Wednesday, November 27, 2024

இவை நிகழத் தொடங்கும்போது, தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. " (லூக்கா நற்செய்தி 21:28)

 இவை நிகழத் தொடங்கும்போது,  தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. " 
(லூக்கா நற்செய்தி 21:28)

இயேசு தனது இரண்டாவது வருகைக்கு முன் அதற்கு அடையாளமாக என்ன நடக்கும் என்று சொல்லி விட்டு,

இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. "  என்று சொல்கிறார்.

"பலர் , "நானே மெசியா" என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவார்கள்.

நாடுகளுக்கிடையில் போர்கள் ஏற்படும்.  பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும். 

 கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும்.

 மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். 


உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். "

இவை இயேசு கூறிய அடையாளங்களுள் சில.

இறுதியாக 
 வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவார்.

இது இயேசுவின் இரண்டாவது வருகை.

முதல் வருகையில் இயேசு ஏழைக் குழந்தையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

இரண்டாவது வருகையில் வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவார்.

இரண்டாவது வருகை‌ எப்போது நடக்கும் என்று கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

தெரியக்கூடாது என்பதற்காகத் தான் "மகனுக்கே தெரியாது" என்று இயேசு கூறினார்.

அதாவது "அது இரகசியம். என்னிடம் கேட்காதீர்கள். கேட்டாலும் சொல்ல மாட்டேன்"  என்ற பொருளில் அவ்வாறு கூறினார்.

அடையாளங்களை ஏன் கூறினார்?

நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக.

இயேசு கூறிய அடையாளங்களான போர்கள், பஞ்சம், நில நடுக்கங்கள் வெகு காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவை நமக்கு அவரது இரண்டாவது வருகையை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை அடையாளமாகக் கூறினார்.

ஆனால் நமது பிரிவினை சகோதரர்களில் சிலர் இயேசுவின் விருப்பத்திற்கு மாறாக முடிவு வந்து விட்டது என்று கூறிக்‌ கொண்டிருக்கிறார்கள்.

குழந்தை பிறக்கும் போதே அது எப்போது இறக்கும் என்று கடவுளுக்குத் தெரியும்.

நாம் இறப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

அதுபோல உலகத்தைப் படைக்கும் போதே அதை எப்போது அழிப்பது என்று கடவுள் தீர்மானித்திருப்பார்.

ஆக்குவதும் அவரே, அழிப்பதும் அவரே.

அப்போ நாம் என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

"இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." 

இது நமக்கு இருக்க வேண்டிய மனப்பக்குவம்.

அடையாளங்களைப் பார்க்கும்போது

 நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,

 நில நடுக்கங்களுக்காகவும், போர்களுக்காகவும்  அல்ல, 

 நாம் மீட்கப் படுவது உறுதி என்பதற்காக.

நாம் எப்போதும் தயாராக இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.

ஒன்று ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னது 2024 ஆண்டுகளுக்கு முன்னர். அப்போது வாழ்ந்த மக்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும்.

கி.பி 70ல் எருசலேம் அழிந்தது.

எல்லா போர்களும், பஞ்சங்களும், நில நடுக்கங்களும்  உலக இறுதி நாளை நமக்கு ஞாபகப் படுத்த வேண்டும்.

நமது ஒவ்வொருவரின் இறுதி நாளையும் ஞாபகப் படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் நாம் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் நாம் தயாராக இருந்தால்

நாம் தலைநிமிர்ந்து நிற்கலாம்; ஏனெனில் நாம் மீட்பு அடைவது உறுதி.

தலை நிமிர்ந்து நின்று நமது இறுதி நாளை சல்யூட் அடித்து வரவேற்போம்.

வெற்றி நமக்கே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment