Monday, April 1, 2024

"எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்."(அரு. 20:23)


"எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்."
(அரு. 20:23)

 வாரத்தின் முதல் நாள்  மாலையில் 

 யூதர்களுக்கு அஞ்சிப் பூட்டப்பட்ட வீட்டில் இருந்த சீடர்களுக்கு இயேசு காட்சி கொடுத்தார். 

 "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக!" என்று வாழ்த்தினார். 

உயிர்த்த இயேசுவின் உடல் ஆவிக்குரிய தன்மையைப் பெற்றிருந்ததால்
(Spiritual body) 

பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் கதவைத் திறக்காமலே அவர் உள்ளே வந்தார்.

சமாதானம் இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள சுமுகமான உறவைக் குறிக்கிறது.

"சமாதானம் உண்டாகுக" ஆன்மீக ரீதியான வாழ்த்து.

நமது பாவங்கள் மன்னிக்கப் படும் போது நமக்கும் இறைவனுக்கும் இடையே சமாதான உறவு ஏற்படுகிறது.

நாம் ஒருவரை ஒருவர் எப்படி வாழ்த்த வேண்டும் என்று இயேசு கற்றுத் தருகிறார்.


இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக! 

தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்.


தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். 

எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். 

"தந்தை என்னை அனுப்பியது
போல நானும் உங்களை அனுப்பகிறேன்."

என் தந்தை உலகின் பாவங்களை மன்னிக்க என்னை அனுப்பியது போல

நானும் உலகின் பாவங்களை மன்னிக்க உங்களை அனுப்புகிறேன்.

எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்."

பாவங்களை மன்னிக்க தனக்கு இருக்கும் அதிகாரத்தை தனது சீடர்களோடு இயேசு பகிர்ந்து கொள்கிறார்.

வியாழக்கிழமை இரவு உணவின் போது அப்பத்தை அவரது உடலாகவும், ரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றும் வல்லமையைப் பகிர்ந்து கொண்டது போல

சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது

பாவங்களை மன்னிக்கும் அதிகாரதைப் பகிர்ந்து கொண்டார்.

பாவ மன்னிப்பு, திருப்பலி, திவ்ய நற்கருணை ஆகிய மூன்றுக்கும் உரியவர் இயேசு.

இம்மூன்றுக்கும் உரிய குருவானவர் இயேசுவின் பிரதிநிதி.

குருவானவர் உதவியால்தான் இயேசு இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

"நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்."

"இது என் சரீரம்."

"இது என் இரத்தம்."

என்று குருவானவரின் வாயைப் பயன்படுத்தி இயேசு தான் கூறுகிறார்.

ஆன்மீக காரியங்களுக்காக நாம் குருவானவரைப் பார்க்கும்போது நாம் இயேசுவைத்தான் பார்க்கிறோம்.  

குருவானவருக்கு நாம் என்ன செய்கின்றோமோ அதை இயேசுவுக்கு செய்கிறோம்.

குருவானவரிடம் நாம் நமது பாவங்களை அறிக்கையிடும் போது

இயேசுவிடமே அறிக்கையிடுகிறோம்.

இது நமது ஞாபகத்தில் இருந்தால் வாரம் ஒரு முறை உறுதியாக பாவ சங்கீர்த்தனம் செய்து விடுவோம்.

நமது ஆன்மா எப்போதும் பரிசுத்தமாக இருக்கும்.

ஆன்மீக காரியங்களில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் குருவானவரிடம் சென்று அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

அவரின் வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள்.

வாழ்வு தரும் வார்த்தைகள் வழி நடப்போம்.

நிலை வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment