"நாங்களோ செபத்திலும், தேவ வார்த்தையைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்போம்" (அப்.6:4)
** ** ** ** ** ** ** ** ** **
இறைவன் இயேசு நிறுவிய திருச்சபையின் முதல் திருத்தந்தையும், ஆயர்களும், எடுத்த முடிவு இது:
"பந்தியில் பணிவிடை செய்வதற்காகக் கடவுளின் வார்த்தையைப் போதியாமல் விடுவது முறையன்று.
3 ஆதலால் சகோதரரே உங்களிடையே நன்மதிப்புள்ளவர்களாய்த் தேவ ஆவியும் ஞானமும் நிரம்பப்பெற்ற எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை நாம் இப்பணிக்காக ஏற்படுத்துவோம்.
4 நாங்களோ செபத்திலும், தேவ வார்த்தையைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்போம்" என்றனர்.
(அப்.6:2-4)
கட்டடம் எவ்வளவு உயர்ந்து கொண்டே போனாலும், அடிப்படை அப்படியேதான் இருக்கும்.
மரத்திலிருந்து ஆயிரம் புதிய கிளைகள் மேல் நோக்கி வளர்ந்தாலும்,
மரத்தின் வேர் பூமிக்குள்ளே தான் வளரும்.
ஒரே வரியில்,
அடிப்படைத் தன்மை மாறாது.
ஆண்டவர் விண்ணகம் எய்துமுன் தன் சீடர்களுக்கு இட்ட கட்டளை:
1.உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
2. எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்.
3.பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். ,
4. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
5. விசுவாசத்தை ஊட்டுங்கள் ஞானஸ்நானம் கொடுங்கள் மீட்பு அடைய உதவுங்கள்,
' (விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்.)
ஆண்டவர் கொடுத்த கட்டளைகள் முழுக்க முழுக்க ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.
(fully Spiritual)
இயேசு இராயப்பரை திருச்சபையின் தலைவராக நியமிக்கும் முன்னால் அவருக்கு ஒரு சிறிய interview வைக்கிறார்.
ஒரே கேள்வியை மூன்று முறை கேட்கிறார்.
1 இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?"
2.நீ எனக்கு அன்புசெய்கிறாயா ?
3. என்னை நீ நேசிக்கிறாயா ?
திருச்சபையின் ஒரே பணி அன்புப் பணி மட்டும்தான்.
இயேசுவின் வார்த்தைகள் அவர் தன் சீடர்களுக்குக் கொடுத்த பணி முற்றிலும் ஆன்மீக சம்பந்தப்பட்டது
(purely spiritual) என்பதை உறுதி செய்கின்றன.
முற்றிலும் ஆவியாகிய நமது ஆன்மா, சடப் பொருளாகிய நமது உடலோடு இணைந்து செயல்படுகிறது.
நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்வு மட்டும்தான்.
நமது உடல் தன் சம்பந்தப்பட்ட வாழ்வை வாழும் போதும் அதன் பணி ஆன்மீக வாழ்வுக்கு உதவுவதே.
நமது ஆன்ம நலனுக்காக நமது உடல் தன்னையே தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் உடலின் லவ்கீக நலனுக்காக நமது ஆன்மா தன்னை தியாகம் செய்யக் கூடாது.
நாம் நமது உடலை இழந்து ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டுமே தவிர,
ஆன்மாவை இழந்து உடலை காப்பாற்ற நமக்கு உரிமை இல்லை.
ஆவியாகிய இறை மகன் சடப் பொருளாகிய உடலை எடுத்து மனிதனாகியது நமது ஆன்மாவை காப்பாற்ற.
அவர் நிறுவிய திருச்சபையும் உலகில் தான் இயங்குகிறது.
உணவு, உடை, இருப்பிடம் போன்ற உலக சாதனங்களை திருச்சபை தனது ஆன்மீக பணிக்காக பயன்படுத்திக்கொள்கிறது.
அதாவது நமது ஆன்மா நமது உடலைப் பயன் படுத்திக் கொள்வது போல.
ஆதி திருச்சபையில் பந்தியில் பணிவிடை செய்வது,
அதாவது, திருச்சபைக்கு உதவக்கூடிய உலக காரியங்களை கவனித்தது,
கடவுளின் வார்த்தையைப் போதிக்க இடைஞ்சலாய் இருப்பது முறையன்று என்று அப்போஸ்தலர்கள் உணர்ந்தார்கள்.
ஆகவே அப்பணிக்குத் தனியாக ஆட்களை நியமித்துவிட்டு
அவர்கள். செபத்திலும், தேவ வார்த்தையைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டார்கள்.
அதாவது பணிக் குருத்துவத்தினர் இயேசு அவர்களுக்குக் கொடுத்திருந்த ஆன்மீகப் பணியை மட்டும் செய்தார்கள்.
பொதுக் குருத்துவத்தினர் அவர்களுடைய ஆன்மீகப் பணிக்கு சுமையாய் இருக்கும் உலக காரியங்களை கவனித்துக் கொண்டார்கள்.
பணிக் குருத்துவத்தினர் ஆன்மா போலவும் பொதுக் குருத்துவத்தினர் உடல் போலவும் செயல்பட்டார்கள்.
திருச்சபையும் வேகமாக வளர்ந்தது.
இன்றைய திருச்சபையின் நிலைமையை எடுத்துக்கொள்வோம்.
நமது முதல் தந்தையும் ஆயர்களும் ஏற்படுத்திய வழியில் இன்று நாம் நடக்கிறோமா?
திருச்சபை எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அதன் அடிப்படை அப்படியே இருக்கிறது.
பணிக் குருத்துவம், பொதுக்
குருத்துவம் எந்த அடிப்படை அமைப்பு அப்படியேதான் இருக்கிறது,
ஆனால் அப்படியேதான் செயல்படுகிறதா?
பணிக் குருத்துவத்தின் முழு நேரப்பணி
நற்செய்தியைப் பரப்புதல்,
மக்களுக்கு விசுவாசத்தை ஊட்டுதல்.
தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல்,
மக்களின் ஆன்மீக வாழ்வைக் கவனித்தல் மட்டும்தான்.
பொதுக் குருத்துவத்தினர்
பணிக் குருத்துவத்தினரின் வழிநடத்துதலின்படி
தங்கள் ஆன்மீக வாழ்க்கையை ஒழுங்காக வாழ்வதோடு,
நம்முடைய ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியை செய்ய வேண்டும்.
அவர்களது முழுநேரப் பணியான ஆன்மீகப் பணியை தடையின்றி செய்ய நாம் உதவிகரமாக இருக்கிறோமா?
Less luggage, more comfort.
பயணிகளுக்கு கொடுக்கப்படும் அறிவுரை.
கனம் மிகுந்த சுமைகளைச் சுமந்துகொண்டு சௌகரியமாக பயணிக்க முடியாது.
நமது திருச்சபையின் ஆன்மீக பயணத்தில் நம்மை வழி நடத்துபவர்களின் சுமைகளை
அவர்களது ஞான பிள்ளைகளாகிய நாம் பகிர்ந்து கொண்டால்
அவர்களது ஆன்மீக வழிநடத்தல் பயணம் சவுகரியமாக இருக்கும்.
படிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் பணிகளையும்
மாணவச் செல்வங்களுக்கு கொடுத்துவிட்டு
அவர்களது படிப்பை குறை சொல்வது சரியல்ல.
நமது ஞான தந்தையர்களின் ஆன்மீகப் பணிக்கு சுமையாய் இருக்கும்
உலக காரியங்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பங்கிலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
நமது அறிவை வளர்க்க பள்ளிக்கூடங்கள் கட்டாயம் தேவை.
ஆனால் அவை நமது ஞான காரியங்களைக் கவனிப்பதற்காக வந்திருக்கும் குருக்களின் பொன்னான நேரத்தில் பெரும்பகுதியை விழுங்கி விடுகின்றன.
ஆசிரியர்கள் நியமனம், பணிமாற்றம், மாணவர் சேர்க்கை, பள்ளிக்கூட ஒழுங்குகள், பள்ளிக்கூட பண வரவு செலவுகள், புதிய கட்டடங்கள் கட்டுதல், அதற்கான நன்கொடை வரவு செலவுகள்
போன்ற காரியங்கள் ஆன்ம சேவையை முழுநேர சேவையாக செய்ய வந்த பங்கு குருக்களின் கவனத்தை திசை திருப்பி விடுகிறைன
இரண்டாவது வத்திக்கான் திருச்சங்கம் பங்கு பணியில் பங்குக் குருக்களுக்கு
உதவியாக இருப்பதற்காக பங்கு பேரவைகளை நிறுவ வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது,
பங்கு பேரவைகள் பொது நிலையினரால் ஆனவை.
,
பள்ளிக்கூட நிர்வாகத்தை பங்கு பேரவை ஏற்றுக்கொண்டால்
குருக்கள் தங்களுடைய முழு நேரத்தையும் ஆன்மீக பணிக்காகச் செலவழிக்க முடியும்.
இதுபோல திருச்சபையின் நில சம்பந்தமான சொத்து
பராமரிப்பு, வரவு செலவுகள், போன்றவற்றையும் பொதுநிலையினர் ஏற்றுக்கொண்டால் நம்முடைய ஞாபக தந்தையருக்கு ஞான காரியங்களை கவனிக்க அதிக நேரம் கிடைக்கும்.
கொஞ்சம் ஓய்வு நேரமும் கிடைக்கும்.
ஞான காரியங்களிலும் பொதுநிலையினர் குருக்களுக்கு நிபந்தனையற்ற உதவிகரமாய் இருக்கவேண்டும்.
சமையல் வேலையை மார்த்தாள் கவனித்துக் கொண்டதால்தான் மரியாளால் ஆண்டவரின் வார்த்தைகளை முழுவதுமாகக் கவனிக்க முடிந்தது.
நிருவாகம் சம்பந்தப்பட்ட பொறுப்புகளை
பிள்ளைகளாகிய நாம் ஏற்றுக்கொண்டால்
நம்முடைய ஆன்மிக தந்தையர்களுக்கு
ஆன்மீகப் பணி செய்ய நாம் உதவியாளர்களாக இருப்போம்.
குருக்களுக்கு உதவியாய் இருக்க வேண்டியது நமது கடமை.
நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியை செய்ய வேண்டும்.
இது நமது தாய் திருச்சபையின் கட்டளை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment