Friday, April 26, 2024

"என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."(அரு.15:2)

" என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."
(அரு.15:2)

என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."

 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 
(அரு.15:2,5)

கடவுள் மனிதர்களைப் படைப்பதற்கு முன்னால் தாவரங்களைப் படைத்தார்,

மனிதர்கள் பயன்படுத்துவதற்காகவும், அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும்.

நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தாவரத்துக்கும் வேர்கள் உண்டு, கிளைகள் உண்டு.

வேர்கள் அவற்றுக்கு உணவு எடுத்துக் கொடுக்க, கிளைகள் உணவு தயாரிக்க, தங்களுக்கும், நமக்கும்.

இயேசு நமக்கும் அவருக்கும் உள்ள உறவை திராட்சைச் செடிக்கும் அதன் கொடிகளுக்கும் உள்ள உறவோடு ஒப்பிடுகிறார்.

திராட்சைச் செடி இயேசு,
நாம் அதன் கொடிகள்.

செடி கொடிகளுக்கு உணவை அனுப்புகிறது.

கொடிகள் அதைப் பயன்படுத்தி திராட்சைப் பழங்களைத் தயாரிக்கின்றன,

அதாவது பலன் தருகின்றன.

தாவரங்களின் கனி தராத பழைய கிழைகளைக் கத்தரித்து விட்டு விட்டால் தளிர்க்கும் புதிய கிளைகள் நன்கு பலன் தரும்.
 
இந்த அடிப்படையில் தான் ரோஜா செடிகளும், திராட்சைக் கொடிகளூம் கத்தரித்து விடப்படுகின்றன.

"என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார்.

 கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."

என்று ஆண்டவர் சொல்கிறார்.


இதற்கான ஆன்மீக விளக்கம் என்ன?

நாம் ஞானஸ்நானத்தின் மூலம் ஆண்டவரோடு இணைக்கப் பட்டிருக்கிறோம்.

ஆகவே இயேசுவின் அருள் இயல்பாக நமக்குள் வர வேண்டும்.

ஆனால் உலக காரியங்களில் நாம் காட்டும் அக்கறை காரணமாக ஆண்டவரோடு நமக்குள்ள நெருக்கம்ற குறைகிறது.

இதனால் அருள் வரத்தும் குறைகிறது.

அருள் வரத்து குறையக் குறைய நாம் ஆன்மீக வாழ்வின் வேகமும் குறைகிறது.


வேகத்தை அதிகரிக்க ஆண்டவர் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நாம் அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்காக நாம் ஆண்டவரை நோக்கி செபிப்போம்.

அவர் நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கத் தூண்டுவார்.

நாமும் பாவங்களுக்கு மனஸ்தாபப் பட்டு,

பாவ சங்கீர்த்தனம் செய்து,

பாவ மன்னிப்புப் பெற்று

பரிசுத்த நிலையில் வளர்வோம்.

இறையருள் வரத்தின் அளவு அதிகரிக்கும்.

ஆன்மீகத்தில்  மிகுந்த கனி கொடுக்க ஆரம்பிப்போம்.

இவ்வாறு தான் நமது ஆண்டவர் 
கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுகிறார்."

நாம் ஆன்ம வாழ்வில் அக்கறை காட்டாததன் காரணமாக பாவ நிலையில் விழ நேர்ந்தால் இறைவனோடு நமக்குள்ள உறவு முறிந்து விடும்.

அருள் நமக்கு முற்றிலுமாக நின்று விடும்.

 ஆன்மீக வாழ்வும் நின்று விடும்.

பாவ நிலையிலிருந்து நம்மை வெளிக் கொணர‌ இயேசு நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நாம் துன்பங்களிலிருந்து விடுதலை பெற இயேசுவை அணுகுவோம்.

அவர் நம்மை பாவ மன்னிப்பு பெற தூண்டுவார்.

அதற்கான அருள் வரத்தையும் தருவார்.

நாம் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெறுவோம்.

பாவ மன்னிப்பு பெற்றவுடன் அருள் நிலைக்குத் திரும்புவோம்.

அருள் வரத்து அதிகமாகும்.

ஆன்மீகக் கனி கொடுக்க ஆரம்பிப்போம்.



"நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது."

திராட்சைக் செடியோடு கிளைக் கொடிகள் இணைந்திருந்தால் தான் அவற்றால் கனி கொடுக்க முடியும்.

செடியை விட்டுக் கீழே விழுந்து விட்டால் அவை வாடி வதங்கிப் போகும்.

எருக்குழியில் போடப்படும்.

அதேபோல் கிறிஸ்துவர்கள் அருள் நிலையில் கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் தான் ஆன்மீக வாழ்வில் வளர்வதற்கான அருள் அவரிடமிருந்து அவர்களுக்குள் செல்லும்.

அவர்களும் ஆன்மீக வாழ்வில் வளர்வார்கள்.

அவர்கள் சாவான பாவம் செய்ய நேரிட்டால் கிறிஸ்துவுக்கும் அவர்களுக்கும் இடையிலான இணைப்பு அறுந்து விடும்.

அவரிடமிருந்து அருளுணவு அவர்களுக்குள் வராது.

அருளுணவு நின்று விட்டால் ஆன்மீக வாழ்வும் நின்று விடும்.

அவர்களால் ஆன்மீகக் கனி தர இயலாது.

நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றபின்புதான் இணைப்பு மீண்டும் ஏற்படும்.

இயேசுவோடு ஒன்றித்து வாழ்பவர்கள் தரும் ஆன்மீக் கனிகளில் சில:

அன்பு,
பரிவு, 
இரக்கம், 
நல்லெண்ணம், 
மனத்தாழ்மை, 
கனிவு, 
பொறுமை, 
மன்னிப்பு,
 அமைதி, 
நன்றி உணர்வு
தாழ்ச்சி
கற்பு
விவேகம்
மட்டசனம் 
பிறர்சிநேகம் 
 சுறுசுறுப்பு
 மகிழ்ச்சி
சமாதானம், 
 தயவு, 
நற்குணம்,
 விசுவாசம், 
சாந்தம்,
 இச்சையடக்கம்

திராட்சை செடியோடு இணைந்த கொடிகள் கனிகள் தருவது போல

இயேசுவோடு இணைந்து  ஆன்மீகக் கனிகளால் நிறைந்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment