Sunday, April 21, 2024

கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை." (அரு. 10:13)(தொடர்ச்சி)

கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை." (அரு. 10:13)
(தொடர்ச்சி)

இதில் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால் பிரிவினை சகோதரர்களின் செபக் கூட்டங்களுக்குச் செல்லும் நம்மவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக நம்மவர்களும் அவர்களது பாணியைப் பின்பற்ற ஆரம்பித்திருப்பது தான்.

"சுகமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்கள்"
(charismatic prayer meetings)
நம்மிடையே நம்மிடையே ஆரம்பிக்கப் பட்டிருப்பதன் நோக்கம் நம் மக்களை பிரிவினை சபையாரின் கவர்ச்சி செபக் கூட்டங்களுக்குப் போக விடாமல் தடுப்பது தான்.

பெந்தகோஸ்தே சபையினரின் ஆவிக்குரிய கூட்டங்களுக்குப் போகின்றவர்கள் உடல் சார்ந்த நோய்கள் குணமாவதற்காகப் போகின்றார்கள்.

குணம் பெற்றதாகச் சாட்சியும் கூறுகிறார்கள்.

அங்கு ஒரு முறை சென்றவர்கள் தொடர்ந்து போக ஆரம்பிக்கிறார்கள்.

நமது அருட்சாதனங்களை மறந்து விடுகிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்தும் நல்ல நோக்கத்தோடு தான் நம்மவர்கள் சுகமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்கள் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தியானக் கூட்டங்களில் அமைதி நிலவும்.

செபம் செய்யும் போது கை கூப்பிய நிலையில் இருந்தோம்.

செபம் சொல்லும் போது கைகளை உயர்த்தி ஆட்டுதல், தட்டுதல் போன்ற பழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தொற்றிக் கொண்டவை.

(Catholic charismatic prayer services are enthusiastic and involve energetic singing, hand clapping and praying with arms outstretched.)

இதில் தவறு ஒன்றுமில்லை.

ஆனால் ஆன்மீகக் கூட்டங்கள் ஆன்மீக சுகம் பெறுவதையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

உண்மைதான், ஆண்டவர் தனது பொது வாழ்வின்போது அநேகருக்கு உடல் நலம் கொடுத்தார்.

நமது புனிதர்களும் தங்களை நோக்கி வேண்டுபவர்களுக்கு  உடல் நோய்களிலிருந்து விடுதலையை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொடுக்கிறார்கள்.

வேளாங்கண்ணி, உவரி, லூர்து நகர் போன்ற திருத்தலங்களில் நடக்கும் புதுமைகள் இதற்குச் சான்று.

ஆனால் அவை நமக்கு ஆன்மீக நலனில் அக்கறை கொள்ள வைப்பதற்காக.

பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கூடத்தில் உணவு போடுகிறார்கள்.

ஆனால் பள்ளிக்கு ஒருவன் சாப்பிட மட்டும் போய், படிக்காவிட்டால்?

செபக்கூட்டங்களுக்கு உடல்நலம் மட்டும் பெறுவதற்காகப் போகின்றவர்கள்

சாப்பிட மட்டும் பள்ளிக்குப் போகும் மாணவனைப் போன்றவர்கள்.

சுகமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்களுக்குப் போகின்றவர்கள்

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறுவதையே முதல் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

செபக் கூட்டங்களுக்குப் போய் பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் வருபவர்கள்

குளிப்பதற்கு என்று ஆற்றுக்குப் போய் தண்ணீரில் இறங்காமல் வருபவர்களுக்குச் சமம்.

பைபிளை உலகுக்குக் கொடுத்தது கத்தோலிக்கத் திருச்சபை.

பைபிள் உருவான காலத்திலிருந்தே திருச்சபை அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ஒவ்வொரு திருப்பலியிலும் பைபிள் வாசகங்கள் வாசிக்கப் பட்டு விளக்கப் பட்ட பின்புதான்

அப்பம் பிட்குதல் நடைபெற்றது.

ஆதித் திருச்சபையில் வீட்டுக்கு ஒரு பைபிள் இல்லை.

காரணம் அப்போது அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப் படவில்லை.

கையெழுத்துப் பிரதி எடுப்பது மிகவும் கடினம்.

அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப் பட்ட பின் முதல் முதல் அச்சடிக்கப் பட்ட புத்தகம் பைபிள் தான்.

 பிரிந்து போனவர்கள் பைபிளை மட்டும் எடுத்துக் கொண்டு அலைவதைப் பார்த்து விட்டு

நாம் அவர்கள் அளவுக்கு பைபிளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டு

வீட்டுக்கு ஒரு பைபிள், ஆளுக்கொரு பைபிள் என்று வற்புறுத்த ஆரம்பித்தனர்.

கொடுக்கவும் செய்தனர்.

இப்போது வீட்டுக்கொரு பைபிள் இருக்கிறது.

பூசைக்குப் பைபிளோடுதான் போகிறோம்.

பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஆசிரியர் நடத்துவதைக் கவனிக்க வேண்டும்.

புத்தகத்தைப் புறட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

பூசை நேரத்தில் பைபிள் வாசகங்களையும், குருவின் பிரசங்கத்தையும் காது கொடுத்து கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அப்போது பைபிளைப் புறட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

   பைபிளுக்கு  முக்கியத்துவம்
கொடுக்கப்படுவது நல்லதுதான்.

ஆனால் அநேகர்  நமது  வாழ்வின் மையமான திவ்ய நற்கருணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது.

பைபிளை மறக்காமல் கோவிலுக்கு எடுத்து வருபவர்களில் சிலர் பூசை ஆரம்பித்த பின்பு வருகிறார்கள்.

முழுப் பூசை காண்பதன்  முக்கியத்துவம் போய்விட்டது தான் கவலை அளிக்கிறது.

நற்கருணை வாங்கும் முறையும் கவலை அளிக்கிறது.

நண்பர்களோடு கை குலுக்க வலது கை.

பெரியவர்கள் தருவதை வாங்க வலது கை.

இடது கையில் வாங்கினால் அடி கிடைக்கும்.

சாப்பிட வலது கை.

தேசியக்கொடியை வணங்க வலது கை.

...........க்கு இடது கை.

நற்கருணை நாதரை வாங்க இடது கை.

நற்கருணை நாதருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்!

இறை வார்த்தைக்கு கொடுக்கிற மரியாதை வார்த்தையானவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும்.

பைபிள் வார்த்தையானவரின் வார்த்தை.

வார்த்தையானவர் நித்திய காலமாக இருக்கிறார்.

மனிதன் படைக்கப்பட்ட பின்பு அவரது வார்த்தை அவனுக்கு அவரால் அளிக்கப் பட்டது.

"ஆதியில் வார்த்தை இருந்தது."

வார்த்தை வார்த்தையானவரை, இறை மகனைக் குறிக்கும்.

அவர் நமக்குத் தந்த பைபிள் அவருடைய வார்த்தை.

வார்த்தையானவரிடமிருந்து வார்த்தை வந்தது.

வார்த்தையிலிருந்து 
வார்த்தையானவர் வரவில்லை.

ஆன்மீக வாழ்வின்  மையம் வார்த்தையானவருக்கா?

வார்த்தைக்கா?

சிந்திப்போம்.

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.

பாவூர்சத்திரம் பங்கில் முழங்கால் படியிட்டு நாவில் திவ்ய நற்கருணை வாங்க ஆரம்பித்து விட்டோம்.

இது பங்குத்தந்தை அருட்திரு ஜேம்ஸ் அடிகளாரின் சாதனை.

இறைவனுக்கு நன்றி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment