"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு. 21:25)
*********************************
எதைச் சொன்னாலும் "பைபிளில் எங்கே இருக்கிறது?" என்று கேட்போர் கவனத்திற்கு:
இயேசு விண்ணகம் எய்தும்போது வயது 33.
(அம்மாவுடன் வாழ்ந்தது 30 ஆண்டுகள். பொதுவாழ்க்கை 3 ஆண்டுகள்.)
விண்ணகம் எய்து முன் அவர் சீடர்களிடம்
"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்."
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
(மத். 28:19,20)
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."
(மாற்கு,16:15)
என்றுதான் சொன்னார்.
"நற்செய்தியை எழுதுங்கள்" என்று அவர் சொல்லவில்லை.
நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டது கி.பி.60 - 90 காலவெளிக்குள்.
கி.பி.33 முதல 60 வரை யார் கையிலேயும் நற்செய்தி நூல்கள் இல்லை.
அப்போஸ்தலர்கள் வாய்மொழியாகப் போதித்தார்கள்.
முதலில் நற்செய்தியை எழுதிய மாற்கு ஒரு அப்போஸ்தலரே அல்ல.
இராயப்பரின் நற்செய்திப் பயணங்களில் உடன் இருந்தவர்.
லூக்காசும் ஒரு அப்போஸ்தலர் அல்ல.
அவர் சின்னப்பரின்
நற்செய்திப் பயணங்களில் உடன் இருந்தவர்.
அருளப்பர்தான் கடைசியாக நற்செய்தியை எழுதியவர்.
இயேசு போதித்தவை அனைத்தையும் தான் எழுதவில்லை அவரே கூறியிருக்கிறார்.
"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு. 21:25)
Suppose,
அருளப்பர் காலத்தில் வாழ்ந்த ஒருவர் அவரிடம் வந்து,
"இயேசு விண்ணகம் எய்தினார் என்று போதிக்கின்றீர்களே.
உங்களது நற்செய்தி நூலில் இயேசு விண்ணகம் சென்ற விபரத்தைக் குறிப்பிடவே இல்லையே.
உங்கள் நூலிலேயே இல்லாததை நீங்கள் எப்படிப் போதிக்கலாம்?"
என்று கேட்டால் அருளப்பர் என்ன சொல்லியிருப்பார்?
"ஐயா, நான் வாய்மொழி
யாகப் போதித்ததைத்தான் எழுதினேன்.
இயேசுவின் போதனைதான் எனது வாய்மொழிப் போதனைக்கு ஆதாரம்.
என்னுடைய வாய்மொழிப் போதனைதான் (Tradition) என் எழுத்துக்கு (Gospel) ஆதாரம்.
நான் போதித்தவை எல்லாவற்றையும் எழுதவில்லை.
நான் எழுதியிருப்பது வருங்காலச் சந்ததிக்குப்
போய்ச் சேருவதுபோல
நான் எழுதாமல் போதித்தவையும் வாய்மொழியாகவே போய்ச் சேரும்.
நான் இயேசுவின் திருச்சபையின் அதிகாரப்பூர்வ உறுப்பினன்.
நான் போதிப்பது என் தனிப்பட்ட போதனை அல்ல.
இயேசுவின், அவரால் நிறுவப்பட்ட திருச்சபையின் போதனை.
திருச்சபையின் போதனை எழுத்து வழியே வந்தாலும், வாய்வழியே வந்தாலும் திருச்சபையின் போதனைதான்."
என்றுதான் சொல்லியிருப்பார்.
அப்போஸ்தலர்கள் இயேசு போதித்ததை நேரில் கேட்டவர்கள்,
வாசித்தவர்கள் அல்ல.
காதால் கேட்டதை வாயால் போதித்தார்கள்.
அப்போஸ்தலர்களில் மத்தேயுவையும், அருளப்பரையும் தவிர வேறு யாரும் நற்செய்தி. நூல்களை எழுதவில்லை.
தோமையார் கி.பி.52 லேயே இந்தியாவிற்கு வந்து விட்டார்.
அப்போது நற்செய்தி நூல்கள் எழுதப்படவில்லையே!
அவரே இயேசுவின் நேரடி சீடர் ஆகையால் அவருக்கு நூல்கள் தேவையும் இல்லை.
அவர் நமக்கு தந்தது வாய்மொழிப் போதனை.
அவர் முதலில் இந்தியாவிற்கு வேதம் போதிக்க வந்தபோது
நம்மவர் அவரிடம்,
"எழுத்து ஆதாரம் இல்லாமல் நீங்கள் எப்படி போதிக்கலாம்?
நீங்கள் போதிப்பதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால்
நீங்கள் கூறும் இயேசுவின் பைபிள் ஆதாரம் ஏதாவது இருக்க வேண்டும்."
என்று சொல்லியிருந்தால் இந்தியாவில் கிறிஸ்தவமே வேரூன்றி இருக்காது.
நல்லவேளை அன்றைய மக்கள் இன்றைக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருப்பவர்களை போல படித்த புத்திசாலிகள் அல்ல!
இயேசுவின் போதனையையே பாமர மக்கள் விசுவசித்த அளவுக்கு படித்தவர்கள் விசுவசிக்கவில்லையே!
ஒரு நண்பர்,
"போப்தான் திருச்சபையின் தலைவர் என்பதற்கு பைபிளில் என்ன ஆதாரம் இருக்கிறது?" என்று கேட்கிறார்.
கேள்வியைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது.
இது ஒரு பையனைப் பார்த்து,
"இந்த ஆளைப் பார்த்து 'அப்பா'
என்கிறாயே, அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?" என்று கேட்பது போல் இருக்கிறது.
தாய் மேல் நம்பிக்கை உள்ள யாரும் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டாங்க.
இயேசு இராயப்பரை திருச்சபையின் தலைவராக நியமித்தது நமக்குத் தெரியும்.
அதற்குப் பைபிளில் ஆதாரம் இருக்கிறது.
இராயப்பரோடு இயேசு உருவாக்கிய திருச்சபையின் வரலாறு முடிந்து விட்டதா?
உலகம் முடியும் மட்டும் இவ்வுலகில் திருச்சபை செயல்பட வேண்டாமா?
ஆண்டவர் இராயப்பரை நோக்கி "என் ஆடுகளைமேய்" என்று சொன்னாரே
அந்த ஆடுகள் அப்போஸ்தலர்கள் தானே?
அப்போஸ்தலர்களின் வாரிசுகளை மேய்க்க ஆள் வேண்டாமா?
ஆயர்கள், குருக்கள், விசுவாசிகள் ஆகிய மூன்று வகையினருக்கும்தானே இராயப்பரை தலைமை ஆயராக இயேசு நியமித்தார்!
விசுவாசிகளைத் தொடர்ந்து விசுவாசிகள் இருப்பார்கள்.
குருக்களைத் தொடர்ந்து குருக்கள் இருப்பார்கள்.
ஆயர்களைத் தொடர்ந்து
ஆயர்கள் இருப்பார்கள்.
ஆனால் இராயப்பரைத்
தொடர்ந்து அவரது ஸ்தானத்தில் யாரும் இருக்க மாட்டார்களா?
இராயப்பர் எந்த மேற்றிராசனத்தின் ஆயரோ
அதன் ஆயராக அவரது காலத்திற்குப் பின் வருபவர்
திருச்சபையின் தலைவர் என்று ஆதித்திருச் சபை ஏற்றுக் கொண்டது.
திரும்பவும் சொல்லுகிறேன்,
ஆதித்திருச்சபை ஏற்றுக் கொண்டது.
ஆதித்திருச்சபையின் தொடர்ச்சிதான்
இடைக்காலத் திருச்சபையும்,
இன்றைய திருச்சபையும்,
வருங்கால திருச்சபையும்.
இயேசுவின் காலம் தொட்டு இறுதி காலம் வரை ஒரே திருச்சபைதான்.
அதே திருச்சபையின் அதிகாரப்பூர்வமான,
இராயப்பரின் வாரிசான பாப்பரசரைத்
தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
இராயப்பர் வேத சாட்சியாய் மரித்த பின்,
உரோமையின் ஆயராகப் பொறுப்பேற்ற லீனுஸ் (Linus) இரண்டாவது பாப்பரசர் ஆனார்.
இதைத் தாய்த் திருச்சபை ஏற்றுக்கொண்டது.
தொடர்ந்து ரோமின் ஆயராகப் பொறுப்பேற்பவர் பாப்பரசர் ஆகிறார்.
உலகிலுள்ள அனைத்து ஆயர்களையும் பாப்பரசர் நியமிக்கிறார்.
பாப்பரசரால் நியமிக்கப்பட்ட கர்தினால்மார்கள் ரோமின் அடுத்த ஆயரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
'
அவர் பாப்பரசர் ஆகிறார்.
கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு அதன் உள் ஒழுங்குகள் புரியாது.
அவற்றைப் புரிந்துகொண்டு அவர்கள் நம்மோடு இணைய இறைவனை வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment