Sunday, May 17, 2020

"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்."(அரு.14:14)

"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்."
(அரு.14:14)
**  **  **   ** ** **   ** ** ** **

"மிஸ்டர், லூர்து, கொஞ்சம் நில்லுங்க."

"ம்..ம்..சொல்லுங்க."

"கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோமா?"

"என்னாச்சு உங்களுக்கு?
நில்லுங்கன்னு சொன்னீங்க. உட்காரச் சொல்றீங்க. ஏதாவது பிரச்சனையா?"

"பிரச்சனையார இல்லையாங்கிறது என் கேள்விக்கு நீங்க சொல்ற பதிலிலதான் இருக்கு."

"சரி கேளுங்க."

"."என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்."

இதைச் சொன்னது யார்னு ஞாபகம் இருக்கா?"

"நல்லாவே ஞாபகம் இருக்கு."

"யார் சொன்னது?"

: "நம் ஆண்டவர் சொன்னது."

"எப்போவாவது நம் ஆண்டவர்

 'என் அம்மா பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்.'னு சொல்லியிருக்காரா?"

"ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுறீங்க. நேரடியாத் தொடவேண்டியது தானே!"

"சரி, நேரடியாகவே கேட்கிறேன். உங்களுடைய மாதா பக்திக்கு பைபிளில ஏதாவது ஆதாரம் இருக்கா?.

ஆண்டவர் செபம் சொல்ல சுற்றுத் தந்தபோது தந்தையை நோக்கி தான் செபிக்கச் சொன்னார்.

'கேளுங்கள் கொடுக்கப்படும்'
என்று தன்னிடம் கேட்கச் சொன்னார்.

நேரடியாக இயேசுவிடமும், தந்தையிடமும் கேட்பதை விட்டு விட்டு மாதாவையும், புனிதர்களையும் தொந்தரவு செய்கிறீர்கள்?"

"நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அப்புறம் கேளுங்கள்."

"உங்கள் கேள்விக்குப் பதில் என் கேள்வியில் தான் இருக்கிறது"

"சரி, கேளுங்கள்."

"இயேசு போதித்தது எல்லாம் பைபிளில் இருக்கிறதா?"

"அதில் என்ன சந்தேகம்?"

"எனக்குச் சந்தேகம் ஏதும் இல்லை.

இப்போ ஒரு வசனம் வாசிக்கிறேன்.
 அதை நீங்கள் எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா?

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

"வாசித்திருக்கிறேன். அதுக்கு என்ன இப்போ?"

"அந்த வசனத்திலிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?"

"அதை நீங்களே சொல்லி விடுங்கள்."

"இயேசுவின் போதனைகளிலும், செயல்களிலும்

 நற்செய்தி நூல்களில் எழுதப்படாதவையும் இருக்கின்றன.

 அவற்றையும் அவருடைய சீடர்கள் மக்களுக்குப் போதித்தார்கள்.

திருச்சபை இயேசுவில் ஆரம்பித்து அப்போஸ்தலர்கள் வழியாக உலகெங்கும் பரவியது.

இயேசுவின் போதனைகளை எல்லாம் அப்போஸ்தலர்கள் போதித்தார்கள்.

ஆகவேதான் திருச்சபையை அப்போஸ்தலிக்க திருச்சபை என்கிறோம்."

"ஹலோ நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் உங்கள் வரலாற்றை அளந்து கொண்டிருக்கிறீர்கள்!"

"நீங்கள் சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?

 மகன் அப்பாவைப் பார்த்து,
.
 "அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று தானே சொன்னேன்.

 நீங்க எனக்குப் பெண் பார்ப்பதிலேயே நேரத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறீர்களே" என்று சொல்வது போல் இருக்கிறது!

உங்களுக்குச் சரியான பதில் வேண்டுமா? வேண்டாமா?
வேண்டுமென்றால்  என்னைப் பேச விடுங்கள்."

"சரி, சொல்லுங்க."

"அப்போஸ்தலர்கள் இயேசு போதித்த நற்செய்தியை மட்டும்தான் போதித்தார்கள்.

நற்செய்தி நூல்களில் எழுதப்படாத இயேசுவின் போதனைகளும் அப்போஸ்தலருடைய போதனையில் அடங்கும்.

அப்போஸ்தலர்களும் அவர்களது வாரிசுகளும் வாய் மொழியாக போதித்த இயேசுவின் போதனைகளை நாம் பாரம்பரியம் என்போம்.

உண்மைவில் திருச்சபையின் 
பாரம்பரியம்தான் எவை நற்செய்தி நூல்கள் என்று வரையறுத்துத் தந்தது.


பாரம்பரியத்திலிருந்து நற்செய்தி நூல்கள் பிறந்தன.

 பரிசுத்த ஆவி அப்போஸ்தலர் மேல் இறங்கி வந்த நாளில் (பெந்தகோஸ்தே அன்று)

அவர்கள்  போதிக்க ஆரம்பித்தவுடன்   இயேசுவின் திருச்சபை இயங்க ஆரம்பித்தது.

அன்றே அப்போஸ்தலிக்க பாரம்பரியம் (Apostolic traditon) ஆரம்பித்தது.

அன்று நற்செய்தி நூல்கள் எதுவும் எழுதப் பட்டிருக்க வில்லை.".

" நான் கேட்டது மாதா பக்தியைப் பற்றி,

 நீங்கள் விளக்குவது பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை பற்றி."

"ஆமா. திருச்சபையின் போதனையில் பைபிளை போலவே பாரம்பரியமும் முக்கியமானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் எனது பதில் உங்களுக்கு புரியும். 

அதுவரையில் நான் என்ன கூறினாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் தான்.".

''சரி.
திருச்சபை ஆரம்பிக்கும்போது புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

அப்போதே பாரம்பரியம் ஆரம்பித்து விட்டது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

 ஆகவே புதிய ஏற்பாட்டு நூல்களை  நமக்குத் தந்த பாரம்பரியத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இப்போ மாதா பக்திக்கு வாருங்கள்."

"மாதா பக்தியியின் ஒரு சிறப்பான அம்சம் என்ன வென்றால்

திருச்சபை மாதா பற்றிய விசுவாச சத்தியங்களை உறுதிப்படுத்துவதற்கு முன்பே

 சாதாரண  மக்களால் ஆரம்பிக்கப்பட்டு விட்டதுதான்.

இயேசுவை விசுவசித்த சாதாரண விசுவாசிகள் இரட்சகரின் தாயின் மேலும் பத்தி வைக்க ஆரம்பித்தனர்.

திருச்சபை தந்தையர்களால் (Fathers of the Church) மாதாவைப் பற்றிய நூல்கள் எழுதப்படுவதற்கு முன்னாலேயே விசுவாசிகள் மாதாவின் உதவியைத் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

 (The practice of invoking the aid of the Mother of Christ had become more familiar to the faithful before any expression of it in the writings of the Early Church Fathers.)

திருச்சபை மாதாவைப் பற்றிய விசுவாச சத்திய பிரகடனங்களை   செய்வதற்கு முன்னாலேயே 

அவள் மீது சாதாரண விசுவாசிகள்ஆழ்ந்த   பக்தி கொண்டிருந்தார்கள். 

(Venerative and devotional practices have often preceded formal theological declarations by the Magisterium.)

மாதா பக்தி யாரும் கட்டளையிட்டு வந்ததில்லை.

 அது இயல்பாகவே தோன்றி வளர்ந்தது.

 மகன் மேல் ஆழ்ந்த பக்தி வரும்போது தாய் மீதும் ஏற்படுவது மனித இயல்பு.

மக்களின் பக்தியைத் திருச்சபையின் பாரம்பரியம் ஏற்றுக் கொண்டது.

சலேத்மலை, லூர்து மலை, பாத்திமா நகர்  போன்ற இடங்களில் மரியன்னை அவளது பக்தர்களுக்குக் கொடுத்த காட்சிகளும் விசுவாசிகளின் பக்தியை உறுதிப்படுத்தி வளர்த்தன.

இக்காட்சிகளை திருச்சபையும் ஏற்றுக் கொண்டது.

இயேசுவின் தாய், நமது தாய்.

தாயன்பு எல்லோருக்குமே இயல்பானது. அதற்கு ஆதாரங்கள் தேவை இல்லை.

 உங்களுக்கு  பிரச்சினை ஏன் தாய் வழியே மகனிடம் போகிறோம் என்பதுதான்."

"ஆமா."

"Foundation தான் இன்றைக்கு.
 கட்டடம் நாளைக்கு."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment