." உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்."
(மத்.23:11).
"ஏங்க, கடவுள் மனிதர்களை பாவம் செய்வதற்கென்று படைக்கவில்லை. எப்படி முதன்முதலில் பாவம் நுழைந்தது?"
",கடவுள் மனிதர்களை படைப்பதற்கு முன்னாலேயே
பாவம் நுழைந்து விட்டது.
கடவுள் முதன் முதலில்
சம்மனசுக்களைப் படைத்தார்.
தலைமைச் சம்மனசாகிய லூசிபெர்
(Lucifer) தன்னைக் கடவுளுக்கு நிகராக நினைத்து கர்வப்பட்டான்.
கர்வம் (Pride) தான் படைப்புகள் செய்த முதல் பாவம்.
விளைவு, லூசிபெர் சாத்தானாக மாறினான்."
"நமது முதல் பெற்றோர், ஐயோ பாவம், ஒரு பழத்துக்கு ஆசைப்பட்டு பாவம் செய்தார்கள்."
", வெறுமனே பழத்துக்கு ஆசைப்பட்டு அல்ல.
அந்தப் பழத்தைச் சாப்பிட்டால்
'நீங்கள் தெய்வங்கள்' ஆகிவிடுவீர்கள்
என்று சாத்தான் ஏவாளுக்கு ஆசை காண்பித்து விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட வைத்தான்."
"ஆக, துணிகூட உடுத்த்தத் தெரியாத அந்தப் பொண்ணுக்கு தெய்வத்தை போல ஆக ஆசை!
இதற்கு பெயர்தான் பேராசை!"
",பெரிய பதவிக்கு போய்விட வேண்டும் என்ற இன்றைய மனிதனின் ஆசை நமது ஆதி தாயிடமிருந்து நமக்கு வந்தது.
ஒவ்வொரு மனிதனும் இருக்கிற நிலையிலிருந்து பெரிய நிலைக்கு சென்றுவிட ஆசிக்கிறான்.
ஓரு வேலையும் இல்லாமல் இல்லாமல் இருப்பவன் M.L.Aஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறான்.
M.L.A ஆகிவிட்டால் மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
மந்திரி ஆகிவிட்டால் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
முதல்-மந்திரி.ஆகிவிட்டால் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
ஆசைக்கு எல்கையே இல்லை.
அதனால் தான் இயேசு
"உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்."
என்கிறார்.
பணியாள் நிலையிலிருந்து உயர் பதவிக்கு போக ஆசைப்படுவன் சாதாரண மனிதன்.
உயர் நிலையில் இருக்கும்போது
பணியாள் நிலைக்கு இறங்கி மற்றவர்களுக்குப் பணிபுரியவன் கிறிஸ்தவன்.
அதுமட்டுமல்ல,
பணியாள் நிலையில் இருப்பவன் தனது பணியை தாழ்ச்சியுடன் ஒழுங்காக செய்தால் அவன் உயர்நிலையில் இருப்பவனுக்கு ஒப்பாவான்.
"இதோ ஆண்டவரின் அடிமை "
என்று தன்னையே அடிமை நிலைக்கு தாழ்த்திய அன்னை மரியாள் வானுலக பூவுலக அரசியானாள்!
மரியாள் வானுலக பூவுலக அரசி ஆக வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே அடிமை நிலைக்குத் தாழ்த்த வில்லை.
இறைவனின் தாயாவது அவருடைய சித்தம் என்பதற்காக மட்டுமே தன்னை அடிமை நிலைக்கு தாழ்த்தினாள்.
அது அவளுடைய தாராள குணம். தனது அடிமையை மண்ணக விண்ணக அரசியாக்கினது இறைவனின் தாராள குணம்'
தாராள குணமும், தாராள குணமும் சந்தித்துக் கொண்டன. அவ்வளவுதான்.
நாம் இறைவனது பிள்ளைகள் என்பதனால் அவர் நமக்காக மனிதனாகப் பிறந்து பாடுபட்டு வந்தார்.
கடவுள் நமது தந்தை என்பதனால் நாம் அவருக்குப் பணி செய்ய நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும்.
தலையான பாவங்களில் முதல் பாவம் ' கர்வம். (Pride)
புண்ணியங்களின் அரசி தாழ்ச்சி.
(Humility)
கடவுள் இயல்பிலேயே (By nature) சர்வ வல்லபர்.
அனைத்து நற்பண்புகளும், திறமைகளும் அளவில்லா விதமாய் உள்ளவர்.
அவரது வல்லமையையும் நற்பண்புகளையும் அவர் யாரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் அவரால் படைக்கப்பட்ட ஒருவரிடம் ஒரு திறமை இருக்குமானால் அது கடவுள் அவரோடு பகிர்ந்து கொண்டது.
தன்னோடு கடவுள் பகிர்ந்துகொண்ட ஒரு பண்பை தன்னுடையது என்று ஒருவன் பெருமை பாராட்டி கொண்டால் அதுவே கர்வம்.
அதைத்தான் லூசிபர் செய்தான்.
கடவுள் தன்னோடு பகிர்ந்து கொண்ட ஒளியையும் அழகையும் தன்னுடையது என்று எண்ணி தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று கர்வம் கொண்டான்,
அதுவே அவன் செய்த மிகப் பெரிய பாவம்.
மனிதர்களாகிய நாமும்
பிறருக்கு பணிபுரிவதற்காக நம்மோடு கடவுள் பகிர்ந்துகொண்ட பண்புகளையும், திறமைகளையும்
உரிமை பாராட்டி கர்வம் கொன்டால் அது மிகப் பெரிய பாவம். தலையான பாவம்.
அதைத்தான் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு உண்மையான பெரிய மனிதன் தன்னுடைய பண்புகளையும், திறமைகளையும் மற்றவர்களுக்கு பணிபுரிவதற்காக பயன்படுத்திக் கொள்வான்.
தன்னுடைய திறமைகள் உண்மையில் தன்னுடையவை அல்ல,
இறைவன் அவரது பிள்ளைகளுக்கு பணிபுரிவதற்காக தனக்குத் தந்தவை என்பதை உணர்ந்து
தன்னை பணி செய்பவராக மாற்றிக் கொள்வான்.
அதைத்தான் இயேசு
''உங்களில் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.''
என்றார்.
நமக்கு பணியாளனாக இருப்பவன்தான் உண்மையிலேயே பெரியவன்.
Minister என்ற வார்த்தையின் பொருள் 'வேலைக்காரன்.'
(The term minister comes from Middle English, deriving from the Old French word ministre, originally minister in Latin, meaning "servant, attendant.)
நமது அரசியலில் ஆளும் . பொறுப்பில் உள்ளவர்களுக்கு Ministers என்று பெயர் வைத்திருப்பதில் காரணமே அவர்கள் நமக்கு பணி (அதிகாரம் அல்ல) செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
இதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும்.
அவர்கள் நமக்கு பணி செய்தால் மட்டுமே பெரியவர்கள்!
நாமும் பணி செய்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment