Sunday, April 14, 2024

அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "(அரு.10:15)(தொடர்ச்சி)

"அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "
(அரு.10:15)
(தொடர்ச்சி)

திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார்.

ஆனால் நற்கருணை முன்பும்,

நற்கருணையை வாங்கும் போதும்

இயேசுவுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கிறோமா?

நமது பள்ளிக்கூட விழாவிற்கு முதல் அமைச்சர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

விழா மேடையில் அவரும், பள்ளிக்கூட நிர்வாகி, தலைமை ஆசிரியர் போன்றவர்களும் அமர நாற்காலிகள் போடப் பட்டுள்ளன.

முதல் அமைச்சர் அமர்வதற்கான நாற்காலியை மையத்தில் போடுவோமா அல்லது ஒரு ஓரத்தில் போடுவோமா?

ஒரு காலத்தில் நற்கருணை பக்தி உச்சத்தில் இருந்த போது திவ்ய நற்கருணைப் பேழை பீடத்தின் மையப் பகுதியில் இருந்தது.

இப்போது பீடத்தின் மையத்தில் Bible Stand இருக்கிறது.

நற்கருணைப் பேழை ஒரு பக்கத்தில் இருக்கிறது.

நற்கருணை நாதரின் இடத்தை இறைவாக்கு அடங்கிய புத்தகம் பிடித்துக் கொண்டது.

மனுவுரு எடுத்த வார்த்தையானவருக்கு ஒரு பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நற்கருணை பக்தி வளர்ந்திருக்கிறதா,  தேய்ந்திருக்கிறதா?

ஒரு காலத்தில் நற்கருணை நாதரின் முன் முழங்கால்படியிட்டு எழுந்தோம்.

இப்போது நற்கருணை நாதரின் முன் தலை வணக்கம் மட்டுமே செய்கிறோம்.

Once we genuflected before Holy Eucharist, but now we merely bow our heads.

முழங்கால்படியிடுவது இறைவனுக்குக் கொடுக்கும் ஆராதனை வணக்கம்.

தலை வணங்குவது மனிதருக்குக் கொடுக்கும் சாதாரண வணக்கம்.

சாதாரண மனிதனுக்குக் கொடுக்கிற மரியாதையைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம்.

இறைமகனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை வளர்ந்திருக்கிறதா,  தேய்ந்திருக்கிறதா?

ஒரு காலத்தில் முழங்கால்படியிட்டு நற்கருணை நாதரை நாவில் வாங்கினோம்.

இப்போது நின்றுகொண்டு கையில் வாங்குகிறோம்.

நமது செயலை பக்தி தீர்மானிக்கவில்லை.

கொரோனா தீர்மானிக்கிறது.

மொத்தத்தில் நற்கருணை பக்தி நாளுக்கு நாள் வளர்வதற்குப் பதிலாக, தேய்ந்து கொண்டே வருகிறது.

நாம் திவ்ய நற்கருணையைத் தெரிந்து வைத்திருக்கிறோம்,

அறியவேயில்லை.

விசுவாசம் ஏற்றுக் கொள்வதில் மட்டுமல்ல, வாழ்வதிலும் அடங்கியிருக்கிறது.

யூதாஸ் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்டான்,

ஆனால்,

இயேசுவை வாழவில்லை.

நற்கருணை நாதரைப் பாவத்தோடு உட்கொண்டான்.

விளைவு நமக்குத் தெரியும் 


இயேசுவை நமது ஆயனாக ஏற்றுக் கொண்ட நாம் 

நல்ல ஆயனுக்குரிய குண நலன்களை அறிவோம்.

நல்ல ஆயனாகிய இயேசு ஆடுகளாகிய நமக்காக‌த் தம் உயிரைக் கொடுத்தார். 

எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டு நம்மோடு இருக்கிறார்.

 திருப்பலியின்போது அவரே நமக்கு உணவாக வருகிறார்.

அவருக்கு நம்மைப் பற்றி தான் ஓயாத சிந்தனை.

தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் அறிந்திருப்பதைப் போல

மகனாகிய அவர் நம்மை அறிந்திருக்கிறார்.

நமக்காக தனது உயிரையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட இறைமகனை ஆயனாகப் பெற்ற நாம் பாக்கியவான்கள் என்பதை உணர்கிறோமா?

அவர் நமக்குத் தன்னை முழுவதும் தந்திருப்பது போல 

நாம் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கே கொடுத்திருக்கிறோமா?

நமக்காக அல்ல,

அவருக்காக மட்டுமே வாழ்கிறோமா?

ஆம் என்று பதில் வந்தால் நாம் அவரை அறிந்திருக்கிறோம்.

அதாவது, அவரை வாழ்கிறோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment