Friday, November 15, 2024

" அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. (மாற்கு நற்செய்தி 13:24)

"அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. 
(மாற்கு நற்செய்தி 13:24)

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சூரியனின் எரிபொருள் எல்லாம் எரிந்து முடிந்த பின் அது தன் ஒளியை இழக்கும்.

சூரிய வெப்பத்தால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சூரியன் வெப்பத்தை இழந்து விட்டால் பூமியில் மனித இனம் வாழ முடியாமல் முற்றிலும் அழிந்து விடும்.

சூரிய ஒளியைப் பிரதிபலிப்பது நிலா.

சூரியன் ஒளியை இழந்து விட்டதால் நிலாவும் ஒளி தராது.

இது விஞ்ஞானம் தரும் தகவல்.

விஞ்ஞானத்துக்கு ஆன்மீகம் தெரியாது.

ஆனால் இரண்டுமே கடவுளுக்குக் கட்டுப் பட்டவை.

திருச்சபையின் போதனைப்படி உலக முடிவில்

"கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது."


" The sun will be darkened, and the moon will not give her splendor."
(Mark 13:24)

விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். 
(மாற்கு நற்செய்தி 13:25)

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவார்.

இறந்து போன அனைத்து மனிதர்களும் உயிர்‌ பெற்று எழுவார்கள்.

இறுதித் தீர்ப்புக்காக அனைவரும் மனுமகன் முன் வருவார்கள்.

நல்லவர்கள் ஆன்ம சரீரத்தோடு நித்திய பேரின்ப வாழ்வுக்குள் செல்வார்கள்.

தீயவர்கள் ஆன்ம சரீரத்தோடு பேரிடர் வாழ்வுக்குள் செல்வார்கள்.

இறுதித் தீர்ப்பு இடத்துக்கும் நேரத்துக்கும் உட்பட்ட உலகில் நடக்காது.

மனித இனம் இடத்துக்கும் நேரத்துக்கும் அப்பாற்பட்ட நித்தியத்துக்குள் சென்று விடும்.

மோட்சமும், நரகமும் இடங்கள் அல்ல, வாழ்க்கை நிலை.

உலகம் எப்போது அழியும்?

"ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.''
(மாற்கு நற்செய்தி 13:32)
சப்
என்று ஆண்டவர் சொல்கிறார்.

தந்தைக்குத் தெரிவது மகனுக்குத் தெரியாமல் இருக்க முடியாது, ஏனெனில் இருவருக்கும் ஒரே ஞானம்.

ஏன் மகனுக்குக் கூடத் தெரியாது என்கிறார்?

யாரிடமும் சொல்லக்கூடாத இரகசியம் ஒன்று நமக்கு தெரியும் என்று வைத்துக் கொள்வோம்.

யாராவது நம்மிடம் கேட்டால் என்ன சொல்வோம்?

தெரியாது என்று தான் சொல்வோம்.

அதேபோல் தான் இயேசு சொல்கிறார்.

முடிவு எப்போது வரும் என்று தெரிந்து கொள்வதை விட அதற்கு எப்போதும் ஆயத்தமாக இருப்பதுதான் முக்கியம்.

இன்று ஒரு சிலர் உலக முடிவைப் பற்றிய வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் வதந்திகளை நம்பக்கூடாது.

 "அப்பொழுது யாராவது உங்களிடம், "இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார்" எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்."
(மாற்கு நற்செய்தி 13:21)

இறுதித் தீர்ப்பு உண்டு என்பது விசுவாச சத்தியம்.

தீர்ப்பு நாளில் நாம் மோட்ச பேரின்ப வாழ்வை அனுபவிக்கப் போவதற்கு ஏதுவாக நாம் இப்போது வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆண்டவர் இறுதித் தீர்ப்பு பற்றி பேசுகிறார்.

கடவுள் சித்தப்படி வாழ்கிறவர்கள் தீர்ப்பு பற்றிக் கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை.

பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் மனம் திரும்ப வேண்டும்.

அவர்களுக்குத் தீர்ப்பு பற்றிய அறிவு அவசியம்.

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது, சடப் பொருள்.

சடப் பொருளாகிய,

காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்ட நமது உடல் 

காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்ட விண்ணுலகில் எப்படி வாழ முடியும்?

முடியாது.

ஆனால் சடப் பொருளாகிய உடல் ஆன்மீக உடலாக மாறி உயிர் பெறும்.

Our material body will become a spiritual body during our final resurrection.

இயேசு உயிர்த்த போது அவர் உடல் மாறியது போல நமது உடலும் மாறும்.

விண்ணகத்தில் நமது ஆன்மீக உடலோடு சம்மனசுக்களைப் போல் வாழ்வோம்.


"ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்."
(மத்தேயு நற்செய்தி 22:30)

என்று ஆண்டவர் சொல்கிறார்.

நண்பர் ஒருவர் ஒரு வினா எழுப்பினார்.

அன்னை மரியாள் இப்போது ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ்கிறாள்.

நாம் பாவூர்சத்திரத்தில் இருந்து கொண்டு அவளை நோக்கி செபிக்கிறோம்.

நாம் செபிக்கும் அதே நேரத்தில் உலகெங்கிலிருந்தும் மக்கள் அவளை நோக்கி செபிக்கிறார்கள்.

எல்லோருடைய செபத்தையும் ஒரே நேரத்தில் அன்னையால் எப்படிக் கேட்க முடிகிறது?

இங்கு மிக முக்கியமான ஒரு மறை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

அனைத்து விண்ணக வாசிகளும் கடவுளுக்குள்தான் வாழ்கிறார்கள்.

நமது செபம் கடவுள் வழியாகத் தான் அவர்களுக்குச் செல்லும்.

நாம் எந்த புனிதரை நோக்கி செபித்தாலும்

கிறிஸ்துவின் பெயரால், கிறிஸ்து வழியாகத்தான் செபிக்கிறோம்.

புனிதர்களும் கிறிஸ்து வழியாகத்தான் நமக்கு உதவுகிறார்கள்.

உதவி செய்வது கிறிஸ்து தான், பரிந்து பேசுபவர்கள் மட்டுமே புனிதர்கள்.

உலகம் முடிந்த பின் நாம் அனைவருமே கடவுளுள்தான் வாழ்வோம்.

நமக்குள் கருத்துப் பரிமாற்றமும் அவர் வழியாகத்தான்.

கடவுளுக்குத் தெரியாமல் நாம் இரகசியங்களைப் பரிமாரிக் கொள்ள முடியாது.

நாம் அனைவரும் கடவுளுள், கடவுளோடு தான் வாழ்வோம்.

இறைவனைத் தியானிப்பதன் மூலம் அவரோடு ஒன்றித்திருப்போம்.

விண்ணகப் பேரின்பத்தை முன்கூட்டியே ருசித்துப் பார்ப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment