"உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்றார். "
(அரு. 18:37)
பிலாத்து இயேசுவிடம்,
"அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டபோது
இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர்.
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்."என்கிறார்.
இயேசு ஏன் "அரசன் என்று நீர் சொல்கிறீர்." என்கிறார்.
அரசன் என்பது பிலாத்து பயன்படுத்திய வார்த்தை.
பிலாத்து அரசன் என்ற வார்த்தையை என்ன பொருளில் பயன்படுத்தினான்?
பிலாத்து யூதர்களிடம், "இதோ, உங்கள் அரசன்!" என்று சோன்னபோது
யூதர்கள் "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை" என்றார்கள்.
சீசர் ஒரு அரசர், உலகப் பொருளில்.
அந்தப் பொருளில் தான் பிலாத்து அரசன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினான்.
இயேசு தன்னை விளக்க அந்த பொருளில் அரசன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.
இயேசு பாஸ்கா திருவிருந்தின்போது தோமாவிடம்
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.'' என்று கூறினார்.
நானே வழி.
நானே உண்மை.
நானே வாழ்வு.
இவை இயேசுவின் வார்த்தைகள்.
பிலாத்து இயேசுவிடம்,
"நீ அரசன்தானோ?" என்று கேட்டபோது,
இயேசு ,
"அரசன் என்று நீர் சொல்கிறீர்.
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி." என்கிறார்.
அதாவது,
"நீர் நினைப்பது போல் நான் அரசர் அல்ல. நான் உண்மை."
இயேசு அரசர் தான், ஆனால் சீசரைப் போல் அல்ல.
சீசர் லௌகீக அரசர் மட்டுமே. ஆன்மீகத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.
இயேசு ஆன்மீக அரசர்.
உலகத்தைப் படைத்தவரும், பராமரிப்பவரும் அவரே.
''அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை."
(அரு. 1:3)
இயேசு "உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்று சொன்னபோது
பிலாத்து, "உண்மையா? அது என்ன?" என்று கேட்டான்.
இயேசு அதற்குப் பதில் கூறுமுன் அவன் யூதர்களிடம் பேசச் சென்று விட்டான்.
ஆனால் பதில் நமக்குத் தெரியும்.
இயேசு ஏற்கனவே " நானே உண்மை" என்று கூறியிருக்கிறார்.
உண்மை வெறும் தத்துவம் அல்ல.
Truth is not merely a philosophical concept.
உண்மை என்றால் இருப்பது.
"What is" is truth.
கடவுள் மோசேயை நோக்கி, "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்றார். மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், "இருக்கின்றவர் நானே" என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார்.
(விடுதலைப் பயணம் 3:14)
"இருக்கின்றவர் நானே"
அவர்தான் உண்மை, கடவுள்.
நித்திய காலமாக உயிர் வாழ்வது உண்மை மட்டும் தான்.
நாம் அறிய வேண்டிய உண்மை கடவுளாகிய இயேசு மட்டுமே.
அறிவியல் உண்மைகளுக்கு ஆதாரம் கடவுள் தான்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை.
No cause, no effect.
இது அறிவியல் உண்மை.
பெரிய வெடிப்பு (Big Bang) என்பது உண்மையாக வேண்டுமானால் முதல் வெடிப்புக்குக் காரணம் வேண்டும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் முதல் வெடிப்புக்குக் காரணத்தைக் கூற முடியாது.
எல்லாவற்றுக்கும் ஆதி காரணர் கடவுள் மட்டுமே.
ஆதிகாரணர் = காரணர் இல்லாத காரணர்.
துவக்கம் இல்லாமல் சுயமாக இருப்பவர்.
கிறிஸ்தவ வாழ்வைப் பொறுத்தமட்டில்
இயேசுதான் வாழ்வு.
வாழ்வை அடைய வேண்டிய வழியும் அவரே.
வாழ்வும் வழியுமான அவரே உண்மை.
இயேசுவாகிய உண்மையை அறியாதவர்களுக்கு நிலை வாழ்வுக்கு வழி தெரியாது.
இயேசுவை அறியாதவர்கள் நடக்கும் வழி நிலை வாழ்வுக்கு இட்டுச்செல்லாது.
மருத்துவம் அறிய வேண்டியவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.
இயேசுவை அறிய விரும்புகிறவர்கள் அவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபைக்கு வர வேண்டும்.
"உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்றார்."
கத்தோலிக்கர்களாகிய நாம் உண்மையைச் சார்ந்தவர்கள்.
இயேசுவைச் சார்ந்து வாழும் நாம் அவருடைய குரலுக்கு மட்டும் செவிமடுப்போம்.
அதன்படியே அவரையே வாழ்வோம்.
அவரையே நிலை வாழ்வாகப் பெறுவோம்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment