Wednesday, April 17, 2024

தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."(அரு. 7:10)

"தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."
(அரு. 7:10)



" இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. "
(அரு. 7:1)

இயேசு யூதர்களுக்குப் பயந்தா யூதேயாவில் நடமாட விரும்பவில்லை?

அவர் கடவுள்.

ஒரே வார்த்தையில் அகில பிரபஞ்சத்தையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல கடவுள்.

யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் படுத்தப் படவும், கொல்லப்படவும் தன்னையே கையளிக்க மனிதனாகப் பிறந்த கடவுள்.

தேவ சுபாவத்தில் அவரால் பயப்படவே முடியாது.

மனித சுபாவத்தில் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக

 பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் மனமுவந்து ஏற்றுக் கொண்ட கடவுள்.

அந்த பலகீனங்களில் பயமும் ஒன்று.

ஆனால் அதைப் பாவப் பரிகாரமாக கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வேர்க்கும்போது பயன்படுத்திக் கொண்டார்.

பயத்தின் காரணமாக இறைவன் விருப்பத்தை நிறைவேற்றாமல் நாம் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக பயத்தினால் இரத்த வியர்வை வியர்த்தார்.

பாடுகள் படவே பயந்திருந்தால் மனிதனாகப் பிறந்திருக்கவே மாட்டார்.

தேவ சுபாவத்தில் அவரால் பயப்படவே முடியாது.

அப்படியானால் ஏன் 
யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை?"

அவர் பாடுகளுக்கென்று குறித்திருந்த நேரம் வராததால்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட வேண்டுமென்பது அவரது நித்திய காலத் திட்டம்.

அதற்காக அவராகவே குறித்திருந்த நேரத்தில் மனிதனாகப் பிறந்தார்.

பிறந்து பாடுகள் படுவதற்காக 33 ஆண்டுகள் காத்திருந்தார்.

33 வது வயதில் பாஸ்கா திருநாள் காலம்தான் அவர் குறித்திருந்த நேரம்.

அந்த நேரம் வரும் வரை அவர் கைது செய்யப்பட்டு விடக்கூடாது.

அதனால் தான் அதற்கு முன்னால் அவரைக் கைது செய்ய யூதர்கள் முயன்றும் அவர்களால் முடியவில்லை.

அவர்கள் அதற்கு முயற்சி செய்ய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் 

அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. 

இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, "நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். 

அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும். 

ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபடும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!" என்றனர். 

" அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை"
 (7:5)

யார் அவருடைய சகோதரர்கள்?

அன்னை மரியாளின் தங்கை மக்களாகிய யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர்.

இவர்களில் யாக்கோபு, , யூதா, சீமோன் ஆகியோர் இயேசுவின் சீடர்கள்.

. தங்கையின் பெயரும் மரியாள் தான்.

அவள் அன்னம்மாளின் இரண்டாவது மகள்.

குளோப்பாவின் மனைவி. 

குளோப்பா சூசையப்பரின் தம்பி.

சகோதரர்களின் அறிவுரைப் படி யூதேயாவுக்குச் செல்லாமல் 

அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார். 

சீடர்கள் திருவிழாவுக்குச் சென்று விட்டார்கள்.

ஆனால் சீடர்கள் 
 திருவிழாவிற்குப் போனபின் இயேசு அவர்களுக்குத் தெரியாமல்,

யாருக்கும் தெரியாமல் திருவிழாவுக்குச் சென்றார்.

 
 திருவிழாவின்போது யூதர்கள் இயேசுவைத் தேடினார்ள். 

சிலர் அவரைக் கைது செய்வதற்காகத் தேடினார்ள்.

சிலர் அவர் பேசுவதைக் கேட்பதற்காகத் தேடினார்ள்.


மறைவாகச் சென்ற இயேசு
பாதித் திருவிழா நேரத்தில் கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார். 

சாதாரண மக்கள் அவர் பேசியதை விருப்பமுடன் கேட்டனர்.

ஆனால் பரிசேயர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி   காவலர்களை அனுப்பினார்கள். . 

ஆனால் காவலர்கள் அவரைப் பிடிப்பதற்குப் பதிலாக அவர் பேசியதை விருப்பமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இன்று வாசித்த வசனங்கள் பற்றி சிறிது தியானிப்போம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment