"நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்."
(மத்தேயு.18:33)
கடவுள் உலகைப் படைத்த போது மனிதனோடு மட்டுமல்ல இயற்கையோடும் தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவருடைய பண்புகளில் ஒரு முக்கியமான பண்பு கொடுத்தல், அளவின்றி கொடுத்தல்.
"உலகின் ஒளி நானே."
(அரு.8:12)
ஒளிமயமாகிய இறைவன் இயற்கையோடு பகிர்ந்து கொண்ட முதல் பண்பு ஒளி.
"அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்."
(தொடக்கநூல் 1:3)
ஒளியை உலகுக்குக் கொடுத்த இறைவன்
கொடுக்கும் பண்பையும் உலகுக்குக் கொடுத்தார்.
கொடுத்தல் இன்றி உலகம் இயங்காது.
75 சதவீதம் நீராலும், 25 சதவீதம் நிலத்தாலும் ஆனது உலகம்.
நீரும் நிலமும் ஒன்றுக்கொன்று கொடுத்து உதவுவதால்தான் உலகம் இயங்குகிறது.
கடல் தன் நீரை மழையாக நிலத்துக்குக் கொடுக்கிறது.
நிலம் அதை நதியாக கடலுக்குக் கொடுக்கிறது.
கடலிலும் நீர் குறையாது.
நிலத்திலும் நீர் வளம் குறையாது.
தாவரங்கள் தாங்கள் வளரத் தேவையான நீரையும் உரத்தையும் நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறன.
வளர்ந்தபின் தங்கள் இலைகளை உதிர்த்து நிலத்திடமே கொடுத்து விடுகின்றன.
நிலம் அவற்றை உரமாக மாற்றி தாவரத்துக்கே கொடுத்து விடுகிறது.
இந்த கொடுக்கல் வாங்கல் இல்லாவிட்டால் காடுகளைப் பார்க்க முடியுமா?
மனித ஆன்மா இயற்கைக்கு அப்பாற்பட்டது.
Human soul is supernatural.
ஆனால் உடல் இயற்கைக்கு உட்பட்டது.மண்ணிலிருந்து வந்தது. மண்ணுக்கே திரும்பிவிடும்.
மனித உடலில் இரண்டு திறப்புகள் உள்ளன.
ஒன்றின் வழியாக நிலத்திலிருந்து தாவரங்கள் மூலமாக எடுக்கப்பட்ட உணவு உடலுக்குள் செல்கிறது.
அடுத்ததன் வழியே கழிவு நிலத்துக்கே சென்று விடுகிறது.
அதை நிலம் உரமாக மாற்றித் தாவரங்களுக்குக் கொடுக்க, தாவரங்கள் அதை உணவாக மாற்றி மனிதனுக்குக் கொடுக்கின்றன.
கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.
ஏன்?
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கொடுத்து பெறுவதின் மூலமாகத்தான் மனித இனம் பெருகுகிறது.
கொடுக்கல் வாங்கல் இல்லாவிட்டால் ஆதாம் ஏவாளின் மரணத்தின் போதே மனித இனமும் அழிந்திருக்கும்.
Phase வயரும் Neutral வயரும் இல்லா விட்டால் மின்சாரம் இயங்குமா?
Phase வயர் தான் பெற்ற மின்சாரத்தை Neutral வயருக்குக் கொடுத்தால்தான் மின் சுற்று பூர்த்தியாகும்.
மின் சுற்று பூர்த்தியானால்தால் இயந்திரங்கள் இயங்கும்.
இப்போது படைப்பின் இரகசியம் புரிந்திருக்கும்.
பெற்றதைக் கொடுப்பதற்காகத் தான் அனைத்துப் பொருட்களும்,
மனிதன் உட்பட, படைக்கப்பட்டிருக்கின்றன.
மனிதர்களாகிய நாம் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அன்பு என்னும் வரத்தை கடவுளோடும், நமது பிறனோடும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அன்பு செய்யத் தெரியாதவன் மனிதனே அல்ல.
அநேகர் அன்பு என்னும் பண்பைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு வாலிபன் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன் ஏற்படும் கவர்ச்சியை அன்பு என்று தவறாக எண்ணுகிறார்கள்.
பெண் பார்க்கப் போகும் போது அழகைப் பார்த்துத் திருமணத்துக்குச் சம்மதிக்கிறவன் திருமணம் முடிந்தபின் ஏதோ ஒரு காரணத்துக்காக மனைவி அழகை இழக்க நேரிட்டால் அவளை வெறுக்க நேரிட்டால் அவன் செய்தது அன்பு அல்ல என்பது புரியும்.
அப்படியானால் அன்பு என்றால் என்ன?
அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆன்மீக சக்தி.
பாசம், நேசம், பரிவு, நட்பு, காதல் போன்ற பல பெயர்கள் அன்புக்கு இருக்கலாம்.
அவை பல பெயர்களே.
பொருள் அல்ல.
They are only synonyms for love, not definition.
அன்பு ஆன்மாக்களை ஒன்றோடொன்றும், இறைவனோடும் பிணைக்கும் தெய்வீக சக்தி.
ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு நிலை.
இறைவன் சித்தப்படி நாம் வாழ நம்மை உந்தும் சக்தி.
பாவத்துக்கு எதிரானது.
ஒவ்வொரு வினாடியும் இறைவனோடு உறவில் இருந்தால் நாம் அன்புடன் இருக்கிறோம்.
நாம் இறைவனோடு அன்பு நிலையில் இருக்கிறோம் என்பதை எப்படி புரிந்து கொள்வது?
நாம் சாவான பாவமின்றி இருக்கும் போது நாம் இறைவனோடு அன்பு நிலையில் அதாவது உறவு நிலையில் இருக்கிறோம்
நமது அயலானோடு உள்ள உறவில் பகைமை, வெறுப்பு, பொறாமை, கோபம் போன்ற எதிர் மறைப் பண்புகள் இல்லையென்றால் நாம் அயலானை அன்பு செய்கிறோம்.
இவை இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது.
நெருப்பும் தண்ணீரும் சேர்ந்து இருக்க முடியாது.
அன்பும் பொறாமையும் சேர்ந்து இருக்க முடியாது.
"நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?"
கடவுள் நம்மோடு அன்பாக இருக்கிறார்.
நாமும் நமது அயலானோடு அன்பாக இருக்க வேண்டும்.
கடவுள் நம்மோடு இரக்கமாக இருக்கிறார்.
நாமும் நமது அயலானோடு இரக்கமாக இருக்க வேண்டும்.
கடவுள் நமது பாவங்களை மன்னிக்கிறார்.
நாமும் பிறரது குற்றங்களை மன்னிக்க வேண்டும்.
இறைமகன் இயேசு நமக்காக தனது உயிரையே பலி கொடுத்தார்.
நாமும் நமது பிறனுக்காக நமது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
கடவுள் நாம் வாழத் தேவையானவற்றை அள்ளித் தருகிறார்.
நாமும் நமது அயலானுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவுவோம்.
கடவுள் தனது உடைமைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
நாமும் நமக்கு உரியதை நம் அயலானோடு பகிர்ந்து கொள்வோம்.
அன்புதான் நமது உயிர்
அன்பு தான் நமது வாழ்க்கை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment