Tuesday, May 12, 2020

" பல துன்பங்களின் வழியாகவே நாம் கடவுளின் அரசிற்குள் நுழைய வேண்டுமென்றும் அறிவுறுத்தினர் "( அப். 14:22)

 " பல துன்பங்களின் வழியாகவே நாம் கடவுளின் அரசிற்குள் நுழைய வேண்டுமென்றும்
 அறிவுறுத்தினர் "
( அப். 14:22)
  **  **  **   ** ** **   ** ** ** **
"இன்பமா, துன்பமா இரண்டில் எது வேண்டும்?" 

என்று நம்மிடம் யாராவது கேட்டால் இயல்பாகவே  நம்மிடமிருந்து வரும் பதில் இன்பம் ஆகத்தான் இருக்கும்.

ஏனெனில் இறைவன் நம்மை படைத்ததே இன்பத்தை, சாதாரண இன்பத்தை  அல்ல, பேரின்பத்தை அடைவதற்காகவே.

இறைவன் நித்திய காலமாக பேரின்பத்தில் வாழ்பவர்.

 அவர் தன் சாயலை நம்மோடு பகிர்ந்து கொண்டதே
.
 
 தனது பேரின்பத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான்.

கடவுள் நமது முதல் பெற்றோரை படைத்து 'இன்ப வனத்தில்'தான் வாழவிட்டார்.

ஆனால் அவர்கள் இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்த பின் அவர்களை இன்ப வனத்திலிருந்து அனுப்பி விட்டார்.

இன்ப வனத்திலிருந்து அனுப்பி விட்டார்

 என்று சொல்லும்போதே அவர்கள் நுழைந்தது துன்பம் என்று புரிகிறது.

ஒரு வேலையும் பார்க்காமல்  இன்ப வனத்தில் கிடைக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டு   ஜாலியாக வாழ்ந்தவர்கள் 

இனி நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு தான் சாப்பிட வேண்டி இருக்கும்.

அடுத்த மனிதன் பிரசவ வேதனையின் வழியே  பிறந்து 

அழுகையுடன் தான் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் 

தான் செய்த பாவத்தால்  

அந்த சாயலைப் பழுது படுத்திவிட்டான். (damaged)

ஆனாலும் மனிதன் எதற்காக படைக்கப் பட்டானோ அந்த நோக்கம் இன்னும் மாறவில்லை,

 அதாவது ,

நித்திய பேரின்ப வாழ்வே மனித வாழ்வின் குறிக்கோளாக இருந்தது.

ஆனால் அந்த குறிக்கோளை அடைய மனிதன் தான் பழுதுபடுத்திவிட்ட சாயலை சரி செய்ய வேண்டும்.

பாவத்தினால் பழுதடைந்த சாயல் பாவம் நீங்கினால்தான் சரியாகும்.

நமது சுத்தமான உடையில் சகதி படிந்து விட்டால் அது அழுக்கு ஆகி விடுகிறது.

 அதைத் திரும்பவும் சுத்தமாக்க அதைத் துவைக்க வேண்டி இருக்கிறது. அடித்துத் தானே துவைக்க வேண்டும்!

நாமும் பழுதுபட்ட  இறைச்சாயலை  பழுதை நீக்கி பழைய நிலைக்குக் கொண்டுவர அடி பட வேண்டி இருக்கிறது. அதாவது பாவத்திற்குப்
 பரிகாரம் செய்ய வேண்டி இருக்கிறது.

ஆனால் நமது ஆன்மீகப்படி பாவத்தோடு  செய்யும் எந்தப் பரிகாரமும் இறைவன் முன் பலன் உள்ளதாக இருக்க முடியாது.

ஆகவேதான் நம் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ள நம் இறைவன்

 நம் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய,

தனது ஒரே மகனையே  பூமிக்கு அனுப்பினார்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு 

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக

 வேதனைகள் நிறைந்த பாடுகள் பட்டார்.

 நமக்காக 

கைது செய்யப்பட்டார்,

ஏளனம் செய்யப்பட்டார்,

 மிதிக்கப்பட்டார்,

உதைக்கப் பட்டார்.

காரி உமிழப்பட்டார்,

கசையால் அடிக்கப்பட்டார்.

பாரமான சிலுவையைச் சுமந்தார்

ஆணிகளைக் கொண்டு சிலுவையில் அறையப்பட்டார்,

 சிலுவை மரத்தில் தொங்கவிடப்பட்டார், 

இப்பாடுகளின் மூலமாக தன் இரத்தத்தை எல்லாம் சிந்தினார்,

இறுதியில் தன் உயிரையே நமக்காகப் பலியாக்கினார்.

இறந்தபின்னும் ஈட்டியால் குத்தப்பட்டார்.

இவ்வளது துன்பமும் இயேசு பட்டது எதற்காக?

நாம் பாவத்திற்கு மன்னிப்புப் பெற்று,

இழந்த இறைச் சாயலைத் திரும்பப் பெற்று,

நித்திய பேரின்ப வீட்டிற்குள் நுழைவதற்காக.

நாம் இன்பம் பெற அவர் துன்பப்பட்டார்.

தனது பாடுகளால் 

நமது ஆன்மாவில் படிந்த பாவது கறையை நீக்கி, இறைச் சாயலை மீட்டுத் தந்தார்,

நமது பாவத்தின் விளைவாகிய துன்பங்களை 

நித்திய பேரின்பத்தின் வழியாக மாற்றினார்.

நமது மரணத்தை விண்ணக வாயிலாக மாற்றினார். 

ஆக நமது துன்பங்கள் நித்திய பேரின்பத்தின் ஊற்று.

புனித சின்னப்பரும், பர்னபாவும்,

 " பல துன்பங்களின் வழியாகவே 

நாம் கடவுளின் அரசிற்குள் நுழைய வேண்டுமென்றும் அறிவுறுத்தினர் "

இயேசு, "நானே வழி" என்றார்.

அவர் தான் பட்ட துன்பத்தின் வழியே நம்மை மீட்டார்.

 நாமும் துன்பத்தின் வழியேதான் பேரின்ப வீட்டிற்குள் நுழைய   வேண்டும்.

இயேசு தனது பாடுகளுக்கு முந்திய இரவில் தனது சீடர்களிடம் கூறியகூறியது,

"நான் தந்தைக்கு அன்புசெய்கிறேன் என்பதையும், 

அவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நடக்கிறேன் என்பதையும்

 உலகம் தெரிந்துகொள்ளவேண்டும்.

 எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்."
(அரு. 14:31)

எங்கே போனார்?

"இயேசு இவற்றைக் கூறியபின், தம் சீடரோடு கெதரோன் அருவியைக் கடந்துபோனார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடரோடு அதில் நுழைந்தார்."
(அரு. 18:1)

கெத்சமனி தோட்டத்தில் இருந்து தான் இயேசுவின் பாடுகள் ஆரம்பித்தன.

அவர் தந்தைக்கு அன்புசெய்வதையும்,

தந்தை இட்ட கட்டளையிட்டபடியே நடப்பதையும்

உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

தந்தை மீது தனக்கு உள்ள அன்பையும்,

 தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே உலகிற்கு வந்ததையும் 

நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் ஆசை.
'


தன் மகன் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக

 பாடுகள் பட்டு தன் உயிரை பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் 

என்பது தந்தையின் சித்தம்,


 தந்தை மீது அளவற்ற அன்பு கொண்டுள்ள மகன் 

தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற பூமிக்கு வந்தார்.

 இதை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

இதைத் தியானிக்கும் போது என் மனதில் பட்ட எண்ணங்கள்:

(ஒவ்வொருவர் தியானிக்கும் போதும் அவரவருக்கு அவரவர் சிந்தனா சக்திக்கு ஏற்ப வெவ்வேறு எண்ணங்கள் தோன்றலாம்.

அவை இறை உண்மைக்கு மாறாக இருந்து விடக் கூடாது.

எனது சிந்தனைக்கு எட்டிய எண்ணங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்)

பரிசுத்த தம திரித்துவத்துக்குள்  அளவு கடந்த அன்பு நிலவுகிறது.

தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒருவரை  ஒருவர் அளவு கடந்த விதமாக அன்பு செய்கின்றனர். 

மூன்று ஆட்களுக்கும் இடையில் நிலவுவது ஒரே அன்பு. 


மகன் மனிதனாய்ப் பிறந்து,
பாடுகள் பட்டு, மரித்து உலகை மீட்க வேண்டும் பிதாவின் சித்தம்.

மூவருக்கும் ஒரே சித்தம்தான்.

இறைவன் தனது அன்பின் காரணமாகவே நம்மைப் படைத்தார்.

அன்பின் காரணமாகவே 
நமக்காகப் பாடுபட்டார்.

அன்பின் காரணமாகவே நம்மை மீட்டார்.

 அன்பின் காரணமாக இயேசு தந்த மீட்பே நம்மைப் பேரின்ப வீட்டிற்குள் அழைத்துச் செல்லும்.

அன்பு, துன்பம், மீட்பு, பேரின்பம்.


மூவொரு கடவுளின் 

1.ஒரே அன்பு.

2.சித்தம் (இயேசுவின் பாடுகள்)

3.மீட்பு. (பாடுகளின் பயன்)

4.பேரின்பம் (மீட்பின் பயன்)



1.இறைவன் தனது அளவு கடந்த அன்பின் காரணமாக 

4.பேரின்பமாக வாழவே. நம்மைப்  படைத்தார்.

2 .இயேசு பாடுகள் (துன்பம்)
மூலமாக

3.பாவத்தினால் இழக்கவிருந்த
பேரின்பத்தை மீட்டுத் தந்தார்.



இறைவனது அளவற்ற அன்பே நம்மை பேரின்பத்திற்காகப் படைத்தது.

நமது பாவத்தால் அதை இழக்கவிருந்தோம்.

இறைமகன் தன் துன்பத்தால் அதை மீட்டுத் தந்தார்.

அன்பினால் படைக்கப்பட்டோம்

 துன்பத்தினால் மீட்கப்பட்டோம்.

அப்படியானால் துன்பம்தான் இன்பத்தை அடைவதற்கான வழி.

இன்பத்திற்கு ஆசைப்படும்  நாம்,

 அதற்கு வழியான  துன்பத்தை கண்டு ஏன் பயப்படுகிறோம்?

நமது அறியாமை.



இறைவன் அன்பானவர் என்பதையும், 

அவ்வன்பின் காரணமாகவே இயேசு நமக்காகத்  துன்பப்பட்டார்  என்பதையும்   

  நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.


தெரிந்து கொண்டால் துன்பம் வரும் போது பயப்பட மாட்டோம்.

மாறாக, நமது பேரின்பத்தை அதிகரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்வோம்.

"பல துன்பங்களின் வழியாகவே நாம் கடவுளின் அரசிற்குள் நுழைய வேண்டும்" என்ற புனித சின்னப்பரின் சொற்களுக்கு ஏற்ப,

துன்பங்களை ஏற்று, அவை வழியே 

பேரின்பம் நிறைந்த இறை அரசிற்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment