ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை.
** ** ** ** ** ** ** ** ** **
"ஏங்க, கொஞ்சம் உங்க phone diaryய கீழ வைக்க முடியுமா?"
" இன்றைக்கு Post பண்ணுவதற்காக article எழுதிக்கிட்டிருக்கேன்."
"அதைப் பிறகு எழுதி நாளைக்கு Post பண்ணிக்கொள்ளலாம். . இப்போ கொஞ்சம் பேசணும்."
"ஒரு நாளும் இப்படி பதர்ஸ்டப் படமாட்ட . இன்றைக்கு என்னாச்சி?"
"இப்போ வெளியே போயிருக்கும்போது என் friend ஒருத்தியப் பார்த்தேன். ஆசையோடு பேசப் போனா அவா ஒரே வார்த்தையில என்ன mood out பண்ணிட்டா."
"அப்படி என்ன சொன்னா?"
"அவள் சொன்னதைச் சொன்னா உங்க mood out ஆயிடும். அதை விடுங்க.
அவள் கேட்ட கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லணும். உங்க கிட்ட சில விபரங்கள் கேட்க வேண்டியிருக்கு."
"வேறு என்ன கேட்டிருப்பா, பைபிளைப் பற்றி ஏறுக்கு மாறா ஏதாவது சொல்லியிருப்பா. சரி, கேளு."
"இப்போ எல்லார் கையிலேயும் ஆளுக்கோர் பைபிள் வச்சிருக்காங்க. நல்லதுதான்."
"நீ ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிக்கிட்டேன்
ஆளுக்கொரு பைபிள் வச்சிக் கிட்டு
ஆளுக்கொரு விளக்கம் கொடுக்கிறாங்களே,
இது சரியான்னு கேட்க வார, அப்படித்தானே"
"அப்படியேதான்."
" Primary School ல் படிக்கும்போது கணக்கு வருப்பில முதன்முதல சொல்லித்தருவாங்களே, அது என்னது?"
"வாய்பாடு."
"Correct. எதுக்காக வாய்பாடு படிக்கிறோம்?"
"வாய்பாடு தெரிஞ்சாதான் கணக்கு செய்ய முடியும்."
''Correct. ஆனால் வாய்பாடே தெரியாட்டா?"
"கணக்கு வராது."
"ஆனால் சில பேர் வாய்ப்பாடு தெரியாமலேயே கணக்குப் போடுகிறார்களே! .
நாம் விசயத்துக்கு வருவோம்.
கணக்குக்கு வாய்பாடு அடிப்படையாக இருப்பது போல் பைபிளுக்கும் ஒரு அடிப்படை இருக்கிறது.
அந்த அடிப்படை சரியாகத் தெரிந்தால்தான் பைபிளும் சரியாகப் புரியும்.
பைபிளுக்கு உரிய அடிப்படையை உருவிப் போட்டு விட்டு தங்களுக்கு இஸ்டமான அடிப்படையைப் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு இஸ்டமான விளக்கம் தான் வரும். சரியான விளக்கம் வராது."
"அப்படிப் பட்டவர்களுக்கு நம்மால் எப்படி பைபிளுக்கு
விளக்கம் கொடுக்க முடியும்?"
"முடியவே முடியாது. அவர்களுக்கு முதலில் சரியான அடிப்படையை விளக்க வேண்டும்.
இயேசு தனது திருச்சபையை மணலின் மீது கட்டவில்லை. அசைக்க முடியாத பாறை மீது கட்டினார்.
"மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்.
உன் பெயர் "பாறை."
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.
19 வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்.
எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.
எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார்.
( மத். 16:18, 19)"
"இன்று உலகில ஆயிரக்கணக்கா திருச்சபைகள் இருக்கே!"
"காலப்போக்கில ஆயிரக் கணக்கு இலட்சக் கணக்கா பிரிந்து பிரிந்து போனாலும் ஆச்சரியமில்லை.
ஆனால் இயேசு ஒரே ஒரு திருச்சபையைத்தான் கட்டினார்."
"ஒரே ஒருன்னு சொல்றீங்க. ஆனால் ஆயிரக் கணக்கா பிரிந்து போயிருக்கே! அதுக்கு என்ன அர்த்தம்?"
"அதுக்கு ஒரே ஒரு அருத்தம் தான்.
இராயப்பர் என்ற பாறை மீது கட்டப்பட்ட திருச்சபை தான் இயேசு நிறுவிய ஒரே ஒரு திருச்சபை."
"மற்றவை?"
"அவரவர்களாக நிறுவிக் கொண்டவை!"
"அவர்களும் நமது பைபிளைத் தான் வைத்திருக்கிறார்கள்!"
"ஆமா, ஆனால், இல்லை."
"அதென்ன ஆமா, ஆனால், இல்லை? ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுங்கள்."
"இராயப்பர் என்ற பாறை மீது கட்டப்பட்ட திருச்சபையின் பைபிளில் 73 புத்தகங்கள் உள்ளன.
ஆனால் அவரவர்களாகவே நிறுவிய திருச்சபைகளில்
66 புத்தகங்கள்தான் உள்ளன.
இப்போ சொல்லு. சரியான பதில் ஆமாவா? இல்லையா?"
"நாற்காலிக்கு நான்கு கால்கள்.
அதன் ஒரு காலை அப்புறப் படுத்திவிட்டால் அதை நாற்காலி என்று அழைக்க முடியாது. முக்காலி என்று வேண்டுமானால் அழைக்கலாம்!"
"இராயப்பரின்,
அவரின் காலத்திற்குப் பின் அவரது வாரிசாகிய பாப்பரசரின்,
தலைமையில் இயங்கும் திருச்சபை,
அதாவது இயேசு நிறுவிய ஒரே திருச்சபை
ஏற்றுக்கொண்ட
73 புத்தகங்கள் கொண்ட பைபிள் தான் original Bible!
அதுதான் முழுமையான பைபிள்."
"பைபிளின் அடிப்படை பற்றி ஆரம்பிச்சிங்க, இன்னும் அதற்கு வரலிய!"
"ஏண்டி, மதுரைக்குப் போக bus ஏறினால் , எத்தன ஊரக் கடந்து போகணும்.
நீ bus ல ஏறினவுடனே மதுரையை எங்கேன்னு கேட்கிற!"
"சரி.மதுரைக்குப் போன பிறகு மதுரை எங்கேன்னு கேட்கிறேன். இப்ப போவோம்."
"இயேசு திருச்சபையை வழிநடத்துவதற்கு 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்.
இராயப்பர் தலைவர். மற்றவர்கள் ஆயர்கள்.
பெந்தகோஸ்தே திருநாள் அன்று
இயேசுவின் உத்தரவுப் படி,
பரிசுத்த ஆவியின் தூண்டுதலால்,
நற்செய்தி அறிவிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் அப்போஸ்தலர்கள் தான்.
அதன்பின் திருச்சபையை வழி நடத்தியவர்களும் அவர்கள்தான்.
ஆகவேதான் இயேசு நிறுவிய ஒரே திருச்சபை அப்போஸ்தலிக்க திருச்சபை என்று அழைக்கப் படுகிறது.
இயேசு பரிசுத்தர். அவர் நிறுவிய திருச்சபையும் பரிசுத்தமானது. பாவிகளாகிய நம்மை பரிசுத்தமாக்கவே
அதை நிறுவினார்.
அழுக்கு உள்ளவர்கள் அது நீங்க சுத்தமான தண்ணீரில் தான் குளிப்பார்கள்.
அதுபோல பாவிகளாகிய நாம் பாவம் நீங்குவதற்காக இயேசு நிறுவிய பரிசுத்தமான திருச்சபைக்குள் இருக்கிறோம்.
இயேசு திருச்சபையை நிறுவியது ஒரு சிலருக்காக அல்ல. உலகத்தினர் அனைவருக்குமாக.
கத்தோலிக்க என்ற வார்த்தைக்கு பொதுவான என்பது பொருள்.
ஆகவே இயேசுவின் திருச்சபை கத்தோலிக்க திருச்சபை என்று அழைக்கப்படுகிறது.
. திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து
அப்போஸ்தலர்களின் வாரிசுகளாகிய ஆயர்கள் (பாப்பரசரும் ஒரு ஆயர் தான்) திருச்சபையை வழிநடத்திக் கொண்டு வருகிறார்கள்.
இப்போ சொல்லப் போகிறது மிக முக்கிய உண்மை.
பைபிளின் இரண்டாவது பகுதியான புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களையும் எழுதியது இராயப்பர் என்ற பாறைமீது இயேசுவால் கட்டப்பட்ட ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபைதான்.
நற்செய்தியாளர்களும், நிரூபங்களை எழுதியவர்களும் ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களே.
இப்போ சொல்லு, பைபிளின் அடிப்படை திருச்சபையா?
திருச்சபையின் அடிப்படை பைபிளா?"
"இயேசுவைத் தலையாகக் கொண்டது திருச்சபை.
அதாவது இயேசு தான் திருச்சபை.
திருச்சபைதான் பைபிளுக்கு அடிப்படை.
நிலம் இல்லாவிட்டால் மரம் எப்படி வளர்ந்திருக்கும்?
திருச்சபை இல்லாவிட்டால் பைபிள் எப்படி முளைத்திருக்கும்?
மரத்திற்கு உணவு கொடுப்பது நிலம்
பைபிளுக்கு பொருள் கொடுப்பது திருச்சபை. ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை!
யார் இதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை.
இது தெரியாம என் friend சொல்றா
"இந்த 21 ம் நூற்றாண்டில், வேத வசனத்தை விளக்கம் கொடுக்க கத்தோலி க்க திருச்சபை க்கு மட்டுமே "அதிகாரம் உண்டு என்பதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்... "னு "
"நீ போய் தலையை நிமிர்த்தி சொல்லு,
'அம்மா தாயே,
இயேசுவின் வரலாற்றுக்கும் போதனைக்கும் எழுத்து வடிவம் கொடுத்தது கத்தோலிக்க திருச்சபைதான்.
திருச்சபை எழுதிய நூலுக்கு சரியான பொருளும் விளக்கமும் திருச்சபைக்கு மட்டும் தான் தெரியும்.'
உன் friend இதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை."
"ஏங்க கத்தோலிக்க திருச்சபை முற்காலத்தில் பைபிள் வாசிப்பதைத் தடை செய்ததாக சினேகிதி சொல்கிறாளே. உண்மையா?"
"முழுப் பொய். விளக்கம் நாளைக்கு."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment