Saturday, November 9, 2024

ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, "நான் மனம் மாறிவிட்டேன்" என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள். ". (லூக்கா நற்செய்தி 17:4)

ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, "நான் மனம் மாறிவிட்டேன்" என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள். " 
(லூக்கா நற்செய்தி 17:4)

பைபிளின் முழு‌ வரலாற்றையும் இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்.

"மன்னிப்பின் வரலாறு."

என்று சொல்ல வேண்டும்.

மனுக்குலம் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்து மன்னிப்புக் கொடுக்க இறைமகன் மனு மகனாகப் பிறந்த வரலாறுதான் பைபிள்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக சிலுவையில் தொங்கியபோது சொன்ன வார்த்தைகள்,

"தந்தையே, இவர்களை மன்னியும்."

இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையே மன்னிப்பின் வாழ்க்கைதான்.

நோயாளிகளை அவர்களின் விசுவாசத்தின் மூலம் குணமாக்கினாலும் குணமாக்கும் முன் அவர்களது பாவங்களை மன்னித்தார்.

''அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம்,

 "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மத்தேயு நற்செய்தி 9:2)

இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கம் உடல் நோயைக் குணமாக்குவது அல்ல, 
ஆன்மீக நோயைக் குணமாக்குவது தான்.

ஆனாலும் அவர் சென்ற இடமெல்லாம் உடல் நோயையும் குணமாக்கினார், 

பாவங்களை மன்னித்து ஆன்மீக நோயையும் குணமாக்கினார்.

நமது வாழ்வின் நோக்கமே ஆன்ம நலத்துடன் வாழ்ந்து அதன் மூலம் விண்ணக வாழ்வை அடைவதுதான்.

ஆன்மீக வாழ்வின் ஆரம்பம் பாவ மன்னிப்பு.

நாம் நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை, எத்தனை முறை செய்தாலும், மன்னிப்போம்.

நாமும் எத்தனை முறை பாவம் சேர்ந்திருந்தாலும் மன்னிப்புக் கேட்கும்போது கடவுள் மன்னிப்பார்.

அயலானை மன்னிப்போம், கடவுள் நம்மை மன்னிப்பார். 

To err is human.
To forgive is divine.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment