவாழ்க்கைக்கு வருமட்டும்,


முப்பதாவது வயசு வரை இயேசு தச்சு வேலை பார்த்து வந்தார்.


இயேசு உழைப்பை ஆசீர்வதித்து, வரமாகத் தந்திருக்கிறார்.


இறைவனுக்காக உழைப்போம். அதைச் செபமாக மாற்றுவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment