Thursday, May 7, 2020

"என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.(அரு.12: 44)

"என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.
(அரு.12: 44)
**  **  **   ** ** **   ** ** ** ** **

"என்மேல் விசுவாசம் கொள்கிறவன், என்மேல் அன்று, 

என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்."

. ஏன் இயேசு  இவ்வாறு சொல்கிறார்?


இயேசு தந்தையைப் பற்றிப் பேசுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு அடிப்படை இறையியல் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

ஒரே தேவ சுபாவம், ஒரே சித்தம், ஒரே வல்லமை.

ஒரே சித்தம் என்றால், ஒரே மாதிரியான சித்தம் அல்ல,
ஒரே சித்தம், one will.

நமது மொழி நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப் பட்டது.

இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நாம் அதைத் தான் பயன் படுத்த வேண்டியிருக்கிறது.

வேறு வழியில்லை.

 இறை அனுபவப்  பகிர்வைச் 

சொல் அடிப்படையில் அல்ல,

 தாய்த் திருச்சபையின் போதனை அடிப்படையில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் என் மகனைப் பொறியியல் படிக்க வைக்க விரும்புகிறேன்.

என் மனைவியும் அவனைப்
பொறியியல் படிக்க வைக்கவே விரும்புகிறாள். 

நமது மொழியில் இதைப் பகிரும்போது இருவருக்கும் ஒரே விருப்பம் என்றுதான் சொல்லுவோம்.

ஆனால் உண்மையில் இருவருக்கும் ஒரே விருப்பமல்ல, 

ஒரே மாதிரியான இரண்டு விருப்பங்கள்.

 ஏனெனில் எனது விருப்பத்தை நான் மாற்றிக் கொண்டாலும் 

அவளது விருப்பம் அப்படியே இருக்கும்.

எங்களது விருப்பங்கள் வெவ்வேறானவையாய்  மாறிவிடும்.

ஆனால் இறையியலில் மூன்று ஆட்களுக்கும் ஒரே சித்தம், one will.

ஒரே கடவுளிடம் ஒரே மாதிரியான மூன்று சித்தங்கள் இருக்க முடியாது.



இறைமகன் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனு உரு எடுத்தார்.

மனுவுரு எடுத்த நொடியிலிருந்து இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள்:

 தேவ சுபாவம், மனித சுபாவம்.

ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு.

(தமதிரித்துவத்தில் சுபாவம் ஒன்று,
ஆள் மூன்று.)

இயேசு முழுமையாக கடவுள், முழுமையாக மனிதன்.

Jesus is fully God, and fully man.

இயேசு முழுமையான மனித சுபாவத்தில்

மனித கரங்களைக் கொண்டு தான் உழைத்தார்.
worked with human hands;

மனித உள்ளத்தால் நினைத்தார்.
 he thought with a human mind.


மனித சித்தப்படி வாழ்ந்தார்.
 He acted with a human will,

(இயேசுவுக்கு இரண்டு சித்தங்கள், தெய்வ சித்தம், மனித சித்தம்.
At the sixth ecumenical council, Constantinople III in 681, 

the Church confessed 

that Christ possesses two wills

 and two natural operations,

 divine and human.)

இயேசுவின் மனித சித்தம்

அவரது இறைச் சித்தத்திற்கு

 முற்றிலும் கட்டுப்பட்டது.

Christ's human will "does not resist or oppose but rather submits to his divine and almighty will."111

மனித இதயத்தோடு அன்பு செய்தார்.
 and with a human heart he loved.

கன்னிமரியின் வயிற்றில் மனுவுரு எடுத்த இயேசு, பாவம் தவிர மற்ற எல்லா விதத்திலும் நம்மில் ஒருவரானார்.

Born of the Virgin Mary, he has truly been made one of us, 

like to us in all things except sin.



இயேசுவைப் பற்றிய இறையியல்  உண்மையின் அடிப்படையில் பின்வரும்  வசனத்தை பார்ப்போம்.

"என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்."

கடவுள் ஒருவரே.

ஒரே கடவுளையே விசுவசிக்கிறோம்.

ஆட்கள் மூன்று.

 தந்தை, மகன், தூய ஆவி.

மூவரும் தனித்தனியானவர்கள்.
Distinct persons.

ஒருவர் மற்றவர் அல்ல.

ஆனால் ஒருவருள் மற்றவர் இருக்கிறார்.

"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்" (அரு. 14:11)

தந்தை மகனுள்ளும், பரிசுத்த ஆவியினுள்ளும் இருக்கிறார்.

மகன் தந்தையினுள்ளும், பரிசுத்த ஆவியினுள்ளும் 
இருக்கிறார்.

பரிசுத்த ஆவி தந்தையினுள்ளும், மகனுள்ளும் இருக்கிறார்.

Because of that unity the Father is wholly in the Son and wholly in the Holy Spirit;

 the Son is wholly in the Father and wholly in the Holy Spirit; 

the Holy Spirit is wholly in the Father and wholly in the Son." 
(Catechism: 255)

தந்தையிடமிருந்து மகன் நித்தியமாக பிறக்கிறார்.
The Son is eternally begotten.

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும்  பரிசுத்த ஆவி நித்தியமாக புறப்படுகிறார்.
The Spirit proceeds from the Father and the Son eternally. (248)

It is the Father who generates, the Son who is begotten, and the Holy Spirit who proceeds." The divine Unity is Triune. (254)

தந்தை, மகன் ,தூய ஆவி என்ற வரிசையில் பெயர்களை கூறுகிறோம்.

மூன்று ஆட்களும் நித்திய  மானவர்கள்.

ஆனாலும் அவர்களது உள் வாழ்வில் தந்தையை யாரும் பெறவில்லை.

அவர் மகனை நித்தியமாகப் பெறுகிறார்.

அதுமட்டுமல்ல மகன் மூலமாகவே தன்னை வெளிப்படுத்துகிறார்.

"என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே."

என்று இயேசு கூறுகிறார்.

நாம் இயேசுவையே செயலாற்றுபவராக பார்க்கிறோம்.

ஏனெனில் அவர்தான் நம்மைப்போல் மனு உரு எடுத்தார். அவரைத்தான் நமது மனித கண்ணால் பார்க்கிறோம்.

அவரது செயல்களைப் பார்த்து அவரை விசுவசிக்கிறோம்.

 ஆனால் இயேசு தந்தையே  தன் மூலமாக செயலாற்றுவதாகக்  கூறுகிறார்.

 ஆகவே நாம் மகனை விசுவசிக்கும் போது

அவர் மூலமாக செயலாற்றும்  
தந்தையையும் விசுவக்க   வேண்டும்.

மேலும், நாம் பார்ப்பது மனித உரு எடுத்த இறை இயேசுவின்  செயல்களை.

செயலாற்றுபவர்  நித்தியராகிய தந்தை.

இறை மகனும் தேவசுபாவத்தில் நித்தியர். 

ஆனால் மனித சுபாவம் காலத்திற்கு உட்பட்டது.

இறைமகன் இயேசு நித்தியமாக பிறக்கிறார்.

மனுமகன் இயேசு கன்னிமரியிடம்  பிறந்தார்.


ஆகவேதான்

"என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, 

என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்."

அதாவது, தந்தை மகனை
 அனுப்பி அவர் மூலமாக செயலாற்றுகிறார்.

"என் தந்தை என்னை அனுப்பி என் மூலமாக

 அவரே செயலாற்றுவதால்

 நீங்கள் விசுவசிப்பது என் தந்தையையே"

என்ற பொருளில் இயேசு பேசுகிறார்.

பரிசுத்த தமதிரித்துவ ரகசியத்தை நமக்கு 
வெளியிடுவதற்காகவே 

இந்த செய்தியை இயேசு கூறுகிறார்.

மகனாகிய இயேசு 
அரு.12:44 ல்  தந்தையை அறிமுகபடுத்துவிட்டு,
14:16ல், பரிசுத்த ஆவியை அறிமுகப்படுத்துகிறார்.

"தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்: அவர் உங்களோடு என்றும் இருப்பார்." 
(அரு.14:16.)

பரிசுத்த ஆவிதான் துணையாளர்.

சுருக்கமாக,
 கடவுள்  இவ்வசனத்தின் மூலம் தன்னைத் தன் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.

God reveals Himself to His children through this Bible Verse.

லூர்து செல்வம்.




.

No comments:

Post a Comment